அப்த் (ABD)
அரபியில் இதன் பொருள் “அடிமை” என்பதாகும். பெயர்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். உதாரணத்திற்கு, முஹம்மதுவின் தந்தையின் பெயர் “அப்துல்லாஹ்” என்பதாகும். இதன் பொருள் “அல்லாஹ்வின் அடிமை” ஆகும். “இறைவனுக்கு முழுவதுமாக கீழ்படிந்த அடிமையாக வாழ்வது தான்” முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி ஒரு சிறந்த வாழ்க்கையாகும். ஆனால், இதற்கு நேர் எதிராக, பைபிளில் நாம் காண்கின்ற படி, இயேசு தம்முடைய சீடர்களை “தன் அடிமைகள்” என்று அழைக்காமல், அவர்களை “தன் நண்பர்கள்” என்று அழைத்தார்.