திருடுவதை இயேசு ஆதரித்தாரா?

ஒரு முஸ்லிம் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

“உங்கள் பைபிளிலும் இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ஒரு பாவியாக காட்டப்பட்டுள்ளார் (பார்க்க மத்தேயு 12:1-3).  இவ்வசனங்களில் இயேசுவின் சீடர்கள் செய்த காரியத்தை இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அனுமதிப்பதைப் பார்த்தால், இதனை திருட்டு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? இயேசு இதனை அனுமதித்ததால், அவர்களின் தீய செயலை அங்கீகரித்தவராக இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) காணப்படுகிறார்.

உண்மையில் இந்த வேதப் பகுதி என்ன சொல்கிறது?

மத்தேயு (12:1-3)

12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். 

12:2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். 

12:3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?

இந்த நிகழ்ச்சியில் “திருட்டு” பற்றி கேள்வி எழுப்பப்படவே இல்லை. இயேசுவை எதிர்த்தவர்கள் இந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் திருடுகிறார்கள் என்று குற்றம் சாட்டவில்லை. கதிர்களை கொய்து சாப்பிட்ட நாள் “ஓய்வு நாள்” ஆகும், எனவே, இந்த நாளில் இப்படி கதிர்களை கொய்து சாப்பிடுவது தவறு என்று குற்றம் சாட்டினார்கள். பொதுவாக திருடுவது என்பது எல்லா நாட்களிலும் “சட்டத்திற்கு விரோதமாகும், ஒரு குறிப்பிட்ட நாளில் திருடுவதற்கு அனுமதி உண்டு, இதர நாட்களில் அனுமதி இல்லை என்று எந்த சட்டமும் சொல்வதில்லை”. 

முஸ்லிம் சகோதரரே, உங்கள் சொந்த கருத்துக்களை மேற்கண்ட வசனங்களில் திணிக்க முயலவேண்டாம். அக்காலத்தில், யூதர்களின் கலாச்சாரத்தில், இப்படி கதிர்களை கொய்து சாப்பிடுவது திருட்டுத் தனமாக கருதப்படவில்லை என்பதை கவனிக்கவும். 

சரி, இப்போது உங்கள் கேள்விக்கான பதிலை தோராவிலிருந்து பார்ப்போம். 

படிக்கவும்: உபாகமம் 23:24-25

23:24  நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. 

23:25  பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.

இயேசுவும் அவரது சீடர்களும் மேற்கண்ட வசனங்கள் அனுமதிப்பதையே செய்தார்கள். மேற்கண்ட நிகழ்ச்சியில் இயேசுவிற்கும், இதர யூத மத அதிகாரிகளுக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல் என்பது, “ஒருவர் பசியாக இருக்கும் போது, கதிர்களை கொய்து திண்பது,  ஓய்வு  நாளில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றியது தான்”. எனவே, இயேசு திருடுவதை அனுமதிக்கவில்லை என்பது இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

உமரின் மேலதிக விவரங்கள்: 

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இஸ்லாமியர்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் மேற்கோள் காட்டும் வசனங்கள் அனைத்தையும் முதலாவது படியுங்கள், முந்தைய பிந்தைய வசனங்களையும் படியுங்கள். அவ்வசனங்கள் சொல்லும் கருத்தின் சுருக்கம் என்னவென்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கும். 

முக்கியமாக கீழ்கண்ட விவரங்களை கவனிக்கவும்:

1) இயேசுவைச் சுற்றி எப்போதும் பலர் இருந்துக் கொண்டே இருந்தனர். இதற்கு காரணம் அவர் வியாதிகளை குணமாக்குவார், மேலும் ஆறுதலாக பேசுவார் என்பதால் அடிமட்ட மக்கள் முதற்கொண்டு, மேல்பட்ட மக்கள் அவரை அவரையும், அவரது சீடர்களையும் சுற்றியே இருந்தனர். 

2) இயேசுவை எதிர்த்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். இயேசுவிடமும், அவரது சீடர்களிடமும் எப்போது பிழை காணப்படும்? நாம் எப்படி அவரை குற்றப்படுத்தலாம் என்று அவரது எதிரிகள் அதாவது மத தலைவர்கள் அவர்களை தொடர்ந்து நோட்டமிட்டுக் கொண்டே இருந்தனர்.

3) இன்னொரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவும். திருடுவது மிகப்பெரிய பாவம் என்று ஒவ்வொரு யூதனும் அறிந்திருந்தான். மோசேயின் பத்து கட்டளைகளில், “களவு செய்யாதிருப்பாயாக” என்பதும் ஒரு கட்டளையாகும். எனவே, ஒரு சராசரி யூதன், அந்த பத்து கட்டளைகளை மீறுவதற்கு தைரியம் கொள்ளமாட்டான், அதுவும் மற்றவர்களின் முன்பு செய்யமாட்டான். 

4) அடுத்தபடியாக, பரிசேயர்களாகிய யூத தலைவர்கள், உடனே, இயேசுவிடம் முறையிடுவதை காணமுடியும். அப்படியானால், தங்கள் மேல் குற்றம் சுமத்த காத்துக்கொண்டு இருக்கும், பரிசேயர்களுக்கு முன்பாக சீடர்கள் எப்படி தீய காரியத்தைச் செய்ய துணிவு கொள்வார்கள்?

5) வசனங்களை தொடர்ந்து வாசிக்கும் போது, யூதர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு தெளிவாக உள்ளதை காணமுடியும். ஓய்வு நாளில் ஏன் சீடர்கள் இப்படி செய்கிறார்கள்? என்று இயேசுவிடம் கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு தெளிவாக பதில் சொல்கிறார், ஒரு பழைய ஏற்பாட்டு உதாரணத்தையும் எடுத்துக் காட்டுகிறார் (மத்தேயு 12:3,4)

6) இதோடு நின்றுவிடாமல், தன்னுடைய தெய்வீகத் தன்மையையும், இங்கு சுட்டிக் காட்டுகிறார். தேவ ஆலயத்தை விட பெரியர் தாம் என்று இங்கு குறிப்பிடுகிறார் (மத்தேயு 12:6). தம் சீடர்கள் குற்றமில்லாதவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். அடுத்தபடியாக, தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என்று தெளிவாகச் சொல்கிறார் (மத்தேயு 12:8). அதாவது, இயேசு வாரத்தில் வரும் வேலை நாட்களுக்கு மட்டுமல்ல, மனிதன் வேலையை விட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு, அந்த நாளில் அதிகமாக இறைவழியில் செலவிடும் ஓய்வு நாளுக்கும் தாம் ஆண்டவர் என்று கூறுகிறார். 

முஸ்லிம்கள் கவனத்திற்கு: இயேசு உரையாடுகின்ற போது, பல சத்தியங்களை அவர் தெளிவுப்படுத்துகிறார், தன் தெய்வீகத்தன்மையை பல வகைகளில் அவர் விளக்குகிறார். எனவே, இயேசுவையும், பைபிளையும் குற்றப்படுத்த முஸ்லிம்கள் முனைந்தால், அனைத்து வசனங்களையும் சரியாக புரிந்துக் கொண்டு, அதன் பிறகு கேள்வி கேட்கும் படி ஆலோசனை கூறுகிறேன்.

இஸ்லாமிய நபி கொள்ளையிட்ட செல்வங்கள்:

முஸ்லிம்கள் தங்கள் நபியைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பல வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், செல்வங்களுக்காக மனிதர்களை கொன்றுகுவித்தார். இந்த கொள்ளையில் சஹாபாக்களின் பங்கும் இருந்தது. இதனை விளக்கும் சில கட்டுரைகளை கீழேயுள்ள கட்டுரைகளில் படித்து, முஸ்லிம்கள் தங்கள் ஆய்வை தொடரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக தொடர்கள் 2, 4, 6, 9 மற்றும் 10ஐ கண்டிப்பாக படிக்கவும், அவைகள் திருட்டு மற்றும் கொள்ளை பற்றியதாகும்.

 மூலம்: http://www.answering-islam.org/BibleCom/mt12-1.html

இஸ்லாமியர்களுக்காக ஒரு பைபிள் விரிவுரை

இதர பைபிள் பற்றிய கட்டுரைகள்