முஸ்லிம்கள் வெறுக்கும் "அந்த ஒரு நல்ல‌ முஸ்லிம்" யார்?

(The Muslim That Muslims Hate)

எல்லா தீர்க்கதரிசிகளும் முஸ்லிம்களாவார்கள்” என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். மேலும், அனைத்து தீர்க்கதரிசிகளும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்களாக‌/சமர்ப்பித்தவர்களாக இருந்தார்கள் என்றும் முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இஸ்லாம் என்றால் "சமர்ப்பணம் - Submission" என்று பொருள் என்பதாலும், எல்லா தீர்க்கதரிசிகளும் இறைவனுக்கு சமர்ப்பித்தவர்களாக இருந்ததாலும், அவர்கள் அனைவரும் "முஸ்லிம்களே" என்ற கருத்தை முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள்.

ஆபிரகாம், மோசே, யோசேப்பு, தாவீது மற்றும் பலர் இறைவனுக்கு தங்களை சமர்ப்பித்தவர்களாக இருந்தார்கள் என்றும், அதற்கு சான்றாக பைபிளை முஸ்லிம்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.

முஸ்லீம்கள் பயன்படுத்தும் அதே அளவுகோலைப் பயன்படுத்தி, "அதாவது முஸ்லீம் என்றால் இறைவனுக்கு தம்மை சமர்ப்பித்தவர்" என்று பொருள் என்ற அளவுகோலை வைத்துக்கொண்டு, அனைத்து முஸ்லிம்களும் தவறவிட்ட ஒரு முக்கியமான “முஸ்லிமை” பைபிளிலிருந்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன்! 

அவர் தான் "பவுல் - Paul (Bulus in Arabic)", இவரை வெறுக்கவேண்டுமென்றும், புறக்கணிக்கவேண்டுமென்றும் முஸ்லிம்கள் போதிக்கப்பட்டுள்ளார்கள்.

பவுலடியார் மீது முஸ்லிம்களின் இந்த வெறுப்பு நியாயமானதா? பவுலடியார் தம்மை இறைவனுக்கு சமர்ப்பித்தவராக இருந்தாரா? மற்றவர்களும் தம்மைப்போன்று இறைவனுக்கு தங்களை சமர்ப்பிக்கவேண்டுமென்று இவர் போதிக்கவில்லையா என்பதை இப்போது சுருக்கமாக பார்ப்போம்.

பவுலடியார் இறைவனுக்கு சமர்ப்பிப்பதைப் பற்றி என்ன கூறினார்?

ஆம், ரோமர் 12:1ல், எல்லோரும் தங்களை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும், இதுவே புத்தியுள்ள தொழுகை/ஆராதனை என்று வேண்டிக்கொண்டார்:

ரோமர் 12:1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று (Submission), தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

I கொரிந்தியர் 9:27ம் வசனத்தில், தம்மை கீழ்படியப்பண்ணும்படி செய்கிறார் என்று கூறுகிறார்:

I கொரிந்தியர் 9:27. மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

ரோமர் 10:3ல், பவுலடியார், தேவனுக்கு கீழ்படியாதவர்களை கடிந்துக்கொண்டு பேசுகிறார்:

ரோமர் 10:3. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.

சில வேளைகளில் சில முஸ்லிம்கள், பைபிளில் சொல்லப்பட்ட தொழுகை முறை, தங்கள் தொழுகை முறைபோலவே உள்ளது என்று சொல்வார்கள். பவுலடியாரும், அப்படியே தொழுகை செய்தாரா?

எபேசியர் 3:15ல், பவுலடியார், தாம் முழங்கால்படியிட்டு பிரார்த்தனை செய்ததாக கூறுவார். இதனை முஸ்லிம்கள் இஸ்லாமிய முறையிலான தொழுகை என்பார்கள்.

எபேசியர் 3:15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

இப்போது சில முஸ்லிம்கள், "ஒரு நிமிடம் நில்லுங்கள், பவுலடியார் 3 தெய்வங்களை வணங்கும்படி போதிக்கவில்லையா? அப்படியிருக்கும்போது, அவர் எப்படி ஒரு முஸ்லிமாக முடியும் என்று கேள்வி கேட்பார்கள்"?

இந்த கூற்றில் உண்மையில்லை. பவுலடியார் ஒரு போது மூன்று தெய்வங்களை வணங்குங்கள் என்று போதிக்கவில்லை. இது ஒரு சக முஸ்லீம் (பவுலடியார்) மீது முஸ்லிம்கள் வைக்கும் அவதூறாகும். எந்த ஒரு இடத்திலும் அவர் மூன்று தெய்வங்களை வணங்குங்கள் என்று போதிக்கவே இல்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரே ஒரு தேவன் இருக்கிறார் என்று போதித்துள்ளார். இதைத்தான் முஸ்லிம்கள் ஷஹதா என்பார்கள்.

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, . . .

I தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே . . .

மேலும் குர்‍ஆனும் பவுலடியாரைப் பற்றி 36:14ல் கூறுகிறது:

குர்‍ஆன் 36:14. நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

அல்லாஹ் அனுப்பிய இந்த மூன்று தூதர்கள் யார்? அவர்களின் பெயர்களை குர்ஆன் நமக்கு வழங்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் பரவலாக பயன்படுத்தும் இப்னு கதீர் என்ற புகழ்பெற்ற‌ விளக்கவுரையில், கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

<so We reinforced them with a third> means, ‘We supported and strengthened them with a third Messenger.’ Ibn Jurayj narrated from Wahb bin Sulayman, from Shu’ayb Al-Jaba’i, "The names of the first two Messengers were Sham’un and Yuhanna, and the name of the third was Bulus, and the city was Antioch ...

அல்லாஹ் அனுப்பிய அந்த மூன்று தூதர்களின் பெயர்களாவன: சீமோன்(Sham’un), யோவான் (Yuhanna) மற்றும் பவுல் (Bulus).

புலஸ் (Bulus) என்பது லத்தீன் வடிவமான Paulus என்பதிலிருந்து வந்த அரபி பெயராகும்.

அல்லாஹ் பவுலை தூதராக அனுப்பியதற்கு குர்ஆன் மற்றும் தஃப்சீர் ஆதாரம் காட்டினோம். அல்லாஹ் அனுப்பிய தூதரை மறுத்து அவரை வெறுத்து ஏன் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அவமதிக்கிறார்கள்?

ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/the-muslim-that-muslims-hate/

அடிக்குறிப்புக்கள்:

1) https://imuslim.name/1076-meaning-Bulus-muslim-arabic-names.html

  • The name Bulus (Arabic writing : بولس) is a Muslim boys Names. The meaning of name Bulus is " Arabic form of PAUL "

2) https://www.behindthename.com/name/bulus


ஃபெயித் ப்ரவுசர் (Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்