சலீமுடைய குர்ஆன் எங்கே?
"முஸ்லிம்கள் குர்ஆனை கற்க" தகுதியான மற்றும் சிறந்த நான்கு தோழர்களின் பெயர்களை முஹம்மது முன்மொழிந்தார். இந்த நான்கு பேர்களில் சலீம் என்பவர் ஒருவர் ஆவார்.
உண்மையில், முஹம்மதுவின் தோழர்களில் முதன் முதலில் குர்ஆனை எழுத்து வடியில் சேகரித்து எழுதி வைத்திருந்தவர் 'சலீம்' ஆவார். (சுயூதி, அல்இத்கான், பக்கம் 135 - As Suyuti, Al-Itqan fii `Ulum al-Qur’an, Vol.1 p.135).
சலீம் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் இருந்தார். சலீமின் இந்த குர்ஆன் எவ்வளவு விலைமதிப்பற்ற, வரலாற்று மதிப்புமிக்க புத்தகமாக இருந்திருக்க வேண்டும்!
துரதிர்ஷ்டவசமாக, யமாமா போரில் சலீம் இறந்தார், ஆனால் அவர் எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து முஸ்லிம் தலைமுறையினருக்கும் குர்ஆனின் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றார் - அது தான் அவர் தொகுத்திருந்த குர்ஆன் கையெழுத்து பிரதி.
முஹம்மது அறிவுரை கூறியது போன்று இன்றைய முஸ்லிம்களும் சலீமிடமிருந்து அல்லது அவரது குர்ஆன் பிரதியிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா?
துரதிர்ஷ்டவசமாக, இல்லை.
சலீமின் கையெழுத்துப் பிரதி எரிக்கப்பட வேண்டும் என்று உஸ்மான் கட்டளையிட்டார்! ஏன்? அவர் சலீமின் குர்ஆனைப் பற்றி பொறாமைப்பட்டாரா மற்றும் தன் பெயர் தாங்கிய குர்ஆன் பிரதியை முஸ்லிம்கள் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினாரா?
முஹம்மதுவின் கட்டளையின்படி முஸ்லிம்கள் இன்று சலீமிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. இந்த வாய்ப்பை முஸ்லிம்கள் இழப்பதற்கு காரணம் மூன்றாம் கலிஃபா உஸ்மான் அவர்கள் தான். இதற்கு உஸ்மானுக்கு முஸ்லிம்கள் நன்றி சொல்லவேண்டும்!
முஹம்மதுவின் கட்டளையை உஸ்மான் ஏன் மீறினார்?
முஹம்மது அங்கீகரித்த சலீமின் குர்ஆன் தொகுப்பு எரிந்து சாம்பளாகிவிட்டது. இன்று முஸ்லிம்கள் யார் தொகுத்த குர்ஆனை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்?
முஹம்மதுவின் தொழர்கள் அனைவரும் குர்ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்ததால், சலீம் தொகுத்த குர்ஆன் அழிக்கப்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர்.
அப்படியானால், சலீமின் குர்ஆன் கையெழுத்துப் பிரதி ஏன் அழிக்கப்பட்டது? அவர் அதை சரியாக மனப்பாடம் செய்யவில்லையா? குர்ஆனை ஒரு புத்தகமாக முதலில் சேகரித்தவர் அவர். இன்றைய குர்ஆனில் இல்லாத ஒன்று அதில் உள்ளதா? சலீமின் குர்ஆனில் உஸ்மானுக்கு ஒத்துவராத விவரம் இல்லாமல் இருந்தால், ஏன் அவர் அந்த குர்ஆனை அழிக்க முயன்றார்? உஸ்மானுக்கு சலீமின் குர்ஆனை அழிக்க ஏதாவது ஒரு காரணம் கிடைத்ததா?
உஸ்மானின் கட்டளைப்படி அழிக்கப்பட்டது வெறும் சலீமின் குர்ஆன் கையெழுத்து பிரதி மட்டுமல்ல, முஹம்மதுவினால் நியமிக்கப்பட்ட இதர சிறந்த குர்ஆன் அறிஞர்களின் கையெழுத்துப் பிரதிகளும் அழிக்கப்பட்டன. முஹம்மதுவினால் சிறந்த குர்ஆன் ஓதுபவர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸூத் மற்றும் உபய் பின் காப் போன்றவர்களும் இருந்தார்கள். இவர்களின் குர்ஆன் கையெழுத்துப்பிரதிகள் கூட அழிக்கப்பட்டது ஏன்?
இவர்களின் குர்ஆன் ஓதுதலும், கையெழுத்துப் பிரதிகளும் பிழையாக இருக்கும் என்று கூட சொல்லமுடியாது, ஏனென்றால், இவர்களிடத்தில் தவறு இருந்திருந்தால், இவர்களிடம் குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று ஏன் முஹம்மது சொல்லுவார்? இவர்கள் சிறந்த குர்ஆன் ஓதும் அறிஞர்கள் என்று முஹம்மது முடிவு செய்தது தவறு என்று சொல்லமுடியுமா? சிறந்த குர்ஆன் ஆசிரியர்களை அடையாளம் காண்பதில் முஹம்மது தவறு செய்தாரா? இதுமட்டுமல்ல, இவர்களில் உபய் பின் காப் என்பவர் சிறந்த குர்ஆன் ஓதுபவர் என்று சஹீஹ் புகாரியிலும் சொல்லப்பட்டுள்ளது. இப்படி இருந்தும், இவருடைய குர்ஆன் கையெழுத்துப் பிரதி கூட அழிக்கப்பட்டது.
முஹம்மதுவின் தோழர்கள் அனைவரும் குர்ஆனை முழுமையாக தவறில்லாமல் மனப்பாடம் செய்திருந்தால் அவர்களின் ஓதுதல், கையெழுத்துப் பிரதிகள் ஏன் தவறாக இருக்கும்? ஒருவேளை ஒவ்வொருவரும் குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்யாமல், ஒவ்வொருவரும் குர்ஆனின் வெவ்வேறு பகுதிகளை மனப்பாடம் செய்தார்களா? முஹம்மதுவின் தோழர் சலீம் எப்படி குர்ஆனை மனப்பாடம் செய்தாரோ, எப்படி அவர் குர்ஆனை ஓதினாரோ அதே போல நீங்களும் இன்று ஓதுகிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரது குர்ஆன் அழிக்கப்பட்டுவிட்டதால், இதனை எப்படி நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்?
ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/where-is-salims-quran/