இஸ்லாம் கிறிஸ்தவம் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 : (குர்ஆன் 301 - 330)
முந்தைய 300 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.
இதுவரை 300 கேள்வி பதில்களை பல தலைப்புக்களில் கொடுத்துள்ளோம். அவைகளில் குர்ஆன் என்ற தலைப்பில் 60 கேள்விகளுக்கு பதில்களைக் கண்டோம். இந்த தொடரில் குர்ஆன் தலைப்பிலேயே இன்னும் 30 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.
சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: குர்ஆன் 301 – 330 வரை
கேள்வி 301: மஸீஹ் என்ற வார்த்தை குர்ஆனில் எத்தனை முறை வருகிறது, அது யாரை குறிக்கிறது?
பதில் 301: மஸீஹ் என்ற வார்த்தை குர்ஆனில் 9 வசனங்களில் 11 முறை வருகிறது. எல்லா இடங்களிலும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றியே வருகின்றது.
மஸீஹ்: 3:45, 4:157, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 9:30 & 9:31
ஒரு வசனத்தை பார்க்கவும்:
குர்ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
மஸீஹ் என்றால் என்னவென்று குர்ஆன் எங்கும் விளக்குவதில்லை. எபிரேய வார்த்தையாகிய 'மேசியா' என்ற வார்த்தையைத் தான் மஸீஹ் என்று குர்ஆன் அழைக்கிறது.
கேள்வி 302: ஃபுர்க்கான் என்றால் குர்ஆனா? அல்லது முந்தைய வேதங்களா?
பதில் 302: ஃபுர்க்கான் என்றால் நன்மை தீமைகளை பிரித்து அறியக்கூடிய ஞானம் அல்லது வேதம் என்று பொருள் கூறுகின்றனர். மேலும் ஃபுர்க்கான் என்ற பெயரில் குர்ஆனில் ஒரு அத்தியாயமும் (ஸூரா 25) உள்ளது.
ஃபுர்க்கான் என்ற பெயர் முந்தைய வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் சூட்டப்பட்டுள்ளது.
1) மூஸாவிற்கு கொடுத்த தௌராத் ஒரு ஃபுர்க்கான் ஆகும்:
ஸூரா 2:53 & 21:48 வசனங்களின் படி, மூஸாவிற்கு கொடுக்கப்பட்ட தௌராத் என்பது ஃபுர்க்கான் என்று குர்ஆன் சொல்கிறது. அதாவது தௌராத்தின் மூலம் மக்கள் “நன்மைகளை மற்றும் தீமைகளை” பிரித்து அறியமுடியும்.
ஸூரா 2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
ஸூரா 21:48. முன்பு நாம் மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தக்கூடிய) ஃபுர்கானையும், ஒளியையும், அறிவுரையையும் அருளியிருந்தோம். இவை இறையச்சமுடையோருக்கு பயனளிக்கக் கூடியவையாகும். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)
2) குர்ஆன் ஒரு ஃபுர்க்கான் ஆகும்:
குர்ஆனை ஃபுர்க்கான் என்று ஸூரா 25:1 கூறுகிறது. இங்கு குர்ஆன் என்று சொல்லப்படாமல், இவ்வேதம் என்று சொல்லியுள்ளதால், அது குர்ஆன் என்று அறிந்துக்கொள்ளலாம்.
ஸூரா 25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
3) நன்மை/தீமைகளை பிரிந்து அறியக்கூடிய வழி கூட ஃபுர்க்கான் ஆகும்:
கீழ்கண்ட வசனத்தில் முந்தைய வேதங்களின் பெயர்களோ, அல்லது குர்ஆனின் பெயரோ குறிப்பிடவில்லை, "நேர்வழி" என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. இங்கும் ஃபுர்க்கான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸூரா 8:29. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
கேள்வி 303: குர்ஆன் 3:4ன் படி, எது ஃபுர்க்கான்? குர்ஆனா? அல்லது முந்தைய வேதங்களா? ஏன் தமிழாக்கங்கள் குழப்புகின்றன?
பதில் 303: கீழ்கண்ட மூன்று தமிழாக்கங்கள், வேண்டுமென்றே உண்மையை மறைக்க முயற்சி எடுத்துள்ளார்கள்.
முந்தைய மக்களுக்கு நன்மை தீமைகளை பிரித்து அறிவதற்காக ஃபுர்க்கானை இறக்கினேன் என்று வசனம் தெளிவாகச் சொல்லும் போது, இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத முஸ்லிம் அறிஞர்கள் இடையில் குர்ஆனை நுழைக்க முயலுகின்றனர்.
இந்த மூன்று தமிழாக்கங்களை படியுங்கள், அதன் பிறகு நம் கேள்விகளை காண்போம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
ஸூரா 3:4. இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். . . .
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
ஸூரா 3:4. இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். . . .
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
ஸூரா 3:4. முன்னர் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (வேதங்களை அவனே இறக்கிவைத்தான்.) மேலும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய புர்க்கா(ன் எனும் குர்ஆ)னையும் அவனே இறக்கிவைத்தான். . . .
மூல அரபியில் இவ்வசனத்தின் ஒரு வாக்கியத்தை கவனிப்போம்:
முஸ்லிம் அறிஞர்களின் வஞ்சகம்:
1. "இதற்கு முன்பு மக்களுக்கு வழிகாட்ட ஃபுர்க்கானை இறக்கினான்" என்பது தான் இவ்வாக்கியத்தின் அரபி மொழியாக்கம்.
2. ஆனால், ஏன் முஸ்லிம் அறிஞர்கள் ஒரு சாதாரண மொழியாக்கத்தை செய்ய இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்?
3. இந்த இடத்தில் குர்ஆன் என்ற வார்த்தை எங்கே இருக்கிறது?
4. இவர்களின் மொழியாக்கத்தின் படி, முன்னர் காலத்தில் இறக்கப்பட்ட தோறாவிற்கும், ஜபூருக்கும், இன்ஜிலுக்கும் "குர்ஆன்" என்ற பெயர் இருந்தது என்று சொல்வது போன்று உள்ளது?
5. அல்லது முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதற்கு முன்பு குர்ஆனை அல்லாஹ் வேறு யாருக்கோ இறக்கியிருக்கிறான் என்று பொருள் வருகிறது?
6. இந்த வசனத்தில் வரும் ஃபுர்க்கான் என்ற சொல், "குர்ஆனைத் தான் குறிக்கவேண்டும்" என்பதற்காக, ஒரு வாக்கிய வசனத்தை இரண்டு வாக்கியங்களாகவும் இவர்கள் பிரித்துக் காட்டுகிறார்கள். இது முஸ்லிம் அறிஞர்களின் வாஞ்சகம் ஆகும்.
இந்த வசனத்தை பொருத்தமட்டில், பீஜே அவர்களின் தமிழாக்கம் நேர்மையை கையாண்டுள்ளது எனலாம். இந்த வசனத்தில் வரும் ஃபுர்க்கான் என்பது "குர்ஆன் தான்" என்று எடுத்துக்காட்ட பீஜே முயலவில்லை.
பீஜே தமிழாக்கம்:
3:4. . . .முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் அவன் அருளினான். . . .
இதுவரை கண்ட விவரங்களின்படி, குர்ஆன் 3:4ல் சொல்லப்பட்ட "ஃபுர்க்கான்" என்பது முந்தைய வேதங்களை குறிக்கும் என்பது நிரூபனமானது. மேலும் தமிழாக்கம் செய்யும் முஸ்லிம் அறிஞர்கள் வாசகர்களை ஏமாற்ற முயன்றுள்ளார்கள், அல்லது அல்லாஹ்வையே ஏமாற்ற முயன்றுள்ளனர். அல்லாஹ் சொல்ல வந்தது ஒன்று இவர்கள் மொழியாக்கம் செய்வது வேறொன்று.
கேள்வி 304: பைபிளுக்கும் குர்ஆனுக்கும் இடையே இருக்கும் வேற்றுமைகளை பார்ப்பதை விட்டுவிட்டு, ஏன் ஒற்றுமைகளை மட்டுமே பார்க்கக்கூடாது?
பதில் 304: உங்களிடம் 2000 ரூபாய் இந்திய நோட்டுக்கள் இரண்டை கொடுத்து, இவைகளில் எது நல்ல நோட்டு (பணம்), எது கள்ள நோட்டு என்று கேட்டால், நீங்கள் எவைகளைப் பார்ப்பீர்கள்? ஒற்றுமைகளை பார்ப்பீர்களா அல்லது வேற்றுமைகளை (வித்தியாசங்களை) பார்ப்பீர்களா?
இந்த கீழ்கண்ட படத்தைப் பாருங்கள், ஒரு நல்ல நோட்டுக்கு இருக்கவேண்டிய எட்டு வகையான காரணிகளை கொடுத்து இருப்பார்கள்.
ஒருவேளை உங்களிடம் கொடுக்கப்பட்ட இரண்டு நோட்டுக்களில் ஏழு ஒற்றுமைகள் இருந்து, ஒரே ஒரு ஒற்றுமை இல்லையென்று வைத்துக்கொள்வோம், அதனை நல்ல நோட்டு என்று அரசாங்கம் அல்லது மத்திய ரிசர்வ வங்கி ஒப்புக்கொள்ளுமா?
மஹாத்மா காந்திக்கு பதிலாக நேரு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நேரு கூட நம்முடைய முதல் பிரதமர் தானே, சுதந்திர போராட்ட வீரர் தானே, மேலும் நல்ல நோட்டில் இருக்கின்ற 7 ஒற்றுமைகள் அப்படியே இருக்கின்றதல்லவா? இந்த நோட்டை கள்ள நோட்டு என்று ஏன் சொல்கிறீர் என்று கேட்டால், இது சரியானதாக இருக்குமா?
அனேக ஒற்றுமைகள் இருக்கும்போது, ஏன் ஒரு வேற்றுமையை பிடித்து தொங்குகிறீர்கள் என்று நாம் போலிஸிடம் சொல்லமுடியுமா? முட்டிக்கு முட்டி தட்டி சிறைச்சாலையில் அடைத்துவிடுவார்கள் அல்லவா?
இது போலத்தான், மேலோட்டமான விவரங்களில் பைபிளுக்கும் குர்ஆனுக்கும் அனேக ஒற்றுமைகள் இருந்தாலும், அடிப்படை சத்தியங்களில் வித்தியாசங்கள் இருப்பதினால், குர்ஆனை இறைவேதம் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது, அல்லாஹ் உண்மையான இறைவன் என்று ஏற்கமுடியாது, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று ஒப்புக்கொள்ளமுடியாது.
ஒற்றுமைகள் 99.99% இருந்தாலும், அது கள்ள நோட்டு தான், உண்மை பிடிவாதமானது, அதற்கு 100% ஒற்றுமைகள் வேண்டும்.
கேள்வி 305: "குர்ஆனில் மக்கா நகரத்திற்கு கொடுக்கப்பட்ட இதர பெயர்கள் யாவை?
பதில் 305: குர்ஆனில் மக்கா நகரம் பற்றி மூன்று வகையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
a) பக்கா:
மக்காவிற்கு "பக்கா" என்ற பெயரை குர்ஆன் பயன்படுத்துகிறது.
ஸூரா 3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
குறிப்பு: சில முஸ்லிம்கள் சங்கீதம் 84:6ம் வசனத்தில் வரும் "பெகா" என்ற வார்த்தை தான் குர்ஆனில் வரும் "பக்கா" என்கிறார்கள். உண்மையில் இதுவேறு அது வேறு
சங்கீதம் 84:6. அழுகையின் பள்ளத்தாக்கை (பெகா) உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
எபிரேய வார்த்தை பெகா என்றால், "அழுகையின் பல்லத்தாக்கு" என்று அர்த்தம், அதன் பெயர் "மெக்கா" இல்லை.
b) அபயமளிக்கும் நகரம்:
ஸூரா 95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
c) நகரங்களின் தாய்:
ஸூரா 42:7. அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
கேள்வி 306: "குர்ஆனில் மக்கா என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
பதில் 306: குர்ஆனில் மக்கா என்ற வார்த்தை ஒரே ஒரு முறை கீழ்கண்ட வசனத்தில் வருகிறது.
ஸூரா 48:24. இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
குர்ஆனில் வேறு இடங்களில் நீங்கள் "(மக்கா)" என்று அடைப்பிற்குள் இருப்பதைக் காண்பீர்கள், ஆனால் அந்த வார்த்தை அரபி மூல வசனத்தில் இல்லை. குர்ஆனை தமிழாக்கம் செய்யும் போது, மேலதிக விவரங்களுக்காக முஸ்லிம் அறிஞர்கள் சொந்தமாக சேர்ப்பதாகும்.
கேள்வி 307: "மதினா நகரத்திற்கு குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட வேறு பெயர் என்ன?
பதில் 307: குர்ஆன் மதினாவை யஸ்ரிப்/யத்ரிப் என்று அழைக்கிறது.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
33:13. அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!” என்று கூறினார்கள்; மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் “எங்களுடைய வீடுகள் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன” என்று கூறி, நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்திற்குள்ளாகியிருக்கவில்லை. உண்மை யாதெனில், அவர்கள் (போர்க் களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள்.
உண்மையில், மதினா என்பது "நபியின் நகரம்(மதினத் அந்நபி - Madīnat an-Nabī )" என்பதன் சுருக்கமாகும். இஸ்லாமுக்கு முன்பாக, யத்ரீப் என்பது தான் அதன் உண்மை பெயராக இருந்தது. இஸ்லாமில் முக்கிய இடத்தை இந்த பட்டணம் பெற்றதால், அதற்கு "நபியின் நகரம்" என்று பெயரிடப்பட்டது.
கேள்வி 308: முஹம்மது அற்புதம் செய்யமாட்டார் என்று குர்ஆன் எங்கேயாவது சொல்கின்றதா?
பதில் 308: முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், அவர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்று குர்ஆன் பல இடங்களில், பல வகைகளில் அடித்துச் சொல்கிறது .
முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி குர்-ஆன் பிழையற்ற வேதமாகும். குர்ஆனுக்கு அடுத்தபடியாகத் தான் ஹதீஸ்கள். இந்த ஹதீஸ்களில் சிலவற்றை இன்றும் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் ஏனென்றால், அவைகளில் கட்டுக்கதைகளும், பொய்களும் அதிகமாக இருப்பதினால் தான்.
முஹம்மது தன் நபித்துவத்தை நிரூபிக்க எப்போதாவது அற்புதம் செய்தாரா? என்ற கேள்விக்கு குர்ஆன் சொல்லும் பதில் என்னவென்பதை முதலாவது பார்ப்போம்.
அ) அற்புதங்கள் செய்யாமல் தட்டிக்கழிக்கும் அல்லாஹ்:
முஹம்மதுவிடம் குறைஷிகள் மற்றும் யூதர்கள் அற்புதங்களைக் கேட்டார்கள். நீங்கள் அற்புதங்களைச் செய்தால், உங்களை ஒரு நபி என்று நம்புவதற்கு வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் சொன்னார்கள். எத்தனை முறை இப்படி கேட்டாலும், அல்லாஹ் ஒரு அற்புதமும் செய்யாமல் எல்லா நேரங்களிலும் தட்டிக்கழித்தார். இதற்கு காரணங்களையும் சொன்னார், அதாவது, முந்தைய கால மக்களைப்போல, இவர்களும் நம் அத்தாட்சிகளை ஏற்கமாட்டார்கள் எனவே, அவைகளைச் செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. எனவே, முஹம்மதுவின் மூலமாக ஒரு அற்புதத்தையும் செய்வதில்லை என்று கராராக குர்-ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான். கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் அல்லாஹ் சொல்லும் காரணங்களைக் காணுங்கள். ஒரு பேச்சுக்காகவாவது ஒரே ஒரு அற்புதமும் கூட செய்துக் காட்ட அல்லாஹ் விரும்பவில்லை.
முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கத்திலிருந்து வசனங்கள்:
ஸூரா 2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
ஸூரா 2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
ஸூரா 6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”
ஸூரா 6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
முஹம்மது தம்மிடம் அற்புதம் எதிர்ப்பார்க்கும் மக்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு இந்த பத்தாவது ஸூராவில் கட்டளையிடுகின்றான். அதாவது அற்புதங்கள் அல்லாஹ்விடம் உள்ளன, அவைகளுக்காக நீங்களும் காத்திருங்கள், நானும் காத்திருக்கிறேன் என்று முஹம்மது சொல்லவேண்டுமாம்.
ஸூரா 10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
இரண்டாவது ஸூரா மதினாவில் இறங்கியதாகும் (மதனீ). சந்திரன் பிளந்த அற்புதம் உள்ளது என்றுச் சொல்லும் ஸூரா (54) மக்காவில் இறங்கியதாகும். மக்காவிலேயே ஆரம்ப காலத்தில் (முஹம்மது தம்மை நபியாக காண்பித்துக்கொண்ட நான்கு ஆண்டுகளுக்குள்), முஹம்மது இந்த ஒரு அற்புதம் செய்திருந்தால், ஏன் மதினாவில் இருக்கும் போது இறங்கிய இரண்டாவது ஸூராவில் அற்புதங்கள் எல்லாம் செய்யமுடியாது என்று அல்லாஹ் சொல்லப்போகிறான்? இதிலிருந்து நாம் எவைகளை அறிகிறோம்? முஹம்மது மக்காவில் இருக்கும் போது நடந்ததாகச் சொல்லும் அற்புதம் நடக்கவில்லை என்பதைத் தானே.
மக்காவில் செய்த அற்புதத்தை அல்லாஹ் மறந்துவிட்டிருக்கலாம் அல்லவா? என்று முஸ்லிம்கள் கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ஆ) முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அற்புதங்கள் செய்பவர் அல்ல
குர்-ஆன் 13:7ஐ பாருங்கள், முஹம்மது வெறும் ”அச்சமூட்டி எச்சரிப்பவர் மட்டுமே” என்றுச் சொல்கிறது. மக்கள் எவ்விதமான அத்தாட்சி, அற்புதங்கள் கேட்டாலும், அதை முஹம்மது மூலமாக செய்துக் காட்ட முடியாது என்று அல்லாஹ் சொல்லிவிடுகின்றான்.
ஸூரா 13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.
”முஹம்மதுவே, மக்கள் ஓயாமல் அற்புதங்கள் கேட்கிறார்கள், ஆனால், நான் செய்வதில்லை, இதற்காக நீர் துக்கப்படவேண்டாம். ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும், உம்மை அற்புதம் செய்ய நான் அனுப்பவில்லை, வெறும் எச்சரிக்கை செய்யவே அனுப்பினேன் என்பதை மறக்கவேண்டாம்” என்று அல்லாஹ் முஹம்மதுவிடம் கூறி அவரை ஆறுதல்படுத்துகிறான், பார்க்க குர்-ஆன் 11:12.
ஸூரா 11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
உம்மிடம் அற்புதங்கள் கேட்பவர்களிடம், ” நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்றுச் சொல்லிவிடுங்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான், பார்க்க 13:27.
ஸூரா 13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
இ) மக்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவே அன்றி நாம் அனுப்புவதில்லை:
உம்முடைய நபித்துவத்தை நிரூபிக்க நான் அத்தாட்சிகளை அனுப்பமாட்டேன். ஆனால், மக்களை பயமுறுத்தவும், எச்சரிக்கைச் செய்யவுமே அற்புதங்களைச் செய்வேன் என்று தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான். பார்க்க குர்-ஆன் 17:59
ஸூரா 17:59. (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
மக்கள் எத்தனை முறை கேட்டலும் சரி, முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்க அல்லாஹ் அற்புதங்களைச் செய்வதாக தெரியவில்லை. இதனை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
"குர்ஆன் சொல்வது தவறு" என்றுச் சொல்ல எந்த ஒரு முஸ்லிமுக்காவது தைரியமுண்டா?
கேள்வி 309: குர்ஆன் தான் முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட அற்புதம் என்று குர்ஆன் எந்த வசனத்தில் சொல்கின்றது?
பதில் 309: முந்தைய கேள்வியின் பதிலையும் படித்துக்கொள்ளுங்கள்.
குர்-ஆன் மட்டுமே அற்புதமாகும், இது போதாதா அவர்களுக்கு?
ஒரு இடத்தில் அல்லாஹ் அற்புதம் செய்ய மறுப்பதைக் காணமுடியும். முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அவர் மூலமாக நான் அற்புதங்கள் செய்யமாட்டேன், அதனால் பயனுமில்லை. ஆனால், குர்-ஆன் என்ற அற்புதத்தை அவர் மூலமாக கொடுத்து இருக்கிறேன். இந்த குர்-ஆன் அவர்களுக்கு போதாதா? என்று நச்சென்று அல்லாஹ் சொல்கிறான்.
ஸூரா 29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
ஸூரா 29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன. (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
மேற்கண்ட வசனங்களில், இஸ்லாமை நம்பாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை அல்லாஹ் மறுக்காமல் அதனை ஏற்றுக்கொள்கின்றான். முஹம்மதுவினால் அற்புதங்கள் செய்யமுடியாதது உண்மை தான், ஏனென்றால் அவர் வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே, அற்புதங்கள் செய்பவர் அல்ல என்று அல்லாஹ் சொல்கின்றான். மேலும், இதனை அற்புதங்கள் கேட்கும் மக்களிடம் சொல்லும் படி முஹம்மதுவிற்கும் கட்டளையிடுகின்றான்.
குர்ஆன் தான் தனக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்று முஹம்மது கூறியுள்ளார், இதனை புகாரி நூலில் காணலாம்.
புகாரி எண்: 4981 & 7274
4981. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
7274. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கேள்வி 310: குர்ஆனை பொய்யாக்கும் ஹதீஸ்கள் – முஹம்மது அற்புதங்கள் செய்தாரா?
பதில் 310: மேற்கண்ட இரண்டு கேள்விகளில் "முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார், குர்ஆன் தான் அவருக்கு கொடுக்கப்பட்ட அற்புதம்" என்று குர்ஆன் சொல்லும் சாட்சிகளை படித்தோம்.
குர்ஆன் சொல்வதற்கு எதிராக ஹதீஸ்கள் "முஹம்மது அற்புதங்கள்" செய்தார் என்று கூறுகின்றன. இப்போது நாம் யாரை நம்பவேண்டும்? குர்ஆனையா? அல்லது ஹதீஸ்களையா?
a) சந்திரன் பிளக்கப்பட்டதைப் பற்றி முஸ்லிம் ஹஹீஸில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள்:
முஸ்லிம் ஹதீஸ் நூல்: எண்கள்: 5395, 5396, 5397, 5398, 5399 & 5400:
5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
b) முஹம்மதுவின் விரல்களிலிருந்து தண்ணீர் வந்த அற்புதம்:
அற்புதங்கள் நபிகளின் நபித்துவத்தை நிருபிக்கும் சான்றுகள். இந்த சான்றுகளை அற்புதங்களை முஹம்மதுவினால் செய்யமுடியாது, மேலும் குர்ஆன் மட்டும் தான் முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட அற்புதம் என்று குர்ஆனும் சொல்கிறது, முஹம்மதுவும் கூறியுள்ளார். இந்த ஹதீஸின் படி, முஹம்மது தம் விரல்களிலிருந்து மற்றவர்கள் உளூ செய்ய தண்ணீர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.
புகாரி எண்: 169 'அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
c) முஹம்மது "கொஞ்ச உணவை 1000 பேருக்கு மேல் சாப்பிடும்படி" செய்த அற்புதம்:
கீழ்கண்ட ஹதீஸின் படி, கொஞ்ச உணவை முஹம்மது 1000க்கும் அதிமானவர்கள் சாப்பிடும்படி அற்புதம் செய்ததாக கூறப்படுகின்றது. இவைகள் குர்ஆனுக்கு எதிரானவைகளாகும். முஹம்மதுவிற்கு பிறகு 200 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட ஹதீஸ்களில் கலந்துள்ள பொய்களாகும் இவைகள்.
புகாரி எண்கள்: 4101 & 4102:
4102. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, 'நபி(ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?' என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையிலிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும்போது அவளும் (அரைத்து) முடித்துவிட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி,) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிடவேண்டாம். ('உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)' என்று சொன்னாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்' என்று அழைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலில், 'அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), 'நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்கவேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி - ஸல் - அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், 'நீ நபி(ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி(ஸல்) அவர்கள் அதில் (தம் திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே' என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவைவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக கொண்டிருந்தது. அது (கொஞ்சம் குறையாமல்) முன்பிருந்தது போன்றே இருந்தது. மேலும், எங்கள் குழைத்தமாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போன்றே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.
குர்ஆன் சொல்கிறது ==> முஹம்மது ஒரு அற்புதம் கூட செய்யமாட்டார்
ஹதீஸ் சொல்கிறது ==> முஹம்மது பல அற்புதங்களைச் செய்தார்
இப்போது கேள்வி என்னவென்றால், புகாரி ஹதீஸ் சொல்வது உண்மையென்றால், குர்ஆன் சொல்வது பொய்யாகும்? இதனை முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களா?
கேள்வி 311: “குர்ஆனை படிக்கும் படி” என் நண்பன் வறுபுறுத்துகிறான். நான் குர்ஆனை படிக்கலாமா?
பதில் 311: நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். நீங்கள் பைபிளை படித்துள்ளீர்களா? குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டை படித்துள்ளீர்களா? குர்ஆனை படிப்பதற்கு முன்பு, குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டை படிக்கும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
பைபிளை படித்த பிறகு, புதிய ஏற்பாட்டை புரிந்துக்கொண்ட பிறகு நீங்கள் குர்ஆனை படித்தால், உங்களுக்கு ஓரளவிற்கு (கவனிக்கவும் ஓரளவிற்குத் தான்) குர்ஆன் புரியும்.
குர்ஆனை முதன் முதலாக படிப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்:
1) நீங்கள் முதலாவது புதிய ஏற்பாட்டை படித்துவிட்டு, அதன் பிறகு குர்ஆனை படிக்க முயலுங்கள். தமிழில் குர்ஆனை படிக்க விரும்பும் முஸ்லிம்கள் கூட, பைபிளை படித்துவிட்டு அதன் பிறகு குர்ஆனை படித்தால் அவர்களுக்கு நன்றாக குர்ஆன் புரியும்.
2) நான் கிறிஸ்தவன் அல்ல, நான் ஏன் முதலாவது புதிய ஏற்பாட்டை படிக்கவேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூலை ஒரு முறையாவது படித்தால் தான் ஓரளவிற்கு குர்ஆன் புரியும், இல்லையென்றால் கண்ணைக் கட்டி காட்டிலே விட்ட கதையாக உங்கள் முயற்சி மாறிவிடும்.
3) உங்கள் தாய் மொழியில் (தமிழில்) குர்ஆனை படியுங்கள். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், ஆங்கிலத்திலும் குர்ஆனை படிக்கலாம்.
4) ஒரு புத்தகத்தில் பொதுவாக எதிர்ப்பார்க்கப்படும் விவரங்களாகிய முன்னுரை, கோர்வையாக எழுதுவது, மேலதிக விவரங்களைத் தருவது போன்றவைகள் குர்ஆனில் இருக்காது. குர்ஆன் ஒரு வித்தியாசமான புத்தகமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
5) குர்ஆனில் எந்த ஒரு விவரத்தை எடுத்துக்கொண்டாலும், அதற்கு ஒரு முன்னுரையோ, அறிமுகமோ, பின்னணி விவரங்களோ இருக்காது. இந்த அறிமுகத்தை பைபிள் கொடுக்கும். எனவே தான் பைபிளை மேலோட்டமாகவாவது தெரிந்துக்கொண்டு குர்ஆனுக்கு வாருங்கள் என்று ஆலோசனைச் சொல்கிறேன்.
6) ஆங்கிலம் உங்களுக்கு தெரிந்திருந்தால், குர்ஆனின் தஃப்ஸீர்களோடு (விளக்கவுரைகளோடு) சேர்ந்து படித்தால், சிறிது உபயோகமாக இருக்கும்.
7) முஹம்மதுவின் வாழ்க்கையோடு குர்ஆனின் வசனங்கள் சம்மந்தப்பட்டு இருப்பதினால், குர்ஆனை படிப்பதற்கு முன்பு, முஹம்மதுவின் சரித்திரத்தை படித்தல் நல்லது.
8) குர்ஆனை படிப்பது ஒரு சலிப்பு உண்டாக்கும் செயலாகும். அடிக்கடி குர்ஆனில் சொல்லப்பட்டும் விவரங்கள் திடீரென்று "பல நூற்றாண்டுகள் தாவும்", இதனை புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினமே. எனவே, குர்ஆனை படிப்பதற்கு முன்பு, பைபிளை படிக்கவேண்டும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தைப் படிக்கவேண்டும், அதன் பிறகு குர்ஆனை படித்தால் தான் புரியும்.
கடைசியாக, உங்களிடம் "குர்ஆனை படியுங்கள்" என்றுச் சொன்ன, அந்த இஸ்லாமிய நண்பரிடம், கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்:
1) அவர் குர்ஆனை தமிழில் படித்துள்ளாரா?
2) அவர் தமிழில் படிக்கவில்லை என்று சொல்வாரானால், ஏன் தமிழில் படிக்கவில்லை என்பதற்கு காரணங்களை அவர் சொல்லமுடியுமா?
3) அவர் தமிழில் அவரது வேதத்தை படிக்காமல், ஏன் அவர் உங்களை படிக்கச் சொல்கிறார்? தான் செய்யாத ஒன்றை ஏன் மற்றவர்கள் செய்யும்படி கேட்கிறார்?
4) ஒருவேளை அவர் தமிழில் படித்திருந்தால், குர்ஆனைப் பற்றியும், இஸ்லாமைப் பற்றியும், அவர் சுருக்கமாக உங்களுக்கு விளக்கமுடியுமே! அவரிடம் “குர்ஆனை உங்களுக்கு” விளக்கச் சொல்லுங்கள்?
5) ஒருவேளை, நீங்களும் அவரும் ஒன்றாக சேர்ந்து, வாரத்திற்கு சில மணித்துளிகளை ஒதுக்கி, குர்ஆனின் முதல் வசனத்திலிருந்து சேர்ந்து படிக்கலாமே! இது இருவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே!
6) நீங்கள் இருவரும் சேர்ந்து ஒவ்வொரு வசனமாக படித்து, தஃப்ஸீர்களில் விளக்கங்களை படித்து புரிந்துக்கொள்ள இந்த "ஐக்கிய வாசிப்பு" பயனுள்ளாதாக அமையும் என்பது என் கருத்து.
7) இன்னொரு ஆலோசனையும் உள்ளது. நீங்கள் குர்ஆனை படிப்பது போன்று அவரை பைபிளை படிக்கச் சொல்லுங்களேன். முக்கியமாக புதிய ஏற்பாட்டை அவர் படிக்கட்டும், நீங்கள் குர்ஆனை படியுங்கள்.
8) மேலும், குர்ஆனை ஒன்றாக சேர்ந்து படிப்பது போன்று, புதிய ஏற்பாட்டையும் நீங்கள் இருவரும் சேர்ந்து ஒவ்வொரு வசனங்களாக படிக்கலாமே! இதற்கு அவர் சம்மதிப்பாரா, கேட்டுப்பாருங்கள்.
9) நீங்கள் குர்ஆனை படியுங்கள், ஆனால் நான் பைபிளை படிக்கமாட்டேன் என்று அவர் சொன்னால், இது அநியாயம் என்று அவரிடம் சொல்லுங்கள்.
கடைசியாக, குர்ஆனை கிறிஸ்தவர்கள் படிப்பதினால் இயேசு கோபித்துக்கொள்ளமாட்டார். அதே போன்று பைபிளை முஸ்லிம்கள் படித்தால் அல்லாஹ் கோபித்துக்கொள்ளமாட்டான், ஏனென்றால் பைபிளை (தோரா, சங்கீதம், நற்செய்தி நுல்களை) கொடுத்தது நானே என்று அல்லாஹ் சொல்கின்றான்.
கேள்வி 312: "குர்ஆனை தமிழில் படித்தீர்களா?" என்று முஸ்லிம் நண்பரிடம் கேட்டால், அவர்கள் கோபித்துக்கொள்ளமாட்டார்களா?
பதில் 312: ஏன் கோபித்துக்கொள்வார்கள்?
முஸ்லிமல்லாத உங்களிடம் குர்ஆனை படிக்கச் சொல்லும் போது, உங்களுக்கு கோபம் வந்ததா? இல்லையல்லவா?
முஸ்லிம்கள் உங்களிடம் "குர்ஆனை படியுங்கள்" என்றுச் சொன்னபோது உங்களுக்கு கோபம் வராத போது, அதே முஸ்லிம்களிடம் "குர்ஆனை படியுங்கள்" என்று நீங்கள் சொல்லும் போது, அவர்கள் ஏன் கோபம் கொள்வார்கள்?
குர்ஆனை படிக்கவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்! இல்லை என்று அவர்கள் சொல்லமுடியுமா?
குர்ஆனை தமிழில் படித்து, புரிந்துக்கொண்டு அதற்கு கீழ்படிவது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும். எனவே, குர்ஆனை படியுங்கள் என்று நீங்கள் சொன்னால், அவர்கள் கோபம் கொள்ளமாட்டார்கள், அப்படி அவர்கள் கோபம் கொண்டால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
கேள்வி 313: குர்ஆன் இயேசுவிற்கு எந்தெந்த (பட்டப்)பெயர்களைக் கொண்டு அழைக்கிறது? வசன எண்கள் என்ன?
பதில் 313: குர்ஆன் கீழ்கண்ட ஆறுவகையான (பட்டப்)பெயர்களைக் கொண்டு இயேசுவை அழைக்கிறது.
a) மர்யமின் மகன் (Son of Mary - இப்னு மர்யம்):
குர்ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
b) இறைத்தூதர் (Prophet - தீர்க்கதரிசி/நபி - ரஸூல் அல்லாஹ்):
குர்ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . ..
c) அல்லாஹ்வின் அடிமை/ஊழியக்காரர் (Servant/Slave of God - அப்த் அல்லாஹ்):
குர்ஆன் 19:30. “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
d) மஸீஹ் (al-masih):
மஸீஹ் என்ற வார்த்தை குர்ஆனில் 9 வசனங்களில் 11 முறை வருகிறது. எல்லா இடங்களிலும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றியே வருகின்றது (பார்க்க குர்ஆன்: 3:45, 4:157, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 9:30 & 9:31)
குர்ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
e) அல்லாஹ்வின் வார்த்தை Word of God (kalimat-hu):
குர்ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; . . .
கடைசி வாக்கியத்தில் அடைப்பிற்குள் தமிழாக்கம் செய்தவர் எழுதியதை நீக்கி படித்தால் தான் உண்மை விளங்கும்.
“இன்னும் அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்; . . .”
அல்லாஹ்வின் வார்த்தையாக இயேசு இருக்கின்றார் என்பதை மறைக்க, அடைப்பிற்குள் தங்கள் சுய விளக்கத்தை போடுகிறார்கள் தமிழாக்கம் செய்யும் முஸ்லிம்கள்.
கீழ்கண்ட தமிழாக்கம் "அல்லாஹ்வின் வாக்கும் ஆவார்" என்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
குர்ஆன் 4:171. வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், . . .
கீழ்கண்ட IFT, PJ தமிழாக்கங்கள், “வார்த்தை” என்பதை "கட்டளை" என்று மாற்றி தமிழாக்கம் செய்துள்ளார்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
4:171. . . . திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். . . .
பீஜே தமிழாக்கம்:
4:171. . . . மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான்.
"கலிமதுஹூ" என்ற சொல் எப்படி இவர்களுக்கு "கட்டளை" என்று புரிந்துள்ளது?
f) அல்லாஹ்வின் ஆவி (A Spirit from God (ruhun minhu)):
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; . . ..( டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
“ரூஹுன் மின்ஹு” என்ற வார்த்தைகள் "அவனுடைய ஆவி/ஆத்துமா" என்று பொருள் தருகின்றது. ஆனால், கீழ்கண்ட தமிழாக்கம், அல்லாஹ் சொல்ல வந்ததை மாற்றி தமிழாக்கம் செய்துள்ளது.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:171. . . .. அல்லாஹ் (தன்னுடைய) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே.
கீழ்கண்ட தமிழாக்கங்களில், அடைப்பிற்குள் ஒரு பெரிய வாக்கியத்தையே எழுதுகிறார்கள். எதனை மறைக்க இவர்கள் இந்த பாடுபடுகிறார்கள்?
அல்லாஹ்வின் ஆவி ஈஸா இல்லை என்று நிருபிக்க இந்த பாடு படுகிறார்கள் இவர்கள்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
4:171. . .. மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
4:171. . . . (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே,
கேள்வி 314: இயேசு ஒரு நபி மட்டுமே என்று குர்ஆன் எங்கே சொல்கிறது? அதன் வசனம் என்ன?
பதில் 314: குர்ஆன் 4:171ம் வசனத்தில் "ஈஸா ஒரு தூதர்" என்று குர்ஆன் சொல்கிறது.
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . .
இன்னும் வேறு வசனங்களில் "அல்லாஹ்வின் தூதர்" என்று ஈஸா பற்றி கூறப்பட்டுள்ளது.
கேள்வி 315: குர்ஆனில் "ஹவாரிய்யூன்" என்ற வார்த்தை யாரை குறிக்கிறது?
பதில் 315: இயேசுவின் சீடர்களை குர்ஆன் அரபியில் "ஹவாரிய்யூன்" என்று அழைக்கிறது.
3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
3:53. “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
5:111. “என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
5:112. “மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
ஹவாரிய்யு என்றால் உதவியாளர் என்று புகாரி ஹதீஸ் கூறுகின்றது.
புகாரி நூல் எண்: 3719
3719. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் இப்னு அவ்வாம் ஆவார். என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
கேள்வி 316: இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு பற்றி ஏதாவது குறிப்பு குர்ஆனில் உண்டா?
பதில் 316: குர்ஆனில் இயேசுவின் வளர்ப்புத் தந்தை "யோசேப்பு" பற்றி ஒரு வார்த்தையும் எழுதப்படவில்லை.
ஒரு சில முஸ்லிம்கள், "யோசேப்போடு மரியாளுக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது, ஆனால், முக்கியத்தும் குறைந்த விவரங்களை அல்லாஹ் சொல்லவில்லை" என்று கூறுகிறார்கள்.
இது ஒரு ஆபத்தான வாதமாகும், அதாவது யோசேப்பு மரியாளின் வாழ்க்கையில் இருக்கிறார் என்று சொன்னால், "இயேசுவின் பிறப்பு" பற்றி குர்ஆன் சொல்வது அனைத்தும் பொய் என்று நிருபனமாகிவிடும்.
இதனை 2007ம் ஆண்டு நிஜாமுத்தீன் என்ற சகோதரருக்கு கொடுத்த பதிலை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கவும்: இயேசுவின் வரலாறு - 5 : மறுப்புக் கட்டுரை பாகம் 2
ஒருவேளை யோசேப்பு என்ற நபர் மரியாளின் வாழ்வில் இல்லை என்றுச் சொன்னாலும், குர்ஆன் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும்:
1) ஒரு யூதப்பெண் எப்படி கணவரில்லாமல் கர்ப்பம் ஆகமுடியும்? என்ற கேள்விக்கு மரியாள் என்ன பதில் சொன்னார்கள் என்று குர்ஆன் விளக்குகிறதா? இல்லை? குழந்தை பிறந்த பிறகு அல்ல, அதற்கு முன்பு மரியாள் என்ன பதில் சொன்னார்கள்?
2) யூத சமுதாயம் அப்பெண்ணை கல்லெரிந்து கொன்று இருக்கும் அல்லவா? ஏன் யூதர்கள் மரியாளை கொல்லவில்லை?
3) ஒன்பது மாதங்கள் எப்படி மரியாள் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் வாழ்ந்தார்கள்?
4) காட்டுக்குள் சென்று வாழ்ந்தார்கள் என்றுச் சொன்னாலும், ஜகரிய்யாவும், மற்றவர்களும் மரியாளை தேடாமல் விட்டுவிட்டார்களா?
5) எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பாள் மரியாள் சென்று இருந்திருப்பார்கள்? ஏனென்றால், ஊரில் உள்ள மக்களும் ஜகரிய்யாவும் தேடினாலும் கிடைக்கக்கூடாது என்றுச் சொன்னால், அதிக தூரம் மரியாள் சென்று இருந்திருக்கவேண்டும். இதற்கு குர்ஆனிடம் பதில் இல்லை.
6) இதுமட்டுமல்லாமல், பல நூறு மைல்களுக்கு அப்பால் மரியாள் சென்று இருந்திருந்தால், பிள்ளை பிறந்த பிறகு கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு அத்தனை நூறு மைல்கள் தாண்டி வரவேண்டும் என்றால் அது சீக்கிரமாகவும்,சாதாரணமாகவும் நடக்கும் காரியமில்லை. இதற்கு குர்ஆன் பதில் சொல்வதில்லை.
இப்படி அனேக சிக்கல்கள் குர்ஆன் சொல்லும் இயேசுவின் பிறப்பு விவரங்களில் உள்ளது. ஆனால், பைபிள் சொல்லும் விவரங்களில் நடைமுறைக்கு ஏற்றபடி, சிக்கல் இல்லாமல் மஸீஹாவின் பிறப்பு நடக்கிறது.
கேள்வி 317: எந்த குர்ஆன் வசனத்தில் முஹம்மதுவின் பெயர் 'அஹமது' என்று வருகிறது?
பதில் 317: முஹம்மதுவின் பெயர் ஒரு முறை கூட பைபிளில் காணப்படவில்லை என்பதால் அனேக இஸ்லாமியர்கள் பைபிளை குற்றப்படுத்துகிறார்கள். யூத கிறிஸ்தவ வேதங்களில் முஹம்மதுவின் பெயர் காணப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இப்படி இவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம் குர்-ஆனில் காணப்படும் இரண்டு வசனங்களாகும்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (குர்-ஆன் 61:6)
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; ….(குர்-ஆன் 7:157)
இதனை படித்த அனேக இஸ்லாமியர்கள் பைபிளை முழுவதுமாக தேடிப்பார்த்தார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த வசனமும் தென்படவில்லை. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பற்றி புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷத்தின் சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இவைகள் தான் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள்.
யோவான் 14:16ல் வரும் வசனம் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பா? இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்:
கேள்வி 318 உலகம் முழுவதும் ஒரே மூல அரபி குர்ஆன் உள்ளது என்கிறார்களே, இது உண்மையா?
பதில் 318: இது ஒரு மிகப்பெரிய பொய்யாகும். உலக நாடுகள் அனைத்திலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே மூல குர்ஆனை ஓதுகிறார்கள் என்ற பொய்யை முஸ்லிம் அறிஞர்கள் உரக்கச் சொல்கிறார்கள். இது உண்மை என்று நாமும் நம்பிவிடுகிறோம்.
உண்மையைச் சொல்வதானால், அரபி மூலத்தில் 20க்கும் அதிகமான குர்ஆன்கள் உள்ளன.
இந்திய அல்லது தமிழ் முஸ்லிம்களின் அறியாமைக்கு இன்னொரு உதாரணம் என்னவென்றால், பல்லாண்டு காலமாக தாங்கள் அரபியில் ஓதிக்கொண்டு இருக்கும் குர்ஆன் "ஹஃப்ஸ் கிராத்” குர்ஆனா? அல்லது "வர்ஷ" கிராத் குர்ஆனா? என்ற விவரம் கூட தெரியவில்லை என்பதாகும்..
கேள்வி 319: ஹஃப்ஸ் குர்ஆன் மற்றும் வர்ஷ் குர்ஆன் என்றால் என்ன?
பதில் 319: இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஓதும் குர்ஆன் என்பது "ஹஃப்ஸ் (Hafs)" கிராத்தில் உள்ள குர்ஆன் ஆகும்.
"கிராத்" என்றால் ஓதுதல் என்று பொருள். ஆக, ஹஃப்ஸ் என்ற இஸ்லாமிய அறிஞர் எப்படி குர்ஆனை ஓதினாரோ, அதன் அடிப்படையில் உள்ள குர்ஆன் தான் 'ஹஃப்ஸ் குர்ஆன்' ஆகும். உங்கள் வீட்டில் ஒரு குர்ஆன் இருந்து, அதை நீங்கள் அரபியில் ஓதினால், அது பெரும்பான்மையாக ஹஃப்ஸ் கிராத் குர்ஆனாகவே இருக்கும்.
இதே போன்று வர்ஷ் (Warsh) கிராத் குர்ஆனும் உள்ளது. அதாவது வர்ஷ் என்ற இஸ்லாமிய அறிஞர் எப்படி குர்ஆனை ஓதினாரோ, அதன் அடிப்படையில் உள்ள குர்ஆன் தான் "வர்ஷ் கிராத் குர்ஆன்" ஆகும்.
கேள்வி 320: ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் என்ற இரண்டு மூல அரபி குர்ஆன்கள் மட்டும் தான் உலகில் உள்ளன என்று நாம் கருதலாமா?
பதில் 320: இல்லை, நாம் பார்த்த இரண்டு வகையான குர்ஆன்கள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் என்பவர்கள் மூலமாக கிடைத்தவைகளாகும். இவர்களைப் போன்று அனேகர் இன்னும் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய அறிஞர்கள், இப்படிப்பட்ட "பல குர்ஆன் ஓதுபவர்களை" பட்டியலிட்டுள்ளார்கள்.
இவர்களில் 10 பேரை முஸ்லிம் அறிஞர்கள் முக்கியமானவர்களாக குறிப்பிடுகிறார்கள். இந்த 10 பேரிலிருந்து, 7 பேரை இன்னும் முக்கியப்படுத்தி தெரிவு செய்துள்ளார்கள். இந்த ஏழு ஓதுதலை அல்கிராத் அஸ்ஸப் (al-qira'at as-sab - The Seven Readings) என்று கூறுவார்கள்.
மேற்கண்ட 10 பேரிடம் பல மாணவர்கள் குர்ஆன் ஓதுதலை கற்றுக்கொண்டு, "அதனை தங்கள் சுய ஓதுதலின்படி" எழுத்து வடியில் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்துள்ளார்கள். இந்த மாணவர்களில் இரண்டு பேருடைய ஓதுதல் முறையை (கிராத்) முஸ்லிம்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆக, 10 ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்து கற்ற இரண்டு மாணவர்கள், மொத்தம் 10 x 2 = 20 குர்ஆன்கள் குறைந்தபட்சம் இன்று நம்மிடம் உள்ளன.
குர்ஆனை கற்றுக்கொடுத்த ஆசிரியரை "The Reader(ஓதுபவர்)" என்றும், அவரிடமிருந்து கற்று அடுத்த சந்ததிக்கு சேர்ந்த நபரை "The Transmitter (நம்மிடம் சேர்த்தவர்கள்)" என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதுபவர்கள் (Readers) மற்றும் அவர்களது Transmistters மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.
ஆக, 20க்கும் அதிகமான அரபி மூல குர்ஆன்கள் உள்ளன.
கேள்வி 321: இந்த 20+ வகையான குர்ஆன்கள் வெறும் ஒலியாக இருக்கிறது, எழுத்தில் அதாவது பேப்பரில் அச்சில் (Print) செய்து புத்தகமாக இல்லையல்லவா?
பதில் 321: இந்த 20+ குர்ஆன்களை இன்றும் முஸ்லிம்கள் ஓதுகிறார்கள் மேலும் இவைகளின் பிரிண்ட் பிரதியை கூட நாம் புத்தக வடியில் இன்றும் வாங்கலாம்.
குர்ஆன்களை ஆன்லையின் விற்கின்ற இரண்டு தளங்களை உங்களுக்கு இங்கு அறிமுகம் செய்கிறேன்.
- ஈஸி குர்ஆன் ஸ்டோர் - www.easyquranstore.com
- தர் அல் ஃபிகர் - www.daralfiker.com
இரண்டு தளங்களை இன்று (30 மே 2020) பார்க்கப்பட்டு, கீழ்கண்ட படங்கள் எடுக்கப்பட்டன.
a) வர்ஷ், கலூன், கலஃப், அல்துரி, அல் கிசய், இபின் அமிர், இபின் கதிர் மற்றும் 10 கிராத்கள் ஒரே புத்தகத்தில்
"ஈஸி குர்ஆன் ஸ்டோர்" தளத்தில் "நரேஷன்" என்ற மெனுவில் அவர்கள் பல வகையான கிராத் குர்ஆன்கள் பற்றி சிறப்பு அறிவிப்பை கொடுத்துள்ளார்கள். அந்த தொடுப்புக்களை சொடுக்கி, அப்புத்தகங்களை நாம் வாங்கலாம். வலப்பக்கம் மேலே உள்ள மெனுவில், இந்திய ரூபாவை தெரிவு செய்தால், நம் கரன்சியில் நாம் விலையை பார்க்கமுடியும்.
b) பலவகையான கிராத் குர்ஆன்களை வாங்க:
பலவகையான கிராத் குர்ஆன்களை வாங்க, தேவைப்படும் தொடுப்புக்களை சொடுக்கினால், கிழ்கண்ட படங்கள் இந்திய விலையுடன் தெரியும்.
c) தர் அல் ஃபிகர் தளத்தில் விற்கப்படும் கிராத் குர்ஆன்கள்:
இந்த தளத்தில் பல பக்கங்களில் குர்ஆன் கிராத்கள் உள்ளன, நான் சில பக்கங்களை மட்டுமே கொடுத்துள்ளேன்.
எனவே, உலக முஸ்லிம்கள் இந்த கிராத் குர்ஆன்களை வாங்கி வாசிக்கிறார்கள்.
கேள்வி 322: ஒரு முஸ்லிமுக்கு 10 கிராத்களும் தேவையென்றால், அவர் அனைத்து குர்ஆன்களையும் வாங்கவேண்டுமா?
பதில் 322: ஒருவர் இந்த 10 குர்ஆன்களையும் வாங்கியும் படிக்கலாம், ஆனால், இதே மேலேயுள்ள தளத்தில் '10 கிராத்துகளும் ஒரே குர்ஆனில் செர்த்து கொடுத்துள்ளார்கள்', இந்த ஒரு புத்தகத்தை வாங்கினால் போதும், அனைத்து கிராத்துகளில் உள்ள வித்தியாசங்களை பார்த்து படித்துக் கொள்ளலாம்.
இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டால், அது ஹஃப்ஸ் கிராத்தில் எப்படி இருக்கும், வர்ஷ் கிராத்தில் எப்படி இருக்கும் என்று 10 வகையான கிராத்தில் மார்ஜின் பக்கத்தில் கொடுத்திருப்பார்கள்.
இந்த புத்தகத்தையும் ஈஸி குர்ஆன் ஸ்டோர் தளத்தில் வாங்கமுடியும், கிட்டத்தட்ட ரூபாய் 4000 விலை கொடுத்து வாங்கவேண்டும் (தேதி 1 ஜூன் 2020யின் படி).
கேள்வி 323: கிராத்துக்கள் என்றால் குர்ஆனின் வார்த்தைகளில் உள்ள ஓசையை நீட்டி குறைத்து வாசித்தல் என்பது தானே அர்த்தம், இதன் மூலம் வார்த்தைகளின் பொருள் மாறாது அல்லவா? அப்படியென்றால், வெறும் ஒரே குர்ஆன் தான் உள்ளது என்று தானே பொருள்?
பதில் 323: கிராத்துகளில் ஒரே வார்த்தையை இராகத்திற்காக நீட்டியும்,குறைத்தும் ஓதுவதினால், குர்ஆன் வசனங்களின் பொருள் மாறுவதில்லை, இதனை நான் அங்கீகரிக்கிறேன்.
உதாரணத்திற்கு "அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்)" என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால், இதனை 7 வகையாக நீட்டியும், ஓசையை குறைத்தும் ஓதினால், கீழ்கண்ட விதமாக வரும், ஆனால், அர்த்தம் மாறாது, இப்படி ஓதுவது தவறில்லை.
ஒரே வார்த்தையை இராகத்திற்காக பல வகைகளில்(பொதுவாக 7 முறையில்) ஓதுதல்
1) அல்லாஹு அக்பர்
2) அல்ல்ல்லாஹு அக்பர்
3) அல்லா.......ஹு அக்பர்
4) அல்லாஹூ...... அக்பர்
5) அல்லாஹு அக்க்க்பர்
6) அல்லாஹு அக்ப......ர்
7) அல்லாஹு அக்பர்ர்ர்ர்ர்ர்ர்
ஆனால், நாம் மேலே பார்த்த கிராத்துக்களில் "ஓசை" மட்டுமே மாறுவதில்லை, அதோடு கூட வார்த்தைகள் கூட மாறியுள்ளது. இது தான் கிராத்தில் உள்ள பிரச்சனை.
கேள்வி 324: குர்ஆன் 7 வட்டார மொழிகளில் இறங்கியது என்பதை ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே பொருள் மாறாமல் வட்டார மொழியில் இருந்தால் என்ன பிரச்சனை?
பதில் 324: 2008ம் ஆண்டு, அபூமுஹை என்ற முஸ்லிம் சகோதரர் இதே கேள்வியைக் கேட்டிருந்தார், அவருக்கு நான் கொடுத்த பதிலிருந்து ஒரு பகுதிய இங்கு தருகிறேன், முழு பதிலையும் படிக்க, இந்த தொடுப்பை சொடுக்கி படிக்கவும்: 7 வட்டார மொழிகளில் குர்ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது
அபூமுஹை அவர்களின் வாதம் 1: வட்டார வார்த்தைகள்
//அபூமுஹை அவர்கள் எழுதியது
வட்டார மொழி
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.//
மேலே அபூமுஹை அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன், ஒரு சில வார்த்தைகள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வித்தியாசமாக பேசப்படும், பொருள் ஒன்றாக இருந்தாலும், வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கும். ஆனால், வட்டார மொழியில் குர்ஆனை அல்லா இறக்கினான் என்றுச் சொல்லி, குர்ஆனை அபூமுஹை அவர்களே கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார். வட்டார மொழியெல்லாம் இலக்கணப்படி சரியானதாக இருக்காது.
எப்படி என்று கேட்கிறீர்களா? தமிழில் உள்ள வட்டார வார்த்தைகளை உதாரணத்திற்காக எடுத்துக்கொள்வோம். கீழ் கண்ட வார்த்தைகளை பாருங்கள். இவைகள் அனைத்திற்கும் ஒரே பொருள் தான். ஆனால், பல வட்டாரங்களில் அல்லது இடங்களில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளாகும். இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் அனைவரும் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம், பேசியும் இருப்போம்.
1) இருக்கின்றது
2) இருக்கிறது
3) இருக்குது
4) இருக்கு
5) இக்குது
6) இக்கு
7) கீது
வட்டார வார்த்தைகளில் குர்ஆன் வசனங்கள்:
அபூமுஹை அவர்கள் வட்டார மொழியில் குர்ஆன் இறங்கியது என்ற கருத்திற்காக ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டினார்.
//அபூமுஹை தளம்:
"ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)//
இந்த ஹதீஸ் சரியானதா இல்லையா என்பதை இஸ்லாமியர்கள் ஆராய்ச்சி செய்யட்டும், நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அபூமுஹை அவர்கள் இந்த ஹதிஸை ஆதாரமாக காட்டினபடியால், இந்த ஹதீஸ் உண்மையென்றே கருதி, இதனால் எழும் கேள்விகளைக் காண்போம். குர்ஆன் ஒரு இறைவேதம், இலக்கிய நூல்களில் சிறந்தது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட வட்டார வார்த்தைகள் தங்கள் வேதத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வார்களா? பாமர மக்கள் தங்கள் வழக்கத்திற்கு ஏற்ப இலக்கண முறைக்கு முரணாக சொந்தமாக உருவாக்கிக்கொள்ளும் வார்த்தைகளை இஸ்லாமின் இறைவன் தன் வேதத்திலும் புகுத்துவாரா? என்று இஸ்லாமியர்கள் சிந்திக்கட்டும்.
இந்த ஹதீஸின் படி குர்ஆன் வசனங்களை ஜிப்ராயீல் தூதன், அரபி வட்டார வழக்கப்படி முகமதுவின் வேண்டுகோளுக்கு இணங்க இறக்கினார் என்று அறிகிறோம்.
உதாரணத்திற்கு குர்ஆன் 2:115ல் உள்ள வசனத்தை நாம் எடுத்துக்கொள்வோம், நாம் மேலே கண்ட தமிழ் வட்டார வார்த்தைகளை( இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு , மற்றும் கீது ) இட்டு இந்த வசனத்தை படித்தால் எப்படி இருக்கும் என்று இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் சிந்திக்கட்டும்.
குர்ஆன் 2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.
மேற்கண்ட வசனத்தில் "இருக்கிறது" என்ற இடத்தில், இருக்கின்றது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு , மற்றும் கீது என்று மாற்றி படித்துப் பாருங்கள் தமிழ் முஸ்லீம் சகோதரர்களே.
இப்படித்தான் அல்லா குர்ஆனை பலவிதமான 7 வட்டார மொழிப்படி இறக்கினார் என்று அபூமுஹை சொல்லியுள்ளார். ஒரு எடுத்துக்காட்டிற்காக நான் தமிழ் வட்டார வார்த்தைகளை எழுதினேன், இதே போல அரபியில் இருக்கும் வட்டார வார்த்தைகளில் இறக்கப்பட்டதாக அபூமுஹை அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
வட்டார மொழிகள் உள்ள குர்ஆன் இலக்கணப்படி சரியானதா?
அரபி இலக்கிய புத்தகங்களிலேயே குர்ஆன் ஒன்று மட்டும் தான் அதிக தகுதியுடனும், சிறப்புடனும் உள்ளது. இதன் இலக்கிய அழகிற்கு எதுவுமே ஈடாகாது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இப்படி வட்டார மொழிகளோடு உள்ள புத்தகம் இலக்கணப்படி சரியானதாக இருக்குமா சிந்தியுங்கள்.
நாம் பேசும் போது நம் வழக்கப்படி, நாம் வாழும் வட்டாரப்படி பேசினாலும், எழுதும் போது, இலக்கணப்படி எழுதவேண்டும். உதாரணத்திற்கு, மேற்கண்ட குர்ஆன் வசனத்தில், வட்டார வழக்கச் சொற்கள் இட்டு படித்துப்பாருங்கள், எவ்வளவு கொச்சையாக இருக்கும்.
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கின்றது
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்குது
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கு
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இக்குது
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இக்கு
- நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் கீது
தமிழ் வெர்சுவல் பல்கலைக் கழகம் (Tamil Virtual University) என்ற தளத்தில் "செந்தமிழ் சிறப்பு" என்ற கட்டுரையிலிருந்து ஒரு விளக்கம்:
இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு, கீது என வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வடிவில் வழங்கினாலும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும், இருக்கின்றது அல்லது இருக்கிறது என்னும் வடிவையே ஆளவேண்டுமென்பது, தொல்லாசிரியர் கட்டளையிட்ட செம்மையென்னும் வரம்பாம்.
- Source: Tamil Virtual University http://www.tamilvu.org/slet/lA46K/lA46Kd11.jsp?id=23
எவ்வளவு வட்டார சொற்கள் இருந்தாலும், மேடையில் பேசும் போதும், புத்தகம் எழுதும் போதும், இலக்கணப்படி சரியாக உள்ள வார்த்தைகளை பேச/எழுத வேண்டும். மேடையில் பேசும் போது, வட்டார வார்த்தைகளைப் பேசினால், அது நகைச்சுவைக்காகவும், கேலிக்காகவும் இருக்குமே ஒழிய அது ஒரு இலக்கணப்படி சரியானதாக இருக்காது.
7 வட்டார வித்தியாசமான வார்த்தைகள் | ஒரே வார்த்தையை இராகத்திற்காக பல வகைகளில் (பொதுவாக 7 முறையில்) ஓதுதல் |
---|---|
1) இருக்கின்றது | 1) அல்லாஹு அக்பர் |
2) இருக்கிறது | 2) அல்ல்ல்லாஹு அக்பர் |
3) இருக்குது | 3) அல்லா.......ஹு அக்பர் |
4) இருக்கு | 4) அல்லாஹூ...... அக்பர் |
5) இக்குது | 5) அல்லாஹு அக்க்க்பர் |
6) இக்கு | 6) அல்லாஹு அக்ப......ர் |
7) கீது | 7) அல்லாஹு அக்பர்ர்ர்ர்ர்ர்ர் |
எனவே, இலக்கணத்தின்படி அல்லாமல், கொச்சை வார்த்தைகள் கொண்ட புத்தகத்தை ஒரு சிறப்புடைய புத்தகம் என்று சொல்லமுடியாது.
கேள்வி 325: கிராத் குர்ஆன்களில் எப்படிப்பட்ட வித்தியாசங்கள் காணப்படுகின்றன?
பதில் 325: வெறும் வார்த்தைகளில் வித்தையாசங்கள் இருப்பதோடு மட்டுமில்லாமல், இன்னும் அனேக வித்தியாசங்கள் கீழ்கண்ட பட்டியலில் குறிப்பிட்டது போல குர்ஆன்களில் உள்ளது.
எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார் (Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.).
1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.
2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.
3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.
4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.
5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.
6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.
7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.
மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
கேள்வி 326: ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்ஆனில் உள்ள வார்த்தை வித்தியாசங்களில் சிலவற்றை இங்கு கொடுக்கமுடியுமா?
பதில் 326: கிராத் குர்ஆன்களுக்கு இடையே வார்த்தை மாறாமல் வெறும் ஓசை தான் மாறுகிறது என்றுச் சொல்வதெல்லாம் பச்சைப் பொய்களாகும்.
இந்த கட்டுரையில் ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்ஆன்களுக்கு இடையே இருக்கும் வார்த்தை வித்தியாசங்களை தருகிறேன். ஐந்து வித்தியாசங்களை மட்டுமே இங்கு தருகிறேன், மீதமுள்ள வித்தியாசங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:
வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
குர்ஆனை ஓதுதல்
القراءات Readings
رواية ورش عن نافع - دار المعرفة - دمشق Warsh narration-Dar Al Maarifah Damascus | رواية حفص عن عاصم - مجمع الملك فهد - المدينة Hafs narration-King Fahd Complex Madinah | குர்ஆன் வசன எண்கள் |
يُغْفَرْ he will forgive | نَّغْفِرْ We will forgive | அல் பகரா 2:58 |
يَعْمَلُونَ they do | تَعْمَلُونَ (you) do | அல் பகரா 2:85 |
لَوْ تَرَى الذِينَ ظَلَمُواْ that you had known those who do evil | لَوْ يَرَى الَّذِينَ ظَلَمُواْ that those who do evil had...known | அல் பகரா 2:165 |
فَنُوَفِّيهِمُ we will pay them | فَيُوَفِّيهِمْ He will pay them | ஆலு இம்ரான் 3:57 |
تَبْغُونَ you seek | يَبْغُونَ (they) Seek | ஆலு இம்ரான் 3:83 |
வசனம் 2:165ன் கிராத் குரஅன் வித்தியாசம்:
இங்கு ஒரே ஒரு வித்தியாசம் பற்றி சிறிது ஆய்வு செய்வோம். மேலேயுள்ள பட்டியலில் உள்ள மூன்றாவது வித்தியாசத்தை (2:165ஐ) எடுத்துக்கொள்வோம்.
ஹஃப்ஸ் குர்ஆன்:
2:165. . . ; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
வர்ஷ் குர்ஆன்:
2:165. . . ; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் நீர் கண்டுக் கொள்வீர்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
நன்றாக கவனியுங்கள், "அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை எப்படி இருக்கும் என்று அவர்களே அறிந்துக்கொள்வார்கள்" என்று ஹஃப்ஸ் கிராத் குர்ஆன் சொல்கிறது. ஆனால், வர்ஷ் குர்ஆனின் படி, "அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை எப்படி இருக்கும் என்று முஹம்மது அறிந்துக்கொள்வாராம்". இதனை அறிந்துக்கொள்ள முஹம்மதுவை நரகத்துக்கு அல்லாஹ் அனுப்புவானா?
வித்தியாசம் புரிகின்றதா?
முஹம்மதுவிற்கு இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கும் போது, ஏதாவது ஒரு வகையில் தான் இறக்கப்பட்டு இருக்கவேண்டும். இரண்டு வகையில் இறக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. முஸ்லிம்கள் மனப்பாடம் செய்து இருப்பதினால், அடுத்த முறை மனப்பாடம் செய்யப்பட்டதை வெளியே கொண்டுவரும் போது, "அவன்" என்ற இடத்தில் "இவன்" என்றும், "அவர்கள்" என்ற இடத்தில் "நீர்" என்றும் வார்த்தைகள் மாறியுள்ளன.
இதில் எது உண்மை என்று முடிவு செய்யமுடியாதபடியினால், இப்படி 20க்கும் அதிகமான குர்ஆன் கிராத்துக்கள் உருவாகியுள்ளன. குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை, தன் வேதத்தை பாதுகாக்க அல்லாஹ் தவறிவிட்டான் என்பதைத் தான் இதன் மூலம் அறியமுடிகின்றது.
கேள்வி 327: இப்படி அனேக குர்ஆன் கிராத் இருந்தால், அந்த கிராத்தில் உள்ள ஓதுதலை நாம் இன்று கேட்கமுடியுமா?
பதில் 327: ஆம், இன்றும் அனைத்து கிராத்திலும் ஓதுபவர்கள் இருக்கிறார்கள்.
a) 10 கிராத்தில் ஆயத்துல் குர்ஸி வசனங்கள்
இந்த கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, ஆயத்துல் குர்ஸி ஆயத்துக்களை(வசனங்களை) 10 கிராத்தில் ஓதியதை கேட்கலாம்.
b) 7 கிராத்தில் ஸூரத்துல் ஃபாத்தியா ஓதுதல்:
இந்த கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, ஸூரத்துல் ஃபாத்தியா ஆயத்துக்களை(வசனங்களை) 7 கிராத்தில் ஓதியதை கேட்கலாம்.
இந்த கீழ்கண்ட தொடுப்பில், 10 கிராத்துக்களில் ஃபாத்தியா வசனங்களை ஓதி, ஒவ்வொரு கிராத்தில் உள்ள வித்தியாசங்களையும் ஒரு இமாம் ஆங்கிலத்தில் விளக்குகிறார்.
c) கிராத் பற்றி முஸ்லிம்களின் உரையாடல்:
கிராத் பற்றிய ஒரு சிறிய ஆங்கில உரையாடலை முஸ்லிம்கள் கீழ்கண்ட வீடியோவில் கொடுத்துள்ளார்கள், இதனையும் பார்த்துவிடுங்களேன்.
d) குர்ஆன் ஸூரா 100 வை ஹஃப்ஸ் மற்றும் அல் ஸூஸி கிராயத்தில் வாசித்தல்:
e) 32 வகையான கிராத் பற்றி பேசும் விமர்சன வீடியோ:
கேள்வி 328: குர்ஆன் கிராத்துக்கள் 20க்கும் அதிகமாக இருக்கும் போது, ஏன் ஹஃப்ஸ் கிராத் மட்டும் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது (95% முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது) ?
பதில் 328: 1923/24ம் ஆண்டுகளில் எகிப்து அச்சு இயந்திரத்தில் பிரிண்ட் செய்ய ஒரு கிராத் தெரிவு செய்யவேண்டி இருந்தது, அப்போது ஹஃப்ஸ் கிராத்தை தெரிவு செய்தார்கள். மற்ற கிராத்துக்களும் கையெழுத்து பிரதிகளாகவும், வாய்வழியாக ஓதும் முறையாக இருந்துக்கொண்டு இருந்தது, ஆனால் காகிதத்தில் பிரிண்ட் எடுத்ததால் ஹஃப்ஸ் குர்ஆன் புகழ்பெற்றுவிட்டது.
ஒரு வேளை எகிப்து, தன் முதல் அச்சு இயந்திரத்தில் வேறு ஒரு கிராத் குர்ஆனை ஏற்றி இருந்தால், அந்த கிராத் உலகம் முழுவதும் சென்று இருந்திருக்கும். ஹஃப்ஸ் தவிர்த்து மற்ற கிராத்துக்களும் இஸ்லாமிய உலகில் பரவலாக பயன்பாட்டில் இருந்தது, தஃப்ஸீர்களும் அவைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஆனால், எது பிரிண்ட் செய்யப்பட்டதோ, அது புகழ் பெற்றது.
கேள்வி 329: ஹஃப்ஸ் குர்ஆன் கிராத்துக்கு அடுத்தபடியாக, எது புகழ்பெற்ற கிராத்தாக முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்?
பதில் 329: ஹஃப்ஸ் கிராத்துக்கு பிறகு, வர்ஷ் குர்ஆன் முஸ்லிம்கள் அதிகமாக (~3%) பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
கேள்வி 330: குர்ஆனின் கிராத்தில் இத்தனை சிக்கல்கள், விவரங்கள் இருக்கும் போது, நம் தமிழ் நாட்டு அறிஞர்கள், இதைப் பற்றி முஸ்லிம்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லையே! ஏன்?
பதில் 330: குர்ஆனின் சரித்திரம் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் அதிகம் பேசமாட்டார்கள். ஏனென்றால், உண்மை தெரிந்துவிட்டால், அதாவது ஒரு விஷயம் பற்றி ஞானம் வந்துவிட்டால், மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள்.
முஸ்லிம் இமாம்களின், பீஜே போன்ற அறிஞர்களின் "வாழ்க்கை" என்பது குர்ஆனை உயர்த்திக் காட்டி பேசுவதினால் நடக்கிறது. உலகில் எந்த நாட்டில் சென்றாலும் ஒரே குர்ஆன் உள்ளது, ஒரு வரி, ஒரு வார்த்தை மற்றும் ஒரு எழுத்து கூட மாறாமல் குர்ஆன் அரபியில் அப்படியே உள்ளது என்று பல பொய்களைச் சொல்லி, தமிழ் முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
எங்களைப் போன்ற கிறிஸ்தவர்கள் இதைப் பற்றி ஆய்வு செய்து, மக்களுக்கு புரியும் வண்ணம் விளக்கிவிட்ட பிறகு, முஸ்லிம் அறிஞர்கள் "இனி நாம் அமைதியாக இருந்தால், பயனில்லை" என்பதை உணர்ந்துக்கொண்டு இதைப் பற்றி எழுத ஆரம்பிப்பார்கள்.
கூர்ந்து கவனியுங்கள், இந்த நாளையும் தேதியையும் (1 ஜூன் 2020) குறித்துக்கொள்ளுங்கள். இந்த தேதிக்கு முன்பாக, நம் இஸ்லாமிய இணைய தளங்களில், ஆடியோ மற்றும் வீடியோக்களில் குர்ஆனின் 20 வகையான கிராத் பற்றி எவைகள் பேசப்பட்டுள்ளன, எழுதப்பட்டுள்ளன என்பதை கவனியுங்கள். குறைந்த பட்சம் ஹஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்ஆன் பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்று கவனித்துப் பார்த்தால், 1% கூட இருக்காது. இனி மேல் 20 கிராத்துக்கள் பற்றி எழுதவும், பேசவும் தொடங்குவார்கள்.
இதைப் பற்றி முஸ்லிம்கள் அதிகம் அறியவேண்டும் என்ற ஆர்வம் இனி உண்டாகிவிடும், இதனால் முஸ்லிம அறிஞர்கள் கிராத் பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.
தேதி: 1st Jun 2020