இயேசு இறைவனா? குர்ஆன் இறைவனா? (ஏன் உமர் தன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் என்று பெயரை வைத்தார்?)
தமிழாக்க அறிமுகம்: இந்த சிறிய கட்டுரை ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு கிறிஸ்தவருக்கு இடையே நடந்த ஒரு சிறிய உரையாடல் பற்றிச் சொல்கிறது. முக்கியமாக:
குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இயேசு இறைவனின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.
- குர்ஆன் --> ஒரு புத்தகம்
- இயேசு --> ஒரு மனிதர்
குர்ஆனை எல்லாரும் ஒரு புத்தகமாக பார்க்கிறோம், படிக்கிறோம் தொடுகிறோம், இருந்தாலும், அது தெய்வீகமானது என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். அதே போல, இயேசுவை மக்கள் பார்த்தார்கள், தொட்டார்கள் பேசினார்கள், இருந்தாலும் இயேசு அழிவில்லாதவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அழிவில்லாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எப்படி ஒரு அழிவுள்ள ஒரு புத்தகமாக நம் கரங்களில் இருக்கிறது? ஒரு பொருள் "அழிவில்லாததாயும், அதே நேரத்தில் அழியக்கூடியதாகவும்" எப்படி இருக்கமுடியும்?
என்னுடைய தளத்திற்கும் நான் "ஈஸா குர்ஆன்" என்ற பெயர் வைத்ததற்கும் இதுவே காரணம். எது சத்தியம் அல்லது யார் சத்தியம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும், ஈஸாவா (தேவனின் வார்த்தை) அல்லது குர்ஆனா (அல்லாஹ்வின் வார்த்தை)?
பிரச்சனை யேகோவா தேவனுக்கும்,அல்லாஹ்விற்கும் இல்லை... பிரச்சனை இயேசுவிற்கும், குர்ஆனுக்கும் தான், ஏனென்றால் இரண்டும் இறைவனின் வார்த்தை என்று நம்பப்படுகின்றது.
(இதனை புரிந்துக்கொள்ளாமல் சிலர் எனக்கு அடிக்கடி "உன் தளத்தின் பெயரை மாற்று, "ஈஸா பைபிள்" என்று உன் தளத்திற்கு பெயரை வைத்துக்கொள் என்றுச் சொல்கிறார்கள், அவர்களுக்கு புரிந்தது அவ்வளவு தான்).
இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தை படியுங்கள்: http://www.answering-islam.org/Hahn/isjesusgod.htm
முஸ்லிம்: கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி "இயேசு தெய்வமா?"
கிறிஸ்தவன்: உங்கள் கேள்விக்கு விடையாக நான் ஒரு கேள்வியை கேட்டு பதில் கூறுகிறேன். "குர்ஆன் இறைவனின் வார்த்தையாகும், அது அழிவில்லாத நித்திய வார்த்தையாகும் " என்று இஸ்லாமியர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படியானால், "குர்ஆன் இறைவனா? " என்பது தான் என் கேள்வி (இதற்கு நீங்கள் சொல்லும் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது)
முஸ்லிம்: நிச்சயமாக இல்லை, "குர்ஆன் இறைவனல்ல".
கிறிஸ்தவன்: "குர்ஆன் இறைவன் இல்லை" என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், "குர்ஆன் ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகும், தற்காலிகமானதாகும், உருவாக்கப்பட்டதாகும்" என்று பொருள், இது சரியா?.
முஸ்லிம்: இல்லை இல்லை. இது எளிதாக புரியும் விவரமல்ல.
கிறிஸ்தவன்: அப்படியானால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், "குர்ஆன் இறைவன் இல்லை மற்றும் அந்த குர்ஆன் உருவாக்கப்பட்டதும் இல்லை" என்று சொல்லவருகிறீர்களா? குர்ஆன் இறைவனல்ல, அதே நேரத்தில் தற்காலிகமானதும் அல்ல என்றுச் சொல்கிறீர்கள், சரி... நீங்கள் என்னை சொல்லவருகிறீர்கள் என்பதை மேலும் விளக்குங்களேன்.
முஸ்லிம்: இஸ்லாமின் படி "இறைவனின் வார்த்தையாகிய குர்ஆன் இறைவன் அல்ல மற்றும் இறைவன் அல்லாததும் அல்ல".
கிறிஸ்தவன்: ஒரு நிமிஷம் இருங்க. குர்ஆன் இறைவனும் அல்ல, குர்ஆன் இறைவன் அல்லாததும் அல்ல.. இந்த வாக்கியத்தில் முரண்பாடு தெரிகின்றதா? குர்ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்ஆன் இறைவன் அல்லாததும் அல்ல என்று நீங்கள் சொல்வதினால்...
- "குர்ஆன் இறைவன் அல்ல" மற்றும் " குர்ஆன் இறைவன் தான்" என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது
- குர்ஆன் இறைவனாக இல்லாமல் இருந்தாலும், அது இறைவனாக இருக்கிறது என்றுச் சொல்லவருகிறீர்களா?
இறைவனுக்கும் மேலான ஒன்றாக குர்ஆன் இருக்கிறது என்ற நோக்கத்தில் சொன்னாலும்.. குர்ஆன் கூட ஒரு புத்தகம் தானே அல்லது புத்தகமாகிய மாறியது தானே!
முஸ்லிம்: இஸ்லாமின் படி, குர்ஆன் என்பது இறைவனின் அழிவில்லாத வார்த்தைகளாகும். பாதுகாக்கப்பட்ட பலகைகளில் பதிக்கப்பட்ட நித்தியமாக இருக்கின்ற அல்லாவின் வார்த்தைகளை பிரதிபலிப்பதே குர்ஆன் ஆகும். ஜிப்ராயில் தூதன் மூலமாக பூமியில் வாழ்ந்த முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதுதான் குர்ஆன் ஆகும் என்று குர்ஆனே சொல்கிறது
கிறிஸ்தவன்: குர்ஆன் என்பது "இறைவனின் அழிவில்லாத வார்த்தை" மக்களுக்கு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், குர்ஆனை ஒரு புத்தகம் என்றுச் சொல்லலாமா? (நாம் கண்களால் காணக்கூடிய புத்தகமா?)
முஸ்லிம்: ஆம், இஸ்லாமின் படி, குர்ஆன் என்பது இரண்டும் சேர்ந்தது அதாவது "உருவாக்க முடியாதது (Uncreated)" மற்றும் அதே நேரத்தில் "உருவாக்கியது (Created)".
இறைவனின் அழிவில்லாத நித்திய வார்த்தைகள் ஒரு புத்தகமாக நம்மிடம் வந்துள்ளது. இது விவரிப்பதற்கு சிறிது கடினமே...
உருவாக்கப்படாதது (Uncreated) மற்றும் உருவாக்கப்பட்டது (Created) இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குவது சிறிது கடினமே..
கிறிஸ்தவன்: உங்களுடைய விளக்கத்தை எத்தனை முஸ்லிம்கள் அறிந்து இருக்கிறார்களோ எனக்குத் தெரியாது, எனக்கு ஆச்சரியமாகவும் உள்ளது. இருந்தபோதிலும், உங்களுடைய விளக்கத்திற்காக உங்களுக்கு என் நன்றிகள். உங்கள் விளக்கத்தின் மூலமாக, தேவனுக்கும், இயேசுவிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை இஸ்லாமியர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள ஒரு சிறிய விளக்கத்தை நான் கூறட்டுமா? இதைத் தானே நீங்கள் ஆரம்பத்தில் கேள்வியாக கேட்டீர்கள்?
இஸ்லாமியர்கள் குர்ஆனைப் பற்றி கூறும் போது:
- "குர்ஆன் இறைவனின் வார்த்தையாக இருக்கிறது, அது இரண்டையும் கொண்டுள்ளது, அதாவது "அதை உருவாக்கவும் முடியாது" அதே நேரத்தில் அது "இவ்வுலகில் உருவாக்கப்பட்டும் உள்ளது ".
- குர்ஆன் "அழிவில்லாததாகவும் உள்ளது", அதே நேரத்தில் இவ்வுலகில் "தற்காலிகமானதாகவும் உள்ளது".
- குர்ஆன் ஒரு "எல்லைக்குள் உட்படாததாகவும்" உள்ளது, அதே நேரத்தில் இவ்வுலகில் "ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகவும் உள்ளது" என்று கூறுவார்கள்.
இதே போல, பைபிள் கூறும் இயேசுக் கிறிஸ்து கூட, இறைவனின் வார்த்தையாக உள்ளார்:
- அவரை யாரும் உருவாக்கவும் முடியாது, அதே நேரத்தில் அவர் இவ்வுலகில் உருவாகியும் உள்ளார்.
- இயேசு அழிவில்லாதவராகவும் உள்ளார் அதே நேரத்தில் இவ்வுலகில் தற்காலிகமாக வாழ்ந்தவராகவும் இருந்தார்.
- இயேசு ஒரு எல்லைக்குள் உட்படாதவராகவும் உள்ளார், அதே சமயத்தில் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு எல்லைக்குள் உட்பட்டும் இருந்தார் .
- பைபிளின் படி, இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக அல்ல, ஒரு மனிதனாக வந்தார், அவர் தான் இயேசுக் கிறிஸ்து.
இங்கு இன்னொரு விஷயத்தை சுருக்கமாக நான் சொல்லட்டும், கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு மனிதராக, ஒரு தீர்க்கதரிசியாக, "தேவனுடைய இடத்தை" பிடித்துவிட்ட இன்னொரு தேவனாக பார்ப்பதில்லை. இதற்கு மாறாக, பைபிள் தெளிவாக கூறுகிறது, "தேவன் தம்மைத் தாமே தம்முடைய அழிவில்லாத வார்த்தை மூலமாக மனிதனாக வெளிப்படுத்தினார், ஒரு தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தினார், அவர் பெயர் தான் இயேசு".
இறைவன் விரும்பினால், இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக வரமுடியுமானால், ஏன் அந்த அழிவில்லாத வார்த்தை ஒரு மனிதாக வரமுடியாது?
தம்மை தாமே மனிதனாக வெளிப்படுத்த தேவன் சித்தம் கொண்டார் அல்லது விரும்பினார் என்று பைபிள் கூறுகிறது. இது தான் இயேசுவிற்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையாகும்.
நம்முடைய இந்த முதலாம் உரையாடலில், இதைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் பேசலாம், இருந்தாலும் அடுத்த உரையாடலில் தொடருவோம்.
ஆங்கில மூலம்: IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question
தமிழ் மூலம்: http://isakoran.blogspot.in/2011/10/blog-post.html