இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌

இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்

Jewish and Christian Converts to Islam

Some Questions for Muslims to Ponder

சாம் ஷமான்

இயேசுக் கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமான சட்டத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க அல்ல‌ நிறைவேற்றுவதற்கு வந்தேன் (மத்தேயு 5: 17-20) என்றுச் சொல்லியிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் குறிப்பிட்ட சில பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பின்பற்றுவதில்லை? என்று அடிக்கடி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், பழைய ஏற்பாட்டு சட்டம், பன்றிகளின் கறியை சாப்பிடக்கூடாது என்றும், எல்லா ஆண் குழந்தைகளும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இந்த கட்டளையை மற்ற மார்க்கத்திலிருந்து வரும் (யூதரல்லாத‌) விசுவாசிகள் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று பவுல் அப்போஸ்தலர் சொல்லியுள்ளார். இதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், "அப்போஸ்தலர் பவுல் ஒரு பொய் அப்போஸ்தலராவார்" என்றுச் சொல்கிறார்கள். இவரது போதனைகளை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கவேண்டும் ஏனென்றால், இவரின் இந்த போதனை பழைய ஏற்பாட்டு கட்டளைகளையும், இயேசுவின் வார்த்தைகளையும் மீறுவதாக உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட வாதம் புரிபவர்களில் ஒருவர் தான் ஷப்பீர் அலி என்பவராவார்:

பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் கறி சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்...


இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இந்த பன்றியின் கறியை சாப்பிடக்கூடாது என்ற கட்டளையை கடைபிடித்துள்ளார். அவரது சீடர்களும் கடைபிடித்துள்ளார்கள், அது போல அவரை பின் பற்றும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். யார் யாரெல்லாம் இதனை கடைபிடிக்கவில்லையோ அவர்களுக்கு இறைவனின் கட்டளை இப்படி உள்ளது என்று நியாபகப்படுத்தவேண்டும். கடைசி நபியாகிய ரசூல் அவர்களை இறைவன் அனுப்பியதின் அனேக காரணங்களில் இதுவும் ஒன்றாகும், அல்லாஹ் சொல்கிறான்:

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (5:15) (The Meaning of the Glorious Qur’an 5:15). (Eating Pork; source)

கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றுச் சொல்லி, பவுல் ஆதியாகமம் 17:14லில் சொல்லப்பட்ட தேவனின் உடன்படிக்கையை மீறியிருக்கிறார் என்று இன்னொரு இஸ்லாமியர் எழுதுகிறார்:

விருத்தசேதனத்தை கடைபிடிப்பது என்பது இறைவனின் சட்டத்தை கடைபிடிப்பது என்பதை பவுல் உணராமல், இறைவனின் சட்டத்தை அவர் உடைத்து (மீறி) விட்டார். (Bassam Zawadi, Paul Broke the Covenant of God; source

மேலே கண்ட விவரங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் இஸ்லாமுக்கு மாறும் யூதர்கள் கட்டாயமாக பழைய ஏற்பாட்டு சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றுச் சொல்வதாக உள்ளது, அதாவது பழைய ஏற்பாட்டு கட்டளைகளாகிய‌ "ஓய்வு நாளை" ஆசரிப்பதும், உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுவதையும் கூறலாம். இஸ்ரவேல் மக்கள் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்று பல இடங்களில் தேவன் கட்டளையிட்டுள்ளார்.

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17; இதனையும் படிக்கவும்: யாத்திராகமம் 20:8-11)

யூதர்கள் ஓய்வு நாளை கடைபிடிக்க கடமைப்பட்டவர்கள் என்று குர்‍ஆன் ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் அப்படி கடைபிடிக்காத யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் குர்‍ஆன் சொல்கிறது.

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும். (4:47)

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (கு‍ர்‍ஆன் 7:163-166, இவ்வசனத்தையும் படிக்கவும் 2:65)

மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (கு‍ர்‍ஆன் 4:154; இவ்வசனத்தையும் படிக்கவும் 16:124)

ஆனால், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பதற்காக முஹம்மது வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையை இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் நாளாக மாற்றினார். இது மேலே கண்ட வசனத்திற்கு முரண்பட்டதாக தென்படுகிறது.

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3486

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உலகில் இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இதுமட்டுமல்ல, முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட போரில் பிடிப்பட்ட ஒரு யூதப்பெண், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, சனிக்கிழமை ஓய்வு நாளை கடைபிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு அப்பெண் "இல்லை நான் சனிக்கிழமை ஓய்வு நாளை ஆசரிக்கவில்லை" என்று மறுத்துவிட்டார்.

இறைத்தூதரின் (ஸல் அல்லாஹு அலைஹிம் வஸல்லம்) மரணத்திற்கு பிறகு அந்த ஸ்திரி அனேக கஷ்டங்களை அனுபவித்தார்கள். அந்த பெண்ணுக்கு சொந்தமான ஒரு அடிமை சிறுமி அமிர் அல் மூமினீன் உமர் அவர்களிடம் சென்று, "அமிர் அல் மூமினீன் அவர்களே! ஷபியா அவர்கள் ஓய்வு நாளை விரும்புகிறார் மற்றும் யூதர்களுடன் நல்லுறவை வைத்துள்ளார்" என்றுச் சொன்னாள். உமர் அவர்கள் ஷபியா அவர்களிடம் வினவியபோது, "நான் ஓய்வு நாளை விரும்பவில்லை, ஏனென்றால் அல்லாஹ் அதற்கு பதிலாக நமக்கு வெள்ளிக்கிழமையை கொடுத்துள்ளார். என் சொந்த பந்தங்களாக‌ இருக்கும் யூதர்களிடம் மட்டுமே நான் நல்லுறவை பேணுகிறேன்" என்று பதில் கூறினார் ஷபியா. பிறகு தன் அடிமை பணிப்பெண்ணிடம், என்னைப் பற்றி இப்படிப்பட்ட பொய்யை உமரிடம் சொல்வதற்கு உன்னை தூண்டியது யார் என்று கேட்டபோது, அந்த பணிப்பெண் "ஷைத்தான்" என்றுச் சொன்னாள். அதற்கு ஷபியா "இப்போது நீ விடுதலை ஆக்கப்பட்டாய், போகலாம்" என்றுச் சொன்னார்கள். (Safiyya bint Huyay [based on a book by Ahmad Thompson]; source; see also here) 

ப‌ழைய‌ ஏற்பாட்டின் சில‌ க‌ட்ட‌ளைக‌ளை ப‌வுலும் ம‌ற்றும் இத‌ர‌ புதிய‌ ஏற்பாட்டு எழுத்தாள‌ர்க‌ளும் ஒதுக்கிவிட்ட‌து ச‌ரி இல்லை என்று பல இஸ்லாமிய அறிஞர்கள் குற்றம் சாட்டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் கூற்றுப்ப‌டி இறைத்தூத‌ர்க‌ள், அல்ல‌து ந‌பியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ காரிய‌ங்க‌ளை ஒரு போதும் செய்ய‌மாட்ட‌ர்க‌ள் என்று அடித்துச் சொல்கிறார்கள். இவைகளை ஒருவர் கவனித்தால், யூதர்களின் ஓய்வு நாளை அவர்கள் கடைபிடிக்கவேண்டுமென்று அவர்களை முஹம்மதுவும், குர்‍ஆனும் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றும்.

பழைய ஏற்பாட்டின் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? பழைய ஏற்பாடு, வெறும் பன்றியின் மாமிசத்தையும் மட்டுமல்ல, அதோடு கூட "ஒட்டகத்தின் மாமிசத்தையும்" இன்னும் பல வகையான கடல் வாழ் உயிரிணங்களையும் உண்ணவேண்டாம் என்றுச் சொல்கிறது. ஆனால், இதற்கு நேர் எதிராக, இவைகளை உண்ண குர்‍ஆன் அனுமதி அளித்துவிட்டது. (படிக்கவும், லேவி 11ம் அதிகாரம்; உபாகமம் 14ம் அதிகாரம்; குர்‍‍ஆன் சூரா 5:96; சூரா 6:142-146; சூரா 16:14; சூரா 22:36)

கதை முடியவில்லை, இன்னும் இருக்கின்றது. விவாகரத்து செய்யப்பட்ட தன் முந்தையை மனைவியை ஒருவன் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்றால், அந்தப் பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்துவிட்டு, அந்த புதிய கணவன் மறுபடியும் அவளை விவாகரத்து செய்துவிட்டால் தான் முதல் கணவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த செயலைத் தான் யேகோவா தேவன் "அருவருப்பானது" என்கிறார் மற்றும் இப்படி செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். (படிக்க உபாகமம் 24:1-4; குர்‍ஆன் சூரா 2:230)

மேற்கண்ட விவரங்களை மனதில் நிறுத்திக் கொண்டவர்களாக, பழைய ஏற்பாட்டின் ஒரு சில கட்டளைகளை பின்பற்றவில்லை என்று புதிய ஏற்பாட்டின் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்களிடம் கீழ் கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:

  • இஸ்லாமியர்களின் கருத்துப்படி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, மோசேயின் கட்டளைகளை முழுவதுமாக எப்படி பின்பற்றமுடியும்? ஏனென்றால், குர்‍ஆன் அதே மோசேயின் பல கட்டளைகளை மீறச் சொல்கிறதே? இது எப்படி சாத்தியமாகும்?
  • இஸ்லாமுக்கு மாறும் யூதர்களோ (அ) கிறிஸ்தவர்களோ இன்னும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கடைபிடிப்பதற்காக‌, முஹம்மதுவின் சில கட்டளைகளை மீறினாலோ அல்லது பின் பற்றாமல் விட்டுவிட்டாலோ ஒன்றும் பிரச்சனையில்லையா? முஹம்மதுவின் ஒருசில கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கலாமா?
  • அல்லது, முஹம்மதுவின் கட்டளைகளை பின்பற்றுவதற்காக, இஸ்லாமுக்கு மாறிய யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தாலும் பரவாயில்லையா? வேதம் அருளப்பெற்றவர்கள், முக்கியமாக கிறிஸ்தவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டு கட்டளைகளை விடாமல் கடைபிடிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?
  • உண்மையில், எபிரேய பைபிளில் உள்ள தேவனின் கட்டளைகளை ஒருவன் பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் அவன் இஸ்லாமியனாக மாறினால், அவனை "முஸ்லீம்" என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
  • க‌டைசியாக‌, சில‌ குறிப்பிட்ட‌ ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்ட‌ளைக‌ளை ப‌க்க‌த்தில் வைத்துவிட்டார் என்றுச் சொல்லி, ப‌வுல் மீது குற்றம் சும‌த்தும் அதே இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்ய‌வேண்டுமென்றால், அதே குற்றம் புரிந்த‌ முஹ‌ம்ம‌து மீது குற்ற‌ம் சும‌த்த‌ வேண்டும்? அப்படி இஸ்லாமிய‌ர்க‌ள் செய்வார்க‌ளா?

ஆங்கில மூலம்: Jewish and Christian Converts to Islam (Some Questions for Muslims to Ponder)

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:

1) Muhammad and the Mosaic Law

2) Who Broke the Covenant: Paul or Muhammad?

3) An Examination of Shabir Ally's Fascination with Pigs (Being a Christian Response to his "Eating Pork" Article)

4) Do Muslims Truly Obey God's Everlasting Command, Or is Meherally Simply Trying to Pull A Fast One? - Circumcision

5) What is the day of congregation?

6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்