அன்புள்ள அப்பா(அல்லாஹ்)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதங்கள்
[ஆயிஷா பி.எஸ்.சி முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். குடும்பத்தில் மொத்தம் 5 பேர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் தாய். தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார். முத்தமகள் என்பதால் குடும்ப பாரம் சுமக்கும் பொறுப்பு ஆயிஷாவின் மீது விழுந்தது. ஒரு சொந்த வீடு தவிர, வேறு சொத்து ஒன்றுமில்லை. தனக்கு வயது 24ஐ தாண்டிவிட்டது. தம்பிக்கு இப்போது வயது 7 ஆகிறது. இரண்டு சகோதரிகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். குர்-ஆனை அரபியில் பலமுறை படித்தாகிவிட்டது. முதல் முறை குர்-ஆனை படித்துமுடிக்கும் போது, அப்பா ஒரு விருந்து செய்து சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்கு மரியாதை செய்தது இன்னும் மனதைவிட்டு மறையவில்லை. ஒரு நாள் ஆயிஷாவிற்கு ஒரு யோசனை வந்தது, இன்றிலிருந்து குர்-ஆனை தமிழில் படிக்கலாம் என்று, தமிழ் குர்-ஆனை வாங்கினாள், படித்தாள், இதோ தன் சந்தேகங்களை கடிதமாக அல்லாவிற்கே எழுதுகிறாள்.]