2017 ரமளான் (31) – நிலமெல்லாம் இரத்தம் - ’கலீஃபா உமர் ஒரு சமாதான புறா’ என்று நம்பிவிட்டாரா பாரா!
நிலமெல்லாம் இரத்தத்திற்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.
முன்னுரை:
பாரா அவர்கள் 22ம் அத்தியாயத்தில் கலீஃபா உமர் அவர்களுக்காக சிந்திய முத்துக்களை இந்த கட்டுரையில் சேகரிக்கப் போகின்றோம். இஸ்லாமின் இரண்டாம் கலீஃபா உமர் அவர்கள் ‘ஒரு சமாதான புறா’ என்பது போலவும், அவர் இஸ்லாமை வாளால் பரப்பவில்லையென்றும் பாரா அவர்கள், ஒரு விசித்திர வக்காளத்து வாங்கியுள்ளார். ஆதாரங்களோடு தன் முடிவைச் சொல்கிறாரா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. நடந்துமுடிந்துவிட்ட சரித்திரம் பற்றி எழுதும் போது, உண்மையைச் சொல்லவேண்டும், வெறும் வாயில் கூழ் காய்ச்சக்கூடாது. யாராக இருந்தாலும் சரி, பொய்யைக் காட்டி ”இது தான் உண்மை” என்றுச் சொல்லி, தன் எழுத்துத் திறமையினால் மக்களை ஏமாற்ற நினைப்பது தவறு. பாராவாயாயினும் நா காக்க...
தற்காலத்தில் மக்கள் சரித்திரங்களை படிப்பதே அபூர்வம், அதிலும் பாரா போன்றவர்கள் ‘சரித்திரம் சொல்கிறேன், வாங்க’ என்றுச் சொல்லி, சரித்திரத்தை மாற்றிச் சொன்னால் என்ன நடக்கும்? மக்கள் தவறான ஒன்றை சரியான ஒன்றாக நினைத்து வழிதவறிப் போவார்கள். இதைத் தான் இஸ்லாமியர்களில் சிலர் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களோடு கூட பாரா போன்றவர்கள் கைகோர்த்து நடந்தால், சமுதாயம் உருப்படுமா?
என்னுடைய கட்டுரைகளில் நான் முன்வைக்கும் வாதங்களை வாசகர்கள் கவனிக்கவேண்டும், சுட்டிக்காட்டப்படும் ஆதாரங்களை சரி பார்க்கவேண்டும். கடைசியாக, பாரா அவர்கள் என்ன சொல்லியுள்ளார் என்பதை ஒப்பிட்டுப்பார்த்து, யார் உண்மைச் சரித்திரம் சொல்கிறார்கள், யார் வெறும் சத்தம் மட்டும் போடுகிறார்கள் என்பதை சுலபமாக புரிந்துக்கொள்ளலாம்.
பாரா அவர்கள் எழுதியது:
நூல்: நிலமெல்லாம் இரத்தம்
அத்தியாயம்: 22) கலீஃபா உமர்
ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம்.
உமர் எழுதியது:
உமர் ஒரு ஆன்மீகவாதி மற்றும் முஹம்மதுவின் நெருங்கிய தோழர் ஆவார். அமைதி மார்க்கத்தை பின்பற்றும் அவர் ஏன் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்கவேண்டும்? அவர் ஏன் ஜெருசலேமை பிடித்தார்?
ஜெருசலேம் மட்டுமல்ல, இவரது 12 ஆண்டுகால ஆட்சியில் எத்தனை நாடுகளை வலியச்சென்று பிடித்தார் என்பதை ஆதாரங்களோடு இந்த கட்டுரையில் பார்க்கவுள்ளோம். இதனால், கலிஃபா உமர் அவர்கள் ஒரு சமாதான புறா அல்ல, அவர் ஒரு கொத்தும் கழுகு என்பதை பாரா அவர்கள் புரிந்துக்கொள்வார்கள்.
பாரா அவர்கள் எழுதியது:
அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது.
உமர் எழுதியது:
பாரா அவர்களே, உங்களின் இப்படிப்பட்ட இவ்வரிகளுக்காக, 2016ம் ஆண்டு ரமளான் தொடர் கட்டுரையில் பல கேள்விகளை நான் எழுப்பியுள்ளேன். வெறும் “பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண்” என்று எழுதுவதினால் அது உண்மையாகிவிடாது, ஆதாரங்களோடு நிருபிக்கவேண்டும், அப்போது அது உண்மையென்று எல்லோரும் ஒப்புக்கொள்வோம். மேற்கண்ட உங்களுடைய வரிகளிலிருந்து அறிவது என்னவென்றால், பாலஸ்தீனா என்று நாம் அழைக்கப்படும் பகுதியில்,
”எகிப்து பைசாந்தியர்களுக்கு முன்பாக,
கிறிஸ்தவர்களுக்கு முன்பாக,
ரோமானியர்களுக்கு முன்பாக,
யூதர்களுக்கு முன்பாக
அரேபியர்கள் ஆண்டார்கள்”
என்றுச் சொல்லவருகிறீர்கள். யூதர்களுக்கு முன்பாக அரேபியர்கள் அந்த பகுதியை ஆண்டார்கள், அது அவர்களின் ‘மண்’ என்பதை சரித்திரத்திலிருந்து விளக்கமுடியுமா? இதைப் பற்றி கேட்கப்பட்ட இதர கேள்விகளை படிக்க, கீழ்கண்ட கட்டுரையை சொடுக்கவும்.
”அரேபியர்களும் பாலஸ்தீனமும்” என்ற தலைப்பில் இன்னும் அதிகமாக உங்களுடைய வரிகளை ஆய்வு செய்யவேண்டியுள்ளது, அவைகளை உங்களுடைய அடுத்தடுத்த கட்டுரைகளுக்கு கொடுக்கப்படும் பதில்களில் காண்போம்.
பாரா அவர்கள் எழுதியது:
யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.
ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான்.
உமர் எழுதியது:
மேற்கண்ட வரிகளை எழுதி நீங்கள் முஹம்மதுவை கேவலப்படுத்திவிட்டீர்கள். அரேபியர்கள் கூட ஆளப்பிறந்தவர்கள் என்ற எண்ணத்தை முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு மிகவும் ஆழமாக பதித்துவிட்டார், உமர் அல்ல. மக்காவில் இருந்தவரை அமைதிப் புறாக்களாக வளம் வந்த முஸ்லிம்கள், மதினா வந்தவுடன் பரினாம வளர்ச்சி அடைந்து, மக்களைக் கொத்தித்திண்ணும் கழுகுகளாக மாறிவிட்டார்கள்.
வேண்டுமென்றால் ”முஹம்மது எட்டு அடி பாய்ந்தார், உமர் பதினாறு அடி பாய்ந்தார்” என்றுச் சொல்லிக்கொள்ளலாம். முஹம்மது விதைத்தார், நீர்ப்பாய்ச்சினார், செடியும் முளைத்தது, பூவும் பூத்தது, ஆனால், முழுமையான கனிகளை அறுவடை செய்வதற்குள் மரித்துவிட்டார், அறுவடையை கலிஃபாக்கள் அறுத்தார்கள். போர் செய்து, நாடுகளை பிடிக்கவேண்டும் என்பது முஹம்மதுவின் மந்திரம், அதனை முதல் கலீஃபா அபூ பக்கரும், இரண்டாம் கலிஃபா உமரும் தொடர்ந்து செயல்படுத்தினார்கள். ”மீன் குட்டிக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா?” முஸ்லிம் கலிஃபாக்களுக்கு போர் செய்ய கற்றுக்கொடுக்கவேண்டுமா? ஆக, இவர்களுக்கு பிறகு வந்த முஸ்லிம் கலிஃபாக்கள் ”நாடுகளை பிடிப்பதை” செவ்வனே செய்து முடித்தார்கள். முஸ்லிம்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட கலிஃபாக்களுக்கும், மற்ற முஸ்லிமல்லாத அரசர்களுக்கும் இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லாதபடி, இவர்கள் மண் மீது ஆசைக்கொண்டு, தங்கள் ராஜ்ஜியங்களை விஸ்தரித்தார்கள்.
- காஃபிர் அரசர்கள் மண்ணுக்காக போர் தொடுத்தார்கள், கலிஃபாக்களும் அப்படியே செய்தார்கள்.
- காஃபிர் அரசர்கள் செல்வங்களுக்காக போர் தொடுத்தார்கள், கலிஃபாக்களும் அப்படியே செய்தார்கள்.
- காஃபிர் அரசர்கள் பெண்கள் மீது ஆசைக்கொண்டு பல திருமணங்களைச் செய்தார்கள், கலிஃபாக்களும், இஸ்லாமிய அரசர்களும் அப்படியே செய்தார்கள்.
- கஃபிர் அரசர்கள் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்றால், கலிஃபாக்களும் போர் என்ற போர்வையில் அப்படியே திருடினார்கள், கொள்ளையிட்டார்கள்.
இஸ்லாமிய கலீஃபாக்கள் ‘வித்தியாசமாக செய்தது என்ன?’
பாரா அவர்கள் எழுதியது:
கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
உமர் எழுதியது:
ஏன் உமர் ‘தேசங்களை கைப்பற்றினார்’? சும்ம மதினாவில் இருக்கமுடியவில்லையா?
இஸ்லாமிய ஆட்சியின் கீழ், ஜிஸ்யா கட்டும் மக்களாக வாழ்வது இரண்டாம் தர குடிமக்களாக வாழ்வதற்கு சமமாகும். ஜிஸ்யா வரி கட்டுபவர்கள் ஒரு கேவலமான வாழ்வை வாழவேண்டும், தலை குனிந்து வாழவேண்டும். ஒரு காலத்தில் நம் இந்தியாவில், கீழ் ஜாதிக்காரர்கள் என்று பட்டம் சூட்டி, அவர்களை அவமானப்படுத்திய அனைத்து கீழ்தரமான செயல்கள் அனைத்தும், முஸ்லிமல்லாதவர்கள் மீது இஸ்லாம் செய்யும் படி கட்டளையிடுகிறது.
பாரா அவர்களே, நீங்கள் எந்த புத்தகத்தை படித்து இப்படி எழுதினீர்களோ எனக்குத் தெரியாது, ஆனால், நான் இஸ்லாமிய மூல நூல்களிலிருந்தும், அவர்களின் விளக்கவுரைகளிலிருந்தும் ஆதாரங்களைத் தருகிறேன். இப்னு கதீர் விளக்கவுரை இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற விளக்கவுரையாகும், இதனை அரபியிலும், ஆங்கிலத்திலும் இணையத்தில் படித்துக்கொள்ளலாம்.
பாரா அவர்களே, இந்த விளக்கவுரையில் உமர் சிரியா நாட்டு கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
உங்களுக்காக நான் தமிழில் அதனை இங்கு தருகிறேன், ஆங்கிலத்திலும் அதனை படிக்க இங்கு சொடுக்கவும்:
தலைப்பு: காஃபிர்கள் தாழ்த்தப்படவேண்டும் என்பதற்கு அடையாளமே ஜிஸ்யா வரி அவர்களிடம் வாங்குவதாகும்
. . .ஆகவே, திம்மீ மக்களாகிய அவர்களை (யூதர்கள்/கிறிஸ்தவர்களை) முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களை விட உயர்வாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், அவர்கள் இழிவானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அவமானப்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். முஸ்லிம் ஹதிஸ் தொகுப்பில், இறைத்தூதர் அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவிக்கிறார்:
யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முதலாவதாக முஸ்லிம்கள் ஸலாம் வாழ்த்து கூறக்கூடாது. இவர்களில் யாரையாவது முஸ்லிம்கள் சாலையில் சந்திக்க நேரிட்டால், அவர்களை சாலையின் குறுகிய பாதையில் போகும் படி கட்டாயப்படுத்தவேண்டும்.
இதனால் தான் நம்பிக்கையாளர்களின் தலைவராகிய உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், தம்முடைய நிபந்தனைகளுக்கு கட்டுப்படும்படி கிறிஸ்தவர்களை வற்புறுத்தினார். இந்த நிபந்தனைகள் அனைத்தும், கிறிஸ்தவர்களை தொடர்ந்து தாழ்த்துகின்றனவாகவும், அவமானப்படுத்துகின்றனவாகவும் இருந்தன.
ஹதீஸ் அறிஞர்கள், அப்துர் ரஹ்மான் பின் கன் அஷ்ஷரி அறிவித்ததாக, ஒரு ஹதிஸைச் சொல்கிறார்கள்.
உமர் பின் கத்தாப்(ரலி) கட்டளையின் பேரில், நான் ஷாம் கிறிஸ்தவர்களுக்கான நிபந்தனைகளை உடன்படிக்கையாக எழுதினேன், அதன் விவரம் வருமாறு:
நிகரற்ற அருளாளனும், அளவற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். இது அல்லாஹ்வின் சேவகரும், நம்பிக்கையாளர்களின் தலைவருமாகிய உமர் என்பவருக்கும், இன்ன இன்ன நகரத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எழுதப்படும் உடன்படிக்கை ஆவணமாகும். முஸ்லிம்களாகிய நீங்கள் எங்களிடம் வந்தபோது (எங்களை ஆட்சி செய்யும் போது), உங்களிடமிருந்து எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், சொத்துக்களையும், எங்கள் பகுதியில் எங்கள் மார்க்கத்தை பின்பற்றுபவர்களையும் உங்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு உங்களிடமே நாங்கள் கோரிக்கைவிடுக்கிறோம்.
எங்கள் மீது நாங்களே கீழ்கண்ட நிபந்தனைகளை விடுத்துக்கொள்கிறோம்:
- எங்கள் பகுதியில் புதிய கிறிஸ்தவ மடத்தையோ, சர்சையோ மற்றும் துறவிகளுக்கான இல்லங்களையோ கட்டமாட்டோம்.
- எங்கள் வணக்கஸ்தலங்கள் புதுப்பிக்கவேண்டிய நிலையில் சிதிலமடைந்து இருந்தாலும், அதனை புதுப்பிக்கமாட்டோம், பழுது பார்க்கமாட்டோம்.
- எங்களின் வணக்க ஸ்தலங்களை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் இடமாக மாற்றமாட்டோம்.
- எந்த ஒரு முஸ்லிமாவது எங்கள் வணக்கஸ்தலங்களில் வந்து இளைப்பாற வேண்டும் என்று விரும்பினால், அவர் பகலிலோ இரவிலோ எப்போது வந்தாலும் எங்கள் திருச்சபை கதவுகள் அவர்களுக்காக திறந்தே வைப்போம், அவருக்கு இல்லையென்று மறுப்பு கூறமாட்டோம்.
- வழிப்பிரயாணிகளாக வரும் முஸ்லிம்களுக்கு எங்கள் வீடுகளில்/சபைகளில் மூன்று நாளுக்கான இருப்பிடமும், உணவும் நாங்கள் தருவோம்.
- முஸ்லிம்களுக்கு எதிராக வேவு பார்ப்பவர்களுக்கு எங்கள் வீடுகளில், திருச்சபைகளில் பதுங்கி இருக்க இடம் தரமாட்டோம்.
- எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் குர்-ஆனை கற்றுத்தரமாட்டோம்.
- ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய பாவங்களைச் செய்ய நாங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தமாட்டோம்.
- எங்கள் மதத்திலிருந்து முஸ்லிமாக மாறவிரும்புகிறவர்களை நாங்கள் தடுக்கமாட்டோம்.
- முஸ்லிம்களை நாங்கள் மதிப்போம், நாங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் அவர்கள் வந்து உட்கார விரும்பினால், நாங்கள் அந்த இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, சென்றுவிடுவோம்.
- முஸ்லிம்களைப்போல நடை உடை பாவணையை நாங்கள் செய்யமாட்டோம். அதாவது முஸ்லிம்களைப் போல உடை, தொப்பி, தலைப்பாகை, செருப்பு அணிவது, முஸ்லிம்களைப்போல தலைமுடி வைத்துக்கொள்வது, பேச்சு, புனைப்பெயர்கள், பட்டங்கள், மிருகங்கள் மீது முஸ்லிம்களைப் போல பயணிப்பது, முஸ்லிம்களைப் போல பட்டயங்களை தோள்களில் சுமந்துக் கொண்டுச் செல்வது, இப்படிப்பட்ட ஆயுதங்களை வாங்குவது போன்றவைகளைச் செய்யமாட்டோம். (எங்களை முஸ்லிம்களாக காட்டும் எதனையும் செய்யமாட்டோம்).
- எங்கள் ஸ்டாம்புகளை/இதர அச்சுக்களை அரபியில் பதிக்கமாட்டோம் மற்றும் மதுபானம் விற்கமாட்டோம்.
- எங்கள் தலைமுடியின் முன்பாகத்தை கத்தரித்துக்கொள்வோம்.
- எங்களின் பாரம்பரிய உடைகளை அணிவோம். நாங்கள் எங்கு இருந்தாலும் இடுப்பில் இடைக்கச்சை (பெல்ட்) கட்டுவோம்.
- எங்கள் திருச்சபைகளுக்கு முன்பாக, அல்லது திருச்சபை கட்டிடத்தின் மேல் சிலுவை சின்னத்தை வைக்கமாட்டோம்.
- கடைகளிலும், சந்தைகளிலும், இதர புத்தகங்களிலும், எங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட காரியங்களை முஸ்லிம்களுக்கு முன்பாக வைக்கமாட்டோம், விற்கமாட்டோம்.
- எங்கள் திருச்சபைகளில் கோயில் மணியை அடிக்கமாட்டோம்.
- எங்கள் திருச்சபைகளில் முஸ்லிம்கள் இருந்தால் அவர்களுக்கு முன்பாக எங்கள் வேதங்களை சத்தத்தை உயர்த்தி வாசிக்கமாட்டோம்.
- எங்கள் சவ அடக்க ஆராதனைகளிலும், சத்தத்தை உயர்த்தி ஜெபம் செய்யமாட்டோம்.
- சவ அடக்கத்துக்காக கல்லறைக்கு முஸ்லிம்களின் சந்தை மற்றும் கடைத்தெரு வழியாகச் செல்லும்போது, மெழுகுகளை எரித்துக்கொண்டுச் செல்லமாட்டோம்.
- மரித்த கிறிஸ்தவர்களை, முஸ்லிம்களின் கல்லறைக்கு பக்கத்தில் அடக்கம் செய்யமாட்டோம்.
- முஸ்லிம்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் அடிமைகளை வேலையாட்களை நாங்கள் வாங்கமாட்டோம்.
- முஸ்லிம்களின் வீடுகளில் அவர்களின் தனிமையை நாங்கள் கெடுக்கமாட்டோம்.
இந்த ஆவணத்தை நான் எழுதிய பிறகு, உமர் அவர்களிடம் சரி பார்ப்பதற்காக கொடுத்தேன், அவர் ‘இதோடு கூட, கீழ்கண்ட நிபந்தனையும் சேர்த்து எழுது என்றுச் சொன்னார்’, அதாவது
- நாங்கள் முஸ்லிம்களை அடிக்கமாட்டோம்.
- இந்த நிபந்தனைகளை நாங்களும், எங்கள் பகுதியில் வாழும் இதர கிறிஸ்தவர்களும் எங்கள் மீது சுமத்திக்கொள்கிறோம். இதற்கு பதிலாக, இஸ்லாமிய அரசாங்கத்திலிருந்து பாதுகாப்பை பிரதிபலனாக கேட்கிறோம்.
- நாங்கள் இந்த நிபந்தனைகளில் ஒன்றையாவது மீறினால், நாங்கள் “திம்மாஹ்(பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையிலிருந்து)” நீங்கிவிடுவோம். அப்போது, இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அந்த தண்டனையை எங்களுக்குத் தரலாம்.
உமர் புறா அல்ல, பிணங்களைக் கொத்தித்திண்ணும் கழுகு என்றுச் சொல்லும் இஸ்லாம்:
பாரா அவர்களே, மேற்கண்ட விளக்கவுரையை நிதானமாக படித்துப் பாருங்கள். உமர் சிரியாவை பிடித்த போது, அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கையில் செத்து மடியாமல் [பாதுகாப்பாக] இருக்கவேண்டுமென்றால், என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையை எழுதி கையெழுத்து வாங்கியுள்ளார். இந்த உடன்படிக்கை, கிறிஸ்தவர்கள் எழுதியதாக இருந்தாலும், அதனை எழுதியவர் உமர் ஆவார்.
மேற்கண்ட விளக்கத்தை இப்னு கதீர் எழுதியது இந்த வசனத்துக்குத்தான்:
குர்-ஆன் 9:29. வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை ‘தடுக்கப்பட்டவை’ என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை! (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)
பாரா அவர்கள் எழுதியது:
உண்மையில், உமருக்கு இஸ்லாத்தைப் "பரப்ப" வேண்டிய அவசியம் அத்தனையன்றும் தீவிரமாக இருப்பதாக அப்போது தோன்றவில்லை. தானாகவே அது பரவிக்கொண்டிருந்தது. ஆகவே, அமைப்பு ரீதியில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.
உமர் எழுதியது:
சரியாகத் தான் சொன்னீர்கள். இஸ்லாம் பற்றியும் அல்லாஹ் பற்றியும் கலிஃபாக்கள் அக்கரைக்கொள்ளவில்லை. நாடுகளை பிடித்தால் போதும், அவர்களிடமிருந்து ஜிஸ்யா வரிகளை வாங்கினால் போதும்.
’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற ஸ்லோகம் இருப்பது மாதிரி, முஸ்லிம் கலிஃபாக்களின் ஸ்லோகம் ’மண்ணும், பெண்ணும், பொன்னும்’ என்பதாக இருந்தது. இஸ்லாமை நான் ஏன் பரப்ப முயலவேண்டும்? நாடுகளை பிடித்து, அம்மக்களிடம் இஸ்லாமை ஏற்கிறாயா அல்லது ஜிஸ்யா வரி தருகிறாயா? என்று கட்டாயப்படுத்தினால் போதும். மேலும், காலப்போக்கில் இஸ்லாமிய நாட்டில் காஃபிர்கள் அனுபவிக்கும் கொடுமைகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முஸ்லிமாக அனேகர் மாறிவிடுவார்கள் (மேற்கண்ட உமரின் உடன்படிக்கையின் நிபந்தனைகளைப் பார்க்கவும்).
இஸ்லாமிய ஆட்சியை வலிவான ஒன்றாக மாற்றவேண்டும் என்பதற்காக, நாடுகளை பிடிக்க போர் செய்து பல இலட்ச மக்களின் தலைகளை போர்க்களங்களில் சீவுவது அல்லாஹ்விற்கு உகந்த ஒன்றா? இப்படியும் ஒரு மார்க்கம் உலகிற்கு வேண்டுமா?
பாரா அவர்கள் எழுதியது:
அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதே அவரது முதல் சிந்தனையாக இருந்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரேபிய சமூகமும் இஸ்லாத்தில் இணைவது பெரிய விஷயமாக இருக்காது என்றே அவர் கருதினார்.
உமர் எழுதியது:
நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்க பாரா!
நகைச்சுவையாக எழுதுவது ஒரு கலை. ஆனால், உலகத்துக்கே பகையாக மாறிய இஸ்லாமை சுவையாக மாற்றி எழுதுவது அதிலும் பெரிய கலை.
உமர் சமூக சீர்திருத்தவாதியா? அப்படியே அரேபியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைச் கொண்டுவரவேண்டுமென்றால், அரேபிய தீபகற்பத்தில் உள்ள அரேபியர்களின் வாழ்வில் செய்யவேண்டியது தானே!
- அது எப்படி அரேபியாவிற்கு வெளியே இருக்கும் நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டால், அரேபியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி வரும்?
- அது எப்படி கிறிஸ்தவ நாடுகளோடு போரிட்டு, அவர்களிடம் ஜிஸ்யா என்ற வரியை வாங்கினால், அரேபியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி வரும்?
- அது எப்படி, சிரியாவில், எகிப்தில் உள்ள கிறிஸ்தவர்களை கொன்றுகுவித்து, நாட்டை பிடித்தால், அரேபியாவில் உள்ள அரேபியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி வரும்?
பாரா அவர்களே, உங்கள் லாஜிக் எனக்கு பிடிபடவில்லையே! மத்திய கிழக்கு வரைபடத்தை (மேப்பை) பார்த்து இருக்கீங்களா?
கி.பி. 624 லிருந்து கி.பி. 733 வரை இஸ்லாம் எப்படி போர்கள் தொடுத்து, அரேபியாவைச் சுற்றியுள்ள நாடுகளை பிடித்தது என்பதைப் பற்றிய சரித்திர விவரங்கள் அடங்கிய ஒரு படத்தை இங்கு தருகிறேன். இது ஒரு GIF படமாகும், இது 16 நொடிகளில் இஸ்லாமின் முதல் 110 ஆண்டுகளின் ஆக்கிரமிப்புக்களை தெளிவாக சொல்லிவிடும். இந்த படத்தில் கி.பி. 634 லிருந்து கி.பி. 644 வரையுள்ள விவரம் தான் உமரின் ஆக்கிரமிப்புக்கள்.
மூலம் ஆங்கிலத்தில்: The Raise of Islam
இந்த தொடுப்பில் ஒவ்வொரு ஆண்டுக்கும் கொடுக்கப்பட்ட ரேடியோ பட்டணை அழுத்தி, இஸ்லாமிய விஸ்தரிப்பை அறிந்துக்கொள்ளலாம்.
மேலும், உமரின் காலத்தில் இஸ்லாமிய ராஜ்ஜியம் எதுவரை விஸ்தரிக்கப்பட்டது என்பதையும் விக்கீபீடியாவிலிருந்து ஒரு படத்தை இங்கு தருகிறேன்.
Source: Wikipedia - Caliph Umar's empire at its peak 644
இந்த போர்கள் வலியச்சென்று செய்த போர்கள் ஆகும், மற்ற நாட்டு மக்களின் தலைகளை சீவி, அவர்களின் இரத்தத்தை கலவையாக சேர்த்து போடப்பட்டது தான் இஸ்லாமிய விஸ்தரிப்பு அஸ்திபாரங்கள். இந்த இராஜ்ஜிய விஸ்தரிப்புக்கள் இஸ்லாமிய பிரச்சாரங்களினால் செய்யப்படவில்லை, போர்கள் புரிந்து நாட்டை பிடித்தார்கள். இஸ்லாமின் முதல் நான்கு கலீஃபாக்கள் எத்தனை போர்களை புரிந்தார்கள்? எப்படி இஸ்லாமை பரப்பினார்கள் என்பதை வாசகர்கள் இணையத்தில் தேடி படித்துக்கொள்ளலாம். இதைப் பற்றி தேவைப்பட்டால், அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.
பாரா அவர்கள் எழுதியது:
ஏனெனில், "மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப் பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனாலேயே அங்கீகரிக்கப்படாது" என்ற பொருளில் வரும் குர் ஆனின் ஒரு வசனத்தின்மீது அவருக்கு அளப்பரிய நம்பிக்கை உண்டு.
உமர் எழுதியது:
இப்படியெல்லாம் எழுதச்சொல்லி உங்களுக்கு முஸ்லிம்கள் சொன்னார்களா?
உமர் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை அறிய முஹம்மது எப்படி இந்த விஷயத்தில் செயல்பட்டார் என்பதை கவனிக்கவேண்டும். இதற்காக, நான் ரஹீக் சரித்திர புத்தகத்தை இங்கு மேற்கோள் காட்டவேண்டும். இந்த புத்தகத்தை பாரா அவர்களும் படித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஹம்மது மக்காவை பிடிக்கிறார், அவரது முன்னால் எதிரிகளை கொல்லும்படி கட்டளையிடுகிறார். முஸ்லிம்களில் சிலர் சிலருக்கு சிபாரிசு செய்தார்கள். உயிருக்கு பயந்து சிபாரிசு செய்யப்பட்டவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள். அவர்கள் ஏற்காமல் இருந்திருந்தால், அவர்களின் தலைகள் சீவப்பட்டு இருந்திருக்கும். இவ்விவரங்கள் என் சொந்தத்திலிருந்து எடுத்து எழுதவில்லை, ரஹீக் புத்தகம் இதனை பதிவு செய்துள்ளது. ரஹீக்கை படித்த பாரா அவர்கள், இந்த விஷயத்தில் மிகப்பெரிய பொய்யைச் சொல்லியுள்ளார் என்பது தான் உண்மை. [ரஹீக் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி அறிய, இக்கட்டுரையை படிக்கவும்: 2017 ரமளான் (28) – நிலமெல்லாம் இரத்தம் – பாராவை ரணப்படுத்திய ரஹீக்]
ரஹீக் புத்தகத்திலிருந்து மேற்கோள்கள்:
நூல்: ரஹீக், பக்கம் 452, 453
தலைப்பு: பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்
பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்
நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்மா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு 7)அல் அஸ்வத், 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா’ எனும் அடிமை. இப்பெண்ணிடம்தான் ஹாதிப் அனுப்பிய ராணுவ இரகசிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களைப் பற்றியுள்ள குறிப்புகள் அடுத்து வருகின்றன.
அப்துல்லாஹ் இப்னு ஸஅதை உஸ்மான் (ரழி) அழைத்து வந்து சிபாரிசு செய்ய நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர் உயிர் பாதுகாக்கப்பட்டது. இவர் இதற்கு முன் ஒருமுறை இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்து மதீனா வந்திருந்தார். சில காலங்கள் அங்கு தங்கிய பின் இஸ்லாமை விட்டு வெளியேறி மக்கா வந்துவிட்டார். இவர் நபியின் அவையில் தான் இப்போது முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால், தங்களது தோழர்களில் யாராவது ஒருவர் அவரை கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) இருந்ததால் அவரது இஸ்லாமை ஏற்க தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவரது இஸ்லாமை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். அப்துல் உஜ்ஜா இப்னு கத்தல் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். நபித்தோழர் ஒருவர் நபியிடம் வந்து “என்ன செய்வது?” என்று கேட்டார். “அவனைக் கொன்று விடவேண்டியதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவர் அவனைக் கொன்று விட்டார்.
மகீஸ் இப்னு சபாபா- இவன் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தான். ஓர் அன்சாரித் தோழரை கொன்றுவிட்டு மதம் மாறி முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை நுபைலா இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்பவர் கொன்றொழித்தார்.
ஹாரிஸ் இப்னு நுஃபைல்- இவன் மக்காவில் நபியவர்களை அதிகம் துன்புறுத்திக் கொண்டிருந்தான். இவனை அலீ (ரழி) கொன்றார்கள்.
ஹப்பார் இப்னு அஸ்வத்- இவர்தான் நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா சென்றபோது வழிமறித்து தனது ஈட்டியால் குத்தினார் இதனால் அவர்கள் அமர்ந்திருந்த (கஜாவா) ஒட்டகத் தொட்டியிலிருந்து கீழே விழுந்தார்கள் அவர்களது வயிற்றில் காயமேற்பட்டு கரு கலைந்துவிட்டது. இவர் மக்கா வெற்றியின் போது அங்கிருந்து தப்பி ஓடினார் பின்பு சில காலம் கழித்து இஸ்லாமை ஏற்றார்.
மற்ற இப்னு கத்லுடைய இரு அடிமைப் பாடகிகளில் ஒருத்தி கொலையுண்டாள். மற்றவள் முஸ்லிம் ஒருவரால் அடைக்கலம் தரப்பட்டு பின்னர் இஸ்லாமை ஏற்றார். அவ்வாறே ‘சாரா’ என்ற அடிமைப் பெண்ணும் அடைக்கலமாகி இஸ்லாமைத் தழுவினார்.
அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: ஹாரிஸ் இப்னு துலாத்தில் அல்குஸாயீ என்பவனையும் கொல்லும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே, அவனை அலீ (ரழி) கொன்றொழித்தார்கள் என அபூ மஃஷக் (ரழி) கூறுகிறார்.
பிரபல கவிஞர் கஅப் இப்னு ஜுஹைரையும் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால், இவர் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்து இஸ்லாமை ஏற்று தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார். இவரைப் பற்றிய விரிவான செய்தி பின்னால் வரவிருக்கின்றது.
இவ்வாறே ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொலை செய்த வஹ்ஷியையும் கொன்றுவிட கட்டளையிடப்பட்டது. பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் மன்னிக்கப்பட்டது. அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவும் கொலைப் பட்டியலில் இருந்தார். அவரும் இஸ்லாமை ஏற்றதால் மன்னிக்கப்பட்டார். இப்னு கதலின் அடிமைப் பெண் அர்னப் என்பவளும் கொலையுண்டாள் என இமாம் ஹாகிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். கொலையுண்டவர்களில் உம்மு ஸஅத் என்பவரும் உண்டு என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இந்த கணக்கின்படி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இங்கு கூறப்பட்ட அர்னப், உம்மு ஸஅத் இருவரும் இப்னு கத்தலின் இரண்டு பாடகிகளாக இருக்கலாம். அவ்விருவருடைய பெயர்கள் அல்லது புனைப் பெயர்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கலாம். (இப்னு ஹஜர் (ரஹ்) கூற்று முடிவுற்றது.) (ஃபத்ஹுல் பாரி)
ஸஃப்வான் இப்னு உமய்யா, ஃபழாலா இப்னு உமைய்யா இஸ்லாமைத் தழுவுதல்
ஸஃப்வான் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தும் அவரைக் கொல்ல வேண்டுமென்று நபி (ஸல்) கட்டளையிடவில்லை. இருப்பினும் அவர் பயந்து மக்காவிலிருந்து ஓட்டம் பிடித்தார். அவருடைய முன்னாள் நண்பர் உமைர் இப்னு வஹப் அல் ஜும நபியிடம் அவருக்காக (பாதுகாப்பு) அபயம் தேடினார். நபி (ஸல்) அதனை ஏற்று மக்காவுக்குள் வரும் போது தாம் அணிந்திருந்த தலைப்பாகையைக் கொடுத்தனுப்பினார்கள். உமைர் (ரழி) அதனை பெற்றுக் கொண்டு ஸஃப்வானைத் தேடிப் புறப்பட்டார். ‘ஜுத்தா’ எனும் கடற்கரையில் யமன் நோக்கிய பயணத்திற்கு ஸஃப்வான் ஆயத்தமான போது உமைர் (ரழி) அவரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். ஸஃப்வான் நபியிடம் தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களுக்கு பின் ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார். இவருடைய மனைவியோ இவருக்கு முன்பே இஸ்லாமை ஏற்றிருந்தார். நபி (ஸல்) இருவரையும் பழைய திருமண உறவைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.
பயத்தினால் இஸ்லாமை ஏற்ற மக்காவினர் (முஹம்மதுவின் எதிரிகள்):
[மேற்கண்ட மேற்கோளில் சிகப்பு எழுத்துக்கள் உயிர் பிழைக்க இஸ்லாமை ஏற்றவர்கள், நீலவண்ண கொட்டை எழுத்துக்கள் முஹம்மதுவினால் மன்னிக்கப்படாமல் கொல்லப்பட்டவர்கள்]
மேற்கண்ட சரித்திர விவரங்களை கூர்ந்து கவனிக்கவேண்டும். திடீரென்று முஹம்மது பெரும்படையுடன் மக்காவிற்குள் நுழைந்தார். 20 ஆண்டுகளாக முஹம்மதுவின் பரம எதிரிகளாக இருந்தவர்கள், இவரை ஒழித்துக்கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்தார்கள். மேலும், இதற்கு முன்பு முஹம்மதுவை கேலி செய்து கவிதை பாடி விமர்சித்தவர்கள் கூட முஹம்மதுவின் ’மரண பட்டியலில்’ இருந்தார்கள். அமைதி புறா அதாவது முஹம்மது இவர்களைக் கொல்லும்படி கட்டளையிட்டார். உயிருக்கு பயந்து, சிலர் ஊரைவிட்டே ஓடினார்கள். சிலர் காபாவின் மீது போர்த்தி இருக்கும் [புனிதமான] போர்வையை பிடித்துக்கொண்டார். முஹம்மது காபாவை மதிக்கிறார் என்பதால் உயிர் தப்பித்துக்கொள்ளலாம் என்று கனவு கண்டார்கள். ஆனால், முஹம்மது விடுவதாக இல்லை. அதாவது, அவனை இழுத்துக்கொண்டு வந்து கொல்லுங்கள் என்று கட்டளையிட்டார், முஸ்லிம்கள் கொன்றும் போட்டார்கள்.
சிலருக்கு முஸ்லிம்களிடமிருந்து சிபாரிசு கிடைத்தது (எல்லோரும் நண்பர்களும் சொந்தக்காரர்கள் தானே), உடனே இவர்களுக்கு ஞானோதயம் வந்தது. 20 ஆண்டுகளாக கள்ள நபி என்றும், பைத்தியக்காரன், ஏமாற்றுக்காரன் என்றும் சொன்னவர்களுக்கு, அன்று ”முஹம்மது ஒரு இறைத்தூதராக காணப்பட்டார்”. உயிருக்கு பயந்து இஸ்லாமை ஏற்றவன் உயிர் தப்பினான், சிபாரிசு கிடைக்காதவனின் தலை சீவப்பட்டது.
பாரா அவர்களே, இது தான் உண்மை சரித்திரம். இஸ்லாம் பற்றி எழுத உங்களுக்கு அனுபவம் பத்தாது, உங்களுக்கு அதைப் பற்றிய ஞானமும் இல்லை. நீங்கள் இஸ்லாம் பற்றி கற்றுக்கொண்டது, வெறும் ஆனா, ஆவன்னா தான். இன்னும் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. அரைகுறை ஞானத்தோடு இஸ்லாமை தொடாதீங்க! வேண்டாம், பட்ட [ நிலமெல்லாம் இரத்தத்திற்காக படப்போகும்] தலைகுனிவு போதும், இன்னும் அதிகமாக எழுதி கேவலப்பட்டு போகாதீங்க என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படி எழுதுகிறேன் என்று என்மீது கோபம் வேண்டாம், உங்களைப் போன்றவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு எழுத்துவடியில் பதில்கள் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை கிறிஸ்தவர்களுக்கு!
பாரா அவர்கள் எழுதியது:
இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற்றும் தேசங்களில் உள்ள பிற இனத்தவர் அனைவரிடமும் "உங்கள் உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்படும்" என்று முதலில் சொல்லிவிடுவது வழக்கம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஒருமுறை, "இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு நியமிக்கிறேன். அவரது பணி உங்கள் தோலை உரிப்பதோ, உங்கள் சொத்தை அபகரிப்பதோ அல்ல. உங்கள் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பது மட்டுமே. இதிலிருந்து எந்த ஆளுநராவது தவறுகிறார் என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உரிய தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு" என்று பேசியிருக்கிறார்.
உமர் எழுதியது:
இந்த கட்டுரையின் ஆரம்பத்தில், இஸ்லாமிய அறிஞர் இப்னு கதீர் அவர்களின் விளக்கவுரையிலிருந்து, உமர் கிறிஸ்தவர்களோடு செய்த உடன்படிக்க நிபந்தனைகளை கொடுத்துள்ளேன், ‘எப்படிப்பட்ட உரிமைகளை உமர் கொடுத்துள்ளார்’ என்பதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த கண்கட்டு வித்தை இனியும் இங்கு செல்லுபடியாகாது பாரா அவர்களே!
பாரா அவர்கள் எழுதியது:
இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் உமர் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர்கள், பைசாந்தியர்கள். (பைசாந்தியர்கள் என்பது இனத்தின் அடையாளப்பெயர். மத ரீதியில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே.)
. . .
ஆனால், புதியதொரு பேரரசை நிறுவுவது என்கிற மாபெரும் கனவுடனும் தன்னம்பிக்கையுடனும் யுத்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் பைசாந்திய ராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பல இடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டு முழந்தாளிட்டார்கள். வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன. (யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)
சரித்திரத்தில், மிகக் கடுமையான யுத்தங்கள் என்று வருணிக்கப்படுவனவற்றுள் ஒன்று இது. எத்தனை தினங்கள் நடைபெற்றன என்பது பற்றிய திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பைசாந்தியர்கள் தோல்வியைத் தழுவியதாகத் தெரிகிறது.
உமர் எழுதியது:
”வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன”
பைசாந்திய வீரர்களின் தலைகள் சீவப்பட்டு மண்ணைத் தொட்டன என்று சுருக்கமாக, இஸ்லாமின் கோரதாண்டவத்தை ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள். ஏனய்யா உமர் எகிப்தோடு சண்டையிடவேண்டும்? அல்லாஹ் சொன்னானா? இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று மார்தட்டுவது உண்மையானால், ஏன் பல்லாயிரக்கணக்கான மனித தலைகள் மண்ணைத் தொட வேண்டும்?
கலீஃபா உமரும் இன்றைய கௌ ரக்ஷாக்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள்:
உமரின் காலத்தில் மனிதர்களின் தலைகள் மண்ணைத்தொட்டன, ஆனால், வாகனங்களாக வந்த மிருகங்களை காயப்படுத்தக்கூடாது என்று உமர் சொன்னாராம்? என்னே ஒரு நல்ல மனிதர் கலீஃபா உமர்? இவருக்கு புளூ கிராஸ் குழுமத்தின் சார்ப்பிலிருந்து ‘கால் நடைகளின் இரட்சகர் என்ற விருது வழங்க, உலக மக்கள் சிபாரிசு செய்யவேண்டும்’. ஆனால், மனித உரிமையை மீறி தலைகளை சீவினாரே, இந்த செயலுக்கு என்ன பரிசு தருவது?
மனுஷனா முக்கியம்! போரில் பயன்படுத்தப்படும் மிருகங்கள் தான் முக்கியம்! நம் இந்தியாவில் கௌ ரக்ஷா என்ற பெயரில் நடப்பது கூட இது தானே! மனிதன் முக்கியமல்ல, மாடு தான் முக்கியம். உமருக்கு அன்று ‘மனிதன் முக்கியமல்ல, ஒட்டகமும், குதிரைகளும் தான் முக்கியம்’. இவ்விருவருக்கும் வித்தியாசம்: 'இந்தியாவில் மாடு, அரேபியாவில் ஒட்டகம் & குதிரை’ அவ்வளவு தான். அப்போ மனுஷன்? ‘போனால் போகட்டும் போடா? இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா’?
மாடு சாமி, மனுஷன் ஆசாமி தானே! அவனை மாட்டுக்காக சாகடிக்கலாம். இதுவரை மனுஷன் மாட்டை அடித்து சாப்பிட்டான், ஆனால், இப்போது சில மாடுகள் மனிதனை அடித்துக்கொண்டு இருக்கின்றது. மனுஷனுக்கு ஒரு காலம் வந்தால், மாட்டுக்கும் ஒரு காலம் வரும்.
குறிப்பு: நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. நான் ஆடு, கோழி, சேவல், நண்டு, மீன் போன்றவைகளை மட்டுமே சாப்பிடுகிறேன்(சில வேளைகளில் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போது என்னையறியாமல் கொசுக்கள் வாயில் சென்றதுண்டு, இதற்கு நான் பொறுப்பல்ல. யாருக்குத் தெரியும் கொசு கூட சிலருக்கு சாமியாக இருந்தால்?). எனக்குத் தெரியாமல் யாராவது மட்டுக்கறி கொடுத்துவிட்டால் ஆடு என்று நினைத்து சாப்பிட்ட அனுபவங்கள் மட்டும் சில இருக்கின்றன. எனக்கு ஆட்டுக்கறிக்கும் மாட்டுக்கறிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இனி ஜாக்கிரதையாக இருந்துவிடுவேன். கௌ ரக்ஷாக்கள் இதனை குறித்துக்கொள்ளவும்.
மனிதனின் தலைகளை உருட்டி, அதன் மேல் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் கட்டவேண்டுமா? இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொல்லிக்கொள்ள முஸ்லிம்கள் வெட்கப்படவேண்டாமா? உமரைப் போன்றவர்களை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டாமா? அமைதி இஸ்லாமின் தலைவர் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்த ஆறை இப்படி ஓடவிட்டால், அவன் எப்படி முஸ்லிமாகமுடியும்? என்று முஸ்லிம்கள் கேள்வி கேட்கவேண்டாமா?
அடுத்ததாக, பாரா அவர்களே உங்களின் கீழ்கண்ட வரிகள் சில கேள்விகளை உங்களிடம் கேட்க வைத்துவிட்டது:
//(யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)//
அய்யா பாரா அவர்களே,
• ”கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு நெருக்கமான பிரதிகள்” என்று எவைகளை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்? அவைகளின் பெயர்களை தரமுடியுமா? அவைகள் எந்த நூலகத்தில் அல்லது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடமுடியுமா? உங்கள் கையில் அவைகள் எப்படி வந்தது?
• குர்-ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை படிக்காத நீங்கள், மேற்கண்ட வரிகளில் சொன்ன அந்த “பிரதிகள்” எவை என்று குறிப்பிடமுடியுமா?
• உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முஹம்மது பற்றி, இஸ்லாம் பற்றி 7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூல் கூட உலகத்தில் கிடையாது. அதாவது முஸ்லிம்கள் நம்பகப்பூர்வமான ஆவணங்கள் என்றுச் சொல்லிம் ஹதீஸ்கள் முஹம்மதுவிற்கு 150 ஆண்டுகளுக்கு பிறகு தான் தொகுக்கப்பட்டது. ஹதீஸ்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது தான் இப்னு இஷாக்கின் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம் (இது நம்மிடம் இல்லை). இச்சரித்திரத்திலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்ட இப்னு இஷாம் மற்றும் தபரி சரித்திரங்கள் நம்மிடம் உள்ளது, இவைகள் கூட முஹம்மதுவிற்கு 150 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டவைகள்.
• இவைகளை விட்டுவிட்டு, வேறு எந்த பிரதிகளை நீங்கள் “கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகள்” என்றுச் சொல்கிறீர்கள். கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு நெருக்கமான பிரதிகள் என்றால், கி.பி. 699க்கு முன்பு எழுதப்பட்ட சரித்திரம் ஆகும். உங்கள் நூலகங்களில் தேடிப்பார்த்து அவைகளின் பெயர்களைச் கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளட்டும், கி.பி. 699க்கு முன்பு எழுதப்பட்ட இஸ்லாமிய சரித்திரம் யாரிடமாவது இருந்தால் உலகத்துக்கு தெரிவிக்கலாம்.
• ஒருவேளை ”பிரதி” என்று நீங்கள் குறிப்பிட்டது குர்-ஆனையா? குர்-ஆனில் முஹம்மது பற்றி தேடினாலே வாழ்க்கை குறிப்பு கிடைக்காது, இதில் உமர் பற்றி எங்கே விவரங்கள் இருக்கப்போகின்றது? தமாஷ் பண்ணாதீங்க பாரா!
இப்படியெல்லாம், உங்கள் ஆய்வுத்திறமைகளை அற்பவிலைக்கு குத்தகைக்கு விற்று இருக்கிறீர்கள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.
பாரா அவர்கள் எழுதியது:
எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப் பார்க்கலாம்.
உமர் எழுதியது:
பாவம்! அந்த மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பாராவிற்கு தான் எல்லாம் தெரியும்.
ஆமாம், நான் சொல்வது உண்மை. உமர் என்னவோ, எகிப்து மீது தான் முதன் முதலாக போர் தொடுத்த மாதிரியும், அதுவரை ‘உமர் ரொம்ப சமத்து பிள்ளை’ என்று பெயர் வாங்கியது போலவும் எழுதுகிறீர்கள் நீங்கள்.
உமர் எகிப்தோடு செய்த போரில் மட்டும் தான் வாள்களை பயன்படுத்தினாரா? அதற்கு முன்பாக செய்த போர்களில் முஸ்லிம் இராணுவத்தினர் மிஸ்வாக் குச்சிகளை வைத்து யுததம் செய்தார்களா? அல்லது ஏகே47 என்றுச் சொல்லக்கூடிய துப்பாக்கிகளை வைத்து சண்டை போட்டார்களா?
என்ன எழுத்தாளரே கதை கட்டுகிறீர்! உலக ஞானத்தை கைக்குள் வைத்து பார்வையிடும் இக்காலத்தில், நிலாவில் ஆயா வடை சுட்டாள், ஏழு கடல்களுக்கு அப்பால், ஒரு இராட்சன் இருந்தான் என்றெல்லாம் பாட்டிக்கதைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்?!
உமர் 634-644 வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த காலக்கட்டத்தில், அவர் மதினாவின் மசூதியில் உட்கார்ந்துக்கொண்டு நமாஸ் செய்துக்கொண்டு, ரமளான் நோன்பு இருந்துக்கொண்டு, அமைதியாக இருக்கவில்லை. நீங்கள் எழுதிய வரிகளின் படி சொல்லவேண்டுமென்றால், “இராஜ்ஜிய விஸ்தரிப்பு” பற்றி தான் அவர் அதிகமாக சிந்தித்தார். அக்கம் பக்கம் நாடுகள் மீது போர் தொடுத்து, நாடுகளை சூரையாடினார். அவரது 12 ஆண்டுகால ஆட்சியில் அவர் எந்தெந்த நாடுகளை, எந்தெந்த ஆண்டில் போர் தொடுத்து பிடித்தார் என்ற பட்டியலை இங்கு தருகிறேன். தொடுப்புக்களை சொடுக்கி படித்துக்கொண்டு, இஸ்லாமிய ஞானத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இனி இப்படி கேவலமாக எழுதாதீர்கள்.
Wars of Caliph Umar கலீஃபா உமரின் போர்கள் |
இப்போது சொல்லுங்கள்! உமர் இஸ்லாமை வாளால் பரப்பினார் என்ற குற்றச்சாட்டு, எகிப்தை பிடிக்கும் போது மட்டுமே வந்ததா? அதற்கு முன்பாக அவர் யுத்தமே செய்யாத சுத்தமான அரசாங்கத்தை நடத்தினாரா!
ஒரு அளவுக்குத் தான் இஸ்லாமுக்கு வக்காளத்து வாங்கவேண்டும். அதற்கு மேல் வாங்கினால், இப்படி தலைகுனிய நேரிடும்.
பாரா அவர்கள் எழுதியது:
எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப் பார்க்கலாம்.
. . .
யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள். (உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள். இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு. இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்?மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும். அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.
ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.
ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."
இது கதையல்ல. இஸ்லாமிய சரித்திரத்தின் ஓரங்கமான இச்சம்பவம் அனைத்து யூத, கிறிஸ்துவ வரலாற்று நூல்களிலுமேகூடப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
"முகம்மது நபியே ஒரு கட்டத்தில் யூத மதத்துக்கு மாறிவிடத் தயாராக இருந்தார்" என்று எவ்வித ஆதாரமும் இல்லாத வாதத்தை முன்வைத்த யூத சரித்திர ஆராய்ச்சியாளர் மார்ட்டின் கில்பர்ட் போன்றவர்கள் கூட உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வருணித்திருக்கிறார்கள்.
உமர் எழுதியது:
ஒரு பைத்தியக்காரன் கூட பாராவை போல ஒப்பிடமாட்டான்:
மேறகண்ட பத்தியில் பாரா அவர்கள் ஒப்பிடும் லாஜிக்கைப் பார்த்தால், ஆச்சரியத்தில் அப்படியே புல்லரித்துவிடும். ஆமாம்! ஒரு பைத்தியக்காரன் கூட இவரைப்போல ஒப்பிடமாட்டன், அவ்வளவு அடிமட்ட நிலைக்குச் சென்று இவர் எழுதுகிறார். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இவரது வரிகளை படிக்கும் வாசகர்களைத் தான் இவர் பைத்தியக்காரர்களாக கருதி இவைகளை எழுதியுள்ளார். நான் இப்படி எழுதுவதற்கான காரணங்களைத் தருகிறேன், படியுங்கள். அப்போது தான் புரியும், பாராவின் வரிகளில் காணப்படும் முட்டாள்தன ஒப்பீடு:
பாராவின் மேற்கண்ட வரிகளின் சுருக்கம் இது தான்:
- எகிப்து மீது உமர் தொடுத்த போரின் அடிப்படையில் தான் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள், இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று சொல்கிறார்களாம்.
- ஆனால், இது தவறான கருத்தாம், இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லையாம்.
- இது எப்படி? என்று கேட்டால், அந்த போருக்கு பிறகு நடந்த ஒரு சம்பவத்தை பாரா அவர்கள் சுட்டிக்காட்டி, ‘இந்த நிகழ்ச்சியின் படி பார்த்தால், உமர் இஸ்லாமை வாளால் பரப்பவில்லை’ என்று அறிந்துக்கொள்ளலாம் என்றுச் சொல்கிறார்.
இஸ்லாம் வாளால் பரப்படவில்லை என்பதற்கு நிரூபனமாக உமரின் அந்த நிகழ்ச்சி உள்ளது என்று பாரா அவர்கள் எழுதினார்கள். இதைத் தான் “ஒரு பைத்தியக்காரனும் செய்யாத ஒரு ஒப்பீட்டை பாரா செய்தார்” என்று நான் பாரா அவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு காரணமாக உள்ளது.
பாராவின் லாஜிக் பைத்தியக்காரத்தனமா? ஆம்.
1) முதலாவதாக, உமர் வெறும் எகிப்தை மட்டுமே போர் செய்து பிடித்தார் என்பது போல ஒரு பாவணையை பாரா தம் வரிகளில் எழுதியுள்ளார். இது சுத்தப்பொய்யாகும். உமர் எகிப்தை பிடிப்பதற்கு முன்பு, அரேபியாவைச் சுற்றியுள்ள இதர நாடுகள் மீதும் போர் தொடுத்து அவைகளையும் பிடித்தார், இதன் பட்டியல் முந்தைய பாயிண்டில் கொடுத்துள்ளேன்.
2) இரண்டாவதாக, கொசுவை வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குவது என்றுச் சொல்வார்களே அது போல, உமர் பல நாடுகளை பிடித்து, தலைகள் உருளச்செய்துவிட்டு, இரத்த ஆறை ஓடச்செய்தார். ஆனால், கடைசியாக ஜெருசலேமில் ஒரு செயலைச் செய்தாராம். அதனால், உமர் இஸ்லாமை வாளால் பரப்பவில்லையென்று பாரா கூறுவது பைத்தியக்காரத்தனமாகும்.
3) ஒரு பக்கம் உமர், பல ஆயிர உயிர்களை எடுத்தார், பலரை விதவைகளாக்கினார், சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆனாதைகளாக்கினார், பெண்களை அடிமைகளாக எடுத்துக்கொண்டு அவர்களை தன் இராணுவத்தினரிடம் அடிமைகளாக பிரித்துக்கொண்டார். இன்னொரு பக்கம், நான் இந்த ஆலயத்தில் தொழுதால், அந்த ஆலயத்தை முஸ்லிம்கள் மசூதியாக்கிவிடுவார்கள் என்றுச் சொன்னாராம். இது ஒரு சிறந்த செயலாம்.
4) உண்மையாக உமர் இஸ்லாமை வாளால் பரப்பக்கூடாது என்று எண்ணியிருந்தால், மதினாவில் நமாஜ் செய்துக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும், இப்படி நாடுகளை பிடிக்க வாளை தூக்கியிருந்திருக்கக்கூடாது.
5) பாராவின் பைத்தியக்கார இஸ்லாமிய வக்காளத்து எப்படி இருக்கின்றதென்றால், இந்தியாவில் படையெடுத்த வந்த அக்காலத்து சுல்தான்களில் ஒருவர், இந்திய கோயில்களை கொள்ளையடித்துவிட்டு, சிலைகளை உடைத்துவிட்டு, திரும்பிச் செல்லும்போது, கோயிலுக்கு எதிரே போட்டு இருந்த கோலத்தைப் பார்த்து, இந்த கோலம் இந்துக்களின் கலாச்சார சின்னமாக இருக்கிறது, இதனை மதிக்கவேண்டும், மிதிக்ககூடாது என்பதற்காக அதனை தொடாமல் ஒதுங்கிச் சென்றால் எப்படி இருக்கும்? பாரா இந்த நிகழ்ச்சியை எப்படி விவரிப்பார் தெரியுமா? சுல்தான்கள் கோயிலை கொள்ளையடித்தார்கள் என்றுச் சொல்வது அவதூறு ஆகும். சுல்தான்களுக்கு கோயில்களை கொள்ளையடிக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. இதற்கு ஒரு நிரூபனம் என்னவென்றால், அந்த சுல்தான் கோயிலை கொள்ளையடித்துவிட்டு திரும்பிவரும் போது, ‘கோயிலை மதித்து, அதற்கு முன்பாக போடப்பட்டு இருந்த கோலங்களை கலைக்காமல், அதன் மீது கால் வைக்காமல் போனதிலிருந்தே, அந்த சுல்தான்களுக்கு இந்திய கோயில்கள் என்றால் எவ்வளவு கௌரவம் என்பது தெரிந்துவிடுகிறது”.
6) இந்த உதாரணம் உங்களுக்கு எப்படித் தெரிகிறது? பைத்தியக்காரத்தனமாகத் தெரிகின்றதல்லவா? அது போலத் தான் உள்ளது, உமர் ஜெருசலேமில் செய்த செயலை குறிப்பிட்டு, உமர் இஸ்லாமை வாளால் பரப்பவில்லை என்றுச் சொல்வது.
யார் யாரை தொழுக அழைத்தார்கள்? ஏன் இந்த பொய்?
பாரா அவர்கள் எழுதியதை கூர்ந்து கவனியுங்கள். பாலஸ்தீனாவில் அரபியர்கள் இருந்தார்களாம், அவர்கள் தான் கிறிஸ்தவ ஆலயத்தில் தொழும் படி, உமரை கேட்டுக்கொண்டார்களாம். ஆனால், உமர் மறுத்துவிட்டாராம். ஆனால், உண்மையில் அவரை தொழுக அழைத்தவர்கள் பாலஸ்தீன அரேபியர்கள் அல்ல, ஜெருசலெமின் தலைவர் ஆவார். மற்றவிவரங்கள் எப்படியோ, இஸ்லாம் பற்றி பாரா அவர்கள் எழுதினால் போதும், முதலாவது வருவது பொய்யான விவரங்கள் தான்.
It has been recorded in the annals of Muslim chronicles, that at the time of the Zuhr prayers, Sophronius invited Umar to pray in the rebuilt Church of the Holy Sepulchre. Umar declined, fearing that accepting the invitation might endanger the church's status as a Christian temple, and that Muslims might break the treaty and turn the temple into a mosque.[11] After staying for ten days in Jerusalem, the caliph returned to Medina.[20]
ஹக்ஸ் இஸ்லாமிய அகராதி:
இஸ்லாமிய அகராதி ஜெருசலேமில் அப்போது 12,000 கிரேக்கர்கள் இருந்தார்கள், மற்றும் 50000 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்றுச் சொல்கிறது. அரபியர்கள் இருந்தார்கள் என்று வேறு ஏதாவது ஆய்வு நூலில் நீங்கள் படித்திருக்கிறீர்களா? படிக்கவில்லையென்றால், எங்கேயிருந்து விவரங்கள் உங்களுக்கு கிடைத்தன? (ஒருவேளை முஹம்மதுவிற்கு வந்தது போல, வஹி உங்களுக்கும் வந்ததா?)
There were withing the city 12,000 Greeks and 50,000 natives, and the Khalifah 'Umar insisted that all the Greeks depart within three days, and that the natives should pay tribute. Five dinars were imposed upon the rich, four upon the middle classes, and three upon the lower classes; very old and very young persons paid nothing.
A DICTIONARY OF ISLAM by THOMAS PATRICK HUGHES, Page 228
பாரா அவர்கள் எழுதியது:
"முகம்மது நபியே ஒரு கட்டத்தில் யூத மதத்துக்கு மாறிவிடத் தயாராக இருந்தார்" என்று எவ்வித ஆதாரமும் இல்லாத வாதத்தை முன்வைத்த யூத சரித்திர ஆராய்ச்சியாளர் மார்ட்டின் கில்பர்ட் போன்றவர்கள் கூட உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வருணித்திருக்கிறார்கள்.
உமர் எழுதியது:
இதுவரை பாரா அவர்களின் வரிகளை ஆய்வு செய்ததில், இந்த பத்தியில் அவர் எழுதியதை நம்ப முடியவில்லை. மார்ட்டின் கில்பர்ட் பல புத்தகங்களை எழுதியுள்ளார் (https://en.wikipedia.org/wiki/Martin_Gilbert). பாரா அவர்கள் படித்த புத்தக(ம்)ங்கள் எவைகள் என்றுச் சொன்னால், அவைகளை வாங்கி, படித்து தெரிந்துக்கொள்ளலாம், அதுவரை மேற்கண்ட பத்தியில் பாரா அவர்கள் எழுதியதை நம்புவதற்கு எனக்கு தைரியம் இல்லை.
பாரா அவர்களின் ”உதவிய நூல்களின் பட்டியலில்” மார்டின் கில்பர்ட் எழுதிய ஒரு நூலின் பெயரும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
பாரா அவர்கள் எழுதியது:
உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை அபூபக்கரைக் காட்டிலும் எளிமையானவராகவே சித்திரித்திருக்கிறார்கள். அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள். எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார். அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது. அபூபக்கரைப் போலவே, தன் அகங்காரம் மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
உமர் எழுதியது:
அபூபக்கரைப் பற்றி பாரா அவர்கள் சொன்ன ‘நிலாவில் ஆயா வடசுடும்’ கதைப்போன்று, உமரின் விஷயத்திலும் இன்னொரு ஆயா, இன்னொரு நிலாவில் அதே மாதிரியான வடைகளை சுட்டதாக எழுதுகிறார் பாரா. [ஆயா வேறு, நிலா வேறு, ஆனால், வடைகள் ஒரே மாதிரி தான்]
ஒரு மகா சக்கரவர்த்தி, பல போர்களை புரிந்தவர், இப்படியெல்லாம் செய்யமுடியுமா?
- வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது
- வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது
- துணிகளைத் துவைத்துக் காயவைத்து
- மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது
பாரா அண்ணே! முஸ்லிம்கள் கலிஃபாக்கள் இவ்வளவு நல்லவங்க இல்லை என்றுச் சொல்வது ஒரு புறமிருக்க, இவைகள் ஒரு மகா சக்கரவர்த்திக்கு சாத்தியமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். நம் நாட்டு அரசியல் தலைவர்கள், சாலையில் நின்றுக்கொண்டு தொடப்பத்தை பிடித்துக்கொண்டு சுத்தம் செய்வது மாதிரி நாம் செய்திகளில் வாசிப்பது, ஏதோ ஒரு முறை செய்தது, அதுவும், ஒரு சில நிமிடங்கள் தான். அதற்காக, எங்கள் தலைவர் அண்ணா சாலை முழுவதும் துடபத்தால் சுத்தம் செய்தார் அதுவும், தன் ஆட்சி காலம் முழுவதும் 5 ஆண்டுகள் இப்படி தினமும் செய்தார் என்றுச் சொன்னால், இந்த ‘கேணத்தனமான செய்தியை’ பாரா நம்புவாரா? ஆனால், இப்படி கேணத்தனமாக அவர் எழுதியை ஒட்டுமொத்த குமுதம் ரிப்போர்ட்டர் வாசகர்கள் நம்பவேண்டும் என்று பாரா நினைத்துள்ளார்.
பாராவின் இந்த நிலமெல்லாம் இரத்தம் தொடரை குமுதத்தில் படித்த வாசகர்கள், பாராவின் இப்படிப்பட்ட ”ஆயா சுட்ட வடைக்கதைகள்” பற்றி படித்தபோது, அவருக்கு தொலைப்பேசியில் அழைத்து, ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று கேட்டீர்களா?
பாரா அவர்கள் எழுதியது:
தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வருணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்
உமர் எழுதியது:
அரேபிய மொழியைப்பேசும் நாடுகள் மீது போர் தொடுத்து, அவைகளை அழித்துத்தீர்த்துக்கட்டிய உமர் எப்படி ஜெருசலேமில் இருக்கும் அரேபியர்களுக்கு ‘தங்கள் சக்ரவர்த்தி’ ஆனார்? கி.பி. 636- 640 காலக்கட்டத்தில் ஜெருசலேமில் எத்தனை ஆயிர அரேபியர்கள் இருந்தார்கள்? பாராவிற்கு இதன் கணக்குத் தெரியுமா? முதலாவது, ஜெருசலேமில் அரேபியர்கள் இருந்தார்களா? (அரபி பேசும் கிறிஸ்தவர்களோ, யூதர்களோ, கிரேக்கர்களோ அல்ல).
உமர் எளிமையான உடைகளை அணிந்திருந்தார் என்றுச் சொல்வதில் எனக்கு முரண்பாடு இல்லை, ஆனால், ஜெருசலேமில் அரேபியர்கள் இருந்தார்கள் என்று பாரா சுட்ட ஆயா வடையிலிருந்து தான் எனக்கு வாசனை அதிகமாக அடிக்கிறது.
பாரா அவர்கள் எழுதியது:
நகர்வலத்தின் இறுதியில் மக்களிடையே உரையாற்றிய உமர், ஒரே ஒரு விஷயத்தை மிகவும் அழுத்தம் கொடுத்துப் பேசினார். "யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருமே இப்ராஹிமின் (ஆபிரஹாம்) வழித்தோன்றல்கள். சண்டையின்றி ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம்.”
உமர் எழுதியது:
இந்த உரையை உமர் அவர்கள் மதினாவில் இருந்துக்கொண்டு சொல்லியிருந்தால் உலக சரித்திரம் வெறு வகையாக இருந்திருக்கும். இதர நாடுகளை வலியச்சென்று பிடித்து, கொள்ளையடித்து, பெண்களை அடிமைகளாக விற்று, தலைகளை சீவி, கடைசியாக ஜெருசலேமையும் விட்டுவைக்காமல் அதனையும் பிடித்துக்கொண்டு, ‘ஒற்றுமையாக வாழுங்கள்’ என்று உரை நிகழ்த்துவது, மிக மிக கேவலமான ஒன்று. படித்தவர்கள் இதனை எப்படி அங்கீகரிப்பார்கள்?
முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்:
குஜராத் கலவரத்துக்கு மோடியின் அரசாங்கம் தான் காரணம் என்று முஸ்லிம்கள் நம்புகிறீர்கள். இந்த கலவரத்தை செய்துவிட்டு, அனேகரை கொன்றுகுவித்துவிட்டு, கடைசியாக மோடி வந்து முஸ்லிம்களிடம் ‘இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருப்போம்’ என்றுச் சொன்னால், உங்களுக்கு எங்கே எரியும்? அப்படித்தான் இருக்கிறது ‘உமர் உரையாற்றியதாக பாரா எழுதியது’. ஒற்றுமையாக இருங்கள் என்றுச் சொல்லும் தகுதி உமருக்கு இல்லை, அவ்வளவு ஏன் முஹம்மதுவிற்கும் இல்லை. மக்களை கொன்றுவிட்ட பிறகு ‘சமாதான பிரபு’ போல பேசுவது ஏன்?
உமர் அன்று ஜெருசலேமில் பேசியது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மோடி போன்ற அரசியல் தலைவர்கள் ஊடகங்களில் நல்லவர்கள் போல நடிப்பதும் சரியானது தான்.
பாரா அவர்கள் எழுதியது:
ஜெருசலேம் கைப்பற்றப்பட்டபிறகு அங்கே உமர் வெளியிட்ட முதல் அரசு உத்தரவு, அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதுதான். உத்தரவிட்டதுடன் நின்றுவிடாமல், குப்பை அள்ளும் பணியில் முதல் கரம் கொடுத்ததும் அவரேதான். இதுவும் பல யூத சரித்திர நூல்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் சம்பவமே. (ஆனால் கிறிஸ்துவ ஆசிரியர்களின் நூல்களில் இந்தச் சம்பவம் எழுதப்பெறவில்லை.)
உமர் எழுதியது:
நீங்கள் மொட்டையாக எழுதியவைகளையெல்லாம் அப்படியே நம்புவதற்கு நான் குமுதம் ரிப்போர்டர் வாசகன் அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அடைப்பிற்குள் எழுதிய வரிகளுக்கு பதிலைச் சொல்லமுடியுமா? கிறிஸ்தவ ஆசிரியர்களின் நூல்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எவைகளை? நீங்கள் படிக்காமல் எழுதியிருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் படித்த யூத மற்றும் கிறிஸ்தவர்களின் சரித்திர நூல்களின் பெயர்களை இங்கு குறிப்பிடமுடியுமா?
பாரா அவர்கள் எழுதியது:
ஆனால் இத்தனை பரந்த மனம் படைத்தவராக இருந்த உமர், முஸ்லிம் அல்லாத பிற இனத்தவர் அனைவரையும் இஸ்லாமியப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்தும், மெக்கா, மதினா ஆகிய நகரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வேறு இடங்களில் வசிக்க நிர்ப்பந்தித்ததாக ஒட்டுமொத்த யூத, கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்களும் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இக்குற்றச்சாட்டுக்கு இஸ்லாமியர் தரப்பு பதில் என்று குறிப்பிடும்விதமாக ஏதும் கிடைக்கவில்லை.
உமர் எழுதியது:
சபாஷ் பாரா சபாஷ், ரொம்ப நன்னா இருக்கு உங்களுடைய டுபாகூர் ஆய்வுகள்!
உமர் பற்றிய நல்லவைகள் கிறிஸ்தவ சரித்திர நூல்களில் இல்லையென்று எழுதுகிறீங்க. ஆனால் அதே உமர் பற்றிய தீய செயல்கள் யூத கிறிஸ்தவ நூல்களில் இருக்கின்றன, ஆனால், இஸ்லாமிய நூல்களில் இல்லை என்றுச் சொல்கிறீங்க! உங்களின் இந்த நிலைப்பாட்டிற்கே, முஸ்லிம்கள் உங்களை பாராட்டி இருந்திருப்பார்களே!
பச்சோந்தியே வெட்கப்படும் அளவிற்கு நீங்கள் அடிக்கடி உங்கள் கலரை மாற்றிக்கொண்டுள்ளீர்கள்.
உமர் மற்றவர்களை அரேபியாவிலிருந்து துரத்தினார் என்ற விஷயம் உங்களுக்கு இஸ்லாமிய நூல்களில் கிடைக்கவில்லையா? நெசம்மா! சொல்லுங்க! பொய் சொன்னா பொம்பள புள்ளே பொறக்கும் என்று எங்க கிராமத்துலே சொல்லுவாங்க!
ம்ம்ம்…. உங்களுக்கு எங்கே இப்படிப்பட்ட விவரங்கள் எல்லாம் கிடைக்கும்! நீங்க யூத புத்தகங்களை படிப்பீங்க! நீங்க கிறிஸ்தவ புத்தகங்களை படிப்பீங்க! ஆனா இஸ்லாமிய புத்தகங்களை படிக்கமாட்டீங்க? ஹதீஸ்களை படிக்கமாட்டீங்க! உங்களுக்கு எப்படி சரியான விவரங்கள் கிடைக்கும்?
உமர் மக்களை நாடு கடத்தின விஷயத்தை ஹதீஸ்கள் பதிவு செய்கின்றன. புகாரி, முஸ்லிம் ஹதிஸ்களின் நம்பகத்தன்மை என்னவென்று முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள்.
நான் மேற்கோள் காட்டப்போகும் கீழ்கண்ட இரண்டு ஹதீஸ்கள் பொய் என்று ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்கள் சொல்லும்படி செய்துவிட்டீர்கள் என்றால், நான் உங்களுக்கு 10 ஆயிரம் பரிசு தருவேன். ஏனென்றால், உங்களுக்கு கிடைக்காத விவரங்கள் அல்லவா இவைகள்! நீங்கள் தேடிப்பார்த்தீர்கள், ஆனால் உங்களுக்கு கிடைக்கவில்லை, நீங்கள் என்ன செய்யமுடியும்!?
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நாடு கடத்திய உமர்:
புகாரி ஹதீஸ்: எண்: 2338 (மேலும் பார்க்க புகாரி எண் 3152 & 6832)
2338. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)' என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.
முஸ்லிம் ஹதீஸ் எண்: 3158 (மேலும் பார்க்க முஸ்லிம் எண் 3626)
3158. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் "ஹிஜாஸ்" மாநிலத்திலிருந்து நாடு கடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோதே அங்கிருந்த யூதர்களை வெளியேற்றிவிட விரும்பினார்கள். ஏனெனில், அந்தப் பிரதேசம் வெற்றிகொள்ளப்பட்ட பின் அது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. ஆகவேதான், யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். இந்நிலையில், யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் இங்கேயே தங்கி, இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கும் பொறுப்பை ஏற்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம் (மீதியை மதீனா அரசுக்குச் செலுத்திவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்படி நாம் விரும்பும்வரை நீங்கள் இங்கே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை "தைமா" "அரீஹா" (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடுகடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு, வரி செலுத்தி) வசித்துவந்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்கள் மிகவும் கேவலமான விதத்தில் பாராவின் ஆய்விற்கு பதிலடி கொடுத்துள்ளன.
முடிவுரை:
இந்த கட்டுரையில் பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தத்தின் 22ம் அத்தியாயத்தில் இருக்கும் ஓட்டைகளின் வழியாக, பாராவின் ஆய்வை சிறிது அலசினோம். எத்தனை பொய்கள், எத்தனை மடத்தனமான வாதங்கள் பாராவின் வரிகளில் கண்டோம். எதிர்காலத்தைப் பற்றி பொய்யாக முன்னறிவிப்பு செய்யும் தீர்க்கதரிசிகளையும் மன்னித்துவிடலாம், ஆனால் கடந்த காலத்தில் நடந்துமுடிந்த சரித்திரத்தை மாற்றி எழுதும் எழுத்தாளர்களுக்கு சரியான ஒரு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். இவர்களை இப்படியே விட்டால், நாளைக்கு பாரா போன்றவர்கள், பின்லாடன் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொன்னாலும் சொல்லுவார்கள். உமரைப் பற்றி எப்படியெல்லாம் பாரா பரிந்து பேசினாரோ, அதே போல பின்லாடன் பற்றியும் பேசுவார், எனவே, போடவேண்டிய வரிகளில் சூடு போடவேண்டியது என் கடமை.
கடைசியாக, ஒரு முக்கியமான விஷயம்.
”பாரா என்ன செய்வார்? அவர் படித்த புத்தகங்களில் உள்ளதைத் தானே அவர் எழுதமுடியும்! அவர் வெறும் அம்பு தானே! எய்தது அப்புத்தகங்கள் அல்லவா?” என்று என் தொடர் பதில்களை படிக்கும் வாசகர்கள் கேட்கலாம். உங்கள் ஆதங்கம் சரியானது தான், நான் புரிந்துக்கொண்டுள்ளேன். ”இஸ்லாமுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத ஒரு எழுத்து வியாபாரி” அவர் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், ஒருவருக்கு தண்டனை கொடுத்தால், அதைப் பார்ப்பவர்கள் திருந்துவார்கள் அல்லவா! இனி இப்படி எழுதுபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா! அதற்காகத் தான், இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், இன்னொரு விவரத்தை இங்கு குறிப்பிடவேண்டும், அது என்னவென்றால், ‘பாரா ஒரு பாமரன் அல்ல, அவர் படித்தவர், எழுத்தாளர் மற்றும் இதர விவரங்களை நான்றாக ஆய்வு செய்பவர்’. இப்படிப்பட்டவர் இஸ்லாமின் விஷயத்துக்கு வரும் போது பல இடங்களில் தன் மனசாட்சிக்கும், ஆய்வுக்கும் எதிராக அவர் எழுதியுள்ளார் என்பது என் கருத்து. வேண்டுமென்றே சில இடங்களில் சரித்திரத்தை திருத்தி எழுதியுள்ளார், அது அறியாமையோ, அல்லது தெரிந்தே செய்ததோ! எழுத்துவடிவில் கொஞ்சம் தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்.
ஒருவகையில் நான் பாராவிற்கு நன்றிகளைச் சொல்லவேண்டும். அவர் மூலமாக அனேகர் எச்சரிக்கப்படப்போகிறார்கள் என்பது அவருக்கும் ஒரு மகிழ்ச்சி தானே!
இனிய ரமளான் வாழ்த்துக்கள்.
அடுத்த தொடரில் சந்திப்போம்.
அடிக்குறிப்புக்கள்:
1. Rights of Non-Muslims in an Islamic State - www.answering-islam.org/NonMuslims/rights.htm
2. Tolerance in islam - www.answering-islam.org/Shamoun/badawi_tolerance.htm
3. Muhammad’s Mistreatment of the People of the Book - A Dawagandist Seeks to Justify Islam’s Degradation of Jews and Christians - www.answering-islam.org/Shamoun/badawi_greetings.htm
4. உமர் ஜெருசலேம் கிறிஸ்தவர்களோடு செய்த உடன்படிக்கை – தபரி சரித்திரத்திலிருந்து ஒரு மேற்கோள். பாரா அவர்கள் சொல்வதற்கும் இதற்கும் முரண்பாடுகள் உள்ளது. பாராவின் படி, ஜெருசலேமில் யூதர்களுக்கு உமர் அனுமதி அளித்தார், ஆனால் தபரி சரித்திரத்தின் படி, ஒரு யூதன் ஜெருசலேமில் வாழக்கூடாது என்று உமர் உடன்படிக்கை செய்ததாக வருகிறது. இதைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையில் காண்போம்.
In the name of God, the Merciful, the Compassionate. This is the assurance of safety which the servant of God, Umar, the Commander of the Faithful, has given to the people of Jerusalem. He has given them an assurance of safety for themselves for their property, their churches, their crosses, the sick and healthy of the city and for all the rituals which belong to their religion. Their churches will not be inhabited by Muslims and will not be destroyed. Neither they, nor the land on which they stand, nor their cross, nor their property will be damaged. They will not be forcibly converted. No Jew will live with them in Jerusalem.
The people of Jerusalem must pay the taxes like the people of other cities and must expel the Byzantines and the robbers. Those of the people of Jerusalem who want to leave with the Byzantines, take their property and abandon their churches and crosses will be safe until they reach their place of refuge. The villagers may remain in the city if they wish but must pay taxes like the citizens. Those who wish may go with the Byzantines and those who wish may return to their families. Nothing is to be taken from them before their harvest is reaped.
If they pay their taxes according to their obligations, then the conditions laid out in this letter are under the covenant of God, are the responsibility of His Prophet, of the caliphs and of the faithful.
– Quoted in The Great Arab Conquests, from Tarikh Tabari
2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்