ரமளான் நாள் 27
இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்
['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]
அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
உன் கடிதம் கண்டேன், அதில் கண்ணியமிக்க இரவு பற்றி நீ சில விவரங்களை கூறியிருந்தாய். அதாவது இந்த இரவில் நம் கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, மேலும் இது 1000 மாதங்களை காட்டிலும் மேன்மையானது, இந்த இரவில் தான் குர்-ஆன் இறங்கியது என்றும் கூறினாய்.
உன் கடிதத்தில் நீ கூறிய கண்ணியமிக்க இரவு பற்றி சில விவரங்களை படித்தேன், மேலும் உனக்கு இன்னொரு கண்ணியமிக்க இரவைப் பற்றி எழுதலாம் என்று விரும்புகிறேன். மட்டுமல்ல, இவ்விரு கண்ணியமிக்க இரவுகளை ஒப்பிட்டு சில விவரங்களை உனக்கு எழுதலாம் என்று தீர்மாணித்தேன்.
1) இஸ்லாமின் கண்ணியமிக்க இரவு: லைலத்துல் கத்ர்
(சுன்னி) இஸ்லாமியர்கள் ரமளான் மாதத்தின் 27ம் நாளின் இரவை லைலத்துல் கத்ர் என்று கொண்டாடுகிறார்கள் (ஷியா இஸ்லாமியர்கள் வேறு ஒரு நாளை இதற்காக ஒதுக்கியுள்ளார்கள்). இதைப் பற்றி குர்-ஆன் 97ம் ஸூரா கூறுகிறது:
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:1) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (97:2) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். (97:3) அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (97:4) சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:5)
இந்த இரவின் முக்கிய அம்சம் "குர-ஆன்" ஆகும், அதாவது இந்த இரவில் குர்-ஆன் கீழ்வானம் வரைக்கும் இறங்கியது என்றும், அதன் பிறகு ஜிப்ராயீல் தூதன் சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு கொண்டு வந்து சேர்த்தார் என்றும் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்:
அ) குர்-ஆன் இறங்கிய இரவு (அல்லாஹ்வின் வார்த்தை)
ஆ) ஆயிரம் மாதங்களை விட மேலான இரவு
இ) இந்த இரவில் மலக்குகள் (தூதர்கள்) மற்றும் ஆன்மாவும் (ஜிப்ராயீல்) நடைப்பெறவேண்டிய காரியங்களுடன் இறங்குகிறார்கள்.
ஈ) சாந்தி, காலை வரை நிலைத்திருக்கும்.
தம்பி, இந்த அதிகாரத்தை படித்தவுடன், அதன் விவரங்களை படித்தபோது, எனக்கு கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவு ஞாபகத்தில் வந்தது.
2) கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவு:
கிறிஸ்தவத்தில் நான் சொல்லப்போகும் இரவு கண்ணியமிக்க இரவு என்று பைபிளில் எங்கும் எழுதப்படவில்லை, ஆனால், கண்ணிய மிக்க இரவு என்று இஸ்லாமியர்கள் கருதும் இரவை விட பல ஆயிர மடங்கு அதிக கண்ணியத்தை இந்த இரவு உலகிற்கு கொண்டு வந்துள்ளது.
இதனை இப்போது படிப்போம், லூக்கா 2:6-14
2:6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
2:7 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
2:9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
2:11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
2:12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
2:13 அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
2:14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
தம்பி, இயேசு பிறந்த இரவு பற்றி தான் மேற்கண்ட வசனங்களில் நீ படித்தாய். இந்த கண்ணியமிக்க இரவிலும், கீழ்கண்ட காரியங்கள் நடைப்பெற்று இருக்கிறது:
அ) இந்த இரவில் "தேவனுடைய வார்த்தையாம், இயேசுக் கிறிஸ்து" உலகிற்குள் வந்தார்.
ஆ) தேவதூதன் மேய்ப்பர்களுக்கு தரிசனமாகி, எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தி பற்றி விவரித்தான், அதாவது இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை கொடுத்தான்.
இ) இரட்சகராகிய இயேசு பிறந்தார் என்ற நற்செய்தியை தூதன் கூறினான்.
ஈ) அதன் பிறகு அனேக தூதர்கள் தோன்றி, தேவனை துதித்தார்கள்.
உ) தேவனுக்கு மகிமை, பூமியிலே சமாதானம், மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக என்று கூறினார்கள்.
3) இறைவனின் வார்த்தை இறங்கிய இரவு:
இஸ்லாமியர்கள் "குர்-ஆனை" இறைவார்த்தை என்று நம்புகிறார்கள். பைபிள் இயேசுவை இறை வார்த்தை என்றுச் சொல்கிறது.
குர்-ஆன் கீழவானம் வரை இறங்கியது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இயேசு கீழ்வானம் வரை அல்ல, இயேசுக் கிறிஸ்து பூமி வரை இறங்கி வந்தார், மனிதர்கள் மத்தியிலே வாசம் செய்ய வந்தார்.
குர்-ஆனின் படி, "சமாதானம்" காலை வரை இருந்தது, ஆனால், பைபிளின் படி, பூமியிலே "சமாதானம்" முழுவதுமாக வந்து இறங்கியது, இனி அது எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. மேலும் மனுஷர் மேல் தேவனுடைய அன்பு வெளிப்பட்டது.
குர்-ஆனின் படி மனிதர்கள் இந்த இரவில் தொழுதால், அது ஆயிரம் மாதங்களுக்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால், இயேசுக் கிறிஸ்து இந்த உலகில் வந்த இரவாகிய அன்றிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு நன்மைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது.
சில இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுப்படி, சொர்க்கத்தின் வாசல்கள் இந்த ரமளான் மாதம் முழுவதும் திறந்திருக்கும். ஆனால், கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுக்கு பிறகு, தேவனுடைய சொர்க்கத்தின் வாசல்கள் இன்று வரை மூடப்பட்டதே இல்லை. தம்மை நம்புகிறவர்களை அவர் வரவேற்க வாசல்களை திறந்தே வைத்திருக்கிறார். தம்மிடத்தில் வருகிறவர்களை அவர் புறம்பே தள்ளுவதே இல்லை.
இன்னும் சில இஸ்லாமிய அறிஞர்களின் படி, இந்த ரமளான் மாதம் முழுவதும் சாத்தான் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருப்பான், இது எவ்வளவு உண்மையோ, அதை சோதித்துப் பார்ப்பவருக்கே தெரியும். ஆனால், இயேசுக் கிறிஸ்துவின் கண்ணியமிக்க இரவுக்கு பிறகு சாத்தானுடைய தலை நசுக்க நாள் குறிக்கப்பட்டு, இயேசு சிலுவையில் செய்த தியாக பலியின் மூலமாகவும், அவரது உயிர்த்தெழுதலின் மூலமாகவும், சாத்தானின் தலை நசுக்கப்பட்டது.
4) இஸ்லாமிய கண்ணியமிக்க இரவை கொண்டாடும் முஸ்லிம்களின் கனிகள்:
தம்பி, உலகில் வாழும் முஸ்லிம் தீவிரவாதிகள் குறைந்தபட்சம் இந்த ரமளான் மாதத்திலாவது அமைதியாக இருந்திருக்கக்கூடாதா? சாத்தான் சங்கிலிகளினால் இந்த மாதம் கட்டப்படுவான் என்ற விவரத்தை கீழ்கண்ட பட்டியலை கண்டபிறகு நம்பவே முடியவில்லை. கட்டப்படுவதற்கு பதிலாக, இன்னும் அனேக சாத்தான்களை அவன் வேலைக்கு அமர்த்திக்கொண்டான் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.
இந்த ஆண்டு 2012 ரமளான் மாதம் இஸ்லாமின் பெயரில் அரங்கேறிய வன்முறைகள் எத்தனை என்பதை கீழ்கண்ட பட்டியலில் நீ காணலாம்:
Ramadan Bombathon
2012 Scorecard
Day 26 | In the name of The Religion of Peace | In the name of Any Other Religion | By Angry Racists |
Terror Attacks | 221 | 0 | |
Dead Bodies | 996 | 0 | 6 |
Source: http://www.thereligionofpeace.com/
கடந்த 26 நாட்களாக, இஸ்லாமின் பெயரில் 221 தாக்குதல்கள் நடந்துள்ளன, 996 நபர்கள் மரித்துள்ளனர். குறைந்த பட்சம் லைலத்துல் கத்ர் இரவில் சமாதானம் இருக்கும் என்று குர்-ஆன் சொல்கிறதே, இந்த நாளிலாவது உலகம் முழுவதும் ஒரு தாக்குதல் கூட நடக்காமல் இருக்கிறதா என்பதை நாளை வெளிவரும் செய்தித்தாள்களை கண்டு தெரிந்துக்கொள்ளலாம்.
5) கிறிஸ்தவ கண்ணியமிக்க இரவை கொண்டாடும், கிறிஸ்தவர்களின் கனிகள்:
கிறிஸ்தவர்கள் அனைவரும் பரிசுத்தர்கள் என்று நான் வாதாடமாட்டேன், ஆனால், இயேசுவை நம்பும் கிறிஸ்தவர்களின் கனிகள் நன்மைக்கு ஏதுவாகவே உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இயேசுவின் பெயரில் கிறிஸ்தவர்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு அலைவதில்லை, இதர மார்க்க இடங்களை வெடிவைத்து தாக்குவதில்லை. ஒருவேளை கிறிஸ்தவ பெயர் கொண்ட ஒருவன் வன்முறையில் ஈடுபட்டால், அதற்கு காரணம் பைபிள் என்றோ, இயேசு என்றோ அவனும் கூறமுடியாது, மற்றவர்களும் கூறமுடியாது. ஆனால், கிறிஸ்தவர்களின் சேவை மனப்பான்மையை நம்மை சுற்றியுள்ள கிறிஸ்தவ பள்ளிகளையும், பல்கலைக் கழகங்களையும், மருத்துவ மனைகளையும், சேவைசெய்யும் ஸ்தாபனங்களையும் கண்டால் தெரிந்துக்கொள்ளலாம் (இவர்களிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு பணந்தின்னி பிச்சாசுகள் இருக்கிறார்கள், ஆனால், இவர்களின் இந்த செயலுக்கு இயேசு தான் காரணம் என்று இவர்களே கூட சொல்லமாட்டார்கள்).
இஸ்லாமிய கண்ணியமிக்க இரவை கொண்டாடப்போகிறாயா? அல்லது கிறிஸ்தவ கண்ணியமிக்க இரவை கொண்டாடப்போகிறாயா? அவசரம் ஒன்றுமில்லை. குர்-ஆனை தமிழில் படி, ஹதீஸ்களை தமிழில் படி, முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையை முழுவதுமாகபடி, இஸ்லாமிய விரிவுரைகளை படித்து தெரிந்துக்கொள். சத்தியத்தை அறிந்துக்கொள், அதன் பிறகு அந்த சத்தியம் உன்னை நிச்சயமாக விடுதலையாக்குவதை காண்பாய்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு உன் சகோதரன்,
தமிழ் கிறிஸ்தவன்.