இஸ்லாமிய அகராதி > ந வார்த்தைகள்

நிம்ரோத்

இஸ்லாமின் படி, ஆபிரகாமும் (இப்ராஹிம்) நிம்ரோத்தும் சமகாலத்தவர்கள். உண்மையில் இவ்விருவரும் வெவ்வேறு காலத்தவர்கள்.  

பைபிளின் படி நிம்ரோத் ”கூஷ்” என்பவரின் மகன், கூஷ் ”ஹாம்”மின் மகன், இந்த “ஹாம்” நோவாவின் மகன் (பார்க்க ஆதியாகமம் 10:6,8), அதாவது நிம்ரோத் நோவாவின் கொள்ளுப்பேரனாவார்.

ஆபிரகாமின் வம்ச வரலாறு இவ்விதமாக உள்ளது, அதாவது ஆபிரகாம் தேராவின் மகன், தேராவின் தந்தை நாகோர், அவரின் தந்தை செரூகு, அவரின் தந்தை ரெகூ, அவரின் தந்தை பேலேகு, அவரின் தந்தை ஏபேர், அவரின் தந்தை சாலா, அவரின் தந்தை அர்பக்சாத், அவரின் தந்தை சேம், அவரின் தந்தை நோவா (ஆதியாகமம் 11:10-27).  ஆபிரகாமுக்கும் நோவாவிற்கு இடையே 9 வம்சங்கள் இருக்கின்றன

மூலம்