குர்‍ஆனின் வினோதமான இரத்து செய்தல் - குர்‍ஆன் 33:52: கரு உண்டாவதற்கு முன்பாகவே கருக்கலைப்பு செய்த அல்லாஹ்

முந்தைய கட்டுரையில், அல்லாஹ் ஒரு கட்டளையை குர்‍ஆனில் வசனமாக இறக்கி அதனை ஒரே மணி நேரத்தில் இரத்து செய்த விவரத்தை ஆய்வு செய்தோம். இன்று அதை விட வினோதமான இன்னொரு அல்லாஹ்வின் ஞானச் செயலைக் காண்போம்.

ஒரு கட்டளை பிறப்பதற்கு முன்பே அதை இரத்து செய்யும் கட்டளையை அல்லாஹ் இறக்கியுள்ளான். இதனை நீங்கள் அறிவீர்களா? ஒரு கரு கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பாகவே, அதை கருக்கலைப்பு செய்ய ஒரு ஆண் முடிவு செய்தால் எப்படி இருக்கும்?

இந்திய பிரதமரும் 300 ரூபாய் நோட்டும்:

மேற்கண்ட அல்லாஹ்வின் செயல் எப்படி உள்ளதென்றால், திடீரென்று இன்று (நவம்பர் 24, 2019) இரவு இந்திய பிரதமர் தொலைக்காட்சியில் காணப்பட்டு,  அடுத்த மாதம், டிசம்பர் 1ம் தேதியிலிருந்து  300 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது (Demonetization - பண மதிப்பிழப்பு) என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 

இதனை கேட்கும் மக்கள், “என்ன ஆச்சு இவருக்கு!? இன்னும் 300 ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சிடவில்லை மக்களிடம் கொண்டுவரவில்லை, அதற்குள் அதை இரத்து செய்து அரசு கட்டளையிடுகின்றதே, இது என்ன பைத்தியக்காரத்தனம்!” என்று கேள்வி கேட்பார்கள் அல்லவா!

அடுத்த நாள் (நவம்பர் 25, 2019) இரவு மறுபடியும் தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி, இந்திய அரசாங்கம் 300 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் அறிமுகம் செய்கிறது, இனி எடிஎம்களில்  (ATM) 300 நோட்டுக்கள் வரும் என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

  1. டிசம்பர் 1ம் தேதி முதல் 300 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என்று முதல் சட்டம் வருகிறது. அதுவும் நவம்பர் 24ம் தேதி வருகிறது.
  2. நவம்பர் 25ம் தேதி,  300 நோட்டுக்களை அரசாங்கம் முதன் முதலாக  மக்களிடம் கொண்டு வருகிறது.
  3. அரசு  வெளியிடும் நோட்டுக்கள் நவம்பர் 25 முதல் 30 வரை மட்டும் தான் செல்லுபடியாகும், டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அது செல்லுபடியாகாது.

முதலில் 300 ரூபாய் நோட்டுக்களை இரத்து செய்யும் கட்டளையை கொடுத்துவிட்டு, அதன் பிறகு அந்த ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவது ஒரு முட்டாள்தனமான செயல் அல்லவா என்று மக்கள் கருதுவார்கள். இந்த இரண்டு காரியங்களை தலைகீழாக செய்வதை விட்டுவிட்டு, பிரதமர் சும்மா இருந்திருந்தாலே மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்களே!

இப்படித்தான் குர்‍ஆனில் அல்லாஹ் முதலாவது இரத்துசெய்யும் வசனத்தை கட்டளையை இறக்கிவிட்டு, அதன் பிறகு எந்த வசனம் இரத்து செய்யுமோ, அதை இரண்டாவதாக இறக்குகின்றான்.

இது விசித்திரமில்லையா! இது ஆச்சரியமில்லையா! அல்லாஹ் என்ற சர்வ ஞானி இப்படி முட்டாள்தனமாக செயல்படுவானா?

300 ரூபாயை முதலில் இரத்து செய்துவிட்டு, அதன் பிறகு அந்த நோட்டுக்களை மக்களிடம் கொண்டு வந்து 5 நாட்கள் புழக்கத்தில் விடுவது, முட்டாள்தனமாகத் தோன்றவில்லை!

அல்லாஹ்வின் இந்த செயலுக்கு ஆதாரமென்ன?

ஸுயுதி என்ற இஸ்லாமிய அறிஞர் இதனை தன் புத்தகத்தில் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட வசனங்கள் 2 உள்ளன என்று அவர் கூறுகின்றார், இதர அறிஞர்கள் இப்படிப்பட்ட வசனங்கள் 3 அல்லது 4 உள்ளது என்று சொல்வதாக இவரே சொல்கிறார்.

Suyuti quote:

Some scholars have said that in all cases except the following two the abrogating verse appears before the abrogated: these verses are the verse of the waiting period that appears in '1- Baqara, and the verse: "Unlawful to you are women. . ."(33:52) which was examined previously. Others have added a third: the 'spoils of war' verse in chapter '1-Hashr said to have been abrogated by the verse: "Know that whatever spoils of war you capture. . ."(8:41) Some have added a fourth: "Show clemency. . ."(7:199)that is, by taking only the surplus of their possessions. This is according to those who believe that it has been abrogated by the verse ordaining zakat.

மூலம்:  Al-Itqan fi Ulum al-Qur'an  by Jalaluddin Suyuti, English Translation by Muneer Fareed  

இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய தொடுப்பு:  Link

இஸ்லாமிய  அறிஞர் ஸுயுதி சொல்வது என்னவென்றால், குர்‍ஆன் 33:50 & 51ம் வசங்களை  முதலாவது அல்லாஹ் இறக்கி, முஹம்மதுவிற்கு (கணக்கில்லா) பெண்களை  திருமணம் செய்ய அனுமதிக்கிறான். ஆனால் அடுத்த‌ வசனத்தில் அதாவது குர்‍ஆன் 33:52ல், சில பெண்களை மட்டுமே திருமணம் செய்யவேண்டும் என்று முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். தன் விருப்பப்படி திருமணங்கள் செய்யக்கூடாது, ஒருவேளை வேறு பெண்களின் அழகு முஹம்மதுவை ஈர்த்தாலும் சரி, அவர் இப்படி செய்யக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹ் ஞானமுள்ளவனாக இருந்திருந்தால், என்ன செய்து இருந்திருக்கவேண்டும்? முதலாவது 33:52ம் வசனத்தை இறக்கியிருக்கவேண்டும் (சில பெண்களை மட்டுமே திருமணம் செய்ய முஹம்மதுவிற்கு  கட்டுப்பாடு இடும் வசனம் 33:52). சில நாட்கள்/மாதங்கள் கழித்து 33:50 & 51ம் வசனங்களை இறக்கி, தான் விதித்த கட்டுப்பாட்டை நீக்கி இருக்கவேண்டும். 

ஆனால், இங்கு எப்படி உள்ளதென்றால், முதலாவது விதிவிளக்கு அளிக்கின்றான் அல்லாஹ்? எதிலிருந்து விதிவிளக்கு அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினால், அதன் பிறகு தான் 52ம் வசனம் வருகிறது. இதற்கு  அவர் 52ம் வசனத்தை  இறக்காமல் இருந்திருந்தாலே சரியாக இருந்திருக்கும்.

இப்போது அந்த மூன்று வசனங்களையும் படிப்போம்:

விதிவிலக்கு அளிக்கும் வசனங்கள் (33:50-51):

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

குர்‍ஆன் 33:52 (இரத்து செய்யப்பட்ட வசனம்):

33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

(டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த விஷயத்தில் தவறாக இருந்திருக்கலாம் அல்லவா?

சில முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்த வினோதமான இரத்துசெய்தல் பிரச்சனையை சமாளிப்பதற்கு,  குர்‍ஆன் 33:50-52 வரையிலான வசனங்கள் சரியான வரிசையில் தான் உள்ளது என்று சொல்லலாம். அதாவது, குர்‍ஆன் 33:50-51 முதலாவது இறங்கியது, முஹம்மது தன் விரும்பிய படி பெண்களை திருமணம் செய்யலாம், விவாகரத்து செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு 52வது வசனத்தில் அந்த சலுகை நீக்கப்பட்டது என்று சொல்லக்கூடும்.

இது உண்மையென்றால், இந்த வசனம் 33:52 இறக்கப்பட்ட பிறகு முஹம்மது வேறு எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருந்திருக்கக்கூடாது.

இந்த அத்தியாயம் (33) ஹிஜ்ரி 5ம் ஆண்டு இறக்கப்பட்டதாக முஸ்லிம் அறிஞர்கள் அறிவிக்கிறார்கள் (Link 1 & Link 2). 

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த ஆண்டு கி.பி. 622 ஆகும், இந்த ஆண்டோடு 5 ஆண்டுகள் கூட்டினால், 622 + 5 = 627ம் ஆண்டு ஆகிறது.  ஆக, 33ம் அத்தியாயம் 627ம் ஆண்டு இறக்கப்பட்டு இருந்திருக்கின்றது, மேலும் முஹம்மது மரித்த ஆண்டு, 632 ஆகும். இதன்படி கணக்கிட்டால், 33:52ம் வசனத்திற்கு பிறகு முஹம்மது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் (627 லிருந்து 632 வரை) வாழ்ந்திருக்கின்றார்.  இஸ்லாமிய அறிஞர் ஸுயூதி குறிப்பிட்டது பொய் என்று கருதி, நம் முஸ்லிம்கள் சொல்வது மெய் என்று கருதினால், இந்த ஐந்து ஆண்டுகளில் முஹம்மது ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருந்திருக்கக்கூடாது.

இந்த ஐந்து ஆண்டுகளில் முஹம்மது ஒரு திருமணத்தையும் செய்யவில்லை, திருமண ஒப்பந்தம் கூட செய்யவில்லை என்று முஸ்லிம்கள் நிருபிக்கமுடியுமா?

கீழ்கண்ட பக்கத்தில் முஹம்மதுவின் திருமணங்கள், விவாகரத்துக்கள், திருமணம் ஒப்பந்தங்கள் பற்றி ஆண்டுவாரியான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

https://wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines

முஹம்மதுவின் மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகள் பட்டியல்:

Wives and Concubines

No. NameStatusDate
1Khadijah bint KhuwaylidMarriedJuly 595
2Sawda bint Zam'a  Married though with limited rightsMay 620
3Aisha bint Abi Bakr MarriedContracted May 620 but first consummated in April or May 623
4Hafsa bint UmarMarriedJanuary or February 625
5Zaynab bint KhuzaymaMarriedFebruary or March 625
6Hind (Umm Salama) bint Abi UmayyaMarriedApril 626
7Zaynab bint JahshMarriedMarch 627
8Rayhana bint Zayd ibn Amr Sexual slaveryMay 627
9Juwayriyah bint Al-HarithMarried January 628
10Ramlah (Umm Habiba) bint Abi SufyanMarriedJuly 628 (following a proxy wedding earlier in the year)
11Safiyah bint HuyayyMarried July 628
12Maymunah bint Al-HarithMarriedFebruary 629
13Mariyah bint Shamoon al-QuptiyaSexual slaveryc. June 629
14Mulayka bint KaabDivorcedJanuary 630
15Fatima al-Aliya bint Zabyan al-DahhakDivorcedFebruary or March 630
16Asma bint Al-Numan Divorced June or July 630
17Al-Jariya Sexual slaveryAfter 627
18Amra bint Yazid c.Divorced 631
19Tukana al-QuraziyaSexual slaveryUnknown, but probably in the last months of Muhammad's life.

இன்னும் முஹம்மது செய்த திருமண ஒப்பந்தங்கள் பட்டியலையும், இதர பெண்கள் பற்றிய விவரங்களையும் மேற்கண்ட தொடுப்பில் சென்று படிக்கலாம். இந்த விவரங்கள் எந்தெந்தஇஸ்லாமிய மூல நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 627ம் ஆண்டுக்கு பிறகு முஹம்மது எத்தனை திருமணங்களை புரிந்துள்ளார், விவாகரத்து புரிந்துள்ளார் என்பதை பாருங்கள்.

இதன்படி பார்த்தால், இஸ்லாமிய அறிஞர் ஸுயுதி சொல்வது தான் உண்மை என்று புரிகின்றது, அதாவது முதலாவது இரத்து செய்யும் வசனத்தை இறக்கிவிட்டு, அதன் பிறகு இரத்து செய்யப்பட்ட வசனத்தை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான் என்று நிருபனமாகின்றது.

முடிவுரை:

ஒரு இறைவன் இப்படி செய்யமுடியுமா? ஆறறிவு படைத்த மனிதன் இப்படி தலைகீழாக செய்தால், மக்கள் அவனைப் பார்த்து சிரிப்பார்கள், அவன் ஒரு பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டுவார்கள். ஆனால், இங்கு அல்லாஹ்வே இப்படி செய்துள்ளான். முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு என்ன பட்டத்தைச் சூட்டப்போகிறார்கள்?

அல்லாஹ்வின் இரத்து செய்யும் கோட்பாடு ஒரு பிழையான கோட்பாடு, முஸ்லிம்களே கேள்வி கேட்கவேண்டிய கோட்பாடு. இதில் அனேக பிழைகள் உள்ளது. இவைகள் பற்றி மேலதிக விவரங்களை இதர கட்டுரைகளில் ஆய்வு செய்வோம்.


இதர குர்-ஆன் ஆய்வுக்கட்டுரைகள்

குர்-ஆன் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்