குர்‍ஆனின் /முஹம்மதுவின் இன்னா நாற்பது - பாகம் 2 (5 to 8)

குர்‍ஆனின் மற்றும் முஹம்மதுவின் இன்னா நாற்பது தொடரின் முதல் பாகத்தை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம், அதில் நான்கு 'இன்னா' வசனங்களைக் கண்டோம்.

இத்தொடர்களின் அறிமுகத்தை முதல் பாகத்தின் தொடக்கத்தில் கொடுத்துள்ளேன், அதனை படித்துவிட்டு, அதன் பிறகு இந்த இரண்டாம் பாகத்தை படித்தால், கருத்து நன்றாக புரியும்.

இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் நான்கு குர்‍ஆனின் 'இன்னா'க்களைக் காண்போம். "இன்னா" என்றால், செய்யக்கூடாதவை அல்லது தீமை விளைவிக்ககூடிய தவறான செயல்கள் என்று பொருள். சமுதாயத்தின் பார்வையில் குர்‍ஆனின் கட்டளைகள் மற்றும் முஹம்மதுவின் செயல்கள் எப்படி 'இன்னா செயல்களாக, மக்களுக்கும், சமுதாயத்திற்கும் தீமை விளைவிக்கக்கூடிய செயல்களாக' இருக்கின்றன என்பதை நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

குர்‍ஆனின் /முஹம்மதுவின் ‘இன்னா நாற்பது’ - பாகம் 2 (5 to 8)

குர்‍ஆனின் இன்னா 5: முஸ்லிமாகவில்லையென்றால் போரிடலாம் என்ற குர்‍ஆனின் கட்டளை இன்னா

ஒரு நாடு நம் நாட்டின் மீது போருக்கு வந்தால், நாமும் நம் நாட்டை காக்க போரிடுவது நியாயமானது தான். முதலில் பேச்சு வார்த்தையின் மூலமாக சமாதானம் அடைய முயலவேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாமல், சண்டையிட்டே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், எதிர் தாக்குதல் செய்து நம் நாட்டை காப்பாற்றுவதைத் தவிர‌ வேறு வழியில்லை.

ஆனால், இங்கு அல்லாஹ் குர்‍ஆனில் சொல்வதை, முஸ்லிம்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் நாத்தீகர்களும் படித்துப் பாருங்கள்.

இவ்வசனத்தில், 'அல்லாஹ் தெளிவாகச் சொல்கிறான், அல்லாஹ்வையும், முஹம்மதுவையும் அங்கீகரிக்காமலும், இஸ்லாமை ஏற்காமலும் இருப்பவர்கள் மீது போர் தொடுக்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான்". 

குர்‍ஆன் 9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

Fight those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth from those who were given the Scripture - [fight] until they give the jizyah willingly while they are humbled (SAHEEH INTERNATIONAL Translation)

குர்‍ஆனின் 9வது அத்தியாயம், குர்‍ஆனின் கடைசி அத்தியாயம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும், இவ்வசனம், 'இஸ்லாமியர்கள் மீது சண்டைக்கு வரும் நபர்கள் மீது சண்டையிடுங்கள்' என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, முஸ்லிம்களே வலியச் சென்று, 'இஸ்லாமை பரப்ப, முஸ்லிமல்லாத நாடுகள் மீது போர் தொடுக்கும் படிச் சொல்கிறது'.

ஒரு நாடு முஸ்லிம்களை தாக்கவில்லையென்றாலும், முஸ்லிம்கள் சென்று சண்டையிட்டு, அவர்களை வென்று, அவர்களிடம் ஜிஸ்யா என்ற வரியை வாங்குகிறது. இதனைத் தான் முஹம்மதுவும் செய்தார், முதல் நான்கு கலிஃபாக்களும் செய்தார்கள், ஒட்டுமொத்த இஸ்லாமிய அரசர்களும் இப்படிச் செய்து தான், இஸ்லாமை அன்றிலிருந்து பரப்பிக்கொண்டு வந்தார்கள்.

இந்த கட்டளையை இன்று முஸ்லிம் நாடுகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நாடுகள் செய்யமுடியாமல் தவிக்கின்றன.  ஆனால், இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் இதனை செய்ய முயலுகின்றன, உதாரணத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத குழுவைச் சொல்லலாம்.

குர்‍ஆனின் இந்த கட்டளை கண்டிக்கத்தக்கதாகும், இது சமுதாயத்திற்கு "இன்னா/தீமை விளைவிக்கும் செயலாகும்".

குறிப்பு: உங்கள் முஸ்லிம் நண்பர்கள், இந்த வசனத்தைப் பற்றி அறியாமல், உங்களிடம் 'இஸ்லாம் அமைதி மார்க்கம்' என்று கூறுவார்களானால், அவர்களிடம் தைரியமாக நீங்கள் "குர்‍ஆனை படிக்கும்படியும், ஹதிஸ்களையும், இஸ்லாமிய சரித்திரத்தையும் படிக்கும் படி கேளுங்கள்", மேலும், முஹம்மது எத்தனை போர்களில் பங்கு பெற்றார், முதல் நான்கு கலிஃபாக்கள் எத்தனை போர்களை புரிந்தார்கள், ஏன் புரிந்தார்கள்? என்பதைக் கேட்டுப்பாருங்கள். முஸ்லிம்களில் 99% சதவிகித பேருக்கு, இஸ்லாமைப் பற்றிய அடிப்படை அறிவு, சரித்திரம் தெரியாது.

முஹம்மது தொடங்கி, நான்கு கலிஃபாக்கள் தொடுத்த போர்கள் பற்றிய ஒரு சுருக்கத்தை இந்த கட்டுரையில் படிக்கலாம்.

அமைதி மார்க்கம் என்ற போர்வையில், வலியச் சென்று போர் தொடுக்கச்சொல்வது குர்‍ஆனின் இன்னா செயலாகும்.

குர்‍ஆனின் இன்னா 6: இறைவன் தந்தை ஆகமுடியாது என்று சொல்வது இன்னா

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை பிதா/தகப்பன் என்று அழைத்து வேண்டுதல் செய்யமுடியுமா?

குர்ஆன் 5:18 யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

ஒரு முஸ்லிம் தன்னை படைத்ததாகச் சொல்கின்ற அல்லாஹ்வை 'அப்பா' என்று அழைத்து தொழுதுக்கொள்ளவோ, வேண்டுதல் செய்யவோ முடியாது. ஏனென்றால், உலக மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் தான், அவருடைய பிள்ளைகள் அல்ல. அல்லாஹ்வை அப்பா என்று மனதார அழைத்து ஒரு முஸ்லிம் வேண்டுதல்(துவா) செய்தால், அல்லது தொழுதுக்கொண்டால், இஸ்லாமின் படி அவர் ஒரு காஃபிர் ஆகிவிடுவார். தன்னை படைத்தவரை அப்பா என்று அழைத்த பாவத்திற்காக தன் நித்தியத்தை நரகத்தில் கழிக்கவேண்டி வரும் இந்த‌ முஸ்லிம். 

அல்லாஹ் மக்களின் தவறுகளுக்கு தண்டனை கொடுக்கிறான் இதனால் அல்லாஹ்வை 'தந்தை' என்று நாம் அழைக்கமுடியாது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்விற்கு உண்மையான தந்தை என்ன செய்வார் என்று தெரியவில்லை. பிள்ளைகளை சீர்திருத்த தண்டனைகள் கொடுத்து, அவர்களை நல்ல‌ வழிக்கு கொண்டுவருவது ஒரு தந்தையின் கடமையாகும். நாம் அழிந்துபோகும் படி அல்ல, நமக்கு தீமை  செய்யும்படியல்ல, நம் நன்மைக்காக தண்டனைகளை கொடுப்பது ஒரு உண்மையான தகப்பனின் இலக்கணமாகும். இதனை பைபிளின் தேவன் சரியாக சொல்லியுள்ளார்:

எபிரெயர் 12: 5-11

5. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். 7. நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? 8. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. 9. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? 10. அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். 11. எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

அல்லாஹ்வை "தந்தை" என்று அழைக்கக்கூடாது என்று குர்‍ஆன் கட்டளையிடுவது ஒரு "இன்னா செயலாகும்".

குர்‍ஆனின் இன்னா 7: முஸ்லிம்களின் அன்னையர்களுக்கு தலாக் மிரட்டல் விடுவது இன்னா

முஹம்மதுவின் மனைவிமார்களிடம் 'அல்லாஹ்' நீங்கள் முஹம்மது சொன்னதுபோல செய்யவில்லையென்றால், உங்களை முஹம்மது தலாக் (விவாகரத்து) செய்துவிடுவார், அதன் பிறகு அவருக்கு அனேக பெண்களை நானே திருமணம் செய்துக்கொடுப்பேன் என்று குர்‍ஆனில் சொல்வது "ஒரு இன்னா செயலாகும்".

ஒரு பெண் தன் வாழ்வையே தன் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் தியாகம் செய்கிறாள். மேலும், அந்த காலத்தில் இஸ்லாம் போன்ற பின்தங்கிய சமுதாயத்தில் , பெண்களுக்கு வெளியே சென்று சொந்தமாக வாழ முடியாத சமுதாயத்தில், ஒரு பெண்ணுடைய பாதுகாப்பு யார்? அவளின் கணவர் ஆவார். அவர்கள் பயப்படும் ஒரே விஷயம் "தன் கணவன் தன்னை விவாகரத்து செய்வதாகும்", 'முஸ்லிம்கள் இன்று தங்கள் அன்னையர்கள் என்று கனப்படுத்தும் பெண்களைப்' பார்த்து, இந்த பயத்தை சுட்டிக் காட்டி அல்லாஹ் குர்‍ஆனில் அவர்களை பிளாக்மெயில் செய்வது, ஒரு இன்னா செயலாகும்.

1) ”குடும்ப செலவிற்கு” அதிகம் கேட்டதால் ”பிளாக்மெயில்” செய்யப்பட்ட அன்னையர்கள்

ஒரு முஸ்லிம் ஆண், தன் மனைவியை விவாகரத்து (தலாக்) செய்வதற்கான நியாயமான காரணங்களை அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியுள்ளானா? என்பதை தேடும் போது, குர்-ஆன் 33:28-29 வசனங்கள் கண்களில் பட்டது.

குர்-ஆன் 33:28-29:

33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.

33:29. “ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக! (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இவ்விரு வசனங்களில் அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிமார்களை பிளாக்மெயில் செய்வதை (பயமுறுத்துவதை) காணமுடியும். அதாவது, உங்களுக்கு செல்வம் அதிகமாக தேவையா? சரி, கொடுத்துவிடுகிறோம், ஆனால், அந்த செல்வத்தோடு கூட, உங்களை முஹம்மது விவாகரத்தும் செய்துவிடுவார். ”அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்” என்பதன் அர்த்தம், தலாக் கொடுத்துவிடுகிறேன் என்பதாகும். எனவே, நீங்கள் இப்போது ஒரு முடிவை எடுக்கவேண்டும்: 

  • முடிவு 1: செல்வம் தரப்படும் அதோடு கூட தலாக்கும் இலவசமாக தரப்படும் (Buy 1 Get 1 free).
  • முடிவு 2: செல்வம் வேண்டாம், முஹம்மது தான் வேண்டும் என்றால் மகத்தான கூலி கொடுக்கப்படும்

2) இவ்வசனங்களின் பின்னணி – ஹதீஸ்களிலிருந்து

மேற்கண்ட வசனங்களின் பின்னணி என்னவென்பதை விளக்கும் ஸஹி ஹதீஸ்கள் உள்ளன.

முஸ்லிம் எண் 2946

2946. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர், தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்க, பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப்போகிறேன்" என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்து விட்டேன் என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். "இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்" என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா?" என்று அவர்களிருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்" என்று கூறினர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்" என்று தொடங்கி, "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்" என்று முடியும் (33:28,29)இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.

இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்"என்று சொல்லிவிட்டு, "நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்"என்றார்கள்.  (மேலும் பார்க்க ஸஹி புகாரி எண் 4786, முஸ்லிம் எண் 2939)

3) பணம் அதிகம் கேட்டதால், தலாக் கிடைக்கும் என்று பயமுறுத்துவது அல்லாஹ்விற்கு அடுக்குமா?

மேற்கண்ட குர்-ஆன் வசனங்களையும், அதைச் சுற்றியுள்ள பின்னணியையும் நாம் இதுவரை கண்டோம்.

மனைவி வீட்டுச்செலவிற்கு பணத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்பது பாவமா? விவாகரத்துக்குச் செல்லும் அளவிற்கு மிகப்பெரிய குற்றமா? மனைவிக்கு மென்மையாக எடுத்துச் சொல்லி, புரியவைப்பதை விட்டுவிட்டு, விவாகரத்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? முஹம்மதுவின் மனைவிகளுக்கே அல்லாஹ் உருவாக்கிய இஸ்லாமிய சமுதாயத்தில் இந்த நிலையென்றால், இதர முஸ்லிம்களின் குடும்ப பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

முஹம்மதுவின் குடும்ப பிரச்சனையை தீர்க்க குர்-ஆன் வசனத்தை கொண்டு வர ஜிப்ரீல் தூதனை அனுப்புவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றவில்லை? வெளி உலகிற்கு அதாவது முஸ்லிமல்லாதவர்கள் இவ்வசனங்களை அல்லாஹ் இறக்கியதாக கருதமாட்டார்கள், தன் சுய லாபத்திற்காக முஹம்மதுவே இட்டுக்கட்டியது என்று கருதுவார்கள்.

இஸ்லாமியர்களின் அன்னையர்களுக்கு விவாகரத்து மிரட்டல் விட்டது, குர்‍ஆனின் இன்னா செயலாகும்.

குர்‍ஆனின் இன்னா 8: புரியாத மொழியில் தொழுவது இன்னா

உலக மக்கள் அனைவரும் தன்னை தொழுதுக்கொள்ளவேண்டுமென்று அல்லாஹ் விரும்பினால், அந்த மக்கள் தங்களுக்கு தெரிந்த புரியும் மொழியில் தொழுதுக்கொள்ள அனுமதிக்கவேண்டும், அப்படி அவர் அனுமதிக்காமல், நீங்கள் அரபியில் தான் தொழவேண்டுமென்று சொன்னால், அது ஒரு இன்னா செயலாகும், தீமை விளைவிக்கும் அல்லது பொய்யான ஒரு தொழுகைக்கு கொண்டுச் செல்லும் ஒரு செயலாக இருக்கும்.

முஹம்மது அரபி பேசினார், அவரது சஹாபாக்களும் அரபி பேசினார்கள், குர்‍ஆனும் அரபியிலேயே கொடுக்கப்பட்டது.  அரபி பேசும் மக்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் புரியவேண்டுமென்றால், தமிழ் மொழியிலா குர்‍ஆன் கொடுக்கப்படும்? இல்லையல்லவா! அதனால் தான் அரபி மொழியில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது.  ஆகையால், முஸ்லிம்கள் அதே அரபியில் தொழுதுக் கொள்ளவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார்.

இந்த கட்டளை அரேபியர்களுக்கு பொருந்தும், அரபியை கற்றுக்கொள்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால், அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்?  அரபியை தாய் மொழியாக இல்லாதவர்கள் கூட ஏன் அரபியில் தொழுதுக்கொள்ளவேண்டும்? அப்துல்காதர் அரபியில் தொழலாம், அமாவாசையும் அரபியில் தொழவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

இஸ்லாமின் படி அல்லாஹ்வை அரபியில் தான் தொழவேண்டும்:

ஒருவருக்கு தெரியாத மொழியில் தொழுவதினால் என்ன பயன் கிடைக்கும்?  பொருள் உணராமல் அரபி வசனங்களை மனப்பாடமாக தொழுகையில் பயன்படுத்துவதினால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினால், “முஹம்மது சொன்னார், நாம் அதனை கேள்விகேட்காமல் பின்பற்றவேண்டும்” என்றுச் சொல்வார்கள். 100க்கு 99 முஸ்லிம்கள் பொருள் தெரியாமல் தான் அல்லாஹ்வை ஐந்து வேளை தொழுதுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் தன் தாய் மொழியில் தொழுதால் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டானா? என்று கேட்டால் “ஆம், அங்கீகரிக்கமாட்டான்”  என்று தான் பதில் வருகிறது.  ஒரு தமிழ் முஸ்லிம் தமிழ் மொழியில் தொழுதால், அதனை அல்லாஹ் ஹராம் என்றுச் சொல்லுவான், அதாவது 'அந்த தொழுகை அனுமதிக்கப்படாது' என்றுச் சொல்லுவான்.

குர்‍ஆனை அரபியில் கொடுத்ததற்கு காரணம், அந்த மக்கள் அரபி பேசும் மக்களாக இருந்ததினால், அவர்கள் வசனங்களின் பொருள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அரபியில் இறக்கினானாம். அப்படியானால், தமிழ் மக்களுக்கு  தமிழாக்கம் செய்துக்கொண்டு, தமிழில் தொழுதால், ஏன் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை?

குர்‍ஆன்

12:2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

41:44. நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). 

43:3. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

தாய் மொழியில் துவா செய்யும் போது, புரிந்துக்கொள்ளும் அல்லாஹ், தன்னை தொழும் போது மட்டும், பொருள் புரியாவிட்டாலும்   அரபியிலேயே தொழுதுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆச்சரியமான வேடிக்கையாக உள்ளதல்லவா?

மனிதர்களுக்கிடையே கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்கு ஒரு பாலமாக மொழி அமைந்துள்ளது. இறைவனுக்கும்  மனிதனுக்கு இடையே நடைப்பெற்ற முதல் உரையாடல் ஏதோ ஒரு மொழியின் வார்த்தைகளாகத்தான் வெளிப்பட்டு இருக்கும். ஒருவர் நம் தாய் மொழியை பேசும் போது, அவர் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகும். வேற்று மொழியை பேசும் போது, அந்த ஈர்ப்பு அவ்வளவாக இருக்காது. 

பொதுவாக, ஒரு மார்க்கம் இறைவனால் உண்டானதா? அல்லது மனிதனால் உண்டானதா? என்பதை அறிவதற்கு அனேக விவரங்களை நாம் சொல்லலாம். அவைகளில் பிரதானமானதாக நான் கருதுவது, அந்த மார்க்கத்தில் இறைவனை எந்த  மொழியில் தொழவேண்டும்? என்ற கேள்விக்கு, ஒரு குறிப்பிட்ட மொழியில் தான் தொழவேண்டும் என்று அந்த மதம் சொல்லுமானால், அது ஒரு கல்ட் அல்லது பொய்யான மதம் என்பதை அதன் மூலம் அறியலாம்.

தமிழில் அர்ச்சனை செய்தால், சாமி ஏற்றுக்கொள்ளாது என்றுச் சொல்வதற்கும், அரபியில் தொழுதால் மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்று சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவ்விரண்டும் ஒரே இனத்தைச் சார்ந்த்தது தான்.

முடிவுரை:

இந்த "குர்‍ஆனின் இன்னா" என்ற தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், நான்கு இன்னா செயல்களைக் கண்டோம். வாசகர்கள் குர்‍ஆனை படியுங்கள், மேற்கோள் காட்டப்பட்ட வசனங்களையும் அவைகளின் பின்னணிகளையும் படித்து அறிந்துக்கொள்ளுங்கள். 

அடுத்த பாகத்தில் இன்னும் நான்கு "குர்‍ஆனின் இன்னா கட்டளைகளை" ஆய்வு செய்வோம்.

தேதி: 5th Aug 2023


குர்‍ஆனின்/முஹம்மதுவின் இன்னா நாற்பது கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்