இஸ்லாம் இணைய பேரவையின் கோல்கேட் க்ளோசப் டெக்னிக் (Colgate and Close-Up Technique)

முன்னுரை: இஸ்லாம் இணைய தளம் "கிருஸ்தவமே பொய் இதில் உண்மையடியான் எங்கே?" என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. இந்த கட்டுரையில் பிரயோஜனமுள்ள எந்த விவரத்தையும் அவர்கள் கூறவில்லை, முஸ்லீம்களுக்கே உரித்தான விதத்தில் பல வசை மொழிகளை எழுதியிருந்தார்கள். அவர்கள் எழுதியது முக்கியமாக உண்மையடியான் என்பவருக்குத் தான், ஆனால், நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை அவர்கள் குறிப்பிட்டதால், இதற்கு என் பதிலைத் தருகிறேன். 

முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை: நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன், யாராக இருந்தாலும் நாவை காக்கவேண்டுமென்று. இஸ்லாமுக்கு மறுப்புக்கள் எழுதுகிறார்கள் என்ற காரணத்தாலும், இஸ்லாமின் உணமை முகம், முகமதுவின் உண்மை முகம் தமிழ் மக்களுக்கு தெரிய வந்துவிடுகிறதே என்ற காரணத்தாலும், எங்கள் மேல் வசை மொழிகளை கூறி, உங்கள் இஸ்லாமுக்கு கெட்டப்பெயரை(இஸ்லாமுக்கு நல்லபெயரும் உள்ளதா?) கொண்டுவராதீர்கள். நீங்கள் சொன்ன வசைமொழிகள் உங்களுக்கு திருப்பிச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும் ஏன் நாங்கள் சொல்வதில்லை தெரியுமா? "உன்னைப்போல மற்றவனையும் நேசி்" என்றுச் சொன்ன இயேசுவை நாங்கள் பின்பற்றுவதால். ஆனால், புறாவைப் போல கபடற்றவர்களாக இருங்கள் என்றுச் சொன்ன அதே இயேசு தான், பாம்பைப் போல வினாவுள்ளவர்களாக இருங்கள் என்றார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதற்கு கிறிஸ்தவர்கள் ஒன்றும் தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மைகள் அல்ல.‌

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இவ்வரிசையில் இறைவனால் பாதுகாக்கப்பட்ட இறுதி வேதமாம் குர்ஆனையும், இறுதி இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களையும் நிராகரித்து, இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் மீது புழுதிவாரி இறைக்கும் திருப்பணியை(?) செய்வதற்கு சமீபநாட்களாக உண்மையடியான் என்ற இழிபிறவி கிளம்பியுள்ளார். ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இவரையும், இவரது கூட்டாளிகளையும் நரகத்திலிருந்து மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக நமது இஸ்லாமிய இணையப் பேரவை இவரது சொத்தை வாதங்களிலுள்ள அபத்தங்களையும், பொய்களையும், அவரது அறியாமையையும் பல ஆக்கங்கள் மூலம் தெளிவாக விளக்கியது. சுயநினைவோடும், இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர் இருந்திருந்தால் நமது விளக்கங்கள் அவருக்கு பயனளித்திருக்கும். ஆனால் அவரது நோக்கம் அதுவல்லவே!. 

Source: www.tmpolitics.net/iip/Articles/ChristianityIsABigLie.htm

இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறோம் என்பதாலும், அவர்கள் சொல்வதை(பொய்களை) அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு ஆதாரபூர்வமான பதில்களைத் தருவதால், இவர்கள் கொடுக்கும் பட்டங்கள்: 

  • இழிபிறவி
  • ஷைத்தானின் நேரடி ஏஜென்ட்
  • அநியாயக்காரர்கள்
  • மனநோயாளியாக

(நாங்க ஷைத்தானின் நேரடி ஏஜெண்ட் என்றுச் சொன்னால், நீங்கள் ஷைத்தானின் மறைமுக ஏஜண்டா?) 

இப்படி நீங்க எங்களை திட்டுவீங்கள் என்று இயேசு ஏற்கனவே சொல்லியுள்ளார். 

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; (மத்தேயு 5:11) 

நீங்கள் எங்களை பாக்கியவான்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள், எனவே, நாங்கள் சந்தோஷப்பட்டு களிகூறுகிறோம். 

இறைவனால் பாதுகாக்கப்பட்ட வேதம் என்றுச் சொல்லி எத்தனை நாட்கள் தான் வண்டி ஓட்டுவீர்கள் சொல்லுங்கள்? யார் யாருக்கு எப்படி குர்‍ஆனை திருத்த முடியுமோ அப்படியெல்லாம் திருத்தி வைத்துக்கொண்டு, இதுவும் அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை ஓதும் முறை என்றுச் சொல்லி பல அரபிக் குர்‍ஆன்கள் இருக்கிறதே. இன்னுமா, பாடிய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 

இதைப் பற்றி கட்டுரைகளை இங்கு படிக்கலாம். 

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இவரது பித்தலாட்டங்கள் எல்லை மீறவே, நமது பேரவை இவருக்கு பகிரங்க விவாத அரைகூவலை விடுத்தது (பார்க்க இங்கே சொடுக்கவும்). நமது விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி ஒளிந்த இந்த பொய்யடியான், 'எனக்கு அறிவில்லை என்னை விவாதத்திற்கெல்லாம் அழைக்காதீர்கள்' என்று நம்மிடம் மண்டியிட்டு மடி பிச்சை கேட்டதையும் கண்டு இவ்வுலகமே சிரித்தது (பார்க்க இங்கே சொடுக்கவும்). இதைத்தான் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனங்களில் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்.

பித்தலாட்டத்தைப் பற்றி தமிழ் முஸ்லீம் அறிஞர்களே, நீங்கள் பேசாதீர்கள். உங்கள் பித்தலாட்டங்கள் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் ஏற்கனவே சொன்னேன், நேரடி விவாதம் வேண்டாம், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள் என்று. இதற்கு மூச்சு விடாமல் இருந்துவிட்டு, இப்போது குய்யோ முறையோ என்று கத்தினால் எப்படி? எங்களின் கட்டுரைகள் எந்த அளவிற்கு உங்களை பாதித்து இருந்தால், தமிழ் முஸ்லீம்களிடம் நீங்கள் பிச்சை எடுக்கிறீர்கள். “அய்யா கிறிஸ்தவர்களின் கட்டுரைகளை படிக்காதீர்கள் என்றுச் சொல்லி, எங்கள் தொடுப்பையும் தர பயப்படுகிறீர்கள். இது பிச்சை இல்லையா?”. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எங்கள் கட்டுரைகளுக்கு பதில் சொல்வார்களாம் இவர்கள், ஆனால், எங்கள் தொடுப்பை தரமாட்டார்களாம்? அப்படியானால், உங்கள் கட்டுரைகளை படிக்கும் முஸ்லீம்களை அறியாமையிலேயே வைத்துக்கொள்ள ஆசைப்ப‌டுகிறீர்கள்? இது கேவலமாக இல்லை உங்களுக்கு?

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது: 

அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த அநியாயக்காரர்கள் வெறுத்தபோதிலும் இஸ்லாம் என்ற இந்த பூரண ஜோதியை வல்ல அல்லாஹ் சுடர்விடும் பிரசாகமாக மென்மேலும் மின்னச்செய்து கொண்டே இருக்கிறான்-அல்ஹம்துலில்லாஹ் ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இப்பொய்யடியான் இஸ்லாத்தின் மீது சமீபத்தில் 3 பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவைகளாவன:

// 1). இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம். இதற்கு நபி (ஸல்) அவர்களின் கடிதங்களே சாட்சி.

2). குர்ஆன் ஒன்றல்ல, பல குர்ஆன்கள் உள்ளன. ஓவ்வொன்றும் பல ஓசைகளையும், எழுத்துக்களையும் கொண்டவை. எனவே ஒரே கருத்தில் அமைந்த குர்ஆன் என்று இல்லை.

3).குர்ஆனும், ஹதீஸூம் ஏசுவை கடவுள் என்று சொல்கிறது.//

மேலே உள்ள கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகள் ஈஸா குர்‍ஆனின் கட்டுரைகளாகும். முன்றாவது கட்டுரை உண்மையடியான் பதித்தது, அந்த கட்டுரையைப் பற்றி நான் தனியாக கட்டுரைகள் எழுதும் போது, விவரிப்பேன். இப்போதைக்கு முதல் இரண்டு கட்டுரைகள் பற்றி சில விவரங்களைச் சொல்லவேண்டியுள்ளது. 

முகமது வாளால் இஸ்லாமை பரப்பியது பொய்யா? அவர் எழுதிய கட்டுரைகளை சாதாரண சராசரி முஸ்லீமிடம் காட்டி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் என்றுச் சொல்லும் தைரியம் இஸ்லாமியர்களுக்கு உண்டா? 

சாதாரண சராசரி முஸ்லீமிடம் "அந்த கடிதங்கள் மூலமாக நீங்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்வது என்ன" என்று உங்களால் கேட்கமுடியுமா? 

என்ன இஸ்லாம் இணைய பேரவையே, படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் எதையும் எழுதுவீர்களோ? 

இதோ இஸ்லாமை வாளால் பரப்பினார் என்பதைப் பற்றிய என் கட்டுரைகள்: 

முகமதுவின் கடிதங்களை படித்து எந்த கட்டுரையில், முகமது இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கமாக காட்டியுள்ளார் என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

இரண்டாவதாக, குர்‍ஆனை அல்லா பாதுகாத்தார் என்று மேடையில் முழங்குகிறீர்கள், எழுதும் போது ஒரு பக்கத்துக்கு தவறாமல் இதைப் பற்றி பதிப்பீர்கள், ஆனால், அதில் எத்தனை முரண்பாடுகள், பிழைகள், இலக்கண பிழைகள், தாறுமாறுகள் என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியத்தேவையில்லை. இதைப் பற்றி பதியப்பட்ட ஒரு சில கட்டுரைகள்: 

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

என்ன சிரிப்பு வருகிறதா? மேற்கண்ட இவரது பதிவை படிக்கும் எவரும், இவர் ஒன்று மனநோயாளியாக இருக்கவேண்டும் அல்லது டாஸ்மார்க் கடையில் அமர்ந்து சரக்கு அடித்து விட்டு இப்படி எழுதியிருக்கவேண்டும் என்ற முடிவிற்குத்தான் வருவார்கள். இஸ்லாத்தைப் பற்றியோ, கிருஸ்தவம் உட்பட பிறமதங்களைப் பற்றியோ சற்றும் அறிவில்லாதவர் என்பதை தனது எழுத்துக்களின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்துபவர்தான் இந்த உண்மையடியான். திருமறை குர்ஆனின் மற்றும் ஸஹீஹூல் புஹாரியின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய ஆராய்ச்சியாளராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்.

அருமையான இஸ்லாமிய இணைய பேரவையே, என் கட்டுரைகளைக் கண்டால் சிரிப்பு வராது, உங்கள் கட்டுரைகளைக் கண்டால் தான் மக்கள் சிரிப்பார்கள். உங்கள் குர்‍ஆனின் வசனங்களை படித்தால் தான் சிரிப்பு வரும்.

அய்யோ எங்களுக்கு ஏது இஸ்லாம் பற்றிய அறிவு? உங்களுக்குத் தான் இஸ்லாம் பற்றி நன்றாகத் தெரியும், ஏன் கிறிஸ்தவம் பற்றியும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்? நீங்கள் உலக மதங்களில் பட்டம் வாங்கியவர்கள் தானே? உங்களுக்குத் தான் அறிவு அதிகம். சொந்த இறைவேதத்தையே தமிழில் படிக்க முடியாத இஸ்லாமிய மக்கள் கோடானு கோடி இருக்கிறார்கள், தாய் மொழியில் படிக்கவும் உற்சாகப்படுத்த ஆட்கள் இல்லை, இந்த இலட்சணத்தில் வேறு மத புத்தகங்கள் படித்து, இவர்களுக்குத் தான் அறிவு உள்ளது போல, பல மத ஆய்வு கட்டுரைகள் என்ற வரட்டு தலைப்புக்கள் இட்டு கட்டுரைகள் வேறு. இதை படிப்பதற்கென்றே சிலர் இருப்பது தான் ஆச்சரியம்.

எச்சரிக்கை: வாதம் புரிவதாக இருந்தால், வசன ஆதாரம் வைத்து, அறிவை பயன்படுத்தி ஏதாவது எழுதவேண்டும், அதை விட்டு விட்டு, சொந்தமாக இப்படி எழுதினால், பதில்கள் இப்படித்தான் இருக்கும்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று புனைவதற்கு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிக் குவித்து பொய்ப்பிரச்சாரம் செய்து பார்த்தது. ஆனால் அதில் கடும் தோல்வி கண்டு, இன்று அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம் என்ற நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. டாஸ்மார்க் பொய்யடியானைப் பார்த்து நாம் கேட்கிறோம், அமெரிக்கா என்ற வல்லரசாலேயே இப்பொய்பிரச்சாரத்தில் வெற்றி காண முடியவில்லையே, இந்நிலையில் 4 வலைப்பூக்களை வைத்துக்கொண்டு இப்பொய் பிரச்சாரத்தில் இவரால் வெற்றி பெறஇயலுமா? இவர் நிற்கமுடியுமா?. இவ்வாறு என்னதான் கூப்பாடு போட்டாலும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை இவரால் நிரூபிக்கத்தான் முடியுமா?.

உண்மையடியானிடம் எதற்கு என்னிடம் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை இழுப்பதே உங்களுக்கு பிழைப்பாக ஆகிவிட்டது, போகட்டும். சௌதியிலிருந்து பல கோடி பணத்தை உலகத்தின் இதர நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு செலவழிக்கிறீர்களே? இது தெரியாதா என்ன? இதில் வேறு இஸ்லாம் வேகமாக பரவி வரும் மதமாம், இந்த பொய்யைச் சொல்லி எத்தனை நாட்கள் கழிக்கப்போகிறீர்கள்? ஒரு காகிதம் எடுத்துக்கொண்டு, இஸ்லாம் வேகமாக பரவும் மதம் என்றுச் சொல்லி, தினமும் ஆயிரம் முறை எழுதுங்கள், அப்போது கூட நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன். 

முதலில் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை காப்பாற்ற முயற்சி எடுங்கள்.

இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லலாம் என்றுச் சொல்லி சட்டம் இயற்றி இஸ்லாமை காப்பாற்றுவதல்ல? இது கேவலம். இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீம்களிடையே இஸ்லாம் தோல்வி அடைந்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கு சரியான சான்று, இப்படிப்பட்ட கொல்லும் ஷரியா சட்டங்கள் என்பதை நான் சொல்லித் தெரியத் தேவையில்லை. 

இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களைக் கொன்று இஸ்லாமை வளர்க்கவேண்டும் என்ற கீழ் தரமான நிலைக்கு இஸ்லாம் வளர்ந்துள்ளது. இது தான் உண்மை.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இன்று உலக நாடுகளில் அதிக முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கொண்ட நாடு இந்தோனேஷியா. இந்தோனேஷியாவிற்கு எந்த முஸ்லிம் படைத்தளபதி எந்த வாளைத்தூக்கிக் கொண்டு சென்றார்? 

மலேசியாவில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனரே அங்கு யார் படையெடுத்தார்?. 

சரி இன்று அமெரிக்காவிலும், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளிலும் இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறதே இங்கு எந்த இஸ்லாமியப் படை சென்றுள்ளது? எந்த நபி அந்நாட்டின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார்?

இப்படி எல்லாம் பல கேள்விகளை நாம் அடிக்கிக்கொண்டே போகமுடியும். இதுபோன்ற கேள்விகளை சுயசிந்தனையும், பகுத்தறிவுமுள்ள மனிதர்களிடம் கேட்கலாம் ஆனால் டாஸ்மார்க் பொய்யடியான் இவ்வாறு கேட்பதில் பயன் ஏதுமுண்டா?

Colgate Close- Up Technique:

இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யும் இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு டெக்னிக் என்னவென்றால், நாம் ஒன்றைச் சொன்னால், அவர்கள் வேறு ஒரு பதில் சொல்வார்கள். உதாரணத்திற்கு, ஒரு மலிகை சாமான் கடைக்குச் சென்று, கோல்கேட் பேஸ்ட் இருக்கின்றதா என்று கேட்டால், அந்த கடையில் அப்போதைக்கு கோல்கேட் இல்லையானால், அந்த கடைக்காரார் புத்திசாலியாக இருந்தால், "க்ளோசப் பேஸ்ட்" இருக்கிறது என்பார். ஆனால் கேட்டது கோல்கேட், அவர் சொல்வது க்ளோசப் இருப்பதாக. இப்படி இருக்கும் இவர்களின் வாதம். 

நான் பதித்த கட்டுரை "முகமது எப்படி இஸ்லாமை பரப்பினார்?" என்பதைப் பற்றியது. இவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல், இஸ்லாம் எப்படி இப்போது பரவுகிறது என்று சொல்கிறார்கள். இதைத் தான் நான் "கோல்கெட், க்ளோசட் டெக்னிக் – Colgate Close-up Technique” என்பேன்.

இஸ்லாமிய இணைய பேரவை அண்ணன்களா? முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்று முதலில் விளக்குங்கள், அவர் எழுதிய கடிதங்களில் அமைதியை கண்டுபிடியுங்கள். அதை விட்டுவிட்டு, இந்தோனேஷியாவில் எப்படி பரவியது, இன்று மேற்கத்திய நாடுகளில் எப்படி பரவுகிறது என்றுச் சொல்லி, கோல்கேட் கேட்பவருக்கு, க்ளோசப்பை விற்க முயற்சி எடுக்காதீர்கள்.

ஒன்று செய்யுங்கள், உங்கள் நபி அனுப்பிய கடிதங்கள் போல, எல்லா உலக நாடுகளுக்கும் கடிதங்கள் எழுதுங்கள், இஸ்லாமை ஏற்றுக்கொள், மறுத்தால் சண்டை தான் என்று எழுதுங்கள். நீங்கள் தான் உங்கள் நபியின் அடிச்சுவடிகளில் நடப்பவர்கள் தானே. இப்படி எழுதிப்பாருங்கள், பிறகு தெரியும், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமை எப்படித்தான் பரப்ப வேண்டும் என்று. மேற்கத்திய நாடுகளுக்கும் வேண்டாம், சைனாவிற்கும், ஜப்பானுக்கும் இப்படிப்பட்ட கடிதம் எழுதி அனுப்பும் படி இஸ்லாமிய நாடுகளை கேட்டுக்கொள்ளுங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கும் என்று?

இப்படி சொல்வதினால், நீங்கள் இஸ்லாமை பரப்பும் விதம் உங்கள் நபியைப்போல வன்முறையில் இல்லாமல், அமைதியான முறையில் பரப்புகிறோம் என்று உங்கள் நபிக்கு எதிராக நீங்களே சாட்சியிடுகிறீர்கள். உங்கள் நபியை விட நீங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்கிறீர்கள்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இவரது இரண்டாவது குற்றச்சாட்டின் சாராம்சம் 'பல குர்ஆன்கள் உள்ளன, எனவே குர்ஆன் பாதுகாக்கப் படவில்லை' என்பதாகும். (இதற்கு சகோதர வலைப்பதிவுகளில் ஏற்கனவே பதில் சொல்லப்பட்டுவிட்டது (பார்க்க :http://abumuhai.blogspot.com/2008/10/blog-post.html) .

இதற்கு ஏற்கனவே கட்டுரைகள் எழுதியுள்ளேன், இன்னும் பாக்கியுள்ளது, தொடர்ந்து வரும்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது:

இது போன்ற கருத்துக்களைத் தலைப்பாக வைத்துத்தானே விவாதிக்கத் தயாரா? என இவருக்கு விவாத அழைப்பு விடுத்தோம். உண்மையிலேயே இவருக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இருந்திருந்திருந்தால் இவர் கூறியதைப் போன்று குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்று நம் முன் நிரூபிக்க வந்திருக்க வேண்டுமல்லவா. மாறாக நம் விவாத அழைப்பைக் கண்டு இவர் ஓடி ஒழிந்ததேன்? 

நாமும் திருக்குர்ஆனின் தூய்மை நிலையையும், முரண்பாடற்ற தன்மையையும் நிரூபிப்பது மட்டுமல்லாமல் பைபிள் என்ற இவரது பரிசுத்த(?) வேத(காம)த்தின் லட்சனங்களை அந்த அவையிலே போட்டு உடைப்பதாகவும் சவால் விட்டோமே. இப்போது மீண்டும் குர்ஆன் சரியில்லை என்று இவர் எழுதிக் கொண்டு வருவது எதைக் காட்டுகிறது? இதற்குத்தான் இவரை நாம் டாஸ்மார்க் பொய்யடியான் என்று எழுதியுள்ளோம் சகோதரர்களே.

நேரடி விவாதத்திற்கு தான் வரமுடியாது என்றுச் சொன்ன பிறகும், வா வா என்று அழைத்தால் என்ன அர்த்தம், எழுத்து விவாதத்தில் தோல்வியை இஸ்லாம் தழுவிக் கொண்டு இருக்கிறது என்று மறைமுகமாக அங்கீகரிக்கிறீர்களா? 

இந்த சூடு, சொரனை ரோஷம் எல்லாம் யாருக்கு இருக்கிறது என்று காலம் பதில் சொல்லும், காத்துக்கொண்டு இருங்கள். 

ஏன் பயந்துப்போய், இப்படி அடிக்கடி ஒரே விவரத்தை ஒரு கட்டுரையாக பதிக்கிறீர்கள்? எங்கள் நபி நல்லவர், எங்கள் இஸ்லாம் அமைதியான மார்க்கம் என்று ஆயிரம் முறை சொன்னால் மட்டும் போதுமா? சொன்னதை உங்கள் செயல்களால் நிருபியுங்கள். உங்கள் நபி நல்லவரா என்று இப்போது அவரை அழைத்துவந்து வாழ்ந்துகாட்டுங்கள் என்று சொல்லமுடியாது. அவர் நல்லவர் என்பதை நீங்கள் அவரைப்போல வாழ்ந்து காட்டவேண்டும். அதை விட்டு, அழிபிறவி, ஷைத்தானின் நேரடி எஜென்ட், அநியாயக்காரர்கள் என்று நீங்கள் கூறுவதினால், உங்கள் முகமதுவின் உண்மை முகத்தை நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். ஒன்று மட்டும் நிச்சயம், நீங்கள் அதிகமாக பயந்துள்ளீர்கள். அதனால், தான் திட்டியாவது இவர்களை கட்டுரை எழுதாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று இப்படி செயல்படுகிறீர்கள்.

இஸ்லாம் இணைய பேரவை எழுதியது: 

குறிப்பு:- உண்மையடியான் என்ற இந்த ஆசாமியின் எழுத்துக்களும், பொய்ப் பிரச்சாரங்களும்; ஒட்டுமொத்த கிருஸ்தவர்களின் கருத்தல்ல. மேலும் உண்மையடியான் என்ற இந்த ஆசாமியைப் பற்றி நாம் விசாரித்தவரையில், தமிழக கிருஸ்தவர்களின் மத்தில் இவருக்கு எவ்வித அங்கீகாரமுமில்லை என்பதை அறிந்தோம். தமிழக கிருஸ்தவ சங்கங்களுக்கோ, இங்குள்ள பேராயர்களுக்கோ சற்றும் அறிமுகமில்லாத முகவரியற்றவர் உண்மையடியான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவேதான் அறியாமையினால் இவர் உளரும் உளறல்களை நாம் பெரிய அளவிற்கு பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வருகிறோம்.

ஒரு வேடிக்கையை இந்த கட்டுரையை படிப்பவர்கள் கவனிக்கவேண்டும். நாங்கள் எழுதும் கட்டுரைகளை ஒரு பொருட்டாக இவர்கள் எண்ணமாட்டார்களாம், அலட்சியம் செய்துவருகிறார்களாம், அப்படியானால், ஏன் கட்டுரைகளை எழுதுகிறீர்கள், அலட்சியம் செய்துவிட்டால், அப்படியே விட்டுவிடுவது தானே? ஏன் எங்களை திட்டி கட்டுரைகள் எழுதுகிறீர்கள்? எங்கள் கட்டுரைகளை அலட்சியம் செய்கிறோம் என்றுச் சொல்லிக்கொண்டே, அதிக முக்கியத்தும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

எங்களுக்கு அங்கீகாரம் இல்லையாம், தமிழ் கிறிஸ்தவ உலகில் அங்கீகாரம் இல்லையாம். அருமை அண்ணன்களே, நாங்கள் ஸ்தாபனம் வைத்து இந்த கட்டுரைகளை எழுதவில்லை, உங்களைப் போன்றவர்கள் பைபிளுக்கு எதிராக கிறிஸ்தவத்திற்கு எதிராக சொல்லிக்கொண்டு வரும் மூட்டை மூட்டையான பொய்களுக்கு தனிப்பட்ட முறைகள் மறுப்புக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் மட்டும் என்ன தமிழக முஸ்லீம்கள் அனைவரின் சார்ப்பில் எழுதும் ஐ எஸ் ஐ முத்திரை பதிக்கப்பட்ட எழுத்தாளர்களா? நாங்கள் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்துக்கொண்டு இருக்கவில்லை. பைபிளை படிக்கும் ஒவ்வொருவருக்கும், உங்களின் பொய் முகங்களை கிழிக்க அதிகாரம், அங்கீகாரம் உண்டு.

எங்களைப் பற்றி ஏன் விசாரிக்கவேண்டும், அதை விட்டு விட்டு, ஒரு சர்வே எடுங்கள், அதாவது தமிழ் கிறிஸ்தவர்களிடம் சென்று, எங்கள் தளம் பற்றிச் சொல்லி, எங்கள் கட்டுரையைப் பற்றிச் சொல்லி, பல கேள்விகள் கேட்டு சர்வே எடுங்கள், அப்போது உங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கும். எங்கள் தள கட்டுரைகளை தமிழ் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்து, எங்கள் கட்டுரைகள் அனைத்தும் படிக்கும்படி அவர்களுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். இப்படி கட்டுரை எழுதும் கிறிஸ்தவர்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? என்று கேட்டுப்பாருங்கள். அப்போது தான் நன்றாக இருக்கும், ஏனென்றால், வெறும் இணையம் பயன்படுத்தும் சிலருக்குத் தான் எங்கள் கட்டுரைகள் பற்றித் தெரியும், இப்படி சர்வே நீங்கள் எடுத்தால், இன்னும் எல்லாருக்கும் தெரியவரும். உங்களுக்கும் சர்வே எடுத்து உண்மையை கண்ட திருப்தி இருக்கும். “தவலை தன் வாயாலே கெடுமாம்” என்று ஒரு பழமொழி உள்ளது. எப்படி வசதி?

முடிவாக, இந்தியாவில் ஒற்றுமையாக வாழும் மக்களை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, அது உங்களுக்கு வேண்டுமானால், இருக்கலாம். நான் மறுப்புச் சொல்வது, இஸ்லாமியர்களுக்கு அல்ல, இஸ்லாமுக்கு, முஸ்லீம்களுக்கு அல்ல முகமதுவிற்கு எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயக நாட்டில் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்றுச் சொல்வது சுலபம், முதலாவது இஸ்லாமிய நாட்டில் மற்ற மதத்தவர்களை கொன்று குவிக்கும் அநியாயத்தை முதலில் தட்டிக்கேளுங்கள். பிறகு பார்க்கலாம், உங்கள் நேசம், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி போன்றவைகளின் வீரியம்.


இஸ்லாம் இணைய பேரவை தளத்திற்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்