வாட்ஸப் வலி: பாபர் மசூதி இழப்பு பற்றிய முன்னறிவிப்பு: குர்ஆன் 2:77
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி பற்றிய தீர்ப்பு நவம்பர் 9ம் 2019 அன்று வெளியானது. இந்த தீர்ப்பு சரியானதா அல்லது சரியில்லையா என்று ஆய்வு செய்வது என் நோக்கமல்ல. ஆனால், அந்த தீர்ப்பு நாளுக்குப் பிறகு ஒரு படத்தை வாட்ஸப்பில் முஸ்லிம்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களால் பரப்பப்படும் அந்த செய்தி அவர்களுக்கு தலைவலியாக இருக்கின்றதா? அல்லது முஸ்லிம்களுக்கு வழியாக இருக்கின்றதா என்பதை மட்டும் இங்கு காண்போம்.
அவர்கள் அனுப்பிய படம் இதுதான்:
இந்த படம் தான் வாட்ஸப்பில் வந்தது. இது முஸ்லிம்களுக்கு வழியா அல்லது வலியா என்பதைக் காண்போம். முஸ்லிம்களிடமிருந்து அநீதி செய்யப்பட்ட நிலம் 2.77 நிலம் என்று அந்த படத்தில் போடப்பட்டு இருந்தது. அதன் கீழே குர்ஆன் 2:77ம் வசனமும் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.
குர்ஆன் 2:77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இந்த வாட்ஸப் படத்தை முதலில் தயாரித்து அனுப்பிய அந்த முஸ்லிம் யாரென்று நமக்குத் தெரியாது.
- இந்த வசனத்தை மேற்கோள் கட்டி அவர் என்ன சொல்ல வருகின்றார்?
- இப்படி பாபர் மசூதி முஸ்லிம்களிடமிருந்து சென்றுவிடும் என்று குர்ஆன் ஏற்கனவே முன்னறிவித்தது என்ற கருத்தில் இந்த படத்தை பரப்பிக்கொண்டு இருக்கின்றாரா?
- இந்த தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் மறைத்து வைத்திருப்பதையும், வெளிப்படுத்துவதையும் (அல்லது தீர்ப்பு வழங்கியதையும்) அல்லாஹ் அறிந்திருக்கின்றான் என்ற விவரத்தை மட்டும் அவர் சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அந்த பாபர் மசூதி இருந்த நிலத்தின் அளவு 2.77 ஏக்கர் ஆகும். குர்ஆனின் 2:77ம் வசனம் அந்த ஏக்கருக்கு பொருந்திவிடுகின்றது என்பதால், “அல்லாஹ் முன்னறிவித்த நிகழ்ச்சி தான் இது” என்ற தோரணையில் அவர் இந்த செய்தியை பரப்பிக் கொண்டு வருகிறாரா?
- அவர் எந்த எண்ணத்தில் இதை செய்துக்கொண்டு இருந்தாலும், குர்ஆன் வசன எண்களைக் கொண்டு ஆடும் விளையாட்டு ஆபத்தானது என்பதை அவர் அறியவேண்டுமென்பதற்காக இந்த எச்சரிக்கை மணி அடிக்கப்படுகின்றது.
குர்ஆன் வசன எண்களைக் கொண்டு ஆடும் விளையாட்டு ஆபத்தானது:
குர்ஆன் முன்னறிவித்த நிகழ்வு தான் அயோத்தியா பாபர் மசூதி தீர்ப்பு என்று அந்த முஸ்லிம் சகோதரர் நினைப்பார் என்றுச் சொன்னால், அதனால் தான் அவர் வாட்ஸப் வழியாக இந்த செய்தியை பரப்புகிறார் என்று கருதினால், இது ஒரு ஆபத்தானவாதம் என்பதை அவருக்கு புரியவைப்பதற்கு மட்டுமே இந்த பதிவு.
குர்ஆன் வசன எண்களைக் கொண்டு ஒரு தவறான செய்தியை மக்களுக்கு முன்பு கொண்டு வந்தால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தவே இந்த பதிவு. இது கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். பைபிளின் வசன எண்களைக் கொண்டு யாராவது ஏதாவது ஓரு புதிய கோட்பாட்டை, பைபிளில் இல்லாத ஒரு புதிய கருத்தைச் சொன்னால், அது தவறாக மாறும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
சரி, இப்போது வாட்ஸப்பில் பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கும் செய்தியின் ஆபத்து என்னவென்பதை காண்போம்.
குர்ஆன் 2:77 வசனத்தில் வரும் அதே வார்த்தைகள் கொண்ட வசனங்களை பாருங்கள்.
வசனம் | எண் |
---|---|
அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? | 2:77 |
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். | 5:99 |
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். | 16:19 |
சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை. | 16:23 |
மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். | 27:74 |
மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். | 28:69 |
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான். | 33:54 |
மொத்தம்: | 131.15 |
வாட்ஸப்பில் வந்த செய்தியின் லாஜிக்கின் படி பார்த்தால், மொத்தம் 131.15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மசூதிகள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்படும் என்று அல்லாஹ் முன்னமே அறிந்து குர்ஆனில் முன்னறிவித்துள்ளான் என்று பொருள் படுகின்றது.
இந்த மொத்த 131.15 ஏக்கரில், பாபர் மசூதி 2.77 ஏக்கரை கழித்துவிட்டால் (கைவிட்டுப்போன நிலப்பரப்பு) மீதமுள்ளது 128.38 ஆகும். ஆக, வாட்ஸப்பில் செய்திய பரப்பிய முஸ்லிமின் கணக்குப்படி, எதிர்காலத்தில் இன்னும் 128.38 ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மசூதிகள் முஸ்லிமல்லாதவர்களின் கைகளுக்கு மாறப்போகிறது என்று பொருள்படுகின்றது. இது என் சொந்த கருத்து அல்ல, வாட்ஸப்பின் செய்தியின் கருத்து இது தான்.
விளையாட்டு எப்படி விபரீதமானது பார்த்தீர்களா?
2.77 நிலப்பரப்பு பாபர் மசூதி வழக்கில் இழந்ததால், உடனே குர்ஆன் 2:77ம் வசனத்தை அதற்கு ஒப்பிட்டு இப்படி அறியாமையில் செய்திகளை பரப்புவதினால், மற்ற குர்ஆன் வசனங்களில் மொத்தத்தையும் கூட்டினால், இன்னும் அனேக மசூதிகளை முஸ்லிம்கள் இழக்கப்போகிறார்கள் என்ற பொருள் வந்துவிடுகிறது. இது தவறு தானே!
எருசலேமின் அல் அக்ஸா மசூதி நிலப்பரப்பு எத்தனை ஏக்கர்?
என்னுடைய நண்பரிடம் இந்த விவரங்களைச் சொன்னவுடன், அவன் கேட்டான், கொஞ்சம் எருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதி எத்தனை நிலப்பரப்பில் உள்ளது என்று கண்டுபிடித்துச் சொல்லமுடியுமா?
சரி தேடித்தான் பார்ப்போமே என்று எண்ணி, விக்கிபீடியாவில் தேடிப்பார்த்ததில் கீழ்கண்ட விவரம் கிடைத்தது.
Architecture
The rectangular al-Aqsa Mosque and its precincts cover 14.4 hectares (36 acres), although the mosque itself is about 12 acres (5 ha) in area and can hold up to 5,000 worshippers.[46] It is 83 m (272 ft) long, 56 m (184 ft) wide.[46] Unlike the Dome of the Rock, which reflects classical Byzantine architecture, the Al-Aqsa Mosque is characteristic of early Islamic architecture.[47]
அல் அக்ஸா மசூதி மொத்த பரப்பு 36 ஏக்கர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் முன்னறிவித்ததின் படி, இன்னும் 128.38 ஏக்கர் நிலப்பரப்பு முஸ்லிம்கள் இழக்கவேண்டி இருப்பதால், அல் அக்ஸா மசூதி (36 ஏக்கர்) அதற்குள் வந்துவிடும். அல்லாஹ்வின் கணக்குப்படி, பாபர் மசூதி மற்றும் அல் அக்ஸாவின் மொத்த நிலப்பரப்புக்களை கழித்தாலும், இன்னும் பல ஏக்கர்கள் மீதமாக உள்ளது. அவைகளை எந்த மசூதிகளிலிருந்து கழிப்பது? அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.
முடிவுரை:
இதுவரை கண்ட விவரங்களின் படி கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன?
- தேவையில்லாத விஷயங்களை குர்ஆனில் தேடுவதை முஸ்லிம்கள் நிறுத்தவேண்டும்.
- குர்ஆனில் முன்னறிவிப்புக்களைத் தேடி சம்மந்தமில்லாதவைகளோடு முடிச்சு போடக்கூடாது.
வாட்ஸப்பில் வந்த இந்த செய்தி முஸ்லிம்களுக்கு ஒரு தலைவலி என்பதை இதன் மூலம் அறியலாம். இனியாவது நம் முஸ்லிம் சகோதரர்கள் சிறிது எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.