ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

கட்டுரையின் தலைப்பு: சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?

தேதி: 14 மே 2005

தலைப்பு: கொலம்பியாவிலிருந்து...

ஹலோ, நான் கொலம்பியாவில் இஸ்லாமியர்கள் மத்தியிலே கிறிஸ்தவ மிஷனரியாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமியர்கள் இன்ஜில் மீதும், இயேசுவின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், "நாங்கள் நம்பிக்கை கொள்ள தேவையில்லை, எங்களுக்கு அவசியமில்லை" என்பதாகும். இஸ்லாமியர்கள் தீர்க்கதரிசிகளை, வேத புத்தகங்களை, அதிகாரத்தில் அமரும் அரசாங்கத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் இவ்விதமாக கூறுகிறார் “தோரா, ஜபூர், இன்ஜில் மற்றும் குர்‍‍ஆன் என்பது நான்கு பரிசுத்த வேதங்களாகும். இந்த நான்கில் முதல் மூன்று கடந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டது, ஆனால் குர்‍ஆனோ தற்காலத்திற்கு சம்மந்தப்பட்டது என்கிறார்கள். இது எப்படியென்றால், கடந்த 35 ஆண்டுகளில் கொலம்பியாவில் நான்கு விதமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. முதலாவதாக, சிஹானௌக் அரசர் ஆட்சி புரிந்தார், அதன் பிறகு அமெரிக்காவின் ஆதரவுடன் லான் நோல் அரசாங்கம் ஆட்சி புரிந்தது அதன் பிறகு,போல் பாட் என்பவர் ஆட்சி புரிந்தார் இப்படி தொடர்ந்து வருகிறது. இதே போலத்தான் தோராவும், ஜபூரும், இன்ஜிலும் இருக்கிறது, அதாவது ஒரு ஆட்சிக்கு பிறகு (வேதத்திற்கு பிறகு) இன்னொரு ஆட்சி வருகிறது. தற்காலத்தில் ஹுன் சென் நம்முடைய கொலம்பியாவின் ஆட்சியாளராக இருக்கிறார், அதனால் அவரது சட்டத்தின் படியே நாம் வாழவேண்டும், இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் சட்டத்தின் படி நாம் வாழக்கூடாது”. இதே போலத் தான் நாம் அனைவரும் முஹம்மதுவை பின்பற்றவேண்டும், இன்று நம்முடைய சமீபத்திய வேதமாகிய குர்‍ஆனை பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இன்னும் இஸ்லாமியர்கள் ஒரு படி மேலே சென்று, இயேசு மோசேவையும், மோசேயின் சட்டத்தையும் இரத்து செய்துவிட்டார். (அதே போல இஸ்லாம் இயேசுவையும் அவரது போதனைகளையும் இரத்து செய்துவிட்டது என்று கூறுகிறார்கள்). நான் இந்த கேள்விக்கு தளங்களில் பதிலை தேடி கண்டுபிடிக்கவில்லை அதனால் மெயில் அனுப்புகிறேன். உங்களுக்கு என் நன்றி

இப்படிக்கு,

உங்கள் சகோதரன் (T)


எங்கள் பதில்:

அன்புள்ளபவருக்கு,

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் பெயரில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.

இஸ்லாமியர்கள் உங்களிடம் கூறிய வாதத்தில் அடிப்படை தவறு உள்ளது.

உண்மையாகவே, தற்போது ஆட்சி புரியும் அரசாங்கமும் தடையில்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி புரியப்போவதில்லை. இதன் பொருள் என்னவென்றால், அந்த இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அடுத்த அரசு எப்போது ஆட்சிக்கு வருமோ, அப்போது இந்த இஸ்லாமியர்கள் குர்‍ஆனை பின்பற்றுவதையும், இஸ்லாமை பின்பற்றுவதையும் நிறுத்திவிடவேண்டும் மற்றும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக எந்த மார்க்கம் அல்லது வெளிப்பாடு வந்ததோ அதனை பின்பற்றவேண்டும். (உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மார்க்கங்கள் மர்மனோனிஸம் அல்லது பஹாயிஸத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றவேண்டும்).

உண்மையில், கடந்த 35 ஆண்டுகளிலிருந்து 50 ஆண்டுகள் வரை ஐந்து அரசாங்கங்களை நீங்கள் கண்டு இருக்கிறீர்கள் அப்படியானால், இன்னொரு புதிய அரசு வரும் என்று எதிர்பார்க்காமல் நீங்கள் எல்லாரும் மர்மோன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மார்க்கத்தவர்களாக ஏற்கனவே மாறியிருக்கவேண்டும்.

இப்படி நாம் சொல்வதினால், இஸ்லாமிய நண்பர்கள் உடனே இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறமாட்டார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும், இருந்தாலும் ஏன் சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர்களின் இந்த மாறிக்கொண்டு இருக்கும் அரசு எடுத்துக்காட்டுகள் உபயோகமற்றவை தவறானவை என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டவே இப்படிச் சொன்னேன். ஆகையால், கிறிஸ்தவராகிய நீங்கள் கூட (இந்த மெயிலை எழுதியர்) இஸ்லாமியர்களின் லாஜிக்கின் படி இஸ்லாமியராக மாறவேண்டிய அவசியமில்லை.

முக்கியமான அம்சம் இது தான்: இஸ்லாமுக்கு பிறகு மர்மோனிஸம் மற்றும் பஹாயிஸம் வந்து இருந்தாலும், இஸ்லாமியர்கள் அவைகளை புறந்தள்ளிவிடுவார்கள், ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், இம்மார்க்கங்கள் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள் ஜோசப் ஸ்மித் என்பவரையும், பஹாயுல்லாவும் பொய் நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று நம்புகிறார்கள்.

இங்கு ஒரு மார்க்கம் “முன்னால் வந்ததா அல்லது அடுத்தபடியாக வந்ததா” என்பது கேள்வியில்லை. ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால்: அந்த நபர் உண்மையாகவே நபியாக இருந்தரா இல்லையா என்பது தான்?

இஸ்லாமியர்கள் ஏன் பஹாயுல்லாவை நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை? (பஹாயுல்லா என்பவர் சமீப காலத்தில் இஸ்லாமை போல வெளிப்பாட்டை கொடுத்தார். மட்டுமல்ல, அவர் இஸ்லாமியர்கள் போல குர்‍ஆனும் ,பைபிளும் இறைவனிடமிருந்து வந்தது என்று நம்புகிறார். இஸ்லாமியர்கள் எப்படி தோராவும், இன்ஜிலும் இறைவனால் அருளப்பட்டது என்று நம்புகிறார்களோ அது போல, இவர்களும் நம்புகிறார்கள்). பஹாயுல்லா இறைவனிடமிருந்து வந்தவர் என்று ஏன் இஸ்லாமியர்கள் நம்புவதில்லை? ஏனென்றால், இஸ்லாம் இறைவனால் அனுப்புப்பட்ட உண்மையான மார்க்கம் என்று பஹாய் நம்பினாலும், அவரது செய்தி இஸ்லாமுக்கு எதிராக முரண்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை நபி என்று நம்புவதில்லை. மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் பஹாயுல்லாவை இஸ்லாமோடு ஒப்பிட்டு எடை போட்டு அவரை எதிர்க்கிறார்கள். இதே போலத் தான், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை அவருக்கு முன்பாக வந்த வேதத்தின் செய்தியோடு ஒப்புடுகிறோம். அவருக்கு ஒரு உண்மை நபிக்கான தகுதி உண்டா? அவர் முந்தைய வேதம் சொல்லும் நபிக்கான பரிட்சையில் வெற்றி பெறுகிறாரா என்று நாங்கள் சரி பார்க்கிறோம். முஹம்மது இந்த தீர்க்கதரிசி பரிட்சையில் தோற்று போகிறார், ஆகையால் நாங்கள் அவரை நபி என்று நம்புவதில்லை அவரை நிராகரிக்கிறோம். அவர் இறைவனிடமிருந்து வந்த நபியாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆக, அவர் இயேசுவை மாற்றி அந்த இடத்தில் “தான்” உட்காரமுடியாது அல்லது இயேசுவின் மார்க்கத்தை இரத்து செய்து தன் மார்க்கத்தை நிலை நிறுத்தமுடியாது .

கடைசியாக, இஸ்லாமியர்கள் அடிக்கடி இவ்விதமாக கூறுவார்கள்: "மோசேயின் செய்தியை யூதர்கள் திருத்திவிட்டதால், இயேசு வந்து அவைகளை சரிப்படுத்தினார் மற்றும் தேவனின் உண்மையான செய்தியை (இஸ்லாமை) கொண்டுவந்தார். அதே போல, கிறிஸ்தவர்கள் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டதால் அவருடைய போதனையிலிருந்து வழிவிலகி சென்றுவிட்டதால், இறைவன் அவர்களை சரிப்படுத்த முஹம்மதுவை அனுப்பினார்".

இது இஸ்லாமியர்களின் தவறான கருத்தாகும். பழைய ஏற்பாட்டை திருத்தவே நான் வந்தேன் என்று இயேசு ஒரு போதும் கூறவே இல்லை. அவர் பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தார். உண்மையில், பைபிளின் ஒரு பாகம் பழைய ஏற்பாடு ஆகும். ஆனால், முஹம்மதுவும், இஸ்லாமும் பைபிளை பக்கத்தில் வைத்துவிட்டார்கள். இனி பைபிள் உபயோகப்படாது என்று அவர்கள் கூறுகிறார்கள். குர்‍ஆன் பைபிளின் இடத்தை பிடித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

பைபிளின் செய்தியும், குர்‍ஆனின் செய்தியும் ஒன்றல்ல. இஸ்லாம் சொல்லும் செய்தி பைபிள் சொல்லும் செய்தி அல்ல, அது பைபிளுக்கு எதிரானதாகும். பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாடு இருப்பதுபோல, பைபிளின் தொடர்ச்சி குர்‍ஆன் அல்ல. கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல.

பழைய ஏற்பாட்டின் மற்றும் புதிய ஏற்பாட்டின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளோடு குர்‍ஆன் முரண்படுகிறது.

உதாரணத்திற்கு, தோராவின் படி, பாவ நிவாரணத்திற்கு ஒரு மிருகத்தை பலியிடவேண்டும் என்ற கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் படி பாவ நிவாரணத்திற்கு மிருகத்தை பலியிடுவது முக்கியமானதாகும். இயேசு சிலுவையில் மரித்ததினால் இந்த கோட்பாடு நிறைவேறியது. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இந்த காரியத்தில் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகிறது. ஆனால், தோராவில் இப்படிப்பட்ட பலியிடும் கோட்பாடு உள்ளது என்றுகூட குர்‍ஆனுக்கு தெரியாது. தோரா பற்றி கூறும் போதும்,குர்‍ஆன் இதைப் பற்றி சொல்வது இல்லை. குர்‍ஆன் இந்த பாவ நிவாரண பலியை நிராகரிக்கிறது. இஸ்லாமின் படி மனிதன் நல்லவனாக இருக்கிறான் மற்றும் அவனுக்கு இரட்சிப்பு அவசியமில்லை என்று கருதுகிறது.

கிறிஸ்தவத்தோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய மதம் தன் செய்தியில் அடிப்படை கோட்பாடுகளிலேயே வித்தியாசப்படுகிறது. இஸ்லாமுக்கு பிறகு வரும் மதங்கள் பொய்யானவை என்று எப்படி இஸ்லாமியர்கள் கூறுகிறார்களோ, அதே போல இஸ்லாம் கூட‌ ஒரு பொய்யான மதமாகும்.

உங்கள் நண்பர் இந்த சத்தியங்களை ஜீரணித்துக்கொள்ளமாட்டார், ஆனால், உங்களுக்கு இவைகள் உதவியாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

முன்னால் வந்ததா பின்னால் வந்ததா என்பது கேள்வியில்லை, அந்த மார்க்கம் உண்மையாகவே உண்மையான மார்க்கமா என்பது தான்.

உங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் நீங்கள் பேசும் போது உங்களுக்கு கர்த்தர் ஞானத்தை அருளுவாராக.

ஜோசன் கர்ட்ஜ்

ஆன்சரிங் இஸ்லாம்

மூலம்:  Does The Latest Revelation Equal Truth?

இதர மெயில் உரையாடல்களை படிக்கவும்