அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்

முன்னுரை: 

முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள். 

அக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்). 

பிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன். 

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்) 

இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.

அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்: 

… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். … 

…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! … 

Source: abumuhai.blogspot.com/2008/08/blog-post.html

1) "மறைத்த உண்மை எது?"

அபூமுஹை அவர்கள் "மறைத்த உண்மை எது?" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது. 

அதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும். 

இன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.

ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை 

தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். 

Source 

எந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை? அபூமுஹை அவர்களே? 

வேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், "அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே" இது தான் மறைக்கப்பட்டுள்ளது. 

முகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.

2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு! 

நீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. “if you embrace Islam, you will find safety” என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை. 

உதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.

நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.

Source: abumuhai.blogspot.com/2008/07/8.html

அ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது? இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா?

ஆ) "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம" என்றால் இதன் பொருள் என்ன? இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா?

இ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள்? அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா? அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார்? அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா?

ஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா? 

அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. 

Source: abumuhai.blogspot.com/2008/07/67.html

அ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்? 

ஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன? உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்? 

இ) "இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் “இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்"? 

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா? அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.

3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா? 

அன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே? அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா? 

தமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு! அப்படித் தானே? 

உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,

"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்?

ஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்? 

நம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டு இருப்பீர்கள். 

உங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்" என்று கேட்டு இருப்பீர்கள். 

அதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள். 

இன்னும் ஒரு படி மேலே சென்று, "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், "எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.

4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே! 

ஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் "இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை "தவறாக" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள். 

ஓமன் நாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கு சொடுக்கிப் பாருங்கள்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom." 

மேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள். 

"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்" 

என்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.

5) Aslim Taslam (Arabic: أسلم تسلم) என்றால் என்ன? 

முதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே. 

இரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய. 

மூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.

Aslim Taslam (Arabic: أسلم تسلم)

Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….References in HadithSahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..Critical responsesIn response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]["lan astaslem" (Arabic: لن استسلم ) 

இத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]

On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague] 

[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]

Source: en.wikipedia.org/wiki/Aslim_Taslam

முடிவுரை: 

அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don’t try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள்? ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அபூமுஹை அவர்களே , "இல்லை இல்லை" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா? 

வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு


அபூ முஹைக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்