2016 ரமளான் (8) - நிலமெல்லாம் இரத்தம் - யூத மண்ணில் அரேபியர்களின் முகவரி

[நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுக்கப்பட்ட முந்தைய விமர்சனங்களை இங்கு படிக்கலாம்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

தெருவில் வாகனத்தில் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று வீட்டிலிருந்து கண்மூடித்தனமாய் வெளியே ஓடிவரும் பையன், வண்டிக்கு முன்பாக விழுவதைப்போல, உங்களின் புத்தகத்தை எந்த வேகத்தில் படிக்க முயன்றாலும் "உங்களின் சில வரிகள்" என் வேகத்திற்கு திடீர் பிரேக் போடுகின்றன.

நான் குறிப்பிடும் வரிகள் இவைகள் தான்.

பாரா அவர்கள் எழுதியது:

. . . (அதாவது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களை) . . .[1]

. . . அதாவது, "நமது மண்ணின் பெருமையை, அயல்நாட்டுக்காரர்களே உணர்ந்திருக்கிறார்கள் பார், நீ இன்னும் உணரவில்லையா?" என்று  பாலஸ்தீனத்து யூதர்களையும் அரேபியர்களையும் பார்த்து மறைமுகமாகக் கேட்பது . . .[2]

. . . யூதர்களாகவும் இல்லாமல், கிறிஸ்துவர்களாகவும் இல்லாமல் பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன் எவ்வித கலாசார வளர்ச்சியும் அற்று, வெறும் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்க்கையில் அப்போதுதான் முதல்முறையாக ஒரு மலர்ச்சி ஏற்பட்டது.  . . .[2]

. . . இத்தனைக்கும் அவர்கள்தாம் அங்கே பெரும்பான்மை மக்கள்! . . . [2]

இன்னும் சில இடங்களில் அரேபியர்களின் சொந்த மண் பாலஸ்தீனம் என்றும் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், யூதர்கள் பற்றி வரும்போது மட்டும் ஒரு இடத்தில் "அவர்கள் வந்தேறிகள்" என்று எழுதியுள்ளீர்கள், கீழேயுள்ள மேற்கோளை பார்க்கவும். இதலிருந்து நீங்கள் எதற்காக இப்புத்தகத்தை எழுதினீர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

//இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். இவர்கள் அத்தனைபேரும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து பாலஸ்தீன் வந்து சேர்ந்தவர்கள். அவர்களது மூதாதையர்களுக்கு பாலஸ்தீன் சொந்த ஊராக இருக்கலாம். அவர்களுக்குக் கண்டிப்பாக அது புதிய தேசம். அதாவது சொந்த தேசமே என்றாலும் வந்தேறிகள். அவர்களைத் தவிர உள்ளூர் யூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியாக சுமார் இருபதாயிரம் பேர் இருந்தால் அதிகம். (54. பிரிட்டனின் திட்டம்)//[3] 

இக்கட்டுரையின் கருப்பொருள் அரேபியர்களின் பழங்குடி முகவரியைப் பற்றியது, யூதர்கள் பற்றியது அல்ல.  எனவே, கருப்பொருளுக்குச் செல்லலாம் வாருங்கள். 

அரேபியர்களின் முகவரிப் பற்றி பாரா அவர்கள் எழுதியவைகளின் சுருக்கம் இது தான்: 

1) பாலஸ்தீன மண்ணின் பழங்குடி இனத்தவர்கள் அரேபியர்கள் ஆவார்கள்.

2) பாலஸ்தீனாவில் அரேபியர்களே பெரும்பான்மை மக்களாக இருந்துள்ளார்கள்.

3) பாலஸ்தீனத்தில் அரேபியர்கள் எப்போதும் இருந்துக்கொண்டே இருந்துள்ளார்கள்.

இதுவரை கண்ட விவரங்களின் படி, பாரா அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில்களை நாம் எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

1) அரேபியர்கள் யூதேயாவில் எப்போதிலிருந்து பழங்குடி மக்களானார்கள்?

நீங்கள் கி.பி. 4ம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளை விவரிக்கும் போது, "பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன்” என்று அரேபியர்களைக் குறித்து எழுதியுள்ளீர்கள்.

1. எந்த சரித்திர விவரங்களின் அடிப்படையில் ”பாலஸ்தீன மண்ணின் பழங்குடி இனத்தவர்கள் அரேபியர்கள்” என்ற முடிவிற்கு வந்தீர்கள்?

2. எந்த சரித்திர புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது? அந்த சரித்திர புத்தகம் யாரால் எப்போது எழுதப்பட்டது?

3. எத்தனை நூற்றாண்டுகளாக அரேபியர்கள் பாலஸ்தீனாவில் முக்கியமாக யூதேயா பகுதியில் பழங்குடிகளாக இருந்தார்கள்?

4. மோசேயின் (யோசுவாவின்) காலம் (கி.மு. 1400) தொடங்கி யூதர்கள் யூதேயாவில் இருந்ததாக நாம் அறிகிறோம். அரேபியர்கள் அங்கு எப்போதிலிருந்து இருந்தார்கள் என்ற புள்ளிவிவரத்தை கொடுக்கமுடியுமா?

5. குறைந்தபட்சம் கி.மு. 1400 லிருந்து கி.பி. 400 வரையுள்ள காலக்கட்டத்தில், பாலஸ்தீனாவில் அரேபியர்களின் ஜனத்தொகை புள்ளிவிவரத்தை கொடுக்கமுடியுமா? 

2) அரேபியர்கள் பாலஸ்தீனாவில் பெரும்பான்மை மக்களா?

கி.பி. நான்காம் நூற்றாண்டு விவரங்களை எழுதும் போது, அரேபியர்கள் பாலஸ்தீனாவில் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் அடிப்படையில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

1. பாலஸ்தீனாவில் அரேபியர்கள் எந்த காலத்திலிருந்து பெரும்பான்மையாக இருந்தார்கள்?

2. எந்த காலத்திலிருந்து அவர்கள் முதலாவது பாலஸ்தீனாவில் வாழ ஆரம்பித்தார்கள்? அப்போது அங்கு இருந்த யூதர்கள் அல்லது இதர மக்கள் பெரும்பான்மையாக இருந்தார்களா? அல்லது  சிறும்பான்மையாக இருந்தார்களா?

3. அரேபியர்கள் பாலஸ்தீனாவில் யாருடைய காலத்தில் பெரும்பான்மையாக இருந்தார்கள்? - மோசேயின் காலத்திலா? தாவீதின் காலத்திலா? அல்லது இயேசுவின் காலத்திலா? 

4. அரேபியர்கள் கி.பி.யில் தான் பெரும்பான்மையாக மாறினார்கள் என்றுச் சொன்னால்? இதற்கான ஆதாரம் என்ன? மேலும்  எந்த நூற்றாண்டிலிருந்து பெரும்பான்மையாக மாறினார்கள்?

எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், “அவர்கள் பெரும்பான்மையானவர்கள்” என்று நடுவில் சொறுகி இருக்கிறீர்கள். ஓரளவிற்கு மத்திய கிழக்கு நாடுகளின் சரித்திரம் தெரிந்தவர்கள் கூட இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, உங்கள் வாதங்களுக்கான ஆதாரங்களைக் கொடுங்கள்.

3) அரேபியர்கள் என்றால் யார்?

அரேபியர்கள் பெரும்பான்மையானவர்கள் என்ற விவரத்தை பிறகு பார்ப்போம். முதலாவது, அரேபியர்கள் என்றால் யார்? என்பதை விளக்குங்கள். 

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அரேபியர்கள் என்ற வார்த்தை பலவகையான மக்களை குறிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. 

தற்காலத்தில் அரேபியர்கள் என்றால், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கா பகுதியில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளையும், அங்கு அரபி பேசும் மக்களையும் குறிக்கும். தற்போது இரண்டு அடையாளங்களை இவ்வார்த்தை உள்ளடக்கியுள்ளது, இஸ்லாம் என்ற மத அடையாளம் மற்றும் அரபி மொழி என்ற அடையாளம். அரபி பேசும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள், ஆனால், அரேபியர்கள் என்று பொதுவாக பேசும் போது, அரேபிய முஸ்லிம்களை அது குறிப்பதாக இருக்கிறது.

கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பான காலக்கட்டத்தில் “அரபியர்கள்” என்றால், இஸ்லாமிய மத அடையாளம் இல்லாமல், அரேபியா தீபகர்ப்பத்தில், மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அரபி பேசும் நாடோடி மக்களை குறிப்பதாக இருந்தது. 

பைபிளின் பழைய ஏற்பாட்டுக் காலத்தில், அரேபியர்கள்  யூதேயாவிற்கு வெளியே இருந்தார்கள், இதைப் பற்றிய பல குறிப்புக்கள் பைபிளில் காணலாம். மேலும், இதர சரித்திர ஆசிரியர்கள் எழுதிய விவரங்களிலும் இவைகளை காணலாம். யூதேயாவில் மற்றும் ஜெருசலேமில் அரேபியர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள், அந்த பூமியில் அவர்கள் பழங்குடிகளாக இருந்தார்கள் என்று நீங்கள் எழுதியவைகளுக்கு ஆதாரங்களை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், யூதேயாவில் அரேபியர்கள் இல்லை என்பதையும், அவர்கள் யூதேயாவிற்கு வெளியே இருந்த நாடுகளில் இருந்தார்கள் என்பதையும் சுருக்கமாக இங்கு விளக்குகின்றேன். 

யூதேயாவில் ஒரு அரபியனும் இருக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை.  யூதர்களோடு கூட இதர ஜனங்களும் ஆங்காங்கே இருந்தார்கள், ஆனால், அவர்கள் பெரும்பான்மையான மக்களாக இல்லை, இது தான் என் வாதம்.

அரேபியர்கள் பற்றி பழைய ஏற்பாட்டு

அ) சாலோமோனுக்கு அரபு தேசத்து சகல ராஜாக்கள் வெகுமதிகளை கொடுத்தார்கள்:

10:14  சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல், 

10:15  ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. (1 இராஜாக்கள் 10:14-15)

ஆ) இஸ்ரேல் இராஜா யோசபாத் தேவனுக்கு கீழ்படிந்த போது, அனைவருக்கும் பயமுண்டானது, எல்லா தேசத்தார்களும், அரபு தேசம் உட்பட காணிக்கை கொண்டு வந்து கொடுத்தார்கள், சமாதானம் நிலவியது:

17:10  யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள். 

17:11  பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். (2 நாளாகமம் 17:`10-11)

இ) எத்தியோப்பியாவிற்கு அடுத்துள்ள அரபியர்கள்

இஸ்ரேல் தேவனுக்கு கீழ்படியாத போது, யூதேயாவைச் சுற்றியிருந்த மற்ற தேசத்தார்களைக் கொண்டு தேவன் அவர்களை தண்டித்தார். மேலும் எத்தியோப்பியாவிற்கு அடுத்துள்ள அரபி தேசத்தார்களைக் கொண்டு தண்டித்தார்.

21:16  அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். 

21:17  அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை. (2 நாளாகமம் 21:16-17)

இங்கு குறிப்பிடும் அரபியர்கள், எத்தியோப்பியா தேசத்துக்கு பக்கத்தில் உள்ளவர்கள், அதாவது ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்த அரேபியர்கள். கீழ்கண்ட வரைப்படத்தில் எத்தியோப்பியா மற்றும் யூதேயாவிற்கு இடையே இருக்கும் இடைவெளியை பார்க்கவும்:

http://49yzp92imhtx8radn224z7y1-wpengine.netdna-ssl.com/wp-content/uploads/2015/11/Distance-from-Eritrea-to-Israel.png

ஈ) உசியா சண்டை போட்ட கூர்பாகாலில் வசிக்கும் அரபியர்கள்:

உசியா இராஜா, கூர்பாகாலில் குடியிருக்கும் அரபியர்களோடு யுத்தம் செய்து வெற்றிப்பெற்றார். 

26:7  பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார். (2 நாளாகமம் 26:7)

கூர்பாகால் என்ற இடம் எங்கிருக்கிறது? இது பெட்ரா என்ற பகுதியில் (நபாட்டின்கள் ஆட்சி புரிந்த இடத்தில்) இருக்கிறது. இது யூதேயாவிற்கு வெளியே இருக்கிறது. 

International Standard Bible Encyclopedia

GUR-BAAL

gur-ba'-al (gur ba`-al): The residence of certain Arabs against whom God helped Uzziah, king of Judah (2 Chronicles 26:7). Its mention immediately after the Philistines may have suggested the "Gerar" of the Targum. Association with the Meunim points to the East. It may be taken as certain that Jebel Neby Harun, near Petra, has always been crowned by a sanctuary. This may have been "the dwelling place of Baal"; or, accepting Kittel's emendation (Tur ba`al), "the rock" or "mountain of Baal." The Arabs probably dwelt in the region before the days of Petra (EB, under the word)

W. Ewing

உ) ஜெருசலேம் நகர சுவரை கட்டும் போது எதிர்த்த அரபியனான கேஷேம்

யூதர்கள் தாங்கள் அடிமைகளாக கொண்டு போகப்பட்டு 70 ஆண்டுகளுக்கு பிறகு வந்து ஜெருசலேமின் நகரச் சுவரை கட்டியபோது, அவர்களை எதிர்த்தவர்களில் அரேபியனான ’கேஷேம்’ என்பவனும் ஒருவன்.

2:19  ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள். (நெகேமியா 2:19)

யார் இவன்? எப்படி இங்கு வந்தான்? யூதர்கள் பாபிலோனுக்கு பிடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் அடிமைகளாக இருந்த காலக்கட்டத்தில், ஜெருசலேமில் வந்து வாழ்ந்தவனாக இருக்கலாம், அல்லது யூதேயாவிற்கு தென் கிழக்கு பகுதியில் உள்ள பெட்ரா பிராந்தியத்தில் வாழ்ந்த அரபியனாக இருக்கலாம். இவ்வசனம் பற்றிய பைபிள் விரிவுரைகளின் தொடுப்புக்கள் சிலவற்றை கீழே தருகிறேன்.

Smith's Bible Dictionary

Geshem

and Gashmu (rain), an Arabian, mentioned in (Nehemiah 2:19) and Nehe 6:1,2,6 (B.C. 446.) We may conclude that he was an inhabitant of Arabia Petraea or of the Arabian desert, and probably the chief of a tribe." Gashum said it" made him a type of those who create a common report.

Easton's Bible Dictionary

Or Gashmu, firmness, probably chief of the Arabs south of Palestine, one of the enemies of the Jews after the return from Babylon (Nehemiah 2:19; 6:1, 2). He united with Sanballat and Tobiah in opposing the rebuilding of the wall of Jerusalem.

International Standard Bible Encyclopedia

GESHEM

ge'-shem (geshem, gashmu; Gesam, "rain storm"): An Arabian, probably chief of an Arabian tribe that had either settled in Southern Palestine during the exile in Babylon, or had been settled in or near Samaria by Sargon (Nehemiah 2:19;Nehemiah 6:1, 2, 6). He was a confederate of Sanballat and Tobiah, and strenuously opposed the building of the wall under Nehemiah. He with the others mocked at the first efforts to build the wall, and afterward repeatedly sought to entice Nehemiah to the plains of Ono. The name also occurs in the form Gashmu, perhaps an Assyrian form of the same name Geshem.

J. J. Reeve

ஊ) ஏசாயாவின் தீர்க்கதரிசனம் - பாபிலோன் அழிக்கப்படும் போது, அரபியனும் அழிவான்:

யூதேயாவிற்கு வெளியே இருக்கும் தேசங்களில் வாழும் அரபியர்கள் பாபிலோனோடு கூட சேர்ந்து அழிவார்கள் என்பதை ஏசாயா தீர்க்கதரிசனமாக கூறினார்.

13:19  ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். 

13:20  இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை. (ஏசாயா 13:19-20)

இவ்வசனங்களையும் பாருங்கள். 

21:13  அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள். 

21:14  தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள். (ஏசாயா 21:13-14)

3:2  நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய். (எரேமியா 3:2)

அரேபியர்கள் யூதேயாவிற்கு வெளியே உள்ள தேசங்களில் குடியிருந்தார்கள், முக்கியமாக, அரேபியா தீபகர்ப்பத்திலும், நபாட்டியன்கள் வாழ்ந்த பகுதியில் (பெட்ரா, ஜோர்டான்) வாழ்ந்தவர்கள். 

ஆனால், அரபியர்கள் யூதேயாவின் மற்றும் ஜெருசலேமின் ’பழங்குடிகள்’ என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்? அரேபியர்கள் யூதேயாவில் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்றும் சொல்கிறீர்கள். இவைகளுக்கெல்லாம் சரித்திர ஆதாரங்களை கொடுங்கள். 

வேடிக்கையான வார்த்தைகள்:

பாரா அவர்கள், ஒரு பக்கம் ”அரேபியர்கள் பாலஸ்தீனாவின் பழங்குடிகள்” என்றுச் சொல்கிறார், ”பாலஸ்தீனாவின் பெரும்பான்மை மக்கள்” என்று கூறுகிறார், ஆனால், அதே நேரத்தில், அரபியர்கள் அரேபிய மண்ணின் ஆதிவாசிகள் என்றும் கூறியுள்ளார். இந்த முரண்பட்ட விவரங்களை ஒரே அத்தியாயத்தில் ஒரே பத்தியில் எழுதியுள்ளார்.

பாரா அவர்கள் எழுதியது:

. . .அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. . .[2]

இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், அரேபியர்கள் அரேபிய மண்ணின் ஆதிவாசிகளா? அல்லது பாலஸ்தீனா மண்ணின் பழங்குடியினரா? என்பதாகும், இரண்டும் என்றுச் சொல்வீர்களானால், பாலஸ்தீனாவின் பழங்குடிகள் என்பதற்கு ஆதாரங்களைத் தாருங்கள். 

சரித்திர விவரங்களின் படி, அவர்கள் அரேபிய மண்ணின் ஆதிவாசிகள் ஆவார்கள், பாலஸ்தீனா, யூதேயா மண்ணின் பழங்குடிகள் அல்ல. பாரா அவர்களே, நீங்கள் மறுத்தால் ஆதாரங்களை கொடுங்கள்.

முடிவுரை: 

பாரா அவர்களே, முதலாவது அரபியர்கள் என்றால் யார்? என்பதை விளக்குங்கள். பாலஸ்தீனா என்று நீங்கள் குறிப்பிடும் பிராந்தியத்தில் உள்ள அக்கால நாடுகளை குறிப்பிடுங்கள். பாலஸ்தீனா என்ற பெயர், எப்போது யாரால் அந்த பிராந்தியத்திற்கு சூட்டப்பட்டது என்று சொல்லுங்கள். இரண்டாவதாக, அரபியர்கள் எப்படி பாலஸ்தீனாவின் பழங்குடியானார்கள்? எந்த காலக்கட்டத்திலிருந்து அவர்கள் அங்கு வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள் என்பதை ஆதரங்களோடு விளக்குங்கள். 

பாலஸ்தீனாவில் அரேபியர்கள் பெரும்பான்மை மக்களாக எப்போது மாறினார்கள் என்பதையும் சரித்திரத்திலிருந்து விளக்குங்கள். அரேபிய மண்ணின் ஆதிவாசிகள் எப்படி பாலஸ்தீனா (யூதேயாவின்) பழங்குடிகள் ஆனார்கள் என்பதையும் விவரியுங்கள். பாலஸ்தீனாவின் பழங்குடிகள் என்பது அரேபிய மண்ணின் ஆதிவாசிகள் என்பதற்கு முரண்படுகின்றதா? அல்லது ஒத்துப்போகின்றதா என்பதையும் விளக்குங்கள். 

பாரா அவர்களே, இதனை படிக்க மறவாதீர்கள்:

உண்மையில் பாலஸ்தீனா என்ற நாடு உண்டா?

இது என்ன முட்டாள் தனமாக கேள்வி? என்று என்னிடம் கேட்கத் தோன்றுகிறதா? அப்படியானால், ஜுஹைர் மொஹ்ஸென் என்பவர் என்ன சொல்கிறார் என்பதை படியுங்கள். இவர் யார்? இவரும் அரஃபாத்தும் சேர்ந்து தான் PLO இயக்கத்தை ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனா மக்கள் என்ற பெயரில் யாருமில்லை, பாலஸ்தீனா நாடு என்று உருவாக்கியதெல்லாம், அரபியர்கள் ஒன்றாக இருந்து, இஸ்ரேலை துரத்துவதற்காகும் என்றுச் சொல்கிறார். 

Zuheir Mohsen (1936–1979) was a Palestinian leader of the Syria-controlled as-Sa'iqa faction of the Palestine Liberation Organization (PLO) between 1971 and 1979.

The Palestinian people does not exist. The creation of a Palestinian state is only a means for continuing our struggle against the state of Israel for our Arab unity. In reality today there is no difference between Jordanians, Palestinians, Syrians and Lebanese. Only for political and tactical reasons do we speak today about the existence of a Palestinian people, since Arab national interests demand that we posit the existence of a distinct "Palestinian people" to oppose Zionism. Yes, the existence of a separate Palestinian identity exists only for tactical reasons, Jordan, which is a sovereign state with defined borders, cannot raise claims to Haifa and Jaffa, while as a Palestinian, I can undoubtedly demand Haifa, Jaffa, Beer-Sheva and Jerusalem. However, the moment we reclaim our right to all of Palestine, we will not wait even a minute to unite Palestine and Jordan.

James Dorsey, "Wij zijn alleen Palestijn om politieke reden", Trouw, 31 March 1977.

மூலம்: https://en.wikiquote.org/wiki/Zuheir_Mohsen  & https://en.wikipedia.org/wiki/Zuheir_Mohsen

அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

[1] நிலமெல்லாம் இரத்தம், அத்தியாயம் 9. யூதர்கள் இல்லாத ஜெருசலேம்

இது, ஜெருசலேம் நகரின் கிறிஸ்துவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிப்போனது. யூதர்கள் இல்லாத ஜெருசலேமில் அவர்கள் மதப்பிரசாரம் செய்யவும் கிறிஸ்துவ தேவாலயங்களை எழுப்பி, தினசரி பிரார்த்தனைகளை நடத்தவும், மக்களை (அதாவது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களை) இயேசுவின் பாதையில் அழைக்கவும் சௌகரியமாக இருந்தது.

[2] நிலமெல்லாம் இரத்தம், அத்தியாயம் 11. கிருஸ்துவத்தின் வளர்ச்சி

அப்படி வருகிற மேலை யாத்ரீகர்களுள் சிலரை நிரந்தரமாகவே ஜெருசலேமில் தங்கவைத்து, அவர்களைக் கொண்டும் உள்ளூரில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முடிவு செய்தார்கள். அதாவது, "நமது மண்ணின் பெருமையை, அயல்நாட்டுக்காரர்களே உணர்ந்திருக்கிறார்கள் பார், நீ இன்னும் உணரவில்லையா?" என்று பாலஸ்தீனத்து யூதர்களையும் அரேபியர்களையும் பார்த்து மறைமுகமாகக் கேட்பது. இந்த முயற்சியில், பாலஸ்தீனக் கிறிஸ்துவர்களுக்குக் கணிசமான வெற்றி கிடைத்தது என்றே சொல்லவேண்டும். ஏராளமான அரேபியர்களையும் அதிகபட்சம் சுமார் ஆயிரம் யூதர்களையும் அவர்கள் அப்போது கிறிஸ்துவர்களாக மாற்றிக்காட்டினார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 375-395) ரோமை ஆண்ட மன்னன் தியோடோசியஸ் (Theodosius 1) ஒரு சட்டமே பிறப்பித்தான்.

யூதர்களாகவும் இல்லாமல், கிறிஸ்துவர்களாகவும் இல்லாமல் பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன் எவ்வித கலாசார வளர்ச்சியும் அற்று, வெறும் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்க்கையில் அப்போதுதான் முதல்முறையாக ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. ரோமானியர்கள் ஆண்டாலும், கிரேக்கர்கள் ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும் அதுவரை அவர்கள் வெறும் சுண்டைக்காயாகவே இருந்தார்கள். ஆள்பவர்கள் அவர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். யூதர்கள் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். கிறிஸ்துவர்களோ, மதம் மாற்றமுடியுமா என்கிற நோக்கில் மட்டுமே அவர்களைப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் அவர்கள்தாம் அங்கே பெரும்பான்மை மக்கள்! யூதமதமும் கிறிஸ்துவ மதமும் பண்பட்ட மதங்கள் என்றும், சிறு தெய்வ வழிபாடுகளில் மூழ்கியிருந்த அரேபியர்களின் நம்பிக்கைகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவையல்ல என்றும் ஒரு கருத்து அங்கே ஆழமாக வேரூன்றியிருந்தது. அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள். அப்படிப்பட்ட இனத்தில் முதல் முதலாக ஓர் எழுச்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது.//

[3] நிலமெல்லாம் இரத்தம், அத்தியாயம் 54. பிரிட்டனின் திட்டம்)


2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்