இஸ்லாமிய அகராதி > உ வார்த்தைகள்

உமர் (இரண்டாம் இஸ்லாமிய கலிஃபா) சிரியா கிறிஸ்தவர்களுடன் செய்த உடன்படிக்கை 

மூலம்: இப்னு கதீர் தஃப்ஸீர்: குர்-ஆன் 9:29ம் வசனத்துக்கு விளக்கவுரை

தலைப்பு: காஃபிர்கள் தாழ்த்தப்படவேண்டும் என்பதற்கு அடையாளமே ஜிஸ்யா வரி அவர்களிடம் வாங்குவதாகும்

அல்லாஹ் கூறுகின்றான், (அவர்கள் ஜிஸ்யா வரியை செலுத்தும்வரை), அவர்கள் இஸ்லாமை ஏற்கவில்லையென்றால்,

(கீழ்படிதலுடன்), தோற்றுவிட்டு, அடிமைகளாகி

(சிறுமை அடைந்தவர்களாகி), அவமானப்பட்டு, தாழ்த்தப்பட்டு.

ஆகவே, திம்மீ மக்களாகிய அவர்களை (யூதர்கள்/கிறிஸ்தவர்களை) முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களை விட உயர்வாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், அவர்கள் இழிவானவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அவமானப்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். முஸ்லிம் ஹதிஸ் தொகுப்பில், இறைத்தூதர் அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவிக்கிறார்:

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முதலாவதாக முஸ்லிம்கள் ஸலாம் வாழ்த்து கூறக்கூடாது. இவர்களில் யாரையாவது முஸ்லிம்கள் சாலையில் சந்திக்க நேரிட்டால், அவர்களை சாலையின் குறுகிய பாதையில் போகும் படி கட்டாயப்படுத்தவேண்டும்.

இதனால் தான் நம்பிக்கையாளர்களின் தலைவராகிய உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், தம்முடைய நிபந்தனைகளுக்கு கட்டுப்படும்படி கிறிஸ்தவர்களை வற்புறுத்தினார். இந்த நிபந்தனைகள் அனைத்தும், கிறிஸ்தவர்களை தொடர்ந்து தாழ்த்துகின்றனவாகவும், அவமானப்படுத்துகின்றனவாகவும் இருந்தன. 

ஹதீஸ் அறிஞர்கள், அப்துர் ரஹ்மான் பின் கன் அஷ்ஷரி அறிவித்ததாக, ஒரு ஹதிஸைச் சொல்கிறார்கள்.

உமர் பின் கத்தாப்(ரலி) கட்டளையின் பேரில், நான் ஷாம் கிறிஸ்தவர்களுக்கான நிபந்தனைகளை உடன்படிக்கையாக எழுதினேன், அதன் விவரம் வருமாறு:

நிகரற்ற அருளாளனும், அளவற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். இது அல்லாஹ்வின் சேவகரும், நம்பிக்கையாளர்களின் தலைவருமாகிய உமர் என்பவருக்கும், இன்ன இன்ன நகரத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எழுதப்படும் உடன்படிக்கை ஆவணமாகும். முஸ்லிம்களாகிய நீங்கள் எங்களிடம் வந்தபோது (எங்களை ஆட்சி செய்யும் போது), உங்களிடமிருந்து எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், சொத்துக்களையும், எங்கள் பகுதியில் எங்கள் மார்க்கத்தை பின்பற்றுபவர்களையும் உங்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு உங்களிடமே நாங்கள் கோரிக்கைவிடுக்கிறோம்.

எங்கள் மீது நாங்களே கீழ்கண்ட நிபந்தனைகளை விடுத்துக்கொள்கிறோம்:

 • எங்கள் பகுதியில் புதிய கிறிஸ்தவ மடத்தையோ, சர்சையோ மற்றும் துறவிகளுக்கான இல்லங்களையோ கட்டமாட்டோம். 
 • எங்கள் வணக்கஸ்தலங்கள் புதுப்பிக்கவேண்டிய நிலையில் சிதிலமடைந்து இருந்தாலும், அதனை புதுப்பிக்கமாட்டோம், பழுது பார்க்கமாட்டோம்.
 • எங்களின் வணக்க ஸ்தலங்களை முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் இடமாக மாற்றமாட்டோம்.
 • எந்த ஒரு முஸ்லிமாவது எங்கள் வணக்கஸ்தலங்களில் வந்து இளைப்பாற வேண்டும் என்று விரும்பினால், அவர் பகலிலோ இரவிலோ எப்போது வந்தாலும் எங்கள் திருச்சபை கதவுகள் அவர்களுக்காக திறந்தே வைப்போம், அவருக்கு இல்லையென்று மறுப்பு கூறமாட்டோம்.
 • வழிப்பிரயாணிகளாக வரும் முஸ்லிம்களுக்கு எங்கள் வீடுகளில்/சபைகளில் மூன்று நாளுக்கான இருப்பிடமும், உணவும் நாங்கள் தருவோம்.
 • முஸ்லிம்களுக்கு எதிராக வேவு பார்ப்பவர்களுக்கு எங்கள் வீடுகளில், திருச்சபைகளில் பதுங்கி இருக்க இடம் தரமாட்டோம்.
 • எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் குர்-ஆனை கற்றுத்தரமாட்டோம். 
 • ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய பாவங்களைச் செய்ய நாங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தமாட்டோம். 
 • எங்கள் மதத்திலிருந்து முஸ்லிமாக மாறவிரும்புகிறவர்களை நாங்கள் தடுக்கமாட்டோம்.
 • முஸ்லிம்களை நாங்கள் மதிப்போம், நாங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் அவர்கள் வந்து உட்கார விரும்பினால், நாங்கள் அந்த இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, சென்றுவிடுவோம்.
 • முஸ்லிம்களைப்போல நடை உடை பாவணையை நாங்கள் செய்யமாட்டோம். அதாவது முஸ்லிம்களைப் போல உடை, தொப்பி, தலைப்பாகை, செருப்பு அணிவது, முஸ்லிம்களைப்போல தலைமுடி வைத்துக்கொள்வது, பேச்சு, புனைப்பெயர்கள், பட்டங்கள், மிருகங்கள் மீது முஸ்லிம்களைப் போல பயணிப்பது, முஸ்லிம்களைப் போல பட்டயங்களை தோள்களில் சுமந்துக் கொண்டுச் செல்வது, இப்படிப்பட்ட ஆயுதங்களை வாங்குவது போன்றவைகளைச் செய்யமாட்டோம். (எங்களை முஸ்லிம்களாக காட்டும் எதனையும் செய்யமாட்டோம்).
 • எங்கள் ஸ்டாம்புகளை/இதர அச்சுக்களை அரபியில் பதிக்கமாட்டோம் மற்றும் மதுபானம் விற்கமாட்டோம்.
 • எங்கள் தலைமுடியின் முன்பாகத்தை கத்தரித்துக்கொள்வோம்.
 • எங்களின் பாரம்பரிய உடைகளை அணிவோம். நாங்கள் எங்கு இருந்தாலும் இடுப்பில் இடைக்கச்சை (பெல்ட்) கட்டுவோம். 
 • எங்கள் திருச்சபைகளுக்கு முன்பாக, அல்லது திருச்சபை கட்டிடத்தின் மேல் சிலுவை சின்னத்தை வைக்கமாட்டோம். 
 • கடைகளிலும், சந்தைகளிலும், இதர புத்தகங்களிலும், எங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட காரியங்களை முஸ்லிம்களுக்கு முன்பாக வைக்கமாட்டோம், விற்கமாட்டோம்.
 • எங்கள் திருச்சபைகளில் கோயில் மணியை அடிக்கமாட்டோம்.
 • எங்கள் திருச்சபைகளில் முஸ்லிம்கள் இருந்தால் அவர்களுக்கு முன்பாக எங்கள் வேதங்களை சத்தத்தை உயர்த்தி வாசிக்கமாட்டோம்.
 • எங்கள் சவ அடக்க ஆராதனைகளிலும், சத்தத்தை உயர்த்தி ஜெபம் செய்யமாட்டோம்.
 • சவ அடக்கத்துக்காக கல்லறைக்கு முஸ்லிம்களின் சந்தை மற்றும் கடைத்தெரு வழியாகச் செல்லும்போது, மெழுகுகளை எரித்துக்கொண்டுச் செல்லமாட்டோம்.
 • மரித்த கிறிஸ்தவர்களை, முஸ்லிம்களின் கல்லறைக்கு பக்கத்தில் அடக்கம் செய்யமாட்டோம். 
 • முஸ்லிம்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் அடிமைகளை வேலையாட்களை நாங்கள் வாங்கமாட்டோம்.
 • முஸ்லிம்களின் வீடுகளில் அவர்களின் தனிமையை நாங்கள் கெடுக்கமாட்டோம்.

இந்த ஆவணத்தை நான் எழுதிய பிறகு, உமர் அவர்களிடம் சரி பார்ப்பதற்காக கொடுத்தேன், அவர் ‘இதோடு கூட, கீழ்கண்ட நிபந்தனையும் சேர்த்து எழுது என்றுச் சொன்னார்’, அதாவது 

 • நாங்கள் முஸ்லிம்களை அடிக்கமாட்டோம்.
 • இந்த நிபந்தனைகளை நாங்களும், எங்கள் பகுதியில் வாழும் இதர கிறிஸ்தவர்களும் எங்கள் மீது சுமத்திக்கொள்கிறோம். இதற்கு பதிலாக, இஸ்லாமிய அரசாங்கத்திலிருந்து பாதுகாப்பை பிரதிபலனாக கேட்கிறோம்.
 • நாங்கள் இந்த நிபந்தனைகளில் ஒன்றையாவது மீறினால், நாங்கள் “திம்மாஹ்(பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையிலிருந்து)” நீங்கிவிடுவோம். அப்போது, இஸ்லாமிய அரசுக்கு எதிராக நடப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அந்த தண்டனையை எங்களுக்குத் தரலாம்.

ஆங்கிலத்தில்: இப்னு கதீர் விளக்கவுரை

Paying Jizyah is a Sign of Kufr and Disgrace

Allah said,

(until they pay the Jizyah), if they do not choose to embrace Islam,

(with willing submission), in defeat and subservience,

(and feel themselves subdued.), disgraced, humiliated and belittled. Therefore, Muslims are not allowed to honor the people of Dhimmah or elevate them above Muslims, for they are miserable, disgraced and humiliated. Muslim recorded from Abu Hurayrah that the Prophet said,

(Do not initiate the Salam to the Jews and Christians, and if you meet any of them in a road, force them to its narrowest alley.) This is why the Leader of the faithful `Umar bin Al-Khattab, may Allah be pleased with him, demanded his well-known conditions be met by the Christians, these conditions that ensured their continued humiliation, degradation and disgrace. The scholars of Hadith narrated from `Abdur-Rahman bin Ghanm Al-Ash`ari that he said, "I recorded for `Umar bin Al-Khattab, may Allah be pleased with him, the terms of the treaty of peace he conducted with the Christians of Ash-Sham: `In the Name of Allah, Most Gracious, Most Merciful. This is a document to the servant of Allah `Umar, the Leader of the faithful, from the Christians of such and such city. When you (Muslims) came to us we requested safety for ourselves, children, property and followers of our religion. We made a condition on ourselves that we will neither erect in our areas a monastery, church, or a sanctuary for a monk, nor restore any place of worship that needs restoration nor use any of them for the purpose of enmity against Muslims. We will not prevent any Muslim from resting in our churches whether they come by day or night, and we will open the doors ﴿of our houses of worship﴾ for the wayfarer and passerby. Those Muslims who come as guests, will enjoy boarding and food for three days. We will not allow a spy against Muslims into our churches and homes or hide deceit ﴿or betrayal﴾ against Muslims. We will not teach our children the Qur'an, publicize practices of Shirk, invite anyone to Shirk or prevent any of our fellows from embracing Islam, if they choose to do so. We will respect Muslims, move from the places we sit in if they choose to sit in them. We will not imitate their clothing, caps, turbans, sandals, hairstyles, speech, nicknames and title names, or ride on saddles, hang swords on the shoulders, collect weapons of any kind or carry these weapons. We will not encrypt our stamps in Arabic, or sell liquor. We will have the front of our hair cut, wear our customary clothes wherever we are, wear belts around our waist, refrain from erecting crosses on the outside of our churches and demonstrating them and our books in public in Muslim fairways and markets. We will not sound the bells in our churches, except discretely, or raise our voices while reciting our holy books inside our churches in the presence of Muslims, nor raise our voices ﴿with prayer﴾ at our funerals, or light torches in funeral processions in the fairways of Muslims, or their markets. We will not bury our dead next to Muslim dead, or buy servants who were captured by Muslims. We will be guides for Muslims and refrain from breaching their privacy in their homes.' When I gave this document to `Umar, he added to it, `We will not beat any Muslim. These are the conditions that we set against ourselves and followers of our religion in return for safety and protection. If we break any of these promises that we set for your benefit against ourselves, then our Dhimmah (promise of protection) is broken and you are allowed to do with us what you are allowed of people of defiance and rebellion.'''

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2566&Itemid=64