2020 ரமளான் - சின்னஞ்சிறு கேள்விகள் பதில்கள் 1000: 'பெண்கள்' - பாகம் 10
முந்தைய தொடர்களில் பல தலைப்புக்களில் கேள்வி பதில்களைக் கண்டோம், அதாவது குர்ஆன், அல்லாஹ், யெகோவா, பைபிள், முஹம்மது, இஸ்லாம், கிறிஸ்தவம், இஸ்லாமிய கலைச்சொற்கள் மற்றும் ஹதீஸ்கள் போன்ற தலைப்புக்களில் பதில்களை கண்டோம். இந்த கட்டுரையில் 'பெண்கள்' என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் காண்போம்.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் பெண்கள் என்ற தலைப்பு மிகவும் சர்சைக்குரியது. இந்த தொடர் கேள்விகளை படிப்பதற்கு சிலர் தயக்கம் காட்டலாம் சிலருக்கு தர்மசங்கடமாகவும் இருக்கலாம், ஆனால் சத்தியத்தை சொல்லத்தான் வேண்டும்.
கேள்வி 271: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இதில் எந்த மார்க்கம் பெண்களை கௌரவப்படுத்துகிறது?
பதில் 271: ஒரே ஒரு வரியில் இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. நான் நம்புவதை உங்கள் மீது திணிக்கவும் விரும்பவில்லை.
பைபிள் மற்றும் குர்ஆனில் பெண்கள் பற்றி சொல்லப்பட்டுள்ள விவரங்களை ஆழமாக நாம் ஆய்வு செய்யப்போகிறோம். அவைகளை புரிந்துக்கொள்ளுங்கள், இந்த தலைப்பில் கொடுக்கப்படும் அனைத்து பதில்களையும் படித்து, ஆய்வு செய்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.
"கௌரவம்" என்ற வார்த்தை இடத்தைப் பொருத்து, கலாச்சாரத்தைப் பொருத்து, மனிதர்களைப் பொருத்து மாறுபடும்.
உச்சஞ்தலை முதற்கொண்டு, உள்ளங்கால் வரை பெண்களை ஆடைகளால் மூடும் ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர்கள், இப்படி மூடுவது தான் பெண்களுக்கு கௌரவம் என்கிறார்கள். இன்னொருவர், பெண்களுக்கு நாகரீகமான உடைகள் அணிய அனுமதி கொடுப்பது தான் அவர்களை கௌரவப்படுத்துவது ஆகும் என்கிறார்கள்.
இதில் யார் சரி? யார் தவறு? இந்த முடிவை யார் எடுப்பது?
வாசகர்களிடமே இந்த முடிவை விட்டுவிடுவோம். அறிவுடமையோடு சிந்தித்து முடிவு எடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்.
கேள்வி 272: குர்ஆனில் வரும் ஒரே பெண்ணின் பெயர் என்ன? இப்படி குர்ஆனை அமைத்த அல்லாஹ் எதனை சொல்ல வருகின்றான்?
பதில் 272: குர்ஆன் முஹம்மதுவிற்கு 23 ஆண்டுகள், சிறிது சிறிதாக கொடுக்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். குர்ஆனில் 6236 வசனங்கள் உள்ளன, இவைகளில் மனித தொடக்கம் முதற்கொண்டு, உலக முடிவு வரை பல நிகழ்ச்சிகள், விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான உரையாடல்கள், நிகழ்ச்சிகள் அலசப்பட்டன. ஆனால், ஒரே ஒரு பெண்ணின் பெயர் மட்டும் தான் குர்ஆனில் குறிப்பிடப்பட்டது?
அல்லாஹ் பெண்களின் பெயர்களை தன் வேதத்தில் பயன்படுத்த விரும்பவில்லை. இயேசுவின் தெய்வீகத்தை எதிர்க்கவேண்டுமென்பதற்காக, "மர்யமின் மகன் ஈஸா" என்று குறிப்பிட விரும்பி, மரியாளின் பெயரை மட்டுமே முழு குர்ஆனிலும் குறிப்பிட்டுள்ளான்.
இயேசுவின் தாய் மரியாளின் பெயர் உள்ளதே, இது உங்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) மகிழ்ச்சி இல்லையா? என்று கேட்கவேண்டாம், இது எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. மரியாளின் பெயர் குர்ஆனில் வந்தாலும், அவர்களுடைய நம்பிக்கைக்கு எதிரான விவரங்கள் குர்ஆனில் சொல்லியிருப்பதினால், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை தலை கீழாக மாற்றி குர்ஆனில் பதிவு செய்யப்பட்டு இருப்பதினால், அது மரியாளுக்கு அவமரியாதை ஆகும்.
பெண்களின் பெயர்களை குர்ஆனில் பயன்படுத்துவதா? இல்லையா? என்பது அல்லாஹ்வின் விருப்பம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆமாம், அது அல்லாஹ்வின் விருப்பம் தான். ஆனால் ஏன் அல்லாஹ் பெண்களின் பெயர்களை குர்ஆனில் பயன்படுத்தவில்லை? இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? பெண்கள் பற்றிய தவறான எண்ணம் கொண்டவன் தான் குர்ஆனை கொடுத்தானா? போன்ற கேள்விகள் நமக்கு எழுவது நியாயமே! இதற்கான பதிலை தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இந்த தொடரில் உள்ள அனைத்து கேள்விகளையும் படித்து, நீங்களே ஆய்வு செய்துப் பாருங்கள், உண்மை விளங்கும்.
கேள்வி 273: பெண்களை அடிப்பதற்கு குர்ஆன் அனுமதியளிக்கிறது என்றுச் சொல்வது பொய் தானே!
பதில் 273: இல்லை, உண்மையாகவே முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க குர்ஆன் அனுமதி அளிக்கிறது.
குர்ஆனின் இந்த வசனத்தை தமிழில் மொழியாக்கம் செய்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருந்துள்ளது, எனவே, தான் "லேசாக அடியுங்கள்" என்றும், "காயம் ஏற்பாடாதவாறு அடியுங்கள்" என்றும் குர்ஆனில் இல்லாத வார்த்தைகளை போட்டு மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:34. . . .; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:34. . . .. எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
4:34 . . .மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
4:34 . . .இன்னும், (அப்பெண்களாகிய) அவர்களில் (தம் கணவனுக்கு) எவர்களின் மாறுபாட்டை அஞ்சுகிறீர்களோ, அப்போது அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளிலும் அவர்களை வெறுத்து (ஒதுக்கி) விடுங்கள், (அதிலும் அவர்கள் சீர்திருந்தாவிடில்) அவர்களை (காயமேற்படாது) அடியுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டுவிட்டால், அவர்கள் மீது (இதர குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப் பெரியவனாக இருக்கின்றான்.
பீஜே தமிழாக்கம்:
4:34 . . .பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.66
இரண்டு பேர் மட்டும் "அவர்களை அடியுங்கள்" என்று குர்ஆனில் உள்ளது போன்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். மற்றவர்கள் "லேசாக, காயமில்லாதவாறு" என்று சொந்த வார்த்தைகளை எழுதி, முஸ்லிம் பெண்களை காப்பாற்ற முயன்றுள்ளார்கள். ஆனால், முஸ்லிம் ஆண்கள் இவர்களுடைய வார்த்தைகளை கேட்பார்களா?
கேள்வி 274: பெண்களை திருத்தமுடியாது என்று முஹம்மது கூறியுள்ளாரா?
பதில் 274: முஹம்மது கீழ்கண்ட விதமாக ஒட்டுமொத்த பெண்கள் பற்றி கூறியுள்ளார். தன் குடும்ப பெண்களைப் பற்றியோ, அல்லது சஹாபாக்கள் குடும்ப பெண்களைப் பற்றியோ கூறியிருந்தால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று விட்டுவிடலாம். ஆனால்,பொதுவாக உலக பெண்கள் அனைவர் பற்றியும், எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்ற கருத்து வரும் வண்ணமாக இப்படி கூறியுள்ளார். இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?
ஸஹீஹ் புகாரி நூல், எண்: 5184 (மேலும் பார்க்க: 3331)
5184. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஓடித்தேவிடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண்: 2913 (மேலும் பார்க்க: 2912 & 2914)
2913. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்க மாட்டாள். அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியதுதான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தேவிடுவாய். அவளை "ஒடிப்பது" என்பது, அவளை மணவிலக்குச் செய்வதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆண்கள் மட்டும் உலகத்தில் நல்லவர்கள் போலவும், பெண்களை திருத்தமுடியாது போலவும் முஹம்மது கூறியுள்ளார். இது அவரது குறும்புத்தியைக் காட்டுகிறது, இது ஒரு தீர்க்கதரிசிக்கு அழகல்ல. பெண்களை அவர் எப்படி பார்க்கிறார் அல்லது இஸ்லாம் பெண்களை பார்க்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது.
இதே போன்று அவர் ஆண்கள் பற்றி சொல்லியிருக்கலாம் அல்லவா? அவர் சொல்லமாட்டார், அவரால் சொல்லமுடியாது, உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும்.
கேள்வி 275: அதிக சாபமிடுபவர்கள், அறிவு மற்றும் மார்க்க கடமை குறைவு உள்ளவர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்கள், நரகத்தில் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் என்று கூறியது யார்?
பதில் 275: உலகத்தின் மேன்மைக்காக அல்லாஹ் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி மற்றும் முஸ்லிம்கள் அணுவணுவாக பின்பற்றும் முஹம்மது தான் இப்படி சொல்லியுள்ளார்.
முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பார்வையில் பெண்கள் - புகாரி நூல் ஹதீஸை படமாக காட்டியுள்ளேன் காணுங்கள்:
புகாரி நூல் எண்: 304
304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர்.
'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவரம்:
தனிப்பட்ட முறையிலே, அக்காள் தங்கை, அண்ணன்களோடு ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து, கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த ஒரு நபராக, முஹம்மதுவின் மேற்கண்ட கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெரியம்மா, சின்னம்மா, அண்ணி என்று பல உறவுகளில் வாழ்ந்து, என்னைச் சுற்றியுள்ள பெண்களை கவனித்து பார்த்ததில், முஹம்மதுவின் கூற்றில் உண்மையில்லை என்று சொல்லமுடியும்.
பொதுவாக சில பெண்களிடத்தில் ஓரிரு கெட்ட குணங்கள் இருக்கும், இதே போன்று சில ஆண்களிடத்திலும் சில கெட்ட குணங்கள் இருக்கும். ஆனால், "உங்களில் சிலர் இப்படி உண்டு" என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒட்டுமொத்த பெண் இனத்தை விமர்சிப்பது நபிக்கு அழகல்ல.
ஆண்கள் அனைவரும் வக்கிர புத்தி கொண்டவர்கள், பெண்களை மோகப்பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள் என்று ஒட்டுமொத்த ஆண் இனத்தின் மீது குற்றம் சுமத்தினால் 'அது சரியான கூற்றாக இருக்குமா'?
ஒருவேளை முஹம்மதுவைச் சுற்றியிருந்த அவரது மனைவிகள், சொந்தங்கள், தாய்மார்கள், அக்காமார்கள், அண்ணிமார்கள், பெரியம்மா, சின்னம்மா மற்றும் சஹாபாக்களின் மனைவிகள் போன்ற பெண்கள் அவருடைய கண்களுக்கு மேற்கண்ட குணங்களை உடையவர்களாக இருந்திருக்கலாம். அதற்காக, அவர் உலகத்தில் பிறக்கும் எல்லா பெண்களும் இப்படி இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடமையன்று.
இதனை முஸ்லிம் பெண்கள் வன்மையாக கண்டிக்கவேண்டும். முஹம்மதுவின் கூற்றில் உண்மையில்லை என்று நம்புகிற முஸ்லிம் ஆண்களும் கண்டிக்கவேண்டும்.
கேள்வி 276: பெண்கள் அறிவில் குறைவு - இதற்கு காரணம் குர்ஆனின் கட்டளை என்று முஹம்மது கூறியிருக்கும் போது, முஹம்மதுவை ஏன் குற்றப்படுத்தவேண்டும்?
பதில் 276: பெண்கள் பற்றிய தவறான கருத்தை முஹம்மது சொன்னதற்கு காரணம் அல்லாஹ் என்றுச் சொல்ல வருகின்றீர்களா?
2:282. . . . தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; . . ..
- ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி என்று குர்-ஆன் 2:282ல் சொன்னதால், பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களா?
அல்லது
- பெண்கள் பிறப்பிலிருந்தே அறிவில் குறைவுள்ளவர்கள் என்று அல்லாஹ்வும் முஹம்மதுவும் கருதிவிட்டார்களா?
இதில் எது உண்மை. இது ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வசனமாகும்.
இதை உலகத்தில் யார் சொல்லியிருந்தாலும், போகட்டும் நாக்கிலே எலும்பு இல்லை என்பதால் மனிதன் எதையானாலும் பேசுவான் என்று விட்டுவிடலாம். ஆனால், எல்லாம் அறிந்த இறைவன் என்றுச் சொல்லக்கூடிய "அல்லாஹ்" இதைச் சொன்னதால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
பிறக்கும்போது யாரும் புத்திசாலியாக பிறப்பதில்லை, மற்றும் முட்டாளாக பிறப்பதில்லை. நாம் அந்த மூளைக்குத்தரும் பயிற்சி, படிப்பு, சூழ்நிலை மற்றும் நண்பர்கள் முலமாக மனிதன் (ஆண், பெண்), அறிவாளியாகவோ அல்லது சிறிது அறிவில் குறைவுள்ளவனாகவோ மாறுகிறான். இதில் ஆண்கள் அறிவில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள், பெண்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்றுச் சொல்வது மிகப்பெரிய தவறாகும். பிறக்கும்போது மூளைவளர்ச்சி குன்றியவர்களை நாம் இதில் செர்த்துக்கொள்ளக்கூடாது. அப்படி சேர்த்துக்கொண்டாலும் இதிலும் இருவர் ஆண் பெண் உண்டு.
என் மனைவி, அல்லது சகோதரி அறிவில் சிறிது குறைவுள்ளவள், பக்தியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றுச் சொல்ல முஹம்மதுவிற்கு உரிமை உண்டே தவிர, உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும், அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதி என்றுச் சொல்ல அவருக்கும் உரிமையில்லை, அல்லாஹ்விற்கும் உரிமையில்லை.
பகுத்தறிவு, நேர்மை, நீதி, நியாயம், உண்மை, பொய், கடமை இவைகளின் இனம் (Sex) என்ன இருக்கிறது? ஆண்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், பெண்கள் நேர்மை தவறுவார்கள் என்றுச் சொல்லி, இவைகளுக்கு ஒரு இனத்தை(Sex) கொடுத்த பெருமை இஸ்லாமையேச் சாரும்.
இதனை படிப்பவர்களில் யாராவது, என் தாய், மனைவி, அக்காள், தங்கை, மகள் இவர்கள் எல்லோரும் அறிவில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்லமுடியுமா?
குர்ஆன் பெண்களுக்கு எதிரானது என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேண்டுமா?
கேள்வி 277: ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது என்று முஹம்மது கூறினாரா?
பதில் 277: பெண்களை தலைவர்களாக நியமித்தால், அந்த நாடு அல்லது நிறுவனம் முன்னேறாது என்று முஹம்மது சொல்லியிருப்பது இப்போதுள்ள மனிதனுக்குத் தெரிந்தால், அவன் எவ்வித கஷ்டத்தில் இருந்தாலும், ஒரு நிமிடம் தன்னை மறந்து சிரித்துவிடுவான்.
புகாரி நூல், எண் 4425:
4425. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்
ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது. பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது' என்று கூறினார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வாதம் பாருங்கள்! இது நடைமுறைக்கு ஏற்ற வாதமாக உள்ளதா? முஹம்மதுவின் இந்த கூற்று தவறு என்பதை உலக பெண்கள் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதோ உலகத்தின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த சில பெண் முத்துக்கள்:
1. 1901 லிருந்து 2019 வரை 53 பெண்கள் நோபல் பரிசுகள் பெற்றுயிருக்கின்றனர்.
அமைதிக்கான நோபல் பரிசை பதினேழு பெண்கள் வென்றுள்ளனர், பதினைந்து பேர் இலக்கிய நோபல் பரிசை வென்றுள்ளனர், பன்னிரண்டு பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர், ஐந்து பேர் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர், மூன்று பேர் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர், மற்றும் இரண்டு, எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் எஸ்தர் டுஃப்லோ, பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசை வென்றுள்ளனர்.
2. சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, இந்திய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழ்நாட்டின் முன்னால் உயர்நிதீ மன்றத்தின் நீதிபதி பாத்திமா பீவி அவர்கள், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் கிரன் பேடி அவர்கள், இமயமலை சிகரத்தை அடைந்த முதல் ஜப்பானிய பெண் "ஜுன்கோ டெபை - ஆண்டு 1975" இன்னும் பலர்.
3. இஸ்லாமிய சட்டம் நடைபெறும் சவுதி அரேபியாவில் பெண்கள், கார் ஓட்டுவதற்கு முன்பாகவே , காபிர் நாடாகிய (என் அருமை தாய் நாடு) இந்தியாவின் அருமை புதல்வி "கல்பனா சாவ்லா" வின்னிற்கு ராக்கெட்டில் சென்று விட்டாள். உம்முடைய சட்டம் நடைபெறும் நாட்டின் பெண்கள் தேர்தலில் ஓட்டுரிமை பெறுவதற்குள், காபிர் நாடுகளில் பெண்கள் முதலமைச்சர்கள், பிரதமமந்திரிகள் ஆகிவிடுகின்றனர். இவர்களின் அறிவு குறைபாடுள்ளதா? அல்லது நீங்கள் சொன்னது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தானா?
4. சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கு "2003 அமைதி நோபல் பரிசு" கிடைத்தது. அவர் தான் "ஷீரின் எபாடி(Shirin Ebadi)". இந்த பரிசு இப்பெண்மனிக்கு எதற்காகத் கிடைத்தது தெரியுமா? இவர் ஈரானில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் இழி செயல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றும்படியாக அதிகமாக உழைத்ததால் தான்.
இவர் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பெண்களுக்கு சேவைசெய்தார். இவருக்கு நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கும்போது, ஈரானின் இமாம்கள், இது இஸ்லாமிற்கு எதிரானது, ஒரு பெண்ணின் அறிவுரையை ஆண்கள் கேட்கக்கூடாது என்றும், பெண்களை ஆளுகை செய்கிறவர்களாக நியமிக்கக்கூடாது என்றும் ஹதீஸில் முஹம்மது சொல்லியிருக்கிறார், எனவே இது செல்லாது என்றுச் சொல்லி, இவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
இவர் தன் முயற்சியை விடாது போராடிக்கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே இமாம்கள், இதே இஸ்லாம், “இது செல்லும்” என்றுச் சொல்லி மறுபடியும், இவரை நீதிபதி செய்தார்கள். இவருடைய 15 ஆண்டுகளின் சேவை இஸ்லாம் சட்டத்தால் வீணாக்கப்பட்டது. எத்தனை பெண்களின் வாழ்க்கை மலர்ந்திருக்குமோ! இதற்கெல்லாம் காரணம். அல்லாஹ்வும், முஹம்மதுவும் தான்.
கேள்வி 278: பெண் தீர்க்கதரிசிகள் இல்லை என்று குர்ஆன் சொல்கிறதா?
பதில் 278: ஆண்களை மட்டுமே நபிகளாக (தீர்க்கதரிசிகளாக) அனுப்பியதாக குர்ஆன் சொல்கிறது. மூன்று தமிழாக்கங்களில் இந்த வசனத்தை படியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
21:7. (நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
21:7. மேலும், (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
பிஜே தமிழாக்கம்:
21:7. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
மேற்கண்ட வசனத்தில் "நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று அல்லாஹ் அறிவுரை கூறுகின்றான். அதாவது குர்ஆனில் சந்தேகம் வந்தால், முஸ்லிம்கள் யாரிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேண்டும்? முந்தைய வேதங்கள் கொடுக்கப்பட்ட யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேண்டும். முஹம்மதுவிற்கும் சந்தேகம் வந்தாலும் சரி, அவர் யூத கிறிஸ்தவர்களிடம் வரவேண்டியது தான்.
கேள்வி 279: பெண் தீர்க்கதரிசிகள் உண்டென்று பைபிள் சொல்கிறதா?
பதில் 279: முந்தைய வேதங்கள் என்ன சொல்கின்றன? யெகோவா தேவன் பெண் நபிகளை அனுப்பியுள்ளாரா?
இந்த பதிலை படிப்பவர்கள், ஒரு விவரத்தை தெளிவாக புரிந்துக்கொள்வார்கள், அது என்னவென்றால், குர்ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்பதைத் தான். அல்லாஹ் மூன்று இடங்களில், நான் ஆண்களை மட்டுமே தூதர்களாக அனுப்பினேன் என்று கூறுகின்றான், ஆனால் பைபிளின் தேவனோ, அனேக பெண் தீர்க்கதரிசிகளை, தூதர்களை அனுப்பியுள்ளார். இவ்விருவர்களும் எப்படி ஒருவராக முடியும்? ஒருவேளை, அல்லாஹ்விற்கு கடந்த கால நிகழ்ச்சிகளை மறந்துபோகும் வியாதி இருந்ததா? என்று கேட்கத்தோன்றுகிறது. அப்படி இல்லையென்றால், ஏன் அல்லாஹ் குர்ஆனில் வெறும் ஆண்களையே தூதர்களாக அனுப்பினேன் என்றுச் சொல்லமுடிந்தது? அல்லாஹ் மறந்தானா? அல்லது மறைத்தானா?
பைபிளிலிருந்து சில பெண் தீர்க்கதரிசிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவைகளுக்கான வசன ஆதாரங்களையும் தருகிறேன், இவைகளை படித்த பிறகு குர்ஆன் 21:7ஐ படியுங்கள். உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்.
- அல்லாஹ் இறைவன் என்றால் அவனால் மறக்கமுடியுமா? முடியாது
- அல்லாஹ் தான் யெகோவா என்றால், எப்படி தான் பெண் தீர்க்கதரிசிகளை அனுப்பியதை மறைத்து, குர்ஆனில் எழுதமுடியும்?
- இதுவும் இல்லை, அதுவும் இல்லையென்றால், என்ன தான் பதில்?
இதற்கு பதில் சொல்வது மிகவும் சுலபம், அதாவது அல்லாஹ் யெகோவா தேவன் இல்லை என்பது தான் அது. இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள். இது சரியான பதில் இல்லையென்றுச் சொல்லும் முஸ்லிம்களிடம் வேறு பதில் உண்டா?
- பெண் நபி 1: மிரியாம் - யாத்திராகமம் 15:20
- பெண் நபி 2: தெபொராள் - நியாயாதிபதிகள் 4:4
- பெண் நபி 3: உல்தாள் - II இராஜாக்கள் 22: 13 -15 & 2 நாளாகமம் 34:21-22
- பெண் நபி 4: ஏசாயாவின் மனைவி ஒரு தீர்க்கதரிசி - ஏசாயா 8:3
- பெண் நபி 5: அன்னாள் - லூக்கா 2:36-38
இதைப் பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: குர்ஆம் 21:7 அல்லாஹ் ஆண்களை மட்டுமே நபிகளாக அனுப்பினானா? மொழியாக்கங்கள் ஏன் உண்மையை மறைக்க முயலுகின்றன?
கேள்வி 280: முதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா?
பதில் 280: இஸ்லாமின் படி ஒரு முஸ்லிம் ஆண் நான்கு திருமணங்கள் செய்துக்கொள்ளலாம். மேலும் முதல் மனைவியின் அனுமதி இல்லாமல், முஸ்லிம் ஆண் இரண்டாம் திருமணம் செய்யலாம்.
குர்-ஆனின் வரையறை: குர்-ஆன் 4:3
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (பீஜே தமிழாக்கம்)
இந்த வசனத்தின் படி, ஒரு இஸ்லாமிய ஆண் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அனுமதி பெறுகிறான். இந்த வசனத்திலோ அல்லது குர்-ஆனின் இதர வசனங்களிலோ, எங்கும், முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் ஒரு முஸ்லிம் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லப்படவில்லை.
குர்-ஆன் அனுமதிக்காத ஒன்றை, முஸ்லிம்கள் செய்யமாட்டார்கள். அதாவது நான்கு திருமணங்கள் பற்றி அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கும் போது, அதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று மனிதர்களிடம் முக்கியமாக தன் முதல் மனைவியிடம் கேட்டு செய்யமாட்டார்கள் இஸ்லாமியர்கள்.
ஆக, இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு முஸ்லிமுக்கு அடுத்தடுத்து திருமணம் செய்ய, முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பது விளங்கும்.
இதைப் பற்றி மேலும அறிய இந்த கட்டுரையை படியுங்கள்: முதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா?
கேள்வி 281: நரகத்தில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று முஹம்மது கண்டாரா?
பதில் 281: தனக்கு அல்லாஹ் நரகத்தை காட்டினான், அதில் அதிகமான பேர் பெண்கள் இருப்பதாக தாம் கண்டதாக முஹம்மது கூறுகின்றார்.
புகாரி நூல் எண்: 304
304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது . . .
முஹம்மது சொன்னது உண்மையாக இருந்தால்?
உண்மையாகவே அல்லாஹ் முஹம்மதுவிற்கு நரகத்தை காட்டி, அதில் அதிகமாக பெண்கள் இருப்பதாக முஹம்மது கண்டுயிருந்தால், இதன் அர்த்தமென்ன? உலகத்தில் உள்ள பெரும்பான்மையான பெண்கள் முஹம்மது சொன்ன அந்த நான்கு குணங்களை உடையவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், முஹம்மது பொய் சொன்னார் என்பதைத் தான் நடைமுறையில் நாம் பார்க்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முஹம்மது சொன்னது பொய்யாக இருந்தால்?
முஹம்மது தனக்கு தோன்றியபடி, தன் சொந்த கருத்தைத் தான் சொன்னார், ஆனால் அதற்கு அல்லாஹ்வின் மதச்சாயம் பூசிவிட்டார் என்று நினைத்தால். முஸ்லிம்கள் இஸ்லாமையும், முஹம்மதுவையும் புறக்கணிக்கவேண்டும்.
கிறிஸ்தவமும் நரகம் இருப்பதை நம்புகிறது, ஆனால், எந்த ஒரு இடத்திலும், அதில் “இந்த குழு மக்கள்(ஆண்களோ, பெண்களோ)” அதிகமாக இருப்பார்கள் என்றுச் சொன்னதில்லை.
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
கேள்வி 282: முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமான பெண்கள் அவர்களுக்கு என்ன உறவு?
பதில் 282: குர்ஆனின் படி ஒரு முஸ்லிம் ஆணுக்கு வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள் என்றால், அவர்களுக்கு போரில் கிடைத்த அடிமைகள், முக்கியமாக அடிமைப்பெண்கள். பணம் படைத்தவர்கள் மார்கெட்டுக்குச் சென்று ஒரு அடிமைப்பெண்ணை விலைக்கு வாங்கி வீட்டில் வைத்துக்கொள்வதும் வலக்கரங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று பொருள்.
வலக்கரத்துக்கு சொந்தமான ஆண்களை (அடிமை ஆண்களை) வீட்டு வேலை செய்வதற்கு பயன்படுத்துக்கொள்வார்கள். வலக்கரத்துக்கு சொந்தமான பெண்களை (அடிமை பெண்களை) முஸ்லிம் ஆண்கள், திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களுடன் உடலுறவு கொள்ளலாம். இந்த உரிமையை குர்ஆன் முஸ்லிம்களுக்கும், முஹம்மதுவிற்கும் கொடுத்துள்ளது.
கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை கவனமாக படித்துப் பாருங்கள்:
a) திருமணம் செய்யாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் (குர்ஆன் 4:3):
குர்ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
இந்த வசனத்தை கவனிக்கவும், "அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் " என்ற வரியில் அல்லாஹ் சொல்ல வருவது என்ன?
விடுதலையான பெண்ணை திருமணம் செய்யவேண்டுமென்றால், மஹர் கொடுக்கவேண்டும். பெண்களுக்கு மஹர் பணம் கொடுக்க முடியாத ஆண்கள் என்ன செய்யவேண்டும்? அதற்கு அல்லாஹ் பதில் சொல்கிறான் "உன்னிடம் உள்ள அடிமைப்பெண்ணோடு நீ உடலுறவு வைத்துக்கொள்". திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைக்க அல்லாஹ் அனுமதி அளிக்கின்றான்.
உலகம் இதனை விபச்சாரம் என்று அழைக்கிறது, ஆனால், முஸ்லிம்கள் இதனை அப்படி அழைப்பதில்லை.
மேலும் இவ்வசனத்தை தமிழாக்கம் செய்த "முஹம்மது ஜான்" அவர்கள் "ஓர் அடிமைப்பெண்" என்று அடைப்பிற்குள் எழுதுகின்றார். ஆனால், அரபியில் ஒரு அடிமைப்பெண்ணோடு மட்டுமே நீ உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்றுச் சொல்லவில்லை. இவருக்கு இந்த குர்ஆன் வசனத்தை தமிழாக்கம் செய்ய வெட்கமாக இருந்துள்ளது, தர்மசங்கடமாக இருந்துள்ளது, எனவே "ஓர் அடிமைப்பெண்" என்று எழுதுகின்றார்.
இவ்வசனத்தை மொழியாக்கம் செய்த மற்றவர்களும் எப்படி தர்மசங்கடத்தில் முழ்கி இதனை மொழியாக்கம் செய்துள்ளதைப் பாருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
. . .அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
. . .அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
. . .அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க்கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு, இதுவே சுலப(மான வழியா)கும்.
பீஜே தமிழாக்கம்:
. . .அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
இந்த வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் பற்றி மேலும் அறிய படிக்கவும்: குர்ஆன் 4:25, 23:6, 33:50, 33:52, 70:30
இந்த சட்டம் இன்னும் குர்ஆனில் உள்ளது, இன்றைய முஸ்லிம்களும் இதனை செய்கிறார்கள். ஆனால் அடிமைகளை விற்பது நாகரீகமடைந்த நாடுகளில் தடை செய்யப்பட்டு இருப்பதினால், நம் முஸ்லிம் ஆண்களுக்கு வலக்கரத்துக்கு சொந்தமானவர்கள் யாருமில்லை. இஸ்லாமிய ஆட்சி நடக்கும் சில நாடுகளில் இன்றும் இந்த அவலம் உண்டு, நம் முஸ்லிம் நண்பனும் செய்வான்.
இதை ஒருவேளை படிப்பவர்கள் இந்திய முஸ்லிம்களாக இருந்தால், உங்கள் தகப்பனாரும், அண்ணனும், தம்பியும் இதை செய்வான், ஏனென்றால் இது அல்லாஹ்வின் படி ஹலால் ஆகும். உலகத்தின் படி ஹராம் - விபச்சாரம் ஆகும்.
கேள்வி 283: போரில் பிடிபட்ட பெண்கள் பற்றி பழைய ஏற்பாடும் சொல்கிறதல்லவா? ஏன் குர்ஆனை மட்டுமே குற்றப்படுத்துகிறீர்கள்?
பதில் 283: அடிமைப்பெண்களை வாங்கி அல்லது போரில் பிடிபட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களை கற்பழிக்க உரிமை கொடுத்த குர்ஆனை குற்றப்படுத்தாமல் என்ன செய்யமுடியும்?
இன்றிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த உலகத்தை கண்டால், பல இனக்குழுக்கள், அரசர்கள் போர்கள் புரிந்து, மக்களை சீரழித்துக்கொண்டு இருந்தார்கள் என்பதை அறியலாம். ஆனால், அந்த அடிமை மனிதர்களையும் படைத்த இறைவன் அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள்வேண்டும் என்று சொல்லும் விவரங்கள் தான், அவன் உண்மையான இறைவனா, அல்லது பொய்யான இறைவனா என்பதை அறியமுடியும்.
கி.பி. 610ல் வந்த குர்ஆன் சொல்வது போன்று அல்லாமல், கி.மு. 1500ல் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தில் இதைப் பற்றி யெகோவா தேவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனித்தால், எந்த ஒரு முஸ்லிமும் குர்ஆனின் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார்கள்.
சுருக்கமான விவரங்களை இங்கு தருகிறேன், மேலதிக விவரங்களை கீழ்கண்ட கட்டுரையில் படியுங்கள்.
- ஒரு யூதன் அடிமைப்பெண்ணை திருமணம் செய்யாமல் அவளைத் தொடக்கூடாது(உடலுறவு கொள்ளக்கூடாது).
- அந்த பெண்ணுக்கு 30 நாட்கள் தன் குடும்ப நபர்களை நினைத்து துக்கம் கொண்டாட தன் வீட்டிலேயே அனுமதி அளிக்கவேண்டும்.
- இந்த 30 நாட்களிலும் அவளை தொடக்கூடாது.
- அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, அவளுக்கு புருஷனாக அவளோடு வாழவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.
- மேலும், அவளை மறுபடியும் விற்க இந்த யூதனுக்கு அனுமதி இல்லை, அந்தப் பெண் விடுதலையான பெண்ணாக வாழ விட்டுவிடவேண்டும்.
உபாகமம் 21:10 லிருந்து 14ம் வசனம் வரை:
10. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, 11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, 12. அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, 13. தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். 14. அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளை பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
மேலும் அறிய இக்கட்டுரையை படிக்கவும்: போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்
யெகோவா தேவன் எங்கே, அல்லாஹ் எங்கே! நீங்களே ஒப்பிட்டுப்பாருங்கள்.
கேள்வி 284: முஸ்லிம் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் குர்ஆனை தொடக்கூடாது, மசூதிக்குள் வரக்கூடாது, தொழுகையும் செய்யக்கூடாது என்கிறார்களே, இது உண்மையா?
பதில் 284: ஆம், இஸ்லாமின் படி பெண்கள் இப்படிப்பட்ட நேரங்களில் மசூதிக்குள் வரக்கூடாது, குர்ஆனை தொடக்கூடாது, அவர்கள் தொழக்கூடாது. அவர்கள் இஸ்லாமிய மத சடங்கின்படி தீட்டுப்பட்டவர்கள் ஆவார்கள்.
முஸ்லிம் பெண்கள் "மார்க்க கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது", பெண்களின் மாதவிடாய் என்று முஹம்மது கீழ்கண்ட ஹதீஸில் கூறியுள்ளார்.
புகாரி நூல் எண்: 304
. . .'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர்.
. . . ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
கேள்வி 285: கிறிஸ்தவ பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பைபிளை படிக்கலாமா? சர்சுக்குச் சென்று தேவனை ஆராதிக்கலாமா?
பதில் 285: பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பைபிளை படிக்கலாம் மற்றும் சர்சுக்குச் சென்று தேவனை ஆராதிக்கலாம்.
இயேசுவின் கூற்றின் படி நம் மனதிலிருந்து வருகின்றவைகளே நம்மை தீட்டுப்படுத்தும். உடலிலிருந்து வருகின்ற வியர்வையானாலும் சரி, வேறு எதுவானாலும் சரி, அது நம்முடைய உடலை மட்டுமே அழுக்காக்கும், நம் மனதை அழுக்காக்காது. நாம் பைபிளை படிப்பதிலிருந்து எதுவும் நமக்கு தடை விதிக்காது.
சில நேரங்களில் சில கிறிஸ்தவர்கள் (ஆண்களானாலும், பெண்களானாலும்) கழிவறையில் உட்கார்ந்துக்கொண்டு மற்ற குடும்ப நபர்களுக்கு தெரியாமல் பைபிளை படிக்கிறார்கள். பைபிளை படித்தால் அடி உதை கிடைக்கும், வீட்டில் சண்டை நடக்கும் என்று பயப்படும்போது, இப்படி சிலர் பைபிளை படிப்பதுண்டு. எந்த இடம் என்பது முக்கியமில்லை, முழு மனதுடன் ஆர்வத்தோடு பைபிளை படித்து, புரிந்துக்கொண்டு, அதற்கு கீழ்படிவதையே இயேசு விரும்புகிறார்.
என்னைப்போன்று முஸ்லிம் குடும்பத்திலிருந்து பெற்றோருக்குத் தெரியாமல், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், பைபிளை மறைந்து இருந்து படிக்கிறார்கள், எந்த இடம் என்று பார்ப்பதில்லை.
குர்ஆனைப் போன்று பைபிள் தேவையில்லாத சட்டங்களை கொடுப்பதில்லை.
கேள்வி 286: கிறிஸ்தவ பெண்கள் மாதவிடாய் நேரத்தில் பைபிளை படிக்கலாம், சர்சுக்குப் போகலாம் என்பதை புதிய ஏற்பாட்டிலிருந்து நிருபிக்கமுடியுமா?
பதில் 286: பைபிளிலிருந்து ஒரு அருமையான உதாரணத்தை எடுத்துக்காட்டுவதற்கு முன்பு, உங்கள் பகுதியில் உள்ள திருச்சபைகளை சிறிது கவனித்துப் பாருங்கள். திருச்சபைக்குச் செல்லும் பெண்களை நிறுத்தி இந்த கேள்வியை கேட்டுப் பாருங்கள் (கேட்கின்ற நீங்கள் பெண்களாக இருக்கவேண்டும்). உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கும்.
பெண்கள் திருச்சபைக்கு வரும் போது, அவர்களின் மாதவிடாய் கணக்குப்படி, நாப்கின் கூட தங்கள் பைகளில் கொண்டுச் செல்கிறார்கள். தேவனை ஆராதிக்கும் நேரத்தில் ஒருவேளை, மாதவிடாய் ஏற்படுமானால் அமைதியாக ரெஸ்ட் ரூமுக்குச் சென்று வருகிறார்கள், அதன் பிறகு தேவனை ஆராதிக்கிறார்கள். திருச்சபை போதரும் ஒன்றும் சொல்வதில்லை, இயேசுக் கிறிஸ்துவம் இதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. (இதை ஏன் இப்படி வெளிப்படையாக எழுதுகிறீர்கள் என்று சில கிறிஸ்தவர்கள் என்னிடம் கேட்கக்கூடும். என்ன செய்வது முஸ்லிம்களுக்கு நம் வேதத்தின் மேன்மையை கற்றுக்கொடுக்க இப்படி எழுதவேண்டியுள்ளது, மன்னிக்கவும்)
கிறிஸ்தவம் உடல் சுத்தத்திற்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை, மனது சுத்தமாக இருப்பதையே விரும்புகிறது.
பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:
இந்த கீழ்கண்ட நிகழ்ச்சி மட்டும் பைபிளில் இல்லாமல் இருந்தால், சில கிறிஸ்தவர்கள் மாதவிடாய் பெண்கள் சபைக்கு வரக்கூடாது என்று கூட சொல்லியிருப்பார்கள்.
மத்தேயு 9:20. அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ: 21. நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். 22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
யூத மார்க்கத்தின் மத சட்டங்களின் படி மாதவிடாய் பெண்கள் ஆலயத்திற்கு வரக்கூடாது, யாரையும் தொடக்கூடாது. ஆனால், இந்த பெண்ணுக்கு 12 ஆண்டுகளாக பெரும்பாடு நிற்கவில்லை. இருந்தபோதிலும், இயேசுவைத் தொட்டு சுகமானாள். இயேசு திரும்பி பார்த்து, இந்த நிலையில் இருக்கும் நீ தீட்டுள்ளவள், எப்படி என்னைத் தொடலாம் என்று கேட்கவில்லை, அப்பெண்ணின் விசுவாசத்தை மெச்சிக்கொண்டார்.
இயேசு தான் தேவனுடைய வார்த்தை, நம்முடைய கையில் இருக்கும் பைபிளும் தேவனுடைய வார்த்தை, இயேசுவை பெரும்பாடுள்ள பெண் தொடும் போது, கோபம் கொள்ளாதவர், எப்படி நாம் அவரை தொட்டால் கோபம் கொள்வார்?
கிறிஸ்தவர்கள் பைபிளை தொடும் போதெல்லாம் அவர்கள் இயேசுவையல்லவா தொடுகிறார்கள்!
புதிய ஏற்பாட்டில் எங்கும், மாதவிடாய் உள்ள பெண்கள் பைபிளைத் தொடக்கூடாது என்றோ, ஜெபிக்கக்கூடாது என்றோ, சபைக்கு வந்து மற்றவர்களோடு சேர்ந்து ஆராதிக்கக்கூடாது என்றோ கட்டளையிடவில்லை.
மருத்துவர்கள் கூற்றுப்படி, மாதவிடாய் என்பது 'கர்ப்பப்பையை சுத்திகரிக்கும் ஒரு நிகழ்ச்சி' ஆகும். மாதவிடாய் என்பது பிள்ளை பெருவதற்கு உடலை தயார்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். பெண்களை தேவன் படைத்த போது, இந்த ஒரு விஷயத்தை அவர் தெரிந்தே வைத்திருக்கிறார். உலக நன்மைக்காகவும், பெருக்கத்திற்காகவும் அவர் இப்படி செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது.
கேள்வி 287: முஹம்மது தம் மனைவியை அடித்துள்ளாரா?
பதில் 287: முஸ்லிம் ஹதீஸில் முஹம்மது ஆயிஷா அவர்களை நெஞ்சில் அடித்ததாக ஒரு நிகழ்ச்சி வருகிறது.
தமிழில் இந்த ஹதீஸை "முஹம்மது நெஞ்சில் கையை வைத்து தள்ளினார்கள்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். முஹம்மது அடித்தார் என்று தமிழாக்கம் செய்தால் தங்கள் நபிக்கு அவமானமாக இருக்கும் என்று எண்ணினார்களோ என்னவோ!
ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண்: 1774
1774. . . . அவர்கள் "ஓ நீதான் எனக்கு முன்னால் நான் கண்ட அந்த உருவமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் என் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளினார்கள். எனக்கு வலித்தது.. . .
ஆங்கிலத்தில் "முஹம்மது என் நெஞ்சில் அடித்தார், அதனால் என் நெஞ்சில் வலி உண்டானது" என்று வருகிறது.
Sahih Muslim, 2127
. . .He said: Was it the darkness (of your shadow) that I saw in front of me? I said: Yes. He struck me on the chest which caused me pain, . . .
மனைவியை அடிக்க குர்ஆன் அனுமதிக்கும் போது, அதனை முஹம்மது பின்பற்றும் போது, ஏன் முஸ்லிம்களுக்கு உள்ளதை உள்ளதுபடியே தமிழாக்கம் செய்ய தர்மசங்கடமாக உள்ளது?
முஹம்மது முஹம்மதுவை அடித்தாரா? அல்லது தள்ளினாரா? என்பதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட ஆய்வுக்கட்டுரையை படிக்கவும்: Muhammad and Wife Beating: Catching Muslims In Another Lie Pt. 3
கேள்வி 288: சஹாபாக்கள் தம் மனைவிகளை அடித்துள்ளார்களா? முஹம்மது இதற்கு அனுமதி அளித்தாரா?
பதில் 288: ஆம், சஹாபாக்கள் தங்கள் மனைவிகளை அடித்துள்ளார்கள். இதற்கு முஹம்மதுவும் அனுமதி கொடுத்துள்ளார்.
இப்னு மாஜா ஹதீஸ்: (நம் தமிழாக்கம்)
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக “இயாஸ் இப்னு அப்துல்லா இப்னு அபு துபாப் “ அறிவித்தார்:
அல்லாஹ்வின் வேலைக்காரிகளை(பெண்களை) அடிக்காதீர்கள், ஆனால் உமர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: பெண்கள் தங்கள் கணவர்களிடம் தைரியமாகிவிட்டார்கள், அவர் (நபி) அவர்களை அடிக்க அனுமதி அளித்தார். பின்னர் பல பெண்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் குடும்பத்தை சுற்றி வந்து தங்கள் கணவர்களுக்கு எதிராக புகார் கூறினர். எனவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: பல பெண்கள் முஹம்மதுவின் குடும்பத்திடம் வந்து தங்கள் கணவர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்ல.
ஆங்கிலத்தில்:
(709) Chapter: Regarding Hitting Women
Iyas ibn Abdullah ibn Abu Dhubab reported the Messenger of Allah (ﷺ) as saying:
Do not beat Allah's handmaidens, but when Umar came to the Messenger of Allah (ﷺ) and said: Women have become emboldened towards their husbands, he (the Prophet) gave permission to beat them. Then many women came round the family of the Messenger of Allah (ﷺ) complaining against their husbands. So the Messenger of Allah (ﷺ) said: Many women have gone round Muhammad's family complaining against their husbands. They are not the best among you.
Grade : Sahih (Al-Albani)
Reference : Sunan Abi Dawud 2146
In-book reference : Book 12, Hadith 101
English translation : Book 11, Hadith 2141
Source: sunnah.com/abudawud/12/101
முஸ்லிம் கணவர்கள் தங்களை அடிக்கிறார்கள் என்று புகார் செய்த பெண்கள் "முஸ்லிம் பெண்களில் சிறந்தவர்கள் இல்லை" என்று முஹம்மது கூறியுள்ளார். இது என்ன கொடுமை? பெண்களை அடிக்க அனுமதி கேட்கும் போது, அப்படிப்பட்ட ஆண்களுக்கு அறிவுரை கூறி தடுக்காமல், அனுமதி கொடுத்துவிட்டு, கடைசியாக பெண்களை முஸ்லிம் ஆண்கள் அடிக்க ஆரம்பித்தார்கள். புகார் செய்த பெண்களை "கெட்டவர்கள்" என்று முஹம்மது குற்றம் சாட்டுகின்றார். இந்த அநியாயத்தை வேறு எங்கேயாவது பார்க்கமுடியுமா?
மகளுக்கு திருமணமான பிறகும் மகளை அடித்த அபூ பக்கர்:
புகாரி நூல்: 6845 - ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் கழுத்தாணியை நான் தொலைத்துவிட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்கநேரிட்டபோது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், 'ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்துவிட்டாயே!' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்தால் நான் அசையாடிதிருந்தேன். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியினால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது... (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை அடிப்பதை ஒரு பெரிய குற்றமாக சஹாபாக்கள் கருதவில்லை, ஏனென்றால் முஹம்மது அனுமதியளித்தார், குர்ஆனும் அனுமதி அளிக்கிறது.
முஸ்லிம் ஆண்களிடம் பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது என்கிறார், ஆயிஷா அவர்கள்:
ஒரு முஸ்லிம் தம் மனைவியை அடித்த அடியினால், அப்பெண்ணின் தோல் பச்சைநிறமாக மாறியுள்ளது. இதனை அறிந்து முஹம்மதுவின் மனைவி ஆயிஷா வேதனைப்படுகிறார்.
புகாரி 5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். (இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி (நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன்.
கேள்வி 289: ஒரு முஸ்லிம் ஆணிடம் அவன் ஏன் தன் மனைவியை அடித்தான் என்று கேட்கக்கூடாது என்று முஹம்மது கூறியுள்ளாரா?
பதில் 289: முஹம்மது கூறியதாக இப்னு மாஜா ஹதீஸில் ஒரு நிகழ்ச்சி வருகிறது.
உமர் ஒருமுறை தம் மனைவியை அடித்துள்ளார். அதனை மற்றொருவர் பார்த்து உமரை சமாதானப்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில், "ஒரு ஆண் தன் மனைவியை அடிப்பதை, ஏன் என்று கேள்வி கேட்கக்கூடாது?" என்று முஹம்மது கூறியுள்ளார் என்று உமர் சொன்னார்.
இப்னு மாஜா ஹ்தீஸ்:
It was narrated that Ash'ath bin Qais said:
"I was a guest (at the home) of 'Umar one night, and in the middle of the night he went and hit his wife, and I separated them. When he went to bed he said to me: 'O Ash'ath, learn from me something that I heard from the Messenger of Allah" A man should not be asked why he beats his wife, and do not go to sleep until you have prayed the Witr."' And I forgot the third thing."
Grade: Hasan (Darussalam)
English reference : Vol. 3, Book 9, Hadith 1986
Arabic reference : Book 9, Hadith 2062
இது ஹஸன் ஹதீஸ் ஆகும், அதாவது இது பலவீனமான ஹதீஸ் அல்ல, எனவே இதனை பின்பற்றலாம் என்பதாகும்.
கேள்வி 290: மனைவியை முகத்தில் அறையக்கூடாது என்று ஆண்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது, மிகப்பெரிய வரப்பிரசாதம் அல்லவா? அல்லாஹ்வின் அருள் அல்லவா?
பதில் 290: முஹம்மதுவிடம் "ஒரு மனைவிக்கு தன் கணவரிடம் என்னென்ன உரிமைகள் உள்ளன?" என்று கேட்டார்கள்.
இதற்கு முஹம்மது நான்கு காரியங்களைச் சொன்னார், அதில் ஒன்று "தன் கணவன் தன் முகத்தில் அறையாமல் இருக்கும் உரிமை அந்த மனைவிக்கு உண்டு" என்றார்.
இதன் அர்த்தமென்ன? ஒரு முஸ்லிம் கணவன் தன் மனைவியை எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் முகத்தில் மட்டும் அறையக்கூடாது. இது முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் மிகப்பெரிய உரிமையைப் பாருங்கள்.
அபூ தாவுத்:
(708) Chapter: The Rights Of A Woman Upon Her Husband
Narrated Mu'awiyah al-Qushayri:
Mu'awiyah asked: Messenger of Allah, what is the right of the wife of one of us over him? He replied: That you should give her food when you eat, clothe her when you clothe yourself, do not strike her on the face, do not revile her or separate yourself from her except in the house. Abu Dawud said: The meaning of "do not revile her" is, as you say: "May Allah revile you".
Grade : Hasan Sahih (Al-Albani)
Reference : Sunan Abi Dawud 2142
In-book reference : Book 12, Hadith 97
English translation : Book 11, Hadith 2137
இப்னு மாஜா ஹதீஸ்:
It was narrated from Hakim bin Muawiyah, from his father, that:
a man asked the Prophet(ﷺ): “What are the right of the woman over her husband?” He said: “That he should feed her as he feeds himself and clothe her as he clothes himself; he should not strike her on the face nor disfigure her, and he should not abandon her except in the house (as a form of discipline).” (Hassan)
English reference : Vol. 3, Book 9, Hadith 1850
Arabic reference : Book 9, Hadith 1923
அடுத்த கேள்வியையும் படித்துவிடுங்கள்.
கேள்வி 291: அடிமைகளை மற்றும் காளையை அடிப்பது போன்று பெண்களை அடிக்கக்கூடாது? ஏன் அடிக்கக்கூடாது என்பதற்கு முஹம்மது சொல்லும் காரணம் என்ன?
பதில் 291: முஹம்மதுவின் சஹாபாக்களும், ஆரம்ப கால முஸ்லிம்களும், அடிமைகளை கொடுமையாக அடித்துள்ளார்கள், காளைகளையும் அடங்கவில்லையென்றால், அதிகமாக அடித்துள்ளார்கள். இது முஹம்மதுவிற்கு தெரிந்திருக்கிறது, மேலும் இவர் பார்த்தும் இருந்திருப்பார். முஸ்லிம்கள் அடிமைகளையும், மிருகங்களையும் அடிப்பது போன்று பெண்களையும் அடித்துள்ளார்கள்.
அடிமைகளை அடிக்கிறீர்கள் பிரச்சனையில்லை, காளைகளை அடிக்கிறீர்கள் பிரச்சனை இல்லை, மனைவிகளை இப்படி அடிக்கவேண்டாம் என்று முஹம்மது கூறியுள்ளார். ஏன் இப்படிப்பட்ட அருமையான ஆலோசனையை முஹம்மது கொடுத்தார் என்று பார்த்தால், அவர் சிறப்பான காரணத்தைச் சொல்லியுள்ளார்.
"முஸ்லிம்களே, நீங்கள் அடிமைகளை, காளைகளை அடிப்பது போன்று மனைவிகளை அடித்தால், அதே நாள் இரவில் எப்படி அவர்களோடு நீங்கள் உடலுறவு கொள்ளமுடியும்?". முஹம்மது இங்கு முஸ்லிம் பெண்களைப் பற்றி கவலைப்படுவது போன்று தெரியவில்லை, முஸ்லிம் ஆண்கள் அன்று இரவு உடலுறவு கொள்ளவேண்டுமென்றால், என்ன செய்வது? உடலில் காயங்களோடு உங்கள் மனைவி உங்களோடு உடலுறவு கொள்ளமுடியுமா? என்னே இறைத்தூதர், ஆண்களின் உடலுறவுக்காக மனைவியை மிருகங்களை அடிப்பது போன்று அடிக்கவேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றார்.
பார்க்க ஸஹீஹ் புகாரி எண்கள்:4942, 5204 & 6042
4942. அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார்
(ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். . . . மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள். உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). . . ..
5204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போன்று அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள். என அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார்.
6042. அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார்: உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக் காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், (பெண்கள் தொடர்பாக) 'நீங்கள் உங்கள் மனைவியை ஏன் காளையை அடிப்பது போல் அடிக்கிறீர்கள்? பிறகு நீங்களே அவளை (இரவில்) அணைத்துக் கொள்ள வேண்டிவருமே!' என்றும் கூறினார்கள். ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'அடிமையை அடிப்பது போல் (ஏன் அடிக்கிறீர்கள்?)' என்று காணப்படுகிறது.
நாணமில்லையா? இது இது முறையா? என்று ஹதீஸ்களில் நாம் பார்க்கும் வார்த்தைகள், அதனை தமிழாக்கம் செய்த முஸ்லிம்கள் எழுதியவை. முஹம்மதுவின் அறிவுரைகள் மிகவும் கீழ்தரமாக இருப்பதால், அதனை நியாயப்படுத்த இப்படிப்பட்ட வார்த்தைகளை முஸ்லிம்கள் சுயமாக எழுதுகிறார்கள்.
பெண்களுக்கு தீமையை விளைவிக்கும் அறிவுரைகளை கொடுப்பதற்கு பதிலாக, "முஸ்லிம் ஆண்களே, உங்கள் மனைவிகளை அடிப்பதை முழுவதுமாக தடுத்துவிடுங்கள், மனைவியை அடிப்பவன் நல்ல முஸ்லிமல்ல" என்றுச் சொல்லியிருந்தால், முஸ்லிம் பெண்களுக்கு நிம்மதி கிடைத்திருக்கும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால்:
- மனைவியை திருத்த குர்ஆன் முஸ்லிம் ஆண்களுக்கு உரிமை தருகிறது.
- முஹம்மது தம் மனைவியை அடித்துள்ளார்.
- சஹாபாக்கள் தங்கள் மனைவிகளை அடித்துள்ளார்கள்.
- அடிமைகளை முஸ்லிம்கள் மிகவும் கொடுமையாக அடித்துள்ளார்கள், அதாவது மிருகங்களை அடிப்பது போன்று அடித்துள்ளார்கள்.
- சஹாபாக்கள், முஸ்லிம்கள் தங்கள் மனைவிகளை அடிமைகளை/காளைகளை அடிப்பதுப் போன்று அடித்துள்ளார்கள்.
முஸ்லிம் ஆண்களின் உடலுறவுக்கு தடையாக இருக்கும் என்பதற்காக காளைகளை/அடிமைகளை அடிப்பதுபோன்று அடிக்கவேண்டாம் என்று முஹம்மது அறிவுரை கூறியுள்ளார். இப்படிப்பட்ட அறிவுரை யாரை காப்பாற்றும் முஸ்லிம் பெண்களையா? அல்லது ஆண்களின் உடல் பசியையா? கொடுமையிது!
இப்படிப்பட்ட முஹம்மதுவைத் தான் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் உயிருக்கு மேலாக நேசிக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள்.
கேள்வி 292: கணவன் உடலுறவுக்கு அழைத்தால், மனைவி வரவில்லையென்றால் காலைவரை மலக்குகள் அவளை சபித்துக்கொண்டு இருப்பார்களா?
பதில் 292: இஸ்லாம் ஆண்களின் மார்க்கம் என்றுச் சொன்னால் மிகையாகாது. ஆண்களுக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது. ஒரு பெண்ணிடம் அவளின் கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும்போது அவள் சம்மதிக்கவில்லையானால், வானத்திலிருந்து தேவதூதன் வந்து அவளை சபித்துக்கொண்டே இருப்பானாம். காடுகளில் வாழும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் கூட இப்படிப்பட்ட போதனைகள் இருக்காது என்று நம்பலாம். தேவத்தூதர்களுக்கு வேறு வேலையே இல்லையா? உலகில் உள்ள முஸ்லிம் வீடுகளில் இரவில் என்ன நடக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பது தான் அவர்களின் வேலையா? பொதுவாகவே ஆண்கள் தங்கள் மனைவிகள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள், இந்த இலட்சணத்தில், இப்படி மதத்தை சம்மந்தப்படுத்தி தீய போதனைகள் செய்தால், ஆண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதனால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்னும் உருப்படாமல் பிந்தங்கியே இருக்கிறது. ஆண்களில் சரி பாதியாக இருக்கும் பெண்களை இழிவுப்படுத்தினால், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமம் ஆகும். மேலும், இப்படி பெண்களுக்கு எதிராக போதனை செய்த முஹம்மது ஒரு கள்ள நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவது சரியே!
ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 2829 & 2830
2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது. Book : 16
2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
ஒரு முஸ்லிம் ஆண் முதல் மனைவிக்கு தன் 100% அன்பை கொடுக்காமல், இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டால், அவன் அந்த இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்து, தன் முதல் மனைவியை நேசிக்கும் வரை வானவர்கள் அந்த முஸ்லிம் ஆணை சபித்துக்கொண்டு இருப்பார்கள் என்று முஹம்மதுவோ, குர்ஆனோ சொல்லியிருந்தால் இன்று இஸ்லாமை தூக்கி பிடித்திருக்குமே உலகம்!
கேள்வி 293: மனைவியை அடிப்பதாக யோபு (பழைய ஏற்பாட்டு பக்தன்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தாரா?
பதில் 293: குர்ஆனும் முஹம்மதுவும் பெண்களை அடிப்பதைப் பற்றி பல கேள்வி பதில்களை மேலே கண்டோம்.
யோபு என்ற பக்தன் தன் மனைவியை அடிப்பதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தாராம், எனவே அதனை நிறைவேற்றும்படி அல்லாஹ் யோபுவிற்கு கட்டளையிட்டான். பார்க்க குர்ஆன் 38:44.
குர்ஆன் 38:44. “ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
இதே யோபு தான் பழைய ஏற்பாட்டிலும் வருகின்றார், ஆனால், அவர் இப்படி மனைவியை அடிப்பதாக எதையும் சொல்லவில்லை, மற்றும் மனைவி தவறு செய்யும் போது, கணவன் அவளை அடிக்கவேண்டும் என்றுச் சொல்லி பைபிளில் கட்டளை எதுவும் இல்லை.
பெண்கள் பற்றி முஹம்மது கொண்டிருந்த வெறுப்புணர்வை, முந்தைய கால நபிமார்கள் பெயர்களில் இட்டுக்கட்டியுள்ளார் என்பதைத் தான் இது காட்டுகிறது.
யோபுவின் மனைவிக்கு வலிக்கக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ் ஒரு கைப்பிடி அளவு புல் எடுத்து அடிக்கச்சொல்கிறான், இது தான் அல்லாஹ்வின் அன்பு என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். உண்மையில் தன்னுடைய பக்தன் இப்படிப்பட்ட சத்தியத்தை செய்யும் போதே, அது தவறு என்று அல்லாஹ் எச்சரிக்க வேண்டும். தீய மற்றும் தவறான பொருத்தனைகளை செய்யவேண்டாம் என்று அல்லாஹ் யோபுவை கண்டித்து இருக்கவேண்டும். இதனை அல்லாஹ் செய்யவில்லை, எனவே முஸ்லிம்கள் பெண்களை அடிப்பதைப் பற்றி குற்ற உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.
சத்தியங்களை முறித்துக்கொள்ள முஹம்மதுவிற்கு அனுமதி, யோபுவிற்கு ஏன் இல்லை?
சில முஸ்லிம்கள் "ஒரு முறை சத்தியம் செய்தால், அதனை நிறைவேற்றியே ஆகவேண்டும், எந்த பரிகாரமும் செய்யமுடியாது" என்றுச் சொல்வார்கள். ஆனால், இவர்களுக்கு குர்ஆனில் 66:1-2ம் வசனங்களில் உள்ள விவரம் தெரியாது.
பார்க்க குர்ஆன் 66:1-2
66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
முஹம்மதுவிற்கு பரிகாரம் இருக்கும் போது, யோபுவிற்கு இல்லையா என்ன?
யோபுவிடம் அல்லாஹ் "இந்த ஒரு பரிகாரம் செய்துவிடு, மனைவியை அடிக்காதே, ஏற்கனவே பிள்ளைகளை இழந்து நீயும் உன் மனைவியும் வேதனையில் இருந்தீர்கள்", எனவே இந்த பரிகாரம் செய் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?
இதிலும் பாருங்கள், முஹம்மதுவிற்கு எது லாபமோ, அதற்காக பரிகாரம் செய்யச்சொல்லி அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அது என்ன லாபம் முஹம்மதுவிற்கு? என்று கேள்வி எழுமானால், குர்ஆன் 66:1-2ம் வசனங்களின் பின்னணியை படித்துப் பார்க்கவும், அது என்ன லாபம் என்று புரியும்.
கேள்வி 294: முஹம்மதுவிற்கு ஒரு யூதப்பெண் விஷம் வைத்த மாமிசத்தை கொடுத்தாளாமே இது உண்மையா?
பதில் 294: உலகில் 750 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்று இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒரு வரிசையில் நிற்கவைத்து, கீழ்கண்ட கேள்வியை கேட்டால், அவர்கள் ஒரே பதிலைத் தான் சொல்வார்கள்.
“நீங்கள் ஒரு பெண்ணின் தகப்பனையும் மற்ற குடும்ப நபர்களையும் மற்றும் அவளின் கணவரையும் கொன்றுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு தன் குடும்பத்தை இழந்த அந்தப்பெண் உங்களுக்கு ஒரு விருந்து வைக்கிறேன், வந்து சாப்பிடுங்கள் என்று சொன்னால், அந்த விருந்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?”.
இந்த கேள்விக்கு, 750 கோடிக்கும் அதிகமாக உள்ள உலக ஜனத்தொகை, "எனக்கு நீ கொடுக்கின்ற உணவோ விருந்தோ வேண்டாம்" என்ற ஒரே பதிலைச் சொல்வார்கள்.
ஆனால், ஒரே ஒருவர் மட்டும், " ஒரு கட்டு கட்டலாம் என்று எண்ணி, அந்த விருந்தை சாப்பிடச் செல்வார்".
அவர் யார் தெரியுமா? அவர் தான் இஸ்லாமிய நபி முஹம்மது.
யாராவது மற்றவரின் குடும்பத்தை கொலை செய்துவிட்ட பிறகு, அந்த குடும்பத்தில் மீதமுள்ள ஒரு நபர், விருந்துக்கு அழைத்தால், அறிவுள்ளவர்கள் போவார்களா? உலகிலேயே இப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவை எடுத்த பெருமை ஒருவருக்கே உண்டு.
விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முஹம்மது:
பார்க்க புகாரி எண்: 2617
2617. அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
மேலும் இதைப் பற்றி அறிய படிக்கவும்: மாற்கு 16ன் சவால் - https://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/16.html
கேள்வி 295: இயேசுவின் சீடர்களில் ஏன் ஒரு பெண் சீடரும் இல்லை?
பதில் 295: இந்த கேள்வியே தவறானது, இயேசுவிற்கு பெண் சீடர்களும் இருந்தார்கள் என்பதைத் தான் பைபிள் சொல்கிறது. அந்த காலத்தில் இருந்த யூத ரபீக்களுக்கு பெண் சீடர்கள் இருக்கமாட்டார்கள், ஆண்கள் மட்டுமே அவர்களுடைய சீடர்களாக இருப்பார்கள். ஆனால், இயேசு இந்த சுவரை இடித்துப்போட்டார், இயேசுவிற்கு அனேக பெண் சீடர்களும் இருந்தார்கள் என்பது தான் உண்மை.
1) இயேசு கரங்களை நீட்டி "ஆண் மற்றும் பெண் சீட்ர்களை" குறிப்பிடுகிறார்
ஒரு முறை இயேசு சீடர்களுக்கு (ஆண் மற்றும் பெண்) உபதேசித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது தாயாரும், சகோதரரும் அவரோடு பேசவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டபோது, தம் கரங்களை தம் சீடர்களிடம் நீட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!" என்று சொன்னார்கள். இந்த இடத்தில் "தாயும்" என்ற பெண்பாலையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லி தம்முடைய சீடர்களில் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டார். இது மட்டுமல்லாமல், அடுத்த வாக்கியத்தில், "அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்" என்று இரு பெண்பாலரை குறிப்பிடுகின்றார்.
மத்தேயு 12:46-50
46. இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். 47. அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். 48. தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 49. தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 50. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
2) ஒரு ரபீயின் பாதத்தில் உட்கார்ந்து கற்றுக்கொள்ளும் பெண் சீடர்கள்:
ஒரு யூத ரபீ (ஆசிரியரின்) பாதத்தில் உட்கார்ந்து ஒரு ஆண் மாணவன் கற்றுக்கொள்வது போன்று, பெண்களுக்கு இயேசு உரிமை கொடுத்தார். இது யூத முறையிக்கு எதிரானதாகும்.
லூக்கா 10:39
39. அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
இதுமட்டுமல்லாமல், இப்படிப்பட்ட போதனையை கேட்டுக்கொண்டு இருந்த மரியாளை ஆதாரித்தும் அவர் பேசினார் (பார்க்க லூக்கா 10: 40 - 42).
3) இயேசு கிராமம் கிராமமாக சென்று ஊழியம் செய்யும் போது, பெண் சீடர்கள் இருந்தார்கள்:
இயேசு ஊழியத்தின் காரணமாக, ஊர் ஊராக செல்லும் போது, 12 சீடர்களோடு கூட அனேக பெண் சீடர்களும் அவரோடுச் சென்று அவருக்கு ஊழியமும் செய்தார்கள்.
பார்க்க லூக்கா 8:1-3 (சில ஸ்திரீகளும், மகதலேனாள் மரியாளும், யோவன்னாளும், சூசன்னாளும்):
1. பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள் தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். 2. அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், 3. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
அந்த காலத்தில் யூத கலாச்சாரத்தில், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே சென்று யூத ரபீக்களிடம் கற்றுக்கொள்வது அனுமதிக்கப்படாமல் இருந்தது, ஆனால், இயேசு அந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தார்.
இதுவரை கண்ட விவரங்களிலிருந்து அறிவது என்னவென்றால், இயேசுவிற்கு அனேக பெண் சீடர்கள் இருந்தார்கள், அவரோடு அவர்கள் சென்று ஊழியம் செய்தார்கள், அவரிடம் மார்க்க விஷயங்களையும் கற்றுக்கொண்டார்கள். இயேசுவிற்கு பெண் சீடர்கள் இல்லை என்பது தவறான கூற்றாகும்.
கேள்வி 296: கேள்வியை மாற்றி கேட்கிறேன், இயேசுவிற்கு இருந்த உள்வட்ட 12 சீடர்களில் ஏன் ஒரு பெண் சீடர் இல்லை?
பதில் 296: இப்போது தான் சரியான கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள்.
இதற்கு முன்னால் கேட்ட கேள்விக்கான பதிலில், இயேசுவிற்கு ஆண்கள் மற்றும் பெண்களில் சீடர்கள் இருந்தார்கள் என்பதைக் கண்டோம். இயேசு ஆண் பெண் பேதம் பார்க்கிறவர் அல்ல என்பதைக் கண்டோம்.
ஆனால், தம்மோடு எப்போதும் இருந்து கற்றுக்கொள்ள 12 உள்வட்ட சீடர்களை தெரிவு செய்தார். இவர்கள் அனைவரும் ஆண்கள், இவர்களில் ஒரு பெண்ணும் இல்லை (மத்தேயு 10:2-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16).
இயேசுவோடு கூட இருந்த அந்த 3.5 ஆண்டுகள், இவர்கள் தனிமையில் இயேசுவோடு இருந்தார்கள். இயேசு சொன்னது போன்று, இயேசுவிற்கு தலைசாய்க்க ஒரு நிரந்தரமான வீடு இல்லை.
13 பேர் அடங்கிய ஒரு ஆண் கூட்டத்தில், ஒரு பெண்ணை நாம் சேர்த்தால், அந்த பெண்ணுக்கென்று கீழ்கண்ட வசதிகளை அல்லது சௌகரியங்களை செய்துத் தரவேண்டும். மேலும், சில நடைமுறை சிக்கல்கள் இதில் உண்டு அவைகளைப் பாருங்கள்.
1) இயேசுவும் சீடர்களும் இரவு பகல் என்று பார்க்காமல், ஊருக்கு ஊர் சென்றார்கள். காட்டுபகுதியில் மனித நடமாட்டமில்லாத இடங்களில் தேவைப்பட்டால் இவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
2) ஒரு பெண் சீடர் கூட இருந்தால், அவளுக்கென்று தூங்க, ஓய்வு எடுக்க ஒரு வீடோ அல்லது வேறு ஒரு வசதியோ செய்து தரவேண்டியிருந்திருக்கும். இவர்கள் நாடோடிகள் போன்று வாழ்ந்தபடியினால், ஒரு பெண் சீடர் கூட இருப்பது, ஒரு சங்கடமாக இருந்திருக்கும்.
3) மாதவிடாய் போன்று பெண்களுக்கென்று இருக்கின்ற தனிப்பட்ட அசௌகரியங்களினால், சில பயணங்கள் தடைபட்டு இருந்திருக்கும். இயேசுவின் சீடர்கள் வெறும் ஆண்களாக இருந்தபடியினால், தேவைப்பட்ட நேரங்களில் இயேசு பிராயாணங்களை மேற்கொண்டார். ஒரு சீடர் பெண்ணாக இருந்திருந்தால், இந்த திடீர் பயணங்களில் சில தாமதங்கள் உண்டாகியிருக்கும்.
4) இயேசு தம் உள்வட்ட சீடர்களாக வெறும் ஆண் சீடர்களை தெரிவு செய்தபடியினால், அவரது எதிரிகள் அவர் மீது பெண்கள் சம்மந்தப்பட்ட வேறுவகையான குற்றச்சாட்டுக்களை வைக்கவில்லை. ஒரு வேளை பெண்கள் உள்வட்ட சீடர்களாக இருந்திருந்தால், அனேகர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பார்கள்.
இப்படி அனேக காரணங்களை நாம் சொல்லமுடியும்.
இது மட்டுமல்லாமல், இதற்கு ஒருஆவிக்குரிய அர்த்தமும் உள்ளது. இயேசுவின் 12 ஆண் சீடர்கள் என்பது இஸ்ரேலின் 12 வம்சங்களுக்கு நிழலாட்டமாக இயேசு தெரிவு செய்தார். யாக்கோபின் 12 மகன்கள் தான் யூத 12 வம்சங்களாக கருதப்பட்டது. மேலும், ஆவிக்குரிய இஸ்ரவேலாகிய தேவனுடைய சபையை மேய்க்க 12 சீடர்களை அப்போஸ்தலர்களாக இயேசு நியமித்தார். இதைப் பற்றி மேலதிக விவரங்களை தேவைப்படும் பதில்களில் காண்போம்.
கேள்வி 297: ரோமன் கத்தோலிக்கர்களில் '(பெண்) துறவிகள்' இருக்கிறார்களே! கிறிஸ்தவம் இதனை அனுமதித்துள்ளதா?
பதில் 297: இல்லை, துறவரம் கிறிஸ்தவத்தில் இல்லை.
திருமணம் என்பது கனமுள்ளது என்று பைபிள் சொல்கிறது (எபிரேயர் 13:4) மற்றும் ஆதாமை ஏவாளை படைத்து, அவர்கள் கணவன் மனைவியாக இருக்க அவரே முதல் திருமணத்தையும் செய்து வைத்தார்.
ரோமன் கத்தோலிக்கர்கள் போப் என்றுச் சொல்லக்கூடியவர் திருமணம் புரியக்கூடாது என்றுச் சொல்கிறார்கள், ஆனால் முதல் போப் என்றுச் சொல்லக்கூடிய இயேசுவின் சீடர் பேதுரு திருமணம் ஆன ஒரு மனிதரே ஆவார்.
மேலும் இயேசுவின் சீடர் பேதுரு தம் மனைவியோடு கூட தான் ஊழியம் செய்தார் மற்ற சீடர்களும் இதனையே செய்தார்கள் (1 கொரிந்தியர் 9:5). இதில் வேடிக்கை என்னவென்றுச் சொன்னால், திருமணமான நபராகிய பேதுருவை சபைக்கு தலைவராக இயேசு நியமித்தார். இதற்கு எதிராக கத்தோலிக்க போதனைகள், அவருக்கு அடுத்தபடியாக வருகின்ற தலைவர்கள்(போப்) மற்றும் பாதியார்கள் துறவரம் இருக்கவேண்டும் என்றுச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
கிறிஸ்தவம் ஆண் அல்லது பெண் துறவரம் பற்றி கட்டளை கொடுப்பதில்லை. ஒருவேளை ஊழியத்துக்கு வந்த பிறகு தம் துணை மரித்துவிட்டால், மறுபடியும் திருமணம் செய்வதும் செய்யாமல் அப்படியே இருந்துவிடுவதும், அவரவர் விருப்பம், ஆனால் கட்டாயமில்லை.
கேள்வி 298: பைபிளில் வாக்குபண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள் பெண்களுக்கும் பொருந்துமா?
பதில் 298: பைபிளில் தேவன் வாக்கு கொடுத்த ஆசீர்வாதங்கள் இரு பாலாருக்கும் கொடுக்கப்பட்டதாகும். சில வாக்குறுதிகள் ஆண்களுக்காக தனிப்பட்ட முறையில் இருக்கும், இதே போன்று பெண்களுக்கும் தனிப்பட்ட வாக்குறுதிகள் உள்ளன.
ஆனால், பொதுவாக சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள், வாக்குறுதிகள் இருவருக்கும் பொருந்தக்கூடியதாகும்.
இதுமட்டுமல்ல, பைபிளில் ஒரு குறிப்பிட்ட நபர் பற்றி சில தீர்க்கதரிசனங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்,அவைகள் அந்த நபருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, அது நமக்கல்ல.
லூக்கா 2:35ல் மரியாளுக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டது "உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்". இயேசுவை சிலுவையில் அறையும் போது மரியாளின் துக்கத்தைப் பற்றி இது சொல்லப்பட்டது. இது நமக்கு அல்ல.
இஸ்ரவேலருக்கு சொல்லப்பட்ட அனேக ஆசீர்வாதங்கள், வாக்குத்தத்தங்கள் அவர்களுக்குச் சொல்லப்பட்டவைகள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்காக அவைகளை இன்று பயன்படுத்துகிறார்.
உதாரணம்:
ஏசாயா 54:10
10. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த வாக்குறுதி இஸ்ரவேலருக்குத் தான் கொடுக்கப்பட்டது, ஆனால் இதனை பரிசுத்த ஆவியானவர் நமக்காகவும் எழுதி வைத்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது.
தேவனிடத்தில் பட்சபாதமில்லை (ரோமர் 2:11). அவருக்குள் ஆணும் பெண்ணும் சமமே.
கேள்வி 299: ஒரு முஸ்லிம் பெண்ணும், அவளது குடும்பமும் இயேசுவை பின்பற்றினால், கிறிஸ்தவம் அவர்களுக்கு எவைகளைத் தரும்?
பதில் 299: இந்த கேள்விக்கான பதிலை பெண்களின் கண்ணோட்டத்தின் பார்க்கலாம். ஒரு முஸ்லிம் பெண் குடும்பத்தோடு இயேசுவை பின்பற்றினால்:
1) தன் கணவன் தன்னை அடித்தால், அவனை கேள்வி கேட்கலாம், சட்டத்தின் உதவியும் கேட்கலாம். இஸ்லாமில் இதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.
2) தன் கணவன் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள அவனுக்கு அனுமதி சட்டத்தின் படி மறுக்கப்படும். இது இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்காது, மனைவியின் அனுமதியின்றி, நான்கு பெண்களை ஒரு முஸ்லிம் ஆண் திருமணம் செய்யலாம்.
3) புர்கா என்ற உடையை அணியாமல் இருக்க உரிமை கிடைக்கும்.
4) படிப்பு, வேலை விஷயங்களில் முஸ்லிம் பெண்களுக்கு கிடைக்காத உரிமையும், அதிகாரமும் கிடைக்கும்.
5) அற்பமான காரியங்களுக்கு முஸ்லிம்கள் கொடுக்கும் தலாக்கிலிருந்து (விவாகரத்திலிருந்து) விடுபடலாம். இந்திய சட்டத்தின் உதவியை பெறலாம்.
6) அரபியில் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்து, தினமும் ஐந்து வேளை அவைகளை மனப்பாடமாக சொல்லி தொழுகை நடத்தவேண்டிய அவசியமில்லை. இதற்கு பதிலாக, நமக்கு தெரிந்த மொழியில் தேவனை முழு இருதயத்தோடும், பலத்தோடும் தொழுதுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
7) நம்மை படைத்த தேவனை அப்பா என்றுச் சொல்லி அழைத்து உரையாடவும் (ஜெபிக்கவும்), அவரது வார்த்தைகளை தமிழில் படிக்கவும் புரிந்துக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். அரபியில் படித்தால் தான் நன்மை அதிகம் என்று முஸ்லிம்கள் சொல்வது போன்று, கிறிஸ்தவத்தில் இல்லை.
8) இஸ்லாமிய மூடபழக்கவழக்கங்கள், கட்டுக்கதைகளை நம்பவேண்டிய அவசியமில்லை.
9) ஜின்களைப் பற்றி பயப்படவேண்டிய அவசியமில்லை, தாயத்துக்கள் கட்டுவது, கண்திருஷ்டி பற்றி கவலைப்படுவது போன்ற தவறான கோட்பாடுகள் கிறிஸ்தவத்தில் இல்லை.
10) பரலோகத்தில் தனக்கு அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகத்தோடு வாழாமல், இப்பூமியில் வாழும்போதே, இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழலாம்.
11) பைபிளில் உள்ள வாக்குத்தத்தங்களை படித்து, தியானித்து உரிமை பாராட்டி மன நிம்மதியோடு வாழலாம். பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் பிரச்சனைகளை, சவால்களை தைரியமாக எதிர்க்கொள்ளலாம்.
இயேசு உங்களுக்காக என்ன செய்வார் என்பதைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், தேவைப்படும் போது மேலதிக விவரங்களைக் காண்போம்.
கேள்வி 300: இயேசு தனிப்பட்ட முறையில் பெண்களுக்காக என்ன செய்தார்?
பதில் 300: இயேசுவின் காலக்கட்டத்தில் இருந்த கலாச்சாரம் ஆண்கள் குடும்ப தலைவர்களாக இருந்த கலாச்சாரமாக இருந்தது. மேலும் யூத கலாச்சாரத்தில், பெண்களுக்கு எதிராக யூத ரபீக்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.
யுத ஆண்கள் பெண்களை பொதுவில் வாழ்த்து கூறமாட்டார்கள், பெண்கள் ரபீக்களிடம் மாணவர்களாகச் சேர்ந்து தோராவை கற்கமுடியாது. முதல் நூற்றாண்டின் ஒரு யூத ரபி "தோராவை ஒரு பெண்ணுக்கு பாதுகாக்கும்படி கொடுப்பதைக் காட்டிலும், அதனை எரித்துவிடுவது நன்றாக இருக்கும்" என்றார். யூத ரபீக்கள் இப்படி பல சொந்த கட்டளைகளை உருவாக்கி வைத்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் தான் இயேசு வந்தார். இறையிலைப் பற்றி சிந்திக்காமல், உலக பிரகாரமாக இயேசு பெண்களுக்காக என்ன செய்தார் என்பதை சுருக்கமாக காண்போம்.
1) ஆபிரகாமின் குமாரத்தி: யூத தலைவர்களின் திமிருக்கு மரண அடி கொடுத்தார்:
ஒரு நாள் தேவாலயத்தில் ஒரு கூனியான பெண் இருந்தாள். இயேசு அவளை அழைத்து ஓய்வு நாளில் சுகமாக்கினார். ஓய்வு நாளில் இப்படி சுகமாக்கியது தவறு என்று யூத தலைவர்கள் குற்றம் சாட்டும் போது, இயேசு கீழ்கண்ட பதிலை கொடுத்தார்.
லூக்கா 13:14-16
14. இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். 15. கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 16. இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
இதில் விசேஷம் என்னவென்றுச் சொன்னால், "ஆபிரகாமின் குமாரத்தி" என்று இயேசு கூறியதாகும். இவ்வார்த்தைகள் பைபிளில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது. பொதுவாக யூதர்கள் நாங்கள் "ஆபிரகாமின் குமாரர்கள்" என்றுச் சொல்லிக்கொள்ள பெருமைப்படுவார்கள். ஆனால் அந்த பெருமையை எடுத்து ஒரு பெண்ணுக்கு இயேசு கொடுத்தார், மட்டுமல்லாமல் ஓய்வு நாளில் அப்பெண்ணுக்கு அற்புத சுகத்தைக் கொடுத்தார். இதனால் யூததலைவர்களின் கோபத்துக்கு இயேசு ஆளானார்
2) பொது இடங்களில் இயேசு பேசினார்:
பொது இடங்களில் பெண்களோடு யூத தலைவர்கள் வாழ்த்து கூறமாட்டார்கள், பேசமாட்டார்கள். ஆனால், இயேசு இந்த நிலையை மாற்றினார், பெண்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கும் கலாச்சார குறைபாடுகளை நீக்கினார்.
ஒரு விதவையின் மகன் மரித்துவிட்டான், அவனை புதைக்கச் சென்றுக்கொண்டு இருந்தார்கள். அந்த பெண்ணுக்கு வேறு துணையாரும் இல்லை, மகன் இல்லை என்பதை இயேசு அறிந்து, அவராகச் சென்று, மரித்த அந்த மகனை உயிரோடு எழுப்பி, தன் தாயிடம் ஒப்புவித்தார். இந்த அற்புதம் செய்யுங்கள் என்று அந்த பெண் இயேசுவிடம் கேட்கவில்லை என்பதை கவனிக்கவும்.
லூக்கா 7:12-15
12. அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். 13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,14. கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 15. மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
யூதர்கள் வெறுக்கும் சமாரியர்களின் ஒரு பெண்ணோடு இயேசு சுயமாகச் சென்று பேசினார்.
சீடர்களும் இதனைப் பார்த்து, என்ன செய்வதென்று புரியாமல் இருந்தனர். ஒரு பெண்ணோடு அதுவும் சமாரிய பெண்ணோடு ஏன் பேசுகின்றீர்கள்? என்று அவர்களுக்கு கேட்கத்தோன்றியது, இருந்தபோதிலும் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள்.
யோவான் 4:27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
3) சுயமரியாதையும் இரக்கமும்:
அந்த காலப்பெண்கள் மாதவிடாய் நேரங்களில் 'சுத்தமில்லாதவர்கள்' என்று கருதப்பட்டார்கள். அவர்கள் தொடுகின்றவைகளும் சுத்தமானவை அல்ல என்று சடங்குகள் யூத மார்க்கத்தில் இருந்தது.
லூக்கா 8:43-48ல் ஒரு அருமையான நிகழ்ச்சி பற்றி சொல்கிறது. 12 ஆண்டுகள் இரத்தபோக்கு உள்ள ஒரு பெண் இயேசுவைத் தொட்டு சுகமானாள். மேலும், இயேசு அவளை திட்டவில்லை, பதிலாக நீ சுகமானாய், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
லூக்கா 8:48. அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
ஒரு யூத ரபியை இரத்தப்போக்கு உள்ள பெண் தொட்டாள், அவள் பல அவதூறுகளுக்கும், தண்டனைக்கு ஆளாகி இருப்பாள்.
இன்னொரு இடத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசு காப்பாற்றிய நிகழ்ச்சியிலும் பெண்களை இயேசு கனப்படுத்தினார். விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட பெண் என்று அழைத்து வந்தவர்கள், அந்த ஆணை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள்? இதிலிருந்து அந்த யூதர்களின் உள் நோக்கம் புரிகின்றது.
இன்னும் பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயேசு அற்புதங்கள் செய்ததைச் சொல்லலாம்.
4) இயேசுவிற்கு இருந்த பெண் சீடர்கள்:
யூத ரபீக்கள் பெண்களுக்கு வேதங்களை கற்றுத் தரமாட்டார்கள், ஆனால் இயேசு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேதத்தை கற்றுக்கொடுத்தார். இயேசுவிற்கு பெண் சீடர்கள் என்ற தலைப்பில் கொடுத்த பதிலையும் படித்துக்கொள்ளவும்.
5) மேசியா, உயிர்த்தெழுதல்:
ஒரு சமாரிய பெண்ணிடம் "நான் தான் மேசியா என்று நேரடியாக சொன்னார் இயேசு". லாசருவின் சகோதரியிடம் "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்றார். மேலும் தாம் உயிர்த்தெழுந்த பிறகு முதலாவதாக 'ஒரு பெண்ணுக்கே தம்மை வெளிப்படுத்தினார்'.
இவைகள் மேலோட்டமாக எழுதினேன். இன்னும் பெண்களுக்கு கிறிஸ்தவம் கொடுத்தவைகள் பற்றி எழுதினால் அதிக பக்கங்கள் தேவைப்படும்.
முஹம்மது பெண்களை மிகவும் கேவலமாக பார்த்தார், நரகத்தில் அதிகமாக இருப்பவர்கள், தங்கள் கணவர்களுக்கு நன்றிகெட்டவர்கள், அறிவு குறைந்தவர்கள், என்று பலவாறு முஹம்மது பெண்களை சாடினார். இயேசுவோ, ஒரு பெண்ணுக்கு அற்புதம் செய்து, அவளை முன்னிட்டு "ஆபிரகாமின் குமாரத்தி" என்று தலைக்கனம் கொண்ட யூதர்களிடமே சாட்சி சொன்னார்.
இயேசுவின் நற்செய்தி நூலை நீங்கள் ஒருமுறையாவது படித்து இருக்கிறீர்களா? இயேசு என்ன பேசினார், யாருக்காக பேசினார்? இயேசு என்ன செய்தார்? போன்றவைகளை அறிந்துக்கொள்ள நீங்களே நற்செய்தி நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு (நற்செய்தி நூல்கள்): மத்தேயு, மாற்கு, லூக்கா & யோவான்
தேதி: 24th May 2020